Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

பெரியாரின் தலித் எழுத்து


தலித் எழுத்து – வேதனைகளைப் பதிவு செய்வதோடு மட்டுமின்றி, சமூக விடுதலையையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இது, தலித்தாகப் பிறந்தவர்களுக்கும், அவ்வாறு உணர்கின்றவர்களுக்குமே கைகூடும். பெண் விடுதலைக்காக ஓங்கி ஒலித்ததைப் போலவே, தீண்டத்தகாத மக்களின் உணர்வுகளை முற்றாகப் புரிந்து கொண்டதாலேயே – பெரியாரின் எழுத்து, தலித் எழுத்தைப் போல் அமைந்திருக்கிறது! "நாம்' "நம்மில் கீழ்த்தர மக்கள்' என்றெல்லாம் பெரியார் பிரித்துப் பார்த்து, தலித்துகளை இழிவுபடுத்தினார் என்று அவர் மீது கண்மூடித்தனமாக அவதூறுகளைச் சுமத்தினார்கள்; இன்னும் கூட "கிசு கிசு'த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய "சாதியை ஒழிக்க வழி என்ன?' என்ற நூல் வெளிவருவதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் என்பது, கூடுதல் கவனத்திற்குரியது. இப்புரட்சியாளர்கள் இணைந்த புள்ளியும் இதுவே.

"தலித் முரசு' 13ஆம் ஆண்டின் சிறப்புக் கட்டுரையாகபெரியாரின் "தலித் எழுத்தை' வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. "எவனெழுதினாலென்ன?' என்ற புனைப் பெயரில் பெரியார் எழுதிய கட்டுரை – "குடிஅரசு' 25.10.1931 ஆதாரம் : "பெரியார் களஞ்சியம்', தொகுதி 25, பக்கம் : 102 – 114

சகோதரர்களே! தீண்டாதார் என்பதாக ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் நம்முடைய சமூகத்தின் எண்ணிக்கை, இந்தியாவில் சுமார் ஏழு கோடி மக்கள் இருக்கின்றோம். நாம் தெருவில் நடந்தாலும், மற்றவர்கள் கண்ணில் நாம் தென்பட்டாலும், நமது நிழல் மற்ற மனிதர்கள் மேல் பட்டாலும் தீட்டு ஒட்டிக் கொள்ளுமென்றும், தோஷமென்றும், உடனே குளித்தாக வேண்டுமென்றும், சிலர் குளிப்பது கூட போதாதென்று ஏதாவது பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.

இவை தவிர, நமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் நாமாகப் போய் மொண்டு கொள்ளும்படியானதொரு பொதுக்குளமோ, குட்டையோ, ஏரியோ, கிணறோ கிடையாது. நாம் எந்தக் குளத்தையாவது, கிணற்றையாவது தொட்டுவிட்டால் அவற்றை மந்திரங்கள் சொல்லி புண்ணியார்ச்சனை செய்து தண்ணீரையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தம் செய்தாக வேண்டும். நாம் குடி இருக்க வேண்டிய இடமோ ஊருக்கு ஒரு மைல், அரை மைல் தூரத்தில் குடிசைகள் கட்டிக் கொண்டு அங்குதான் வாழ வேண்டும். அங்கும் கூட ஓட்டு வில்லை வீடோ, மெத்தை வீடோ கட்டி அதில் நாம் குடி இருந்தால் ஊருக்கே கேடு வந்து விடுமாம். நாம் வாழும் இடத்துக்கு, "சேரி' என்று பெயர். நாம் வாழுகின்ற பக்கம்தான் ஊர் ஜனங்கள் குப்பை செத்தை கொண்டு வந்து போட்டு வைப்பதும், ஊரார் மல ஜலம் கழிக்க வருவதுமான இடமாக உபயோகித்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில், அவற்றிற்குக் காவலாய் இருக்குமாம்!

நமக்கு வேலையோ தோட்டி வேலைதான் பாரம்பரியமாய் சொந்தமானது; மற்றும் ஊர் கூட்டி, மலம் அசிங்கம் முதலியவற்றை எடுத்துச் சுத்தம் செய்வதும், பிணம் சுடுவதும், செத்த மிருகங்களை அப்புறப்படுத்துவதும், கழனி வயல் அப்புறப்படுத்துவதும், கழனி வயல் முதலியவைகளுக்கு குப்பை, செத்தை முதலியன கொண்டு போடுவதும் மற்றும் தானியம் விதைத்து அறுப்பு அறுத்து, மிராசுதாரன் வீட்டிற்குத் தானியம் போய்ச் சேரும் வரையில் சுய வேலையும் செய்வதும், வீட்டிலும், வயலிலும் சேருகட்டி வைத்திருக்கும் தானியத்திற்கு காவல் இருப்பதும் மற்றும் இதுபோன்றவற்றுடன், தப்புக் கொட்டுதல், செத்துப் போன பிணங்களுக்காக அழுதல், பிணத்தின் மீது போத்தி இருந்த துணியில் கொஞ்சம் கிழித்து எடுத்துக்கட்டிக் கொள்ளுதல்; இரவிலும், பகலிலும் 10, 20, 30 மைல்கள் தூரமுள்ள வெளியூர்களுக்குச் சேதி கொண்டு போதல் முதலிய காரியங்கள் செய்ய வேண்டியதும் நமது பிறப்புரிமையாகும்.

இவை ஒரு பக்கமிருந்தாலும் நம் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பது, மேல் ஜாதிக்காரர்களின் கட்டளையாகும். அதுவும் மதத்தை ஒட்டிய கட்டளையாகும். அவற்றை மீறி படிப்பதாய் இருந்தாலும் பள்ளிக் கூடங்கள் கிடையாது. ஏதாவது ஒன்று இரண்டு பள்ளிக் கூட வசதிகள் இருந்தாலும் நமக்கு சம்பளம் கொடுக்கவும், புஸ்தகங்கள் வாங்கிக் கொடுக்கவும், துணிமணி கொடுக்கவும், படிக்கவும், பையனுக்கு சாப்பாடு போடவும் சவுகரியம் கிடையாது. கிராமங்களில் இருக்கும் நம்மவர்கள் இவ்விஷயங்களைப் பற்றி நினைக்கவே கூடாது. இவை தவிர, நமக்கு நாவிதன் கிடையாது. வண்ணான் கிடையாது. நாமாகத் துறை வைத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு கிணறு, குட்டையும் கிடையாது. ஒரு கிராமத்தில் 500 வீடு இருந்தால், அங்கு 20 பறையர் வீடு இருந்தால், அந்த 20 வீட்டுப் பறையர்களும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் எல்லாமுமே மேற்கண்ட 500 வீட்டுக் குடி மக்களுக்கும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த குடும்பத்தைப் போல் அடிமை வேலை செய்ய வேண்டியதாகும். இரவு பகல் என்கின்ற கணக்கே கிடையாது. கூலி கேட்டால் உதை கிடைக்கும். விவசாய அறுவடையின் போது களத்தில் பிச்சை வாங்குவதும், மற்றபடி சட்டி எடுத்துக் கொண்டு போய் வீடு வீடாய் "பிச்சை போடுங்க சாமி' என்று கூப்பாடு போட்டு பிச்சைச் சோறு கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டியதாகும்.

பிச்சைச் சோறு கேட்கும் சட்டி கூட முழுசாய் இருந்தால், அது ஒரு பெரிய குற்றமாகிவிடும். ஏனெனில் கிராமத்தில் பறையன் முழு சட்டி எடுத்துப் பிச்சை எடுத்தால், கிராமத்திற்குக் கெடுதி ஏற்பட்டுவிடும் என்கின்ற ஓர் அய்தீகம் உண்டு. ஆதலால் நம்ம சட்டியாய் இருந்தாலும் வாய்ப்பாடுகளை உடைத்து ஓடு மாதிரியாக ஆக்கிக் கொண்டு தான் சோத்துப் பிச்சைக்குப் போக வேண்டும். சில இடங்களில் ரொம்பவும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் பறையர்களுக்குப் பிச்சைச் சோறு போட மாட்டார்கள். ஏனெனில், பறையருக்குச் சோறு போட்டால் வீட்டிற்குள் சட்டியில் இருக்கும் சோறெல்லாம் தீட்டாய் (சேஷமாய்) போய் விடுமாம். இது மாத்திரமல்லாமல் இன்னும் ஒரு மதக் கொள்கை உண்டு. அதென்னவென்றால், சில மேல் ஜாதிக்காரர்கள் சாப்பிட்ட எச்சிலையில் உள்ள மீதியையும் அவர்களுக்குத் தேவையில்லாத மீதத்தையும் கூட பறையருக்குக் கொடுத்தால் பெரிய தோஷம் ஏற்பட்டுவிடும் என்று கருதி, குழிவெட்டிப் புதைத்து விடும்படி செய்வதும் உண்டு. நமக்குப் பிச்சைச் சோறு போடக்கூடிய ஜாதியாரோ, கெட்டுப் போனதையும், ஊசிப் போனதையும்தான் பத்திரமாய் வைத்திருந்து நமது சத்தம் கேட்டதும் ஓடிப்போய்க் கொண்டு வந்து போடுவார்கள். நிற்க.

துணி விஷயத்திலும் இப்படித்தான். நமக்கோ புதுத்துணி வாங்கிக் கட்ட காசு கிடையாது. கட்டினாலும் பொறாமைப்படுவார்கள். மேல் ஜாதிக்காரர்கள் கட்டிக் கிழித்த கந்தலையே கட்ட வேண்டும். அப்படிக் கட்டுவதற்கும் சில முறைகள் உண்டு. அவை என்னவென்றால், வேட்டியை இடுப்பில் முழங்காலுக்குக் கீழே தொங்கவிட்டு கட்டக்கூடாது. மேலேயும் துணி போடக் கூடாது, பெண்கள் மார்பை மூடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளுடன் மற்றும் தங்கம், வெள்ளி, நகை போடக்கூடாது என்பதும், குடை பிடிக்கக்கூடாது என்பதும், காலில் செருப்புப் போடக்கூடாது என்பதும், பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது என்பதுமான பல நிபந்தனைகளுண்டு.

இவ்வளவும் தவிர, தமிழ் நாட்டில் பல ஜில்லாக்களில் பூமிகளை ஒருவருக்கொருவர் விற்கும்போது, அந்த பூமியில் வேலை செய்யும் அடிமைகள் என்பதாக நம் பெரியோர்களின் பெயர்கள் போட்டே அந்த வழி அடிமை என்பதாக நம்மையும் குடும்பத்துடன் விற்றுவிடுவதுமுண்டு. அந்த பூமியை வாங்கினவர்களுக்கு எல்லாம் நாம் அடிமைகளாவோம் மற்றும் பல ஜில்லாக்களில் நம்மவர்கள் படும் பாடு சொல்லவே முடியாது; உங்களில் பலர் காதால் கேட்டுகூட இருக்க மாட்டீர்கள். அதாவது, மலையாள ஜில்லாக்களில் நம்மில் ஒரு வகுப்பாரை "நாயாடிகள்' என்று சொல்லுவது உண்டு. அவர்கள் எந்த ரோட்டிலும் நடக்கக் கூடாது. சுமார் 50 கெஜம் முதல் 100 கெஜத்திற்கு மேற்பட்ட தூரத்தில்தான் எந்த ரோட்டிலும் இருக்க வேண்டும். அவர்கள் எங்கும் எவ்விதத் தொழிலும் செய்ய முடியாது. யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் சாலைத் தெருவில் ஒரு துணியை விரித்துப் போட்டு விட்டு, காட்டுக்குள் ஓடிப்போய் மறைந்து கொண்டு "தம்பிரானே தம்பிரானே' என்று கூப்பாடு போடவே – கூடும் சாலையில் நடக்கும் ஜனங்கள் அதில் ஏதாவது பண்டமோ, காசோ போட்டு

விட்டுப் போனால் – மாலையில் ஒருவருக்கும் தெரியாமல் வந்து எடுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும். இதைத்தவிர எங்காவது வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லுகளைப் பொறுக்குவதும் மற்றும் ஏதாவது பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளைக் கல்லால் அடித்துப் பிடித்து சுட்டுத் தின்பதும் ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாது. இதைத் தவிர மலையாளத்தில் மற்றும் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் நம்மிலும் கொஞ்சம் பெரிய ஜாதியென்று சொல்லிக் கொள்ளுவார்கள். ஆனால், அவர்கள் தெருவில் நடக்கும் போதே "ஹா' "ஹா' என்று சத்தம் போட்டுக் கொண்டே வர வேண்டும். ஏனெனில், “தாழ்ந்த ஜாதிக்காரனாகிய நான் வருகிறேன், எதிரில் வரும் உயர்ந்த ஜாதியார்களே விலகிக் கொள்ளுங்கள்'' என்று குறிப்புக் காட்டுவதற்காக, அதாவது மூலை முடுக்குகளில் மோட்டார் கார்கள் வரும்போது, எதிரில் வண்டி வந்தாலும் வராவிட்டாலும் அது "ஹாரன்' ஊதுவது போல் சத்தம் போட வேண்டும். ஆனால், மோட்டார் மூலை முடக்குகளில் மாத்திரம் ஊதும்; இவர்களோ நேர் ரோட்டில் போகும் போதும் மற்றவர்களுக்கு தான் கீழ் ஜாதிக் காரன் என்று தெரிவிப்பதற்காக வேண்டி சத்தம் போட்டுக் கொண்டே வரவேண்டியதாகும்.

இவை தவிர, சமூகத் துறையில் நமக்கு இருக்கும் ஸ்தானமானது, நாம் எந்த விதத்திலும் நமது இன்றைய நிலைமையை விட்டு மாற முடியாமலும், நாம் எப்படியும் பணக்காரர்கள் ஆக முடியாமலும், நாம் ஒரு தனித் தொழில் செய்து சுதந்திரமாயிருக்க முடியாமலும், நமது நிலைமையை உயர்த்திக் கொள்ள படிக்கவோ அல்லது அதிக வரும்படி உள்ள வேறு தொழிலில் போய்ச் சேரவோ மார்க்கமில்லாத நிலைமையிலேயே இறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோம். எவ்வளவுதான் நம்மவர்கள் முன்னுக்கு வருவதானாலும் சுயராஜிய அரசியலில் பியூன் போலிஸ்காரன் வேலைக்கு லாயக்காகலாம்.

ஸ்தல சுயாட்சிகளில் கக்கூஸ் எடுப்பதில் இருந்து, குப்பை மேஸ்திரி வேலைக்கு லாயக்காகலாம். இதுவும் அந்தந்த இலாகா "தேசியத் தலைவர்கள்' தயவு வைத்து கொடுத்தõல்தான் உண்டு. மற்றபடி குமாஸ்தா வேலைக்கோ அதற்கு மேற்பட்ட ஏதாவது உத்தியோகஸ்தர் வேலைக்கோ வர நமக்கு மார்க்கமே கிடையாது. 50 லட்சம் ஜனத்தொகை கொண்ட கிறிஸ்துவர்கள் வேறு மதக்காரராய் இருந்தும் பார்ப்பனர்களுக்குச் சமமாக அனேகம் பேர் உத்தியோகம் பதவி முதலியவை பெற்று வாழுகின்றார்கள். நம்மைப் போலவே எண்ணிக்கையுள்ள முகமதியர்கள் அன்னிய மதக்காரர்களாய் இருந்தும், அதாவது எட்டுக் கோடி இருந்தும் சற்று ஏறக்குறைய அவர்களது ஜனத்தொகைக்குள்ள விகிதாச்சாரம் எல்லா உத்தியோகங்களிலும் இருக்கிறார்கள்; மற்றும் இவர்களில் அநேகர் ஏராளமான பணக்காரர்களாகவும், பேங்கர்களாகவும் இருக்கிறார்கள். இந்துக்களில் உள்ள மற்ற வகுப்பார்களும் கூட எவ்வளவோ முற்போக்கடைந்திருக்கின்றார்கள்.

ஆனால், ஏழு கோடி ஜனத்தொகை கொண்ட நாம் (இந்த நாட்டுப் பழங்குடி மக்களாக இருந்தும்) தீண்டாதார் அல்லது பஞ்சமர் என்கின்ற பெயரை உடைய நாம் எந்த அளவில் படித்தவர்களாய் இருக்கின்றோம். உத்தியோகஸ்தர்களாக இருக்கின்றோம். பணக்காரர்களாய், மிராசுதாரர்களாய், பாங்கர்களாய், வியாபாரிகளாய் இருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள். படித்தவர்கள் 1,000க்கு ஒருவர் உண்டா? பணக்காரர் 10,000க்கு ஒருவர் உண்டா? பதவி உள்ளவர்கள் 1,00,000க்கு ஒருவர் உண்டா? இதன் காரணமென்ன?

நாம் தானே இந்நாட்டின் பழம்பெரும் குடிமக்கள் என்று ஆதாரம் இருக்கின்றது. நமக்குத்தானே ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்நாடகர் என்கின்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த "ஆதி' பட்டமெல்லாம் நாம் என்றும் நிலையாய், அடிமையாய், தீண்டாதாரராய் இருப்பதற்கு அனுகூலமாக கொடுக்கப்பட்டதேயொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக்கடையச் செய்விப்பதற்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாட்டிற்கு எவ்வித சுதந்திரமிருந்தாலும், பூரண சுயேச்சை இருந்தாலும், சுயராஜியமிருந்தாலும் அந்நாட்டிலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும், பாடுபட்டு உழைத்து, மற்றவர்களுக்கே போட்டுவிட்டு, தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர் மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிறார உண்ண முடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும் இருக்கும்படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் – அந்த நாடு கொடுங்கோன்மை ஆட்சி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல், அதற்கு ஏதாவது மேற்கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். நிற்க.

சகோதரர்களே! மற்றொரு விஷயத்தையும், நான் சொல்லாமல் விடுவதற்கில்லை. அதாவது நாம் மேல் கண்டபடியான இழிவுக்கும், கொடுமைக்கும் பாத்திரமானதற்கு நாமே முக்கிய காரணஸ்தராய் இருந்து வரும் நம்முடைய அறிவீனத்தையும், மானமற்ற தன்மையையும் எடுத்துச் சொல்லித் தீர வேண்டுமல்லவா? அதைச் சொல்லுகின்ற போது நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் சொல்லுவது உண்மைதானா? அல்லது அல்லவா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். உண்மையென்று பட்டால் உடனே கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா, ஜப்பான்காரர்களிலாவது – தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ் ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப்பட வேண்டும்? நாமும் ஏன் வெகுகாலமாகவே அதற்கு இணங்கி, நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.

அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவனாவது, முகமதியனாவது நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பவுத்தர்களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே. மற்றபடி யார் நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள். நம் நாட்டிலே பிறந்து, நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள்தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள் என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல. மற்றெதற்காக என்றால், நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல், வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும், நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து – எல்லோரும் இந்துக்கள் என்றும், இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை.

பெரிதும் வேறு நாட்டாரும், வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பவுத்தரையும், கிறிஸ்துவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லுகின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும், சுயமரியாதையே பிரதானமானதாலும் அவர்களை யாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே "புத்தி கற்பித்து' விடுவார்கள்.

ஆதலால், நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் "இந்து' என்னும் மதம்தான் நம்மைத் தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதேயொழிய, வேறு எந்தக் காரணத்தினாலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா? ஆகவே, நம்மில் எவன் ஒருவன் தன்னை "இந்து' என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ, அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான், பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ, ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகு காலமாக நம் முன்னோர்கள் காலம் தொட்டு நாம் "சண்டாளப் பறையராய்' தீண்டாதாரராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன் மூலம் – நாமே நம்மை தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக்கின்றோம். அப்படி இருக்க இன்று நாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல வேடம் போட்டுக் கொண்டு, “நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது'' என்று சொன்னால், அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?

ஒரு மனிதன் தன் மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று, “என்னைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது; என்னை எட்டிப் போ என்று யாரும் சொல்லக் கூடாது'' என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாகவாவது இருக்குமா? அல்லது “மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது, எட்டி நில் என்று சொல்லக் கூடாது'' என்று இண்டியன் பீனல் கோட்டில் அதாவது கிரிமினல் சட்டப் புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு விட்டதனாலேயே, அந்தப்படி அசிங்கப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்டொருவரை தண்டித்து விடுவதாலேயே அசிங்கப்படும் குணத்தை, மக்களிடம் இருந்தும் மாற்றிவிட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இது போலவே நான், இந்துக்களில் மற்றொரு சாரார், தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களைச் சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது என்றும், “சூத்திரரென்றால் ஆத்திரம் கொண்டடி'' என்றும் சொல்லுகிறார்கள்; எழுதி ஆங்காங்கு தொங்க விடுகிறார்கள். இதுவும் பேதத்தன்மை என்றே சொல்வேன். ஏனெனில், தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவனையும் (அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனைச் "சூத்திரன்' என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. ஏனெனில், இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதானது, பார்ப்பனரொழிந்த ஏனையோருக்கு உரித்தானது என்பதும் இந்துவாய் இருக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட்பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் – அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் (பறையனையும்) ஒப்புக் கொண்டே இருக்கின்றது.

அன்றியும் இந்த முறையானது, இந்து மத உட்பிரிவுச் சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும் மற்றும் சங்கராச்சாரிகளிலும் இருக்கிறது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த சைவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், ராமாயணம் முதலிய இதிகாசப் புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் "பகவான் வாக்கு'களிலும், "ரிஷிகள்' வாக்குகளிலும் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்கின்ற "இந்து' என்பவன் யோக்கியனாகவோ அல்லது அறிவுடையவனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, நம்மவர்கள் தங்களுக்குச் சூத்திரப்பட்டமும், தீண்டாதார் – பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமேயாகும். ஏனெனில், எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் – தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை. இந்தியாவில் இந்து மதம் உள்ள வரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்து மத வேதமும், சாஸ்திரமும், ராமாயணமும், பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் – சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்து விடுவது என்பது முடியவே முடியாது.

திரு. காந்தி எவ்வளவுதான் மகாத்மாவானாலும், "சாமி' வேதாசலம் எவ்வளவுதான் சுவாமியானாலும், "சுவாமி' சகஜானந்தம் எவ்வளவுதான் சுவாமியானாலும் – எது வரையிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர்களென்றோ சொல்லிக் கொள்ளுகின்றார்களோ – அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாமவர், பஞ்சமர் (பறையர்) என்பதையும் பிரிவு கவுன்சில் வரையில் ருஜுபிக்க முடியும். அவர்களே அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமையுண்டு. மேல்கண்ட இவர்கள் எதுவரை இந்து மதப் பிரச்சாரமும், சைவப் பிரச்சாரமும் செய்கின்றார்களோ அதுவரை இவர்கள் தங்களுள்பட மக்கள் – சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கி நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.

சம்பந்தனை ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தன் பாடிய "சாமி'களை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தனின் தேவாரங்களையும், சம்பந்தனின் சமயங்களையும் ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக் கொண்ட சைவன் ஒருவன், தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள். அதுபோலவே நந்தனை ஒப்புக் கொண்ட ஒருவன், அதுவும் நந்தன் பறையன், அவன் எங்கள் ஜாதி என்று ஒப்புக்கொண்ட ஒருவன், தன்னைப் பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம்; “தமிழ் நாட்டில் ஆதியில் ஜாதியில்லை'' என்று சொல்லலாம். சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால், தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக் கொண்டு வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி – தன்னைச் சூத்திர வகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலக்கிக் கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள் ("சற்சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது).

திரு. காந்தியால் வரும்படியான சுயராஜ்யம் அது எப்படிப்பட்டதானாலும், எவ்வளவு பயனுள்ளதானாலும், பயனற்றதானாலும் – இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாக இருக்கும் என்பதில் மாத்திரம் சந்தேகப்பட வேண்டியதில்லை. அதுவும் எப்படிப்பட்ட இந்து மதமென்றால், வர்ணாசிரம தர்மத்தோடு கூடின பரம்பரை ஜாதித் தொழிலையும் வகுப்புப் பழக்க வழக்கங்களையும் நடத்திக் கொடுக்க முயற்சிக்கும்படி கட்டாயப்படுத்தும்படியான, இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாய்த்தான் இருக்கும் என்பதில் யாரும் எவ்வித ஆட்சேபனையும் கொள்ள வேண்டியதில்லை.

ஆகவே திரு. காந்தியின் சுயராஜ்ய காலத்தில் யார் யார் இந்துவோ அவர்கள் எல்லோருமே இந்த மூன்று ஜாதியின் கீழ் தான் வரவேண்டும். அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய விதியில் தான் வரவேண்டும். அந்தக் காலத்தில் இந்துக்கள் என்பவர்கள் இன்றைய தினம் சுயராஜ்யமில்லாத காலத்தில் அனுபவிக்கும் உரிமையும், பேசும் உரிமையும், எழுதும் உரிமையும், கேட்கும் உரிமையுமிக்க ஒரு நாளும் அனுபவிக்க முடியாது என்பதை கெட்டியாய் மனதில் நிறுத்துங்கள். ஏனெனில், காந்தி சுயராஜ்ய காலத்தில் மத சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும், ஜாதி சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும் பேசுவோர்கள் எல்லாம் சட்டப்படி 124ஏ, 153ஏ என்பது போன்ற துரோக சட்டங்களின் கீழும், துவேஷச் சட்டங்களின் கீழும் குற்றமாகக் கருதித் தண்டிக்கப்பட வேண்டியதாகி விடுவார்கள்.

அன்றியும் ஒரு மனிதன் தான் “இந்து மதத்தை விட்டு வெளியில் போய் விடுகிறேன்'' என்பதும், வெளியில் போவதும் குற்றமானதாகவே கருதப்பட்டாலும் கருதப்படலாம். அதற்காக சட்டமுமியற்றப்படலாம். ஏனெனில், இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு மனிதன் பிறவியில் எந்த மதத்தில், எந்த ஜாதியில் பிறந்தானோ, அந்த மதத்தில் அந்த ஜாதியில்தான் சாகின்ற வரையில் இருந்தாக வேண்டும். அதனால்தான் திரு. காந்தியும், “நான் கோரும் சுயராஜ்யம் வந்தால் கிறிஸ்து மதத்திற்குப் பிரச்சாரமாகிய ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் முதலியனவை வைத்து நடத்தும் பாதிரிமார்களையெல்லாம் இந்தியாவை விட்டு விரட்டி விடுவேன்'' என்று துணிந்து சொன்னார். அந்தப்படி அவர் சொன்னதானது, வேண்டுமென்று சொன்னதாக யாரும் நினைத்து விடக் கூடாது. மதம் மாறுவது அவ்வளவு இழிவானதென்றும், பாபமானதென்றும், அதற்கு இடம் கொடுப்பது அவ்வளவு தோஷமானதென்றும் இந்து மத தத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் கிறிஸ்துவர்களைச் சொன்னது போல் மகமதியர்களைச் சொல்லாததற்குக் காரணம், மகமதியர்களிடத்தில் இருக்கும் "முரட்டுத்தனத்தின்' காரணமாக பயமேயொழிய, மற்றபடி முகமதியர்களை மதமாற்றம் செய்ய அனுமதிப்பது குற்றமாகாது என்கின்ற எண்ணத்தாலல்ல. ஆகையால், காந்திய சுயராஜ்யமென்பது, இந்துக்களில் சூத்திரர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும், பஞ்சமர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

திரு. காந்தியவர்கள் பல தடவை சொல்லியிருக்கும் சமத்துவத்தின் விளக்கத்தையும் நினைப்பூட்டிக் கொள்ளுங்கள். அதாவது, “சமத்துவமென்பது ஆத்துமாவுக்கேயொழிய சரீரத்திற்கல்ல'' என்று சொல்லியிருக்கின்றார். மற்றும் அவர் 191929 இல் “தீண்டாமையொழியாமல் நான் ஒரு நாளும் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படாததற்கு முன் நான் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இவை இரண்டும் ஒழியாததற்கு முன் கிடைக்கும் சுயராஜ்யம் நிலைக்காது'' என்றும், “நிலைத்தாலும் மக்களுக்குள் ரணகளமாகும்படியான கலகம் ஏற்படும்'' என்றும் சொல்லியிருக்கின்றார்.

இப்படிப்பட்ட இவர் இப்போது தைரியமாய், “தீண்டாமை ஒழிய வேண்டியதும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் நாட்டை என் வசம் ஒப்புவித்து விட்டு விலகிக் கொள்ளுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்'' என்று பிரிட்டிஷாரை கேட்கின்றார். இதன் அருத்தமென்ன என்று யோசித்துப் பாருங்கள். ஆட்சி தனது கைக்கு வந்து விட்டால், பட்டாளம் தனது கையில் ஒப்படைத்து விட்டால், பார்ப்பனர்களையும் பனியாக்களையும் (முதலாளிகளையும்) பட்டாளத்தில் சேர்த்து ராணுவச் சட்டத்தினால் முஸ்லிம்களையும், தீண்டாதார்களையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்கின்ற எண்ணமில்லாமல் வேறு என்ன எண்ணம் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, எனதருமைச் சகோதரர்களே! தீண்டப்படாத சகோதரர்களே! தெருவில் நடக்க குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே! நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால் ஒன்று இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்; இரண்டு முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும் நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை! இல்லை!

(நன்றி : தலித் முரசு பிப்ரவரி 2009)

சுடுகாட்டை அடைய ஆற்றைக் கடக்கும் அருந்ததியர்கள்!


1993 ஆம் ஆண்டு. திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆர்.முருகேசன் என்பவர் உயிரிழக்கிறார். அவரது உடலை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வரட்டாறைத் தாண்டி செல்ல முற்படுகிறார்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள். அப்போது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் முருகேசனின் இறந்த உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அவரது உடலை சுமந்து சென்று கொண்டிருந்தவர்களே தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருந்தது.

தங்கள் பகுதியிலிருந்து சுடுகாட்டிற்கு வேறு பாதை இல்லாததால் சாலை வசதி அமைத்துத் தாருங்கள் என்ற அருந்ததியர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றபப்படவில்லை. இதர சாதியினருக்கு அந்தக் கிராமத்தில் மயானம் உள்ளது. தனி மயானம் உள்ள தலித்துகளோ அதற்குப் போகும் பாதை இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி மயானத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். பாலம் அமைத்துத் தருகிறோம் என்று நிர்வாகம் கொடுத்த உறுதிமொழி, உறுதிமொழியாக மட்டுமே இருக்கிறது.

பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தம் 700 குடும்பங்கள் உள்ளன. அதில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 250 குடும்பங்கள். இந்தப்பிரச்சனை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த எம்.வேலுசாமி. மேலும் கூறிய அவர், இதற்கு முன்பாக பட்டா நிலமொன்றில் அருகிலிருந்த சாலையை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்த நிலத்திற்குச் சொந்தமானவரோ, சாலையின் நடுவில் சாமிசிலைஒன்றை வைத்துள்ளார். பிணங்கள் அந்த வழியாகப் போக முடியாது என்றும் கூறிவிட்டார். அப்போதிருந்து ஆற்றில் இறங்கிதான் செல்கிறோம் என்றார்.

2003 ஆம் ஆண்டில் வருவாய் அதிகாரி மற்றும் தாசில்தார் ஆகிய இருவரும் இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்கள். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பல முறை பிணங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை காரணமாக மயானத்திற்கே செல்லாமல் பல பிணங்கள் ஆற்றின் கரையிலேயே எரிக்கப்பட்டன.

மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. வழக்கம் போலவே மாவட்ட நிர்வாகம், இந்தப் பிரச்சனை பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தலித் பெண்ணியம்: எல்லோருக்கும் "ஒன்று" என்பது சுத்த அபத்தம்! - ரூத் மனோரமா

நேர்காணல் - என்.சரவணன்

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் 50 வருடங்களாக உலக மனித உரிமைகளைப் பேணி வருகிறதாம். இந்தியா அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 50 வருடங்களையும் அடைந்து விட்டதாம். ஒவ்வொரு மணித்தியாலமும் இரண்டு தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் 3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தினந்தோறும் 2 தலித்துகள் கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் இரண்டு தலித் வீடுகள் அழிக்கப்படுகின்றன.

தலித்தியப் போராட்டமானது இன்றைய சூழலில் தவிர்க்க இயலாததும், காட்டமானதுமாக பரிணமித்துவிட்டிருக்கிற நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயற்பட்டுவரும் பல்வேறு தலித் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து 1998 10-11 ஆகிய தினங்களில் கூடி தலித் மக்களின் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டம் ஒன்றை வரைந்தன. அதனை சென்ற வருடம் (ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் 50வது வருட பூர்த்தி தினமான) டிசம்பர் 10 அன்று தொடக்கம் (அம்பேத்கார் பிறந்த தினமான) 14 ஏப்ரல் 1999 வரையான காலத்திற்குள் உலக அளவில் தலித் மக்களின் பிரச்சினைகளின் பால் கவனத்தை ஈர்ப்பதற்கும், தலித் மக்களின் அவலங்களையும் உரிமைகளையும் பற்றி பிரசாரப்படுத்தும் காலமாகப் பிரகடனப்படுத்தி செயற்பட்டனர். தலித் விஞ்ஞாபனம், தலித்களின் உரிமைகளும் மனித உரிமைகளே எனக்கூறும் தலித் மனித உரிமைகள் சாசனம், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், கையெழுத்து சேகாpப்பு, இந்திய அரச தரப்பினருக்கு விதந்துரைக்கவென கோரிக்கைகள் என பல்வேறு ஆவனங்களை உள்ளடக்கிய ஒரு கோவையையும் விநியோகித்து வருகின்றனர். ஐநாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில் ”மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதி” தலித் மக்களின் பிரச்சினைகளை ஐ.நாவில் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படியும், இப்பிரச்சினைகளுக்கென விசேட ஐ.நா அறிக்கையாளர் (Special Rapporteur ) ஒருவரை நியமிக்கும்படியும் கோரியுள்ளனர். இப்பிரச்சாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வந்து ஒரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்திருந்தனர். இலங்கையில் இனத்துவ கற்கைக்கான சர்வதேச நிலையத்தினர் இதனை ஒழுங்கு செய்திருந்த போதும் இது ஒரு சில ”புத்திசீவிகள்” மட்டுமே கலந்து கொண்ட நிகழ்ச்சியாக குறுகிப்போனது வேறுவிடயம்.

தலித் மக்களின் பிரச்சினைகளையும் அப்போராட்டங்களை ஒன்றிணைக்கும் பணியாகவும், மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சியில் சகலரையும் இணைக்கும் வகையில் வெப் தளம் ஒன்றும் இவ்வமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் தலித் மக்கள் பற்றிய பல்வேறு விபரங்கள், ஆய்வுகள், விவாதங்கள், செய்திகள், கட்டுரைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இதிலிருந்து இன்னும் பல தலித், மற்றும் மனித உரிமைகள் பற்றிய வெப் தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை வந்திருந்த இவ்வியக்கத்தின் கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் தலித் அமைப்பைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளரான திருமதி. ரூத் மனோரமாவுடனான நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது. இந்திய தேசிய அளவில் முதன் நிலை தலித் செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் இவர். வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும், மாற்று நோபல் விருது உட்பட பல விருதுகள் இவரது தலித்திய செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

தலித் பெண்ணிய செயற்பாட்டாளரான இவர் பெண்கள் மீதான அனைத்து ஓரங்கட்டல்களையும் கண்காணிப்பதற்கான இரண்டாவது தென்னாசிய பெண்கள் மாநாடு கடந்த மே மாதம் இலங்கையில் நடந்தபோது அவர் தலைமை வகிக்கும் ”பெண்களின் குரல்” (Women's veice) இயக்கத்தின் சார்பில் அதில் கலந்துகொண்டிருந்தார். அப்போது பெறப்பட்டது இந்த நேர்காணல். இது சரிநிகரில் வெளிவந்தது.



தலித் அரசியலின் சமகால வடிவத்தைப் பற்றி கூறுங்களேன்.

முன்னர் போலல்லாது இன்று பல்வேறு அரசியல் தலைமைகள் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து செயலளவில் இல்லையென்றாலும் பேசத் தள்ளப்பட் டுள்ளனர். ஏலவே இருக்கின்ற கூலி விவசாயிகளின் இயக்கங்கள், தொழிற்சங்க இயக்கங்கள் ஏன் சில இடங்களில் மாக்சிய இயக்கங்களையும் விட பலமாக வந்து கொண்டிருக்கிறது தலித் இயக்கம். இதற்கான காரணம் தலித் அரசியலானது வெறுமனே சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கமாக செயற்படவில்லை. விதிவிலக்கானவற்றைத் தவிர பெருமளவில் சகல அடக்குமுறைகளையும் எதிர்த்துத்தான் தலித் அரசியல் நிறுவப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தலித் பெண்ணியம் பற்றி பேச நிர்ப்பந்தித்த காரணிகள் என்ன?

தலித்துகளில் அலைவாசிப்பேரான பெண்களின் பிரச்சினைகள் குறித்த விசேட கவனம் கொள்ளப்பட்டு வருவது கடந்த பத்தாண்டு காலமாகத் தான். இதற்கு காரணம் சமூகத்தில் விளிம்பில் இருக்கும், இறுதியாக ஓரங்கட்டப்பட்டவர்கள் என கருதப்படும் தலித்துகளிலும் ஆண் தலித் துகளால் பெண் தலித்துகளை ஒடுக்கப் படுவதை விசேடமாக கருத்திற் கொண்டே தலித் பெண்ணியம் குறித்த கருத்தாக்கம் வளரத் தொடங்கியது. சகல அதிகாரத்துவ நிலைகளின் மீதும் போர் தொடுக்கின்ற தருணத்தில் ஆண் அதிகாரம் மட்டும் தப்பி, தமது அதிகாரத்தின் மீதான கவனத்தை திசை திருப்பி விடுகிறது என்றே சொல்வேன்.

பெண்கள் மீதான ஆணாதிக்க அதிகாரம் என்பது வர்க்க, சாதிய, இனத்துவ அரசியல்களைக் கடந்தது. ஒரு புறம் வர்க்க, சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிற ஆண்கள் சக தலித் பெண்ணின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். தலித் பெண்களைப் பொறுத்தளவில் ஆணாதிக்கம், சாதியம் பொருளாதார, கலாசாரம் என சகல வழிகளிலும் ஒடுக்கப்படுகின்றனர்.

தலித் பெண்கள், ஒரே நேரத்தில் அம்பேத்கார் பொது எதிரியாக சுட்டிக் காட்டிய பார்ப்பனியம் மற்றும் முதலாளித் துவம் என்பவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பெண்ணியப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறையை மறுதலித்து வந்திருக்கிறது என்று கருதுகிறீர்களா?

ஒரு புறம் பெண்கள் என்பதற்காகவே பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவரும் அதே நேரம் இன்னொரு புறம் தலித் பெண்ணாக இருப்பதால் விசேடமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அப்பிரச்சி னைகளை எதிர்த்துப் பேச முடிவதில்லை. மிஞ்சிப் பேசினால் என்னோடு படுத்தவள் தானே என்று பேச்சை அடக்கும் நிலை உள்ளது. இன்று படுத்தால் தான் நாளை வேலை என்கின்ற நிலை பல கிராமங்களில் இன்று நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உயிரியல் ரீதியில் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்றும் பெண்கள் எல்லோரும் பெண்கள் தான் என்றும் பேசுவதெல்லாம் சுத்த அபத்தம். பெண்கள் அமைப்புகளில் கூட நிலவுகின்ற சாதிய ஓரங்கட்டல்களை இங்கு காணலாம்.

தலித் விடுதலைக்கு தலித் பெண்ணின் விடுதலை இன்றியமையாதது என்றா கூறுகிறீர்கள்?

ஆம், எப்படி இன்று இந்திய உபகண்டத்தில் தலித் விடுதலையில்லாமல் புரட்சிகர சமூக மாற்றம் சாத்தியமில்லையோ அதுபோல பெண் விடுதலை பெறாத தலித் விடுதலையும் சாத்தியமில்லை. இந்த வகையில்தான் தலித் விடுதலைக்கு பெண்களின் விடுதலை முன்நிபந்தனை யாகின்றது. அது போல தலித் விடுதலையை உள்ளடக்காத பெண் விடுதலையும் சாத்தியமில்லை எனும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தலித் அரசியல் பற்றிப் பேசுகின்ற சில நட்பு சக்திகள் கூட தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இணைவினை முக்கி யப்படுத்தி செயற்படுகின்ற சந்தர்ப்பங்களில் பெண்களையோ, தலித் பெண்களையோ ஒரு சக்தியாக கருதி அதில் இணைக்காமல் இருப்பது துரதிருஸ்டவசமானது.

தலித் பெண்கள் தனியாக நிறுவனமயப்படுதல் அவசியம் என்கிறீர்களா?

இன்றைய நிலையில் தலித் பெண்களை தலைமையாகக் கொண்ட ஒரு அமைப்பு உருவாவது அவசியம். இன்றைய ஆதிக்க அமைப்புமுறையினால் ஓரங்கட்டப்பட் டவர்களும் இவர்கள் என்பதால் இவர்க ளால் தான் இதனை மாற்றவும் முடியும். எனவே அப்படிப்பட்ட தலைமை தாங்கு தலுக்கு தலித் பெண்களை தயார்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அது சுலபமான விடயமல்ல. அதற்கு சில விலைகளைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இதற்கு எந்த வித சமரசங்களும் செய்துகொள்ளத் தேவையில்லை.

உயர் சாதியினர், உயர் வர்க்கத்தினர் என்போர் எப்படிப்பட்ட ஆணாதிக்க அடக்குமுறையை பிரயோகித்து வருகி ன்றனரோ அதுபோலவே தலித் பெண்கள் மீது தலித் ஆண்கள் பிரயோகித்து வரும் அடக்குமுறை கிஞ்சித்தும் குறைவில்லாத வகையில் நடைமுறையிலிருந்து வருகி ன்றன. எனவே தான் தலித் பெண்கள் தனி யாக அணி திரள வேண்டிய, தனியாக தலைமை வகிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். பெண்களின் பேரம் பேசும் அற்றலைப் பலப்படுத்தவும் இது தான் வழி. அப்படி இருக்கும்பட்சத்தில் தான் பெண்களின் கோரிக்கைகளை வென்றெ டுக்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்தே நாங்கள் தலித் மக்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கத் தொடங்கினோம். அது ஏறத்தாழ 1987 ஆக இருக்கும். அதிலிருந்து 1995 ஆகும் போது நாங்கள் தலித் மக்களின் தேசிய சம்மேளனம் (National Federation of Dalits) என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் கீழ் இந்தியா தழுவிய தலித் இயக்கங்களை மையப்படுத்தி வருகிறோம்.

கடந்த ஆறு மாதங்களாக தேசிய அளவில் பல பாசறைகளை நடத்தி இருக்கிறோம். அதன் மூலம் தேசிய செயற் திட்டம் ஒன்றையும் வரைந்துள்ளோம். தலித் பெண்களின் விஞ்ஞாபனம் ஒன்றையும் வரைந்துள்ளோம். முதலில் 5 வருடத் திட்டம் ஒன்றைத் தொடக்கியுள்ளோம். இயக்கத்தில் பெண்களை தலைமைத் துவப்படுத்துவது. ஏனைய இயக்கங் களுடன் ஒன்று சேர்ந்து வேலை செய்வது எந்த அடிப்படையில் என்பன போன்ற வற்றில் அக்கறை செலுத்தி வருகிறோம்.

இன்று தலித் மக்களின் பிரச்சினைகளில் கர்நாடகம் தமிழ்நாடு போன்ற மாநிலங் களிலும் நிலப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பஞ்சமி நில மீட்பு விடயத்தை தலித் இயக் கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதில் முகம் கொடுக்கின்ற முக்கிய பிரச்சினை என்னவென்றால் பல தலித் இயக்கங்கள் சாதிவாரியாக பிரிந்து செயற்படுகின்ற போக்கும் இல்லாமல் இல்லை. பறையர், பள்ளர், சக்கிலியர் என சாதிவாரியாக பிரிந்து காணப்படுகின்றனர்.

பெண்களின் பிரச்சினைகளை தலித் பிரச்சினையோடு சேர்த்து விசேட கவனத்துக்குள்ளாக்கியது போல தலித் பிரச்சினையுடன் வர்க்கப் பிரச்சினையை எவ்வாறு ஒன்றிணைத்து செயற்பட்டுகிறீர்கள்?

இன்னமும் பல இடதுசாரி அணிகள் தொழிற்சங்கங்கள் என்பன பெண்கள் பிரச் சினையைக் கூட தனித்த ஒரு பிரச்சினையாக அடையாளம் காணாத சூழ்நிலையில் தலித் மக்களின் பிரச்சினை பற்றிய விடயத்திலும் அது போன்ற நிலை காணப்படுகிறது தான். இன்றும் வர்க்கப் பிரச்சினையின் கீழ் மாக்சீய இயக்கங்களில் அணிதிரண்டிருக்கின்ற அடிமட்ட அங்கத்தவர்களில் பெரும்பான் மையோர் தலித்துகள் தானே. தலித்துகள் அனைவரும் வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இலக்காபவர்கள் தானே. நாங்கள் கூறுவது அந்த சுரண்டலை விட விசேட மான சுரண்டல்களுக்கு தலித்துகள் பலியாக்கப்படுகிறார்கள் என்பதும், தலித்துகளிலும் தலித் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவருகிறார்கள் என்பதையும் தான். பெண்கள் பிரச்சினையையும் பொருளாதாரப் பிரச்சினையாக இனங் கண்டு வந்ததைப்போல தலித் பிரச்சினையும் வர்க்கப் பிரச்சினையோடு மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கிலிருந்து இன்னமும் பல சக்திகள் விடுபடவில்லை. தற்போது சில மாற்றங்கள் தென்பட்டு வருகின்றன. என்றாலும் தலித் பெண்கள் தங்களின் பிரச்சினையை தனித்து அடையாளம் காண்பதைப்போல தலித் ஆண்கள் தலித் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந் ததில்லை. அப்படி எதிர்பார்க்கவும் முடியா திருக்கிறது. அங்கு தான் தலித் பெண்ணி யத்தின் தனித்துவம் தங்கியிருக்கிறது.

தலித் பெண்கள் எவ்வாறு தங்களின் முன்னெடுப்புகளை விரிவுபடுத்தி வருகின்றனர்?

தலித் மக்களின் போராட்டமும் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வெறுமனே தீண்டாமைக்கு எதிராக மட்டும் நிற்கவில்லை. அது போல அம்பேத்கார் சிலையை உடைத்து விட்டார்கள் என்ப தற்காக மட்டும் போராடப் புறப்படு வதில்லை. இன்று தலித் மக்கள் தலித் அரசி யலின் கீழ் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதைத்தான் இன்றைய ஆரோக்கியமான விளைவாகக் காண வேண்டும். இனி நம்பிக்கையுடன் முன்செல்லலாம்.

தலித்துகள் அடிமட்டத்தில் உள்ள, வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இரையாகின்றவர்கள். பெருமளவான தலித்துகள் விசாயிகள். கூலி விவசாயிகள். முன்னர் நிலம் இருந்தது இப்போது நிலம் இல்லை. நிலம் இருப்பவர்களுக்கோ பயிர்ச்செய்கைக்கு மூலதனம் இல்லை. இவர்கள் வங்கிக் கடனும் பெற முடியாத நிலை. தலித்துகள் தங்களின் நிலங்களை மீளப் பெறுவதற்கான போராட்டங்கள் எழுந்து வருகின்றன. காலனித்துவ காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் - இதனை விற்பது என தீர்மானிக்கும் பட்சத்தில் அது இன்னொரு தலித்துக்கு தான் விற்கப்பட வேண்டு மென்பது சட்டம். ஆனால் நிலச்சுவாந் தர்கள் பலர் இவர்களிடமிருந்து கபடத் தனமாக அந்நிலங்களைப் பறித்து பினாமி பெயர்களில் வைத்துக் கொண்டிருக் கின்றனர். தற்போது அந்த பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.

இன்று நாடு முழுவதும் தலித் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். இன்று அவர்களின் செயலில், சிந்திப்பில் மாற்றம் காணத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் அண்மையில் மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்காரின் பெயரை வைக்குமாறு அங்குள்ள தலித்துகள் கோரினார்கள். போராடினார்கள். அதன் போது மக்களை அடித்து துன்புறுத்தி, சொத்துக்களை நாசமாக்கி, துப்பாக்கிச் சூடு பிரயோகித்து அடக்கினார்கள். ஆனால் அதற்காக அது போன்ற போராட்டங்கள் நின்று விடவில்லை. நின்றுவிடப்போவ துமில்லை. ஒரு புறம் தீணடாமைக் கொடுமை, இன்னொருபுறம் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி, சுகாதாரப் பிரச்சினைகள், அரசின் எந்தவித நிர்வாகமும் இவர்களைச் சேராத நிலை இப்படிப்பட்ட நிலையில் தலித் மக்கள் சூனியத்துக்குள் வாழ்ந்து வருகிறார்கள். பீகாரில் சமீபத்தில் 22 தலித்துகளை ஒரே ராத்திரியில் வெட்டிக்கொன்றனர். இன்று பீகாரில் தலித் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத் துள்ளது. பிகாரின் நிலைமை தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்துக்கு தலித்துக் களைத் தள்ளிவிட்டுள்ளது. தலித் பெண்கள் பலர் இரகசிய தலித் அரசியல் இயக்கங்களில் இணைந்து துப்பாக்கிகளை கையிலெடுத்துள்ளனர்.

அரசியல் சக்திகளை நிர்ப்பந்தப்படுத்துகின்ற பலத்தைக் கொண்டிருக்கிறீர்களா? பேரம் பேசும் ஆற்றலை பொருட்படுத்தும் நிலை எப்படி இருக்கிறது?

இன்றைய தலித் விஞ்ஞாபனம் இனி வரும் தேர்தல்களில் தேசிய அளவில் கட்சிகளிடம் முன்வைக்கப்படப்போகும் கோரிக்கையாக அமையப்போகிறது. தலித் மக்களை நிறுவனமயப்படுத்தி வருகின்ற இந்த நிலையில் இப்படிப்பட்ட அழுத்தங்கள் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் இவற்றின் விளைவுகளை உடனடியாக எதிர்பாhக்க முடியாது.

தலித் பெண்களின் கோரிக்கைகள் இப்படிப்பட்ட பாராளுமன்ற அரசியலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன?

முன்னர் குறிப்பிட்ட தலித் தேசிய விஞ்ஞாபனத்தில் தலித் பெண்கள் குறித்த கோரிக்கைகளும் அடங்குகின்றன. இனி பேச்சுவார்த்தைகளுக்கு களம் அமைக்க வேண்டியேற்படப் போகிறது. தேர்தல் அரசியலில் 25 கோடி தலித் மக்களின் வாக்குகளானது அவர்களின் கோரிக் கைகளை கருத்திற் கொள்ளச் செய்யப் போகிறது. ஆனால் இதனை பெரிதாக எதிர்பார்க்கத் தேவையில்லை. எமது இலக்கில் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைக்கிறோம் அவ்வளவு தான்.

டானியலின் படைப்புக்களில் சமூக – அரசியல் உணர்வு நிலை:க. தணிகாசம்

டானியல் அவர்கள் ஒரு படைப்பாளி மட்டுமல்ல சமூக ஒடுக்கு முறையின் கொடூரங்களைவ வாழ்வியல் அனுபவங்களுக்கு ஊடாக கண்டு அதற்கெதிரான போராட்டங்களில் இளமைக் காலத்திலிருந்தே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு போராளி. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒரு அரசியற் கோட்பாட்டை தனக்கென ஏற்றுக்கொண்டு, மரணத்தின் இறுதிவரை இத்தகைய உணர்வு நிலையை தனது படைப்புக்களுக்கூடாக வெளிப்படுத்த முனைந்துள்ளார். இத்தகையை ஒரு படைப்பாளியின் படைப்புக்களில் வெளிப்படும் சமூக, அரசியல் உணர்வு நிலையை அறிவதற்கு முன் கலை இலக்கியத்திற்கும், அரசியலுக்கும் இடையேயுள்ள இறுக்கமான தொடர்பு பற்றி எடுத்து நோக்குவது அவசியமாகும்.

கலை கலைக்காகவே என்றும், கலை இலக்கியத்தில் அரசியலா என்றும் தூய கலைவாதிகள் கூக்குரலிட்ட ஒர் காலம் இருந்தது. இன்றும் அக்குரல்கள் முற்றாக ஓய்ந்துவிட்டது என்று கூறமுடியாது. புதிய புதிய சொற்றொடர்களையும், தந்துவங்களையும் முன்வைத்து நடைமுறை அரசியல் சமூக பொருளாதார வாழ்விலிருந்து கலை இலக்கியத்தைப் பிரித்து நோக்கும் போக்கும் துளிர்விட்டு வருவதை நாம் கண்டுவருகிறோம், நடைமுறை வாழ்க்கைப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க அஞ்சி தப்பித்து விலகி ஓடும் மனப்பாங்கிலிருந்தே இத்தகைய போக்கு எழுகிறது எனலாம்.

இத்தகைய போக்குக்கு மாறாக எமது நடைமுறை வாழ்விலிருந்து நாம் கற்று வரும் புறநிலை உண்மை என்ன? இருபத்தியோராம் நூற்றாண்டில் கால் பதிக்கப்போதும் எம்மிடையேயும் இன்றும் பெரும்பான்மையோர் தலைவிதிக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி சமூக, அரசியல் பொருளாதார விதிகள் எவ்வாறு எமது இருப்பையம், வாழ்வையும் பாதிக்கின்றது என்பதை இன்று நாளும் பொழுதும் நாம் நிதர்சனமாகவே கண்டு வருகின்றோம்.

டானியலின் பஞ்சமர் நாவலில் வருவதுபோல அன்று கோவில் விழாக்காலங்களிலே பக்தர்கள் கூடும் போது பஞ்சமர்கள் அமர்வதற்கு எல்லையாக கயிற்றைக் கட்டி இருந்தார்கள். இன்று முட்கம்பி வேலிகளுக்குள் எல்லோருமே பஞ்சமராகி ஒடுங்கிவிடும் ஓர் நிலையில் ஆதிக்க அரசியலுக்கு துணைபோகும் அம்சங்களை எமது இலக்கியத்தில் மட்டுமல்ல, மதத்தத்துவங்களிலும் பண்பாட்டு விழுமியங்களிலும்: கல்வியிலும் கூட கண்டு அகற்ற முனைவதின் மூலமே ஆரோக்கியமான சமூகச் சூழலை இங்கு உருவாக்கமுடியும். இந்தகைய அரசியல் விதி எவ்வாறு கலை இலக்கியங்களுக்கூடாக எம்மேல் பாதிப்புச் செலுத்துகின்றது என்பது பற்றி பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கூறிய கூற்றை இங்கு எடுத்து நோக்குவது பொருத்தமானதாகும்.

“அரசியலையும், தத்துவத்தையும் இலக்கியத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள், கூக்குரலிடுபவர்கள் உண்மையில் தமக்குப் பிடிக்காத தத்துவங்கரளையே தடுத்து நிறுத்த விரும்புகின்றனர். தமது வாதத்திற்கு வழித்துணையாக கலையழகின் முக்கியத்துவம் என்ற கருத்தை முன்கொண்டு செல்கின்றனர். வர்க்கங்களாகப் பிளவுண்டு கிடக்கும் சமூதாயங்கள் அனைத்திலுமே எல்லாம் காலங்களிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு கவிஞன் தான் சார்ந்த வர்க்கத்தின் தத்துவத்தையே வெளிப்படுத்துகின்றான்… அரசியலில் மாத்திரமின்றி கலைஇலக்கியத்திலும் அராஜகம் அழிவையே கொண்டு வரும்.” (இலக்கியச் சிந்தனைகள் – பக். 101.)

இங்கு வெறும் அரசியலை அல்ல தத்துவம் சார்ந்த அரசியலின் முக்கியத்துவம் பற்றி கைலாசபதி அவர்கள் அழுத்திக் கூறுகின்றார், கலை இலக்கியம் பற்றிய இவ்விரிந்த சமூகப் பார்வையை ஏற்று ஈழத்துப் படைப்பிலக்கியத் துறைக்கு தமது பெரும் பங்கை நல்கியவர் டானியல், இவரது படைப்புக்களில் வெளிப்படும் சமூக, அரசியல் உணர்வு நிலைகளை அவர் ஏற்றுக் கொண்ட இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்தே இனங்காண்பது மிகப் பொருத்தமானதாகும்.



டானியலின் இலக்கியக் கோட்பாடு –

“மக்களிடம் படிப்பது, அதை மக்களிடம் திருப்பிக் கொடுப்பது” மாஓ சேதுங் அவர்களின் மேற்கோளோடு 1972இல் வெளிவந்த பஞ்சமா நாவலின் முன்னுரையிலிருந்து அவரது ஆக்கங்கள். ஓவ்வொன்றிலும் தனது கலைக் கோட்பாடு பற்றியும், அரசியல் நிலைப்பாடு பற்றியும் வெளிப்படையாகவே கூறி வந்துள்ளார்.

“இந்த உலகின் கடைசி மனிதனும் சுதந்திரம் பெறும்வரை ஓய்வதில்லை” என்ற திட சங்கற்பத்துடன் நிரந்தர சமாதானத்திற்காக போராடி வருவோர்களுக்கு இந்நூல் சிறு ஆயுதமாக அமையுமானால் அதுவே எமக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகும்.”
என்று பஞ்சமர் முன்னுரையிலும்,

“வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அடைவதற்கான மனித இனத்தின் யுத்தத்தில் எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கலை இலக்கியங்களும் இருக்க வேண்டும்” என்று கானல் முன்னுரையிலும் கலை இலக்கியத்தை சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான, சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகக் கொள்ள வேண்டும் என்கிறார் டானியல் அத்துடன் நிற்காது.
“சரியான இலக்கியக்காரன் தனம் படைப்புக்களுக்கூடாக சாயான அரசியல் தெனிவை உண்டாக்கும் விதைகளைத் தூவி விடாதவனாகில் அவன் மிகவும் தாக்கமான தவறைச் செய்கின்றான்.”

என்று அதே கானல் முன்னுரையில் கலை இலக்கியக்காரருக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். மேற்கூறிய வரிகளிலிருந்து வெறும் ரசனைக்காக எழுதுபவர்கள், சமூக அவலங்களை வெறுமனே சித்தரிப்பவர்களிருந்து வேறுபட்டு அடிப்படைச் சமூகமாறுதல்களுக்காக தனது எழுத்தை ஆயுதமாக்க கொளபவராக டானியல் தன்னை வெளிப் படுத்துகின்றார்.

டானியல் அவர்களின் இலக்கியக் கோட்பாடு இவ்வாறு இருக்க ஐம்பதுகளில் மராட்டிய மாநிலத்தில் தோன்றி எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பரவிய தலித்திலக்கியம், எழுபதுகளின் ஆரம்பத்திலேயே சாதி ஓடுக்கு முறைக்கு எதிராக இலக்கியம் படைத்த டானியலை தமிழில் தலித்திலக்கிய முன்னோடியாக ஏற்றுக் கொன்கிறது. ஈழத்து எழுத்தாளர் ஒருவர் தமிழகத்தின் தலித்திலக்கிய முன்னோடியாக, பிதாமகனாக ஏற்றுக்கொள்ளப்படுவது நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விடயமே.

ஆனால் ஒடுக்குமுறை ஒன்றானாலும் ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள இருவேறு வகைப்பட்ட சமுதாய அரசியல் சூழலில் இருவேறு வகைப்பட்ட கோட்பாட்டுத் தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை ஒன்றாக்கித் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத்துள் ஆழ்த்தும் நிலை இன்று எமது இலக்கியச் சூழலில் எழுந்துள்ளது. டானியலை அவர்கள் முன்னோடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதற்காக தமிழகத்து தலித்திலக்கியக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் ஆய்வின்றி அப்படியே எமது மண்ணில் மீள் நடுகை செய்வது எமது கலை இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் ஆரோக்கியமான விளைவுகளைத் தருமா என்பது சிந்திக்கப்பட வேண்டும்.

தமிழகததில் ஏனைய சாதிப்பிரிவுகளின் ஆதிக்கம் இருந்தாலும் பார்ப்பனியம், ஆரியம், இந்து, இந்தியா என்று அரச ஆதிக்கத்துடன் அது இணைந்து விரிந்து செல்வதாக தலித்திலக்கியத்தை முன்னெடுபவர்கள் கூறுகின்றனர். இத்தகைய பார்வைக்குத் துணையாக பெரியாரியம், பின் அமைப்பியல், கட்டவிழிப்பு வாதங்களைம் துணையாகக் கொள்கின்றனா. இதனை வைத்து பாரதியையும் புதுமைப் பித்தனையும் கூட உரித்துப் பார்த்து அவர்களுக்குள் மறைந்திருக்கும் பார்ப்பனியத்தை வெளிக்கொணர்கின்றனர்.

ஈழத்திலும் இதன் தாக்கங்கள் இன்று வெளிப்படுகின்றன. பாரதியும் ‘மானுடம் தனைக் கட்டிய தளையெலாம் அறுக’ என்று தான் கூறினான். கட்டவிழ்ப்பது நல்ல விடயம் அவை எமது சமுதாய நடைமுறைத் தேவைகளுடன் இணைத்துச் செய்யப்படும் போதுதான் பயனுள்ளதான அமையும். சமூகத்தில் யதார்த்தமாக நிலவும் கட்டுக்களை தளைகளை அறுக்க முனையும் போது சமூகப்பொறுப்பும் நிதானமும் தேவைப்படுகிறது இல்லையேல் குளத்தை கலக்கி பருந்துக்கு இரையாக்கும் செயலாகவே இது முடியும்.

ஈழத்தில் குறிப்பாக டானியலின் எழுத்துக்கள் எழுந்த வடபகுதிச் சூழலில் வேளாளர் தலைமையிலான சாதியப் படியமைப்பு மூலமே சாதி ஒடுக்குமுறை பேணப்பட்டுவருகிறது. தமிழகத்தைப் போலவே இங்கும் ஆரம்பத்தில் சாதியக் கட்சிகளை உருவாக்கி சாதிய அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுக்கும் போக்கும் மராட்டியத்தில் ஏற்பட்டது போல பௌத்த மதமாற்ற முயற்சிகளும் முளைவிட்டிருந்தன. ஆதனை மீறி மாச்சிய அணுகுமுறையுடன் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வர்க்க சக்திகள் ஒன்றிணைந்து தீண்டாமைக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் தலைமையில் இங்கு போராட்டம் முன்னெடுக்கப் பட்டதுடன் அதன் அன்றைய இலக்கை அது வெற்றிகரமாக அடைந்தன. இது பற்றி இக்கட்டுரையின் காலமும் களமும் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று சாதி அரக்கன் ஒழிந்து விட்டான். ஆனால் அரக்கத்தனங்களில் ஒரு பகுதியை ஒடுக்குமறையாளர்கள் மிக நாகரீகமாக தமது மனங்களின் ஒரு பகுதியில் மறைந்து வைத்துள்ளனர். போர்க்கால இடப்பெயர்வுகளின் போது இது பல இடங்களில் வெளிப்பட்டதுடன் டானியலின் தண்ணீர் நாவலையும் நினைவூட்டியது எனவே டானியல் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டின் அடிப்படையின் தொடர்ந்து சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதா அல்லது தமிழகத்து தலித்திய வழிமுறைகளைப் பின்பற்றி நாமும் சாதிய அடிப்படையிலான கட்சிகளையும் போராட்டங்களையும் உருவாக்குவதா என்பது டானியலின் சமூக அரசியல் பார்வை பற்றிய ஆய்வின் போது எம்முன்னால் எழுகின்ற கேள்வியாகம்.

ஆனால் ஒரு படைப்பாளி அல்லது கலைஞன் தனக்கென ஓர் அரசியல் தத்துவார்த்தக் கருத்து நிலையைக் கொண்டிருந்தாலும் கலையாக்கச் செயற்பாட்டின் போது அக நிலை சார்ந்த உள்ளாந்த உணர்வில் நின்று இயங்குவதால், அவனது வாழ்நிலை சூழல் இவற்றின் தாக்கங்களினால் அக்கருத்து நிலையினின்றும் சுருங்கிப் போகவும், விரிந்து செல்லவும், மிதமாகவும், தீவிரமாக செயற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. பாரதியின் கட்டுரைகளுக்கும், கவிதைகளுக்கும் இடயேயுள்ள மிதமான, தீவிரமான தன்மைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இதனால் இங்கு ஒரு கலைப்படைப்பு எழுவதற்கான புறநிலை யதார்த்தம் கலைஞனது அகத்தில் ஏற்படுத்திய பாதிப்பினை நாம் சிறிதளவாவது உணர்ந்துயொள்ள அப்படைப்புத் தோன்றிய காலத்தையும், களத்தையும் அறிவது அவசியமாகும்.


காலமும் களமும் :-

இலங்கையிலம், தமிழகத்திலம் வெளிவந்த பல இலக்கியக் கட்டுரைகளிலும் ஐம்பத்துகளிலிருந்து தனது சிறுகதைகள் மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த டானியல் அவர்கள் 1972முதல் 1986 வரை வெளிவந்த பஞ்சமர் தொடர் நாவல்களின் மூலமே ஆளுமைமிக்க எழுத்தாளராக பரிணமித்துள்ளார். அவரது அனைத்து நாவல்களுக்கான உந்தல், உணர்வுத்தூண்டல்களையம், கருக்களையும், “பஞ்சமர்” நாவல் தோன்றிய காலமும், களமுமே அவரிடமேற்படுத்தியது எனலாம். “பங்சமர்” நாவல் முன்னுரையில்

“1956 இல் இருந்து முன்பிருந்த அரசியல் வடிவங்கள் ஏறக்குறைய இந்த மக்களால் கைவிடப்பட்டு “அடிக்கு அடி உதைக்கு உதை” என்ற விதத்தில் ஏற்பட்ட எழுச்சி 1966 இல் தனியான ஒரு ஜாதிக்கென்றிலாமல் பொதுவில் நல்லெண்ணங் கொண்ட சகலரையும் உள்ளடக்கிய வெகுஜன இயக்கமாகட் பரிணமித்ததுவரை நடந்து முடிந்துபேன சம்பவங்கள் மட்டுமே இந்த நாவலுக்கூடாக மீட்கப்படுகின்றது. இதற்குப் பின்னால் இந்த மக்கள் நடாத்திய போராட்டங்கள் அது யாரால் எப்போது எழுதப்பட்டாலும் பஞ்சமரின் தொடர்ச்சியாகவே இருக்கும்.”

ஏன்று டானியல் அவர்கள் குறிப்பிட்டிருப்பது எமது சிரமத்தைக் குறைத்துவிடுகிறது. டானியலால் குறிப்பிடப்படும் “66 ஒக்டோபர் எழுச்சி” அவருது நாவல்களுக்கு மட்டுமல்ல அவரது தேசியம், தேசிய ஒருமைப்பாடு பற்றிய பலரது தவறான புரிதல்களுடன் கூடிய வாதப் பிரதிவாதங்களுக்கும் களமாக அமைவதால் இக்காலத்தையும், களத்தையம் சற்றுதெளிவாகவே புரிந்து கொள்வது அவசியமாகும், பொருத்தப்பாடு கருதி இவரது தேசிய இனப்பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டைக் குறிப்பிடும் போது இதனை ஆழமாக நோக்குவோம்.

அறுபதுகளின் ஆரம்பத்தில் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் நடந்தது. அது முடிந்து பல ஆண்டுகளின் பின்வரும் தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அது போன்றே தமிழர்களிடையே இருந்து வந்த சுரண்டல்கள், ஏற்றத் தாழ்வுகள் ஒழியவில்லை. சாதிபேதங்கள் மறையவில்லை. தமிழர்களில் ஒரு பகுதியினர் ஆலயங்களுள் சென்று சமமாக வழிபட முடியாது. பொது இடங்களில் சமத்துவமாக அமரமுடியாது. தேனீர்க்கடைகளில் கறள்பேணிகளும், போத்தல்களும் தாரளமாக பழக்கத்தில் இருந்தன. தோட்டக் கூலிகளுக்கு தட்டுவத்தில் சோறும், கைமண்டையில் நீரும் (இருக்கைகனாலும் ஏந்திக் குடிப்பது) தாராளமாக எங்கும் கிடைத்தது. பெண்கள் மார்பகத்தை மறைத்து ஆடை அணிவது கூட குற்றமாக கருதப்பட்டது. இத்தகைய கொடுரங்களுக்கு எதிராகவே பஞ்சமர் நாவில் வரும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பலர் தியாகிகளாகினர் பலர் தூக்குக்கயிற்றைத் தொட்டு மீண்டனர், டானியலின் நாவலில் வருவது போல நாய்கள் அல்ல, ஆண்டாண்டுகாலமாக அடிமையுற்றிருந்த மக்கள் தான் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்து போராடினார்கள். இதனை பஞ்சமர் நாவலின் சமூகப் பார்வையிலே பார்ப்போம். நிலவுடைமையாளர்கள் விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டவும் அச்சுரணடல் கொடுமைகளுக்கெதிராக ஒன்றுபட்டுக் கிளர்த்தெழுவதைத் தடுப்பதற்காவும், உழைக்கும் மக்களைப் பிரித்து ஏற்படுத்திய சாதிமுறை அறுபதுகளின் நடுப்பகுதியிலும், தனது கொடூரத்தை இந்த மண்ணில் காட்டி நின்றது.

அதுபோன்றே சாதி, இன, மத, வர்க்க பேதங்களுக்கு முட்டுக்கொடுத்து அவர்களிடையே மோதல்களை ஏற்படுத்தி அடிமட்ட மக்களைப் பிரித்து வைத்து அவர்களது முதுகுகளில் மேலும், மேலும் சுமைகளை ஏற்றி வந்த பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல் மேற்கூறிய கொடுமைகளை எதிர்த்து சமூகமாற்றத்தை விரும்பி நின்ற அன்றைய புதிய தலைமுறையினருக்கு தடையாக அமைந்தது. இத்தகைய சூழலில் உலகப் பொதுவுடைமை இயக்கத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த மோதல்கள், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் ஏற்பட்டு 1964இல் பிரிவு ஏற்பட்டது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத்தவறிய பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலைப் புறக்கணித்து புதிய ஜனநாயக அமைப்பைத் தோற்றுவிப்பதற்கான வெகுஜனப் போராட்ட மார்க்கத்தை புதிய அணியினர் முன்வைத்தனர். ஆந்த அணியிலேயே டானியல் அவர்களும் நின்றார்.

உலகமேலாதிக்க சக்திகளோடு கூட்டுச் சேர்ந்திருந்த மிகப்பலமான அரசுக்கெதிஜராக ஐக்கியப்படுத்தப்பட்டக்கூடிய அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டை இவர்கள் கொண்டிருந்தனர். இத்தகைய ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே வடபகுதியில் அதுவரை சாதியச் சங்கமாகக் குறுகிப்போயிருந்த நிலையை மாற்றி தீண்டாமைக் கொடுமைக்க எதிராக ஒன்றிணைய விரும்பிய அனைத்து வர்க்கசக்திகளையும் இணைத்த போராட்டமாக அது முன்னெடுக்கப்பட்டது. அதேபோன்று வல்லை நெசவாலை, காங்கேசன் சீமெந்து ஆலை, பரந்தன் இரசாயன ஆலை, இ.போ.ச தொழிலாளர், தியேட்டர் தொழிலாளர், மில்க்வைற் தொழிலாளர், போன்றோரின் வேலை நிறுத்தப்போராட்டங்கள், கிளிநொச்சி, வன்னிப்பிரதேச விவசாயிகள் நில, நீர்ப்பங்கீட்டுக்கான போராட்டங்கள் எனப் பலமுனைகளிலம் இவை முன்னெடுக்கப்பட்டன. இப் போராட்டங்களில் பங்குகொண்ட பல்வேறு இன, மத சமூகங்களைச் சேர்ந்த வர்க்க சக்திகளும் சாதியத்துக்கெதிரான போராட்டங்களிலும் பங்குகொண்டு அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இத்தகைய பரந்த தளத்தில் நின்றுதான் டானியலின் பஞ்சமர் நாவல் படைக்கப்பட்டது.
“பஞ்சமர்” நாவல்களும், சமூகப் பார்வையும்:-

இதுபோன்ற உண்மை நிகழ்வுகளை கலையாக்கம் செய்யும் போது அந்த நிகழ்வுகளோடு இரத்தமும், சதையுமாகப் பின்னிப்பிணைந்து நின்ற மக்களின் பார்வைக்கும், படைப்பாளிகளின் பார்வைக்கும் இடையே வேறுபாடு ஏற்படுவது இயல்பு. அந்த வேறுபாடு படைப்பாளியின் கலையாக்கத் திறனால் மேலும் சிறப்படைந்து கூர்மை அடைவது உண்டு. திறமை குன்றி மழுங்கிப்போவதும் உண்டு.

இங்கு இப்போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட “பஞ்சமரும்” செ.கணேசலிங்கத்தின் “போர்க்கோலமும்” இப்போராட்டத்தில் பங்குகொண்ட மக்களின் விமர்சனத்திற்குட்பட்டவைதான், தமிழகத்தில் கீழ்வெண்மணிச் சம்பவத்தை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட “குருதிப்புனல்” நாவலும் இவ்வாறு விமர்சனத்திற்கு உள்ளாகியது. காரணம் இத்தகைய நாவல்களின் வெற்றி சம்பவங்களை யதார்த்தமாக படம்பிடித்தல் காட்டுவதல்ல அல்லது எழுத்தாளன் தனது விருப்பு வெறுப்புக்களை கொட்டித்தீர்ப்பதல்ல. மாறாக அப்போராட்டத்திற்கு உந்துதலாக அமைந்த சமூக பொருளாதார உறவுநிலைகளையும். ஆவை அளவுமாற்றம் படிப்படியாகப் பண்பு மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் படிநிலைகளையும் கலாபூர்வமாகத் தொட்டுக்காட்டுவதாக அவை அமைதல் வேண்டும்.

இத்தகைய எதிர்பார்ப்புகளோடு பஞ்சமர் நாவலுக்குள் நாம் நுழைந்தால் எமது மண்ணில் நிகழ்ந்த சாதிக்கொடுமைகள் சிலவற்றை டானியல் காட்சிப்படுத்துகிறார், பலவற்றை உரையாடல்கள் மூலமானது வெளிக் கொணர்கிறார். இந்த மண்ணில் நடைபெற்ற போராட்டங்கள் பல சித்தரிக்கப்படுகின்றன. உணர்வும், உயிரோட்டமம் நிறைந்ததாக அது பூரணத்துவப்படுத்தப்படவில்லை. சாதி ஒழுக்குமுறைக் கெதிராக பெரும் பாதிப்பைச் செய்த அப்போராட்டத்தைச் சித்தரிக்கும் நாவலின் சிறப்புமிக பாத்திரங்கள் பலவீனமானவையாகவே படைக்கப்பட்டுள்ளன. உறுதியான வர்க்கத்தளத்திலிருந்து அவை உருவாக்கப்படவில்லை. எடுத்துக் காட்டாக பஞ்சமர் நாவலில் இராண்டாம் பக்கத்தில்.

“இப்ப பள்ளியன் கூட, கூலியைப் பேசுங்கோ அருவி வெட்டவர எண்டு கேக்கிறாங்கள்.. பள்ளரும் எங்களுக்கு தட்டுவத்திலை சோறும் வேண்டாம், உங்கடை கூலி நெல்லும் வேண்டாம் காசாச் சம்பளத்தை தாருங்கோ எண்டு என்னட்டையே கேட்டிட்டாங்கள்….. ம் … என்ன செய்கிறது அவன் கோவியக் கந்தையாவின்ர மிசினையும் பிடிச்சு நாளைஞ்சு பள்ளரையும் பிடிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திப் போட்டன்… இந்த அருவி வெட்டுக்கும் மிசின் வந்துதெண்டால் ஒரு கரைச்சலுமில்லை, பள்ளர் பள்ளியன் எழுப்பம் விடாயினம்.”

சின்னக் கமக்காரச்சியின் இந்த வார்த்தைகளில் கிராமத்து விவசாயக் கூலிகளின் போராட்டத்திற்கெதிராக விவசாய இயந்திரமயமாக்கலை சிந்திக்கும்போக்கு வெளிப்படுகின்றது. ஆத்துடன் இன்றைய தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிராக பல்தேசிய நிறுவனங்கள் கணணிமயப்படுத்தலை தீவிரமாக்கும் போக்கும் எமது கண்முன் விரிகிறது.

ஆனால் “என்கதை” என்ற சிறு நூலில் டானியல் குறிப்பிட்டுள்ளது போன்று மாக்க்கியின் “தாய்” பாத்திரத்தை மனதிற் கொண்டு படைக்கப்பட்ட “ஐயாண்ணர் பாத்திரத்திற்குப் பஞ்சமர் நாவலில் முதல் முறையாக ஒரு கள்ளுக் கொட்டிலில் அவரது வருகைக்கு கட்டியங் கூறப்படுகின்றது.

“என்ன மாணிக்கம் ஐயாண்ணர் வந்திட்டுப் போட்டுதே” “இல்லைச் செல்லப்பாண்ணை ஆள் வாற நேரந்தான்.” “அது பாவி இல்லாட்டி இஞ்சை வந்து போறது போல இருக்காது ஒரு சுத்த நெஞ்சுக்காரன், தன்சாதிக்காரன், பிற சாதிக்காரன் எண்டு முகம் பார்க்காத சீவன், என்னண்டுதான் இந்தாளுக்கு உலகத்து புதினமெல்லாம் தெரியுதே கடவுளுக்குத்தான் தெரியும்.”

இதன் பின் ஐயாண்ணர் வரகை தந்து அவரால் கூறப்படும் புதினமும் சாதி மீறிய பாலுறவும் அதனால் ஏற்படும் கொலை பற்றிய கதையும் தான், இதுவும் சாதிக் கொடுமைகளில் ஒன்றுதான். ஆனால் டானியலைப்போன்ற எழுத்தை ஆயுதமாக ஏற்றுக் கொண்ட ஒரு எழுத்தாளன் பரந்த நோக்கோடு முன்னெடுக்ககப்பட்ட ஒரு போராட்டத்தின் தளகர்த்தனை அறிமுகப்படுத்தும் விதமும், அவரது புதினப் பேச்சும் ஆரம்பமே பலவீனமாக அமைந்து விடுகின்றது. இப்பலவீனத்தினன் பிறிதொரு வெளிப்படையாக இப்போராட்டத்தை தத்துவ வழிப்படுத்தும் குமாரவேலன் எனும் பாத்திரமும்.

“வேலுப்பிள்ளைக் கமக்காரனின் பேரன், சின்னக் கமக்காறிச்சி இருட்டுக்கை பெத்த பிள்ளை குடத்தினைப் பள்ளி வளர்த்த மகன்” (பஞ்சமர் பக் – 129) என்றே படைக்கப்படுகின்றான். வர்க்கச் சுரண்டல்கள், ஒடுக்குமறைகள் இவற்றுக்கு மேலாக பாலியல் உறவுகளை முதன்மைப்படுத்தும் இப்போக்கு பஞ்சமரில் மட்டுமல்ல பஞ்சமர் தொடர் நாவல்கள் அனைத்திலும் பாதிப்பைச் செலுத்தியுள்ளது.

சாதி மீறிய பாலுறவு சமூக யதார்த்தமாக ஒரு பக்கத்தில் இருந்தபோதும் அதை வெளிப்படுத்தும் போது, ஆணாதிக்க உணர்வுடன் அதிகாரத்திலிருக்கும் நிலவுடைமையாளாகள் தமது குடிமைப் பெண்கள் மீது மேற்கொள்ளும் பாலியல் ஒடுக்குமறையையும், அதே ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு உட்படும் அவர்களது வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் பாலியல் பிறழ்வுகளையும் சமப்படுத்த முடியாது ‘கானல்’ நாவலில் வெள்ளைச்சி அம்மாள் அவளது கணவன் தம்பாப்பிள்ளையாரால் அடித்துக் கொல்லப்படுவது இவ்வொடுக்கு மறைக்க எடுத்துக் காட்டாக அமைகிறது. எனவே சாதி மீறிய பாலுறவை முதன்மைப்படுத்துவது “அடிமைகள்” நாவல் முன்னுரையில் கோ.கேசவன் குறிப்பிட்டுள்ளது போல்,

“உயர் சாதி ஆடவர்கள் கீழ்சாதிப் பெண்களைப் போகப் பொருளாக நினைக்கும் யதார்த்தப் போக்கிற்கு இலக்கிய பழிவாங்கலாக உருமாறி ஒருபோலி மனநிறைவைத் தர முயல்கிறது. இத்தகைய போலி மனநிறைவுகள் புரட்சிகர இயக்கத்திற்கு பலம் சேர்க்காது. புதினத்தை கொண்டு செல்வதற்குரிய சுவாரசியமான கலையுக்தி என்ற அளவில் கூட இதைப் பயன்படுத்துவதில் தவறு உண்டு.” (அடிமைகள் பக்-30)

என்பது இங்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
பஞ்சமருக்குப் பின் வந்த கோவிந்தன், அடிமைகள், கானல், தண்ணீர் போன்றவை சற்று பின்னோக்கி வரலாற்றுப் போக்கில் சாதியக் கொடுமைகளையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றில் கானலின் களம் சற்று வேறுப்படுகின்றது. பாத்திர வார்ப்புகள் சிறப்பாக அமைகின்றன. 1975இல் வெளிவந்த ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’ எள்ற குறுநாவலில், அன்பைப் போதிக்க வந்ந மதங்கள் மக்களை ஒடுக்குவதற்கு அதிகார வெறியர்களின் கையில் கருவிகளாக இருப்பதைக் காட்ட,

“முஷ்டியை உயர்த்தி மேசைமேல் பலமாகக் குத்தினான் முத்துராசன். மேசை அந்தத்தில் கொலுவிருந்த அந்தோனியார் திருச்சொரூபம் சரிந்து நிலத்தில் வீழ்ந்து நொருங்கிப் போயிற்று” (போராளிகள் காத்திருக்கின்றனர் பக் – 104)

என்று தீவிர உணர்வு நிலையில் நின்று காட்டிய டானியல் கானல் நாவலில் மிக நிதானமாக அதே உணர்வை வெளிப்படுத்துகிறார். சாதி, இன, மத பேதங்களை அகற்றுவதிலும், ஒடுக்குமுறைகளை இல்லாமற் செய்வதிலும் “பட்டகினி” என்று சிங்களத்தில் கூறப்படும் “வயிற்று நெருப்பை” பசித்துயரை ஒழிப்பதிலும் மதங்களால் மனிதகுலத்திற்கு எதுவும் செய்யமுடிறயவில்லை என்பதை ஞானமுத்துப் பாதிரியாரின் கண்ணீரால் எழுதிக் காட்டுகிறார் டானியேல்.

டானியலின் படைப்புகளில் தேசிய இனப்பிரச்சினை :-
டானியலின் நாவல்களில் தேசிய இனப்பிரச்சினையைத் தொடுகின்ற நாவல்கள் “போராளிகள் காத்திருக்கின்றனர்” என்ற குறுநாவலும், 1984இல் எழுதப்பட்டு 1993ல் வெளிவந்த “பஞ்ச கோணங்கள்” நாவலுமாகும். இந்த இரு நாவல்களும் பத்தாண்டுக்கால இடைவெளியில் எழுதப்பட்டுள்ளது. இந்த இரு நாவல்களுக்கூடாகவும் டானியல் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர் தேசிய இனப் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதும், தென்னிலங்கை இடது சாரிகளை நம்பி தேசியம் தேசிய ஒருமைப்பாடு பேசி தவறிழைத்து விட்டார் என்பதுமாகும். இது இடதுசாரிகள் என்று கருதப்படும் எல்லோர் மீதும் இந்த இடைக்காலத்தில் சற்று உரமாகவே தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வரும் குற்றச் சாட்டாகும். எனவே இதன் உண்மை நிலையைக் கண்டறிய இக்கட்டுரையில் வரும் காலமும் களமும் என்ற பகுதியில் கூறப்பட்ட அறுபதுகளின் நடுப்பகுதியில் நிகழ்ந்த மாறுதல்களை மீண்டும் இங்கு நினைவு கூரல் அவசியமாகும். இக்கால கட்டத்தில் தமிழ், சிங்கள மிதவாதத் தலைமைகளுக்கெதிராக அரசியல் இயக்கங்கள் எழுந்தன. தெற்கே இது அதிதீவிர நிலைப்பாட்டை எடுத்து ஜனதாவிமுக்கி பெரமனை என்ற இளைஞர் இயக்கமாக மாறியது. வட பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் இது மக்கள் மத்தியிலான முரண்பாடுகளை வர்க்கப்பார்வையுடன் நோக்கி சீர் செய்து வளர்வதற்கு முன்வந்தது.

காலனித்துவம் அமைத்துக் கொடுத்த பாராளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு, அவர்கள் விட்டுச் சென்ற அதே இனவாதப் புண்கனைக் காட்டி அரசியல் நடாத்தும் ஆளும் வர்க்கத்திற்கு புண்களைக் காட்டி அரசியல் நடாத்தும் ஆளும் வர்க்கத்திற்கு அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. ஆவ்வப்போது ஆசனங்களில் மாறி அமர்த்தால் மாறி அமர்த்தால் இரு நிலைகளும் மாறி விடும். புதவிக்கு ஆபத்து என்றால் சண்டைபோட்டுக் கொள்வார்கள். புதவி கிடைத்தால் கூடி விருந்துண்பார்க். பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகள் சாதாரண நடைமுறை இது.

ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், தொழிலாளர் வர்க்கத்கிற்கும் நிரந்தரமான நண்பர்களுமுண்டு, பகைவர்களுமுண்டு, இந்த மக்களின் பொது விரல் விட்டு எண்ணக்கூடிய நிலவுடைமையாளர்களும், பெரு முதலாளிகளுமாவர். இவர்களுக்கெதிராக மக்கள் எழுத்தால் மிகப் பலம் வாய்நத ஏகாதிபத்யமும். பிராத்திய வல்லாதிக்கமும் தனித்தனியாகவோ, கூட்டாகவே பக்கபலமாக முன்வரும். இவர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக இந்த மண்ணையும் இதன் மக்கள் சக்தியையுமே இவர்கள் நம்பினா. எனவே பலமான எதிரிக்கு எதிராக தொழிலாளர்கள். விவசாயிகள், மாணவர்கள், புத்திஜீவிகள், சிறு முதலாளிகள் இணைத்து நடாத்தும் வெகுஜனப் போராட்டங்களுக்கு ஊடாகவே மக்கள் ஒவ்வொருவரும் ஒருவரது சுகந்திரத்தை ஒருவர் மதிக்கும் மனப்பக்குவத்தைப் பெறுவர் என்று இவர்கள் நம்பினா. இந்த அடிப்படையிலேயே டானியல் கைலாசபதி போன்றவர்களால் தேசியம், தேசியவொருமைப்பாடு என்ற பதங்கள் அறுபதுகளின் நடுப்பகுதிக்குப் பின்னா பிரயோகிக்கப்பட்டது. இவர்கள் பேரினவாதத்திற்கு முட்டுக்கொடுத்த தென்னிலங்கை இடதுசாரிகளை நம்பி தேசியம் பேசவில்லை.உழைப்பாளி மக்களையும் புத்திஜீவிகளையுமே நம்பினர். இதற்கு எடுத்துக்காட்டாக.

“இந்த வாலிபர்கள் தாங்கள் தூக்கிய இந்த ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு புரட்சியை நோக்கிச் செல்லுவர்க்கங்களின் பின்னால் அணிவகுத்துச் செல்லும் காட்சியும், இலங்கைத் தீவின் இனங்கள் யாவும் கைகோர்த்துக் கொண்டு குதுலித்துகொண்டாம் காட்சியும் (பஞ்சகோணம் பச் -09)
என்ற டானியலின் வரிகளில் …. காணலாம். இதிலிருந்து இவர்கள் செங்கொடியின் கீழ் இரு இனங்களும் சுய நிர்ணய அடிப்படையில் இன்றுபடுவகையே தமது தேசிய ஒருமைப் பாடாகச் கொண்டு இருந்தனர் என்பது தெரிகிறது.

டானியல் அவர்களின் போராளிகள் காத்திருக்கின்றனர். இதனை அடிப்படையாகக்கொண்டே எழுந்தது எனலாம். இந்நாவலில் வகுப்புக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சம்மாட்டியாரின் மகனுக்காகயும் ‘காதுக்குக் காது’ என்ற அடிப்படையில் ஒரு சிங்களத்தாய் பெற்றரெடுத்த அலஸ் என்ற ஊமைத்தொழிலாளியின் காது அறுக்கப்படுகிறது. இத்துடன் விடிவதற்கிடையில் அவனை குடிசையோடு எரித்துவிடவும் நினைக்கின்றனர். ஆதை தடுப்பதற்கு ஊரில் உள்ள அவனேடு தொழில் புரியும் உழைப்பாளிகள் ஒன்றுசேர்கின்றனர். இது மிகச் சரியானதே.

பாட்டாளி மக்களின் மனிதபிமானம் ஏனைய வர்க்கங்களின் மனிதாபிமானங்களையும் விட விசாலமானது தான் உலகில் தோன்றிய அனைத்துச் சமூக, பொருளாதார, மா\த தத்துவங்களையும் விட சாதி, இன, மாத, பால், வர்க்க போதங்களை தான்டி மனிதனை மனிதனாகப்பாக்கவும் நேசிக்கவும் மானசிகம் உழைக்கும் மக்களுக்கு இலகுவாகவே கற்றுத் தருகின்றது.

ஏழுபதுகளில் இவ்வாறு நிதானமாக பார்த்த டானியல் எண்பதுகளில் பின் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை அதோ உணர்வேடு காணத்தவறுகிறார். இதற்கு அரசியல் நியாயம் கூறமுடியாது. பிரிவினை அன்னிய சக்தியகளுக்கு மேலும் வாய்ப்பைத் தருவதுடன், இலங்கையின் புவி சார் அமைவில் அரசியல் சூழலில் அதன் சாத்தியப்பாட்டை மேலும் சிக்கலாக்குகின்றது. என்ற அடிப்படையில் ஒருவர் அதனை கோட்பாட்டு ரீதியில் ஏற்காது விடலாம். ஆனால் அதற்கான போராட்டம் அரம்பிக்கப்பட்ட பின்னர் அதற்குப்பதிலாக ஒரு தீர்வை முன்வைக்க முடியாத நிலையில் அதனை ஆதரிக்காது விட்டாலும் எதிர்க்கவோ பலவீனப்படுத்தவோ கூடாது. இது உயிர் அச்சத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவல்ல. சமூகப்பெறுப்போடு சரிக்கும், பிழைக்கும் இடையில் வரையப்படும் எல்லைக்கோடாகும்.

பஞ்சகோணம் நாவலில் பாத்திரங்களின் உரையாடல்களின் மூலம் பல வாத பிரதிவாதங்களை டானியல் மனைகின்றார். முரண்பாடுகள் சிலவற்றை எடுத்துக்காட்டுகிறார். இது திறுந்த மனத்தோடு தேசிய இன விடுதலைக்கான சரியான மார்க்கத்தை தேடுபவர்களுக்கு உதவியாக அமைந்திருக்கக்கூடும். ஆனால் எழுபதுகளின் முற்பகுதியிலேயே வடபகுதியின் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் யாவும் திறந்த விடப்பட்ட பின்னர், எண்பதுகளில் பேரினவாதம் “போர் என்றால் போர்” என்று தமிழ் மக்கள் மீது யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டபின்னர். கிராமத்து கோவிலில் ஆலயப் பிரவேசம் முதலில் நடத்தவேண்டும் என்று வாதிடுவது தவறான நிலைப்பாடாகும். ஜே. ஆரின் போர்ப்பிரகடனத்திற்குள் அமொரிக்காவின் திறந்தவெளிப் பொருளாதார நலன்களும். இருந்தன பிராந்திய வல்லரசான் இந்தியாவும் தனனது நலன்களை முன்வைத்து. தமிழர்களுக்கு உதவ முன்வந்தது. இச் சிக்கலான அரசியற் சூழலின் வெளிவந்த பஞ்சகோணத்தில் தவறுகள் எற்பட வாய்ப்புண்டு, ஆனால் டானியலின் படைப்புக்கள் அனைத்தையும் தொகுத்துப் பாரக்கும் போது இத்தவறுக்கான காரணத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

தீணடாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் என்ற பரந்த தளத்தில் நின்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை “பஞ்சமர்” என்ற தலைப்பில் நாவலாக்கியத்துடன் நிற்காது அதன் தொடர்ச்சியாகவே தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்தது மூலம் வர்க்கப் பார்வையிலிருந்து விலகி சாதியச் சார்பு நிலைக்கு இவர் தள்ளப்பட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் வாக்க சக்திகள் அதிகம் உண்டு என்ற உண்மைக்குப் பதிலாக சாதி சமன் வர்க்கம் என்ற நிலைப்பாட்டில் நின்றே சமூகத்தை நோக்கினார். இதனால் இவரது நாவல்கள் அனைத்திலும் பஞ்சகோணத்தில் வரம் இளைய தம்பியின் கல்லுடைக்கும் கிறசரைத்தவிர ஒரு ஆலைத் தொழிலாளியையாவது அடையாளம் காணமுடியவில்லை. “மக்களிடமிருந்து மக்களுக்குக் கொடுப்பது” என்ற மாஓவின் கருத்தை ஏற்ற இவர் “மரத்தைப் பார்த்து காட்டைப் பார்க்கத் தவறுவது” போல சமூதாயப் பிரச்சினைகளின் பகுதியைப்பார்த்து முழுமையைப் பார்க்கத் தவறுகிறார். இக்குறைபாடுகள் இருந்த போதும் பஞ்சவேகாணம் நாவலில், “டேய் இது ஆரின்ரை பையடா” “அது என்ரை தான்” (பஞ்கோணம் பக் – 354) ஏன்று கூறும் கப்பையயா வாத்தியாருக் கூடாக டானியல் தனது நிறத்தைத் தெளிவாகக் காட்டுகிறார். முடிவாக ஆறாம் ஆண்டுப் படிப்புடன் அடிமட்ட மக்களின் போராட்ட இயக்கத்துடன் தன்னையும் இணைத்துக் கொண்ட இந்த ஆற்றல் மிக்க எழுத்தாளரிடமிருந்து வெறும் நாவல்களை அல்ல அவரே கூறியது போல் பஞ்சப்பட்ட மக்களின் விடுதலைக்கு அவரது எழுத்தை ஆயுதமாக எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்தது கூர் மழுங்கிய ஆயுதஙங்கள் தான்.

கலை கலைக்காகவே என்றும், கலை இலக்கியத்தில் அரசியலா என்றும் தூய கலைவாதிகள் கூக்குரலிட்ட ஒர் காலம் இருந்தது. இன்றும் அக்குரல்கள் முற்றாக ஓய்ந்துவிட்டது என்று கூறமுடியாது. புதிய புதிய சொற்றொடர்களையும், தந்துவங்களையும் முன்வைத்து நடைமுறை அரசியல் சமூக பொருளாதார வாழ்விலிருந்து கலை இலக்கியத்தைப் பிரித்து நோக்கும் போக்கும் துளிர்விட்டு வருவதை நாம் கண்டுவருகிறோம், நடைமுறை வாழ்க்கைப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க அஞ்சி தப்பித்து விலகி ஓடும் மனப்பாங்கிலிருந்தே இத்தகைய போக்கு எழுகிறது எனலாம்.

இத்தகைய போக்குக்கு மாறாக எமது நடைமுறை வாழ்விலிருந்து நாம் கற்று வரும் புறநிலை உண்மை என்ன? இருபத்தியோராம் நூற்றாண்டில் கால் பதிக்கப்போதும் எம்மிடையேயும் இன்றும் பெரும்பான்மையோர் தலைவிதிக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி சமூக, அரசியல் பொருளாதார விதிகள் எவ்வாறு எமது இருப்பையம், வாழ்வையும் பாதிக்கின்றது என்பதை இன்று நாளும் பொழுதும் நாம் நிதர்சனமாகவே கண்டு வருகின்றோம்.

டானியலின் பஞ்சமர் நாவலில் வருவதுபோல அன்று கோவில் விழாக்காலங்களிலே பக்தர்கள் கூடும் போது பஞ்சமர்கள் அமர்வதற்கு எல்லையாக கயிற்றைக் கட்டி இருந்தார்கள். இன்று முட்கம்பி வேலிகளுக்குள் எல்லோருமே பஞ்சமராகி ஒடுங்கிவிடும் ஓர் நிலையில் ஆதிக்க அரசியலுக்கு துணைபோகும் அம்சங்களை எமது இலக்கியத்தில் மட்டுமல்ல, மதத்தத்துவங்களிலும் பண்பாட்டு விழுமியங்களிலும்: கல்வியிலும் கூட கண்டு அகற்ற முனைவதின் மூலமே ஆரோக்கியமான சமூகச் சூழலை இங்கு உருவாக்கமுடியும். இந்தகைய அரசியல் விதி எவ்வாறு கலை இலக்கியங்களுக்கூடாக எம்மேல் பாதிப்புச் செலுத்துகின்றது என்பது பற்றி பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கூறிய கூற்றை இங்கு எடுத்து நோக்குவது பொருத்தமானதாகும்.

“அரசியலையும், தத்துவத்தையும் இலக்கியத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள், கூக்குரலிடுபவர்கள் உண்மையில் தமக்குப் பிடிக்காத தத்துவங்கரளையே தடுத்து நிறுத்த விரும்புகின்றனர். தமது வாதத்திற்கு வழித்துணையாக கலையழகின் முக்கியத்துவம் என்ற கருத்தை முன்கொண்டு செல்கின்றனர். வர்க்கங்களாகப் பிளவுண்டு கிடக்கும் சமூதாயங்கள் அனைத்திலுமே எல்லாம் காலங்களிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு கவிஞன் தான் சார்ந்த வர்க்கத்தின் தத்துவத்தையே வெளிப்படுத்துகின்றான்… அரசியலில் மாத்திரமின்றி கலைஇலக்கியத்திலும் அராஜகம் அழிவையே கொண்டு வரும்.” (இலக்கியச் சிந்தனைகள் – பக். 101.)

இங்கு வெறும் அரசியலை அல்ல தத்துவம் சார்ந்த அரசியலின் முக்கியத்துவம் பற்றி கைலாசபதி அவர்கள் அழுத்திக் கூறுகின்றார், கலை இலக்கியம் பற்றிய இவ்விரிந்த சமூகப் பார்வையை ஏற்று ஈழத்துப் படைப்பிலக்கியத் துறைக்கு தமது பெரும் பங்கை நல்கியவர் டானியல், இவரது படைப்புக்களில் வெளிப்படும் சமூக, அரசியல் உணர்வு நிலைகளை அவர் ஏற்றுக் கொண்ட இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்தே இனங்காண்பது மிகப் பொருத்தமானதாகும்.


டானியலின் இலக்கியக் கோட்பாடு –

“மக்களிடம் படிப்பது, அதை மக்களிடம் திருப்பிக் கொடுப்பது” மாஓ சேதுங் அவர்களின் மேற்கோளோடு 1972இல் வெளிவந்த பஞ்சமா நாவலின் முன்னுரையிலிருந்து அவரது ஆக்கங்கள். ஓவ்வொன்றிலும் தனது கலைக் கோட்பாடு பற்றியும், அரசியல் நிலைப்பாடு பற்றியும் வெளிப்படையாகவே கூறி வந்துள்ளார்.

“இந்த உலகின் கடைசி மனிதனும் சுதந்திரம் பெறும்வரை ஓய்வதில்லை” என்ற திட சங்கற்பத்துடன் நிரந்தர சமாதானத்திற்காக போராடி வருவோர்களுக்கு இந்நூல் சிறு ஆயுதமாக அமையுமானால் அதுவே எமக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகும்.”
என்று பஞ்சமர் முன்னுரையிலும்,

“வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அடைவதற்கான மனித இனத்தின் யுத்தத்தில் எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கலை இலக்கியங்களும் இருக்க வேண்டும்” என்று கானல் முன்னுரையிலும் கலை இலக்கியத்தை சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான, சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகக் கொள்ள வேண்டும் என்கிறார் டானியல் அத்துடன் நிற்காது.

“சரியான இலக்கியக்காரன் தனம் படைப்புக்களுக்கூடாக சாயான அரசியல் தெனிவை உண்டாக்கும் விதைகளைத் தூவி விடாதவனாகில் அவன் மிகவும் தாக்கமான தவறைச் செய்கின்றான்.”

என்று அதே கானல் முன்னுரையில் கலை இலக்கியக்காரருக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். மேற்கூறிய வரிகளிலிருந்து வெறும் ரசனைக்காக எழுதுபவர்கள், சமூக அவலங்களை வெறுமனே சித்தரிப்பவர்களிருந்து வேறுபட்டு அடிப்படைச் சமூகமாறுதல்களுக்காக தனது எழுத்தை ஆயுதமாக்க கொளபவராக டானியல் தன்னை வெளிப் படுத்துகின்றார்.

டானியல் அவர்களின் இலக்கியக் கோட்பாடு இவ்வாறு இருக்க ஐம்பதுகளில் மராட்டிய மாநிலத்தில் தோன்றி எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழகத்தில் பரவிய தலித்திலக்கியம், எழுபதுகளின் ஆரம்பத்திலேயே சாதி ஓடுக்கு முறைக்கு எதிராக இலக்கியம் படைத்த டானியலை தமிழில் தலித்திலக்கிய முன்னோடியாக ஏற்றுக் கொன்கிறது. ஈழத்து எழுத்தாளர் ஒருவர் தமிழகத்தின் தலித்திலக்கிய முன்னோடியாக, பிதாமகனாக ஏற்றுக்கொள்ளப்படுவது நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விடயமே.

ஆனால் ஒடுக்குமுறை ஒன்றானாலும் ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள இருவேறு வகைப்பட்ட சமுதாய அரசியல் சூழலில் இருவேறு வகைப்பட்ட கோட்பாட்டுத் தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களை ஒன்றாக்கித் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத்துள் ஆழ்த்தும் நிலை இன்று எமது இலக்கியச் சூழலில் எழுந்துள்ளது. டானியலை அவர்கள் முன்னோடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதற்காக தமிழகத்து தலித்திலக்கியக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் ஆய்வின்றி அப்படியே எமது மண்ணில் மீள் நடுகை செய்வது எமது கலை இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் ஆரோக்கியமான விளைவுகளைத் தருமா என்பது சிந்திக்கப்பட வேண்டும்.

தமிழகததில் ஏனைய சாதிப்பிரிவுகளின் ஆதிக்கம் இருந்தாலும் பார்ப்பனியம், ஆரியம், இந்து, இந்தியா என்று அரச ஆதிக்கத்துடன் அது இணைந்து விரிந்து செல்வதாக தலித்திலக்கியத்தை முன்னெடுபவர்கள் கூறுகின்றனர். இத்தகைய பார்வைக்குத் துணையாக பெரியாரியம், பின் அமைப்பியல், கட்டவிழிப்பு வாதங்களைம் துணையாகக் கொள்கின்றனா. இதனை வைத்து பாரதியையும் புதுமைப் பித்தனையும் கூட உரித்துப் பார்த்து அவர்களுக்குள் மறைந்திருக்கும் பார்ப்பனியத்தை வெளிக்கொணர்கின்றனர்.

ஈழத்திலும் இதன் தாக்கங்கள் இன்று வெளிப்படுகின்றன. பாரதியும் ‘மானுடம் தனைக் கட்டிய தளையெலாம் அறுக’ என்று தான் கூறினான். கட்டவிழ்ப்பது நல்ல விடயம் அவை எமது சமுதாய நடைமுறைத் தேவைகளுடன் இணைத்துச் செய்யப்படும் போதுதான் பயனுள்ளதான அமையும். சமூகத்தில் யதார்த்தமாக நிலவும் கட்டுக்களை தளைகளை அறுக்க முனையும் போது சமூகப்பொறுப்பும் நிதானமும் தேவைப்படுகிறது இல்லையேல் குளத்தை கலக்கி பருந்துக்கு இரையாக்கும் செயலாகவே இது முடியும்.

ஈழத்தில் குறிப்பாக டானியலின் எழுத்துக்கள் எழுந்த வடபகுதிச் சூழலில் வேளாளர் தலைமையிலான சாதியப் படியமைப்பு மூலமே சாதி ஒடுக்குமுறை பேணப்பட்டுவருகிறது. தமிழகத்தைப் போலவே இங்கும் ஆரம்பத்தில் சாதியக் கட்சிகளை உருவாக்கி சாதிய அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுக்கும் போக்கும் மராட்டியத்தில் ஏற்பட்டது போல பௌத்த மதமாற்ற முயற்சிகளும் முளைவிட்டிருந்தன. ஆதனை மீறி மாச்சிய அணுகுமுறையுடன் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வர்க்க சக்திகள் ஒன்றிணைந்து தீண்டாமைக்கு எதிரான வெகுஜன இயக்கத்தின் தலைமையில் இங்கு போராட்டம் முன்னெடுக்கப் பட்டதுடன் அதன் அன்றைய இலக்கை அது வெற்றிகரமாக அடைந்தன. இது பற்றி இக்கட்டுரையின் காலமும் களமும் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று சாதி அரக்கன் ஒழிந்து விட்டான். ஆனால் அரக்கத்தனங்களில் ஒரு பகுதியை ஒடுக்குமறையாளர்கள் மிக நாகரீகமாக தமது மனங்களின் ஒரு பகுதியில் மறைந்து வைத்துள்ளனர். போர்க்கால இடப்பெயர்வுகளின் போது இது பல இடங்களில் வெளிப்பட்டதுடன் டானியலின் தண்ணீர் நாவலையும் நினைவூட்டியது எனவே டானியல்

நன்றி: நூலகம்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More