Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

அகமணமுறையும் தலித் மக்களின் மரபியல் நோய்களின் பரிமாணமும் – என்.சரவணன்


கடந்த சில வருடங்களாக சூரியாசிஸ் என்கிற நோயினால் அதிக உபாதைகளை எதிர்கொண்டு வருகிறேன். நோர்வேயில் பல மருத்துவர்களிடமும், இந்த நோய் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களிடமும் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுவிட்டேன். சகலரும் இது ஆயுட்காலமும் அனுபவிக்க வேண்டிய நோய் என்று கூறிவிட்டார்கள். இது ஒரு தொற்று நோயல்ல ஆனால் இது ஒரு பரம்பரை நோயென்று அனைவரும் கூறினார்கள். என் குடும்பப் பின்னணி குறித்த விளக்கங்களை ஆழமாக கேட்டுத்தெரிந்துகொண்டார்கள்...

பெற்றோருக்கு இந்த நோய் இருந்தால் 50வீத  வாயப்பிருப்பதாக சகல மருத்துவர்களும் தெரிவித்தர்கள். அதாவது இது ஒரு பரம்பரை நோய் என்கிறார்கள். நான் இது குறித்து வாசித்து அறிந்த ஆய்வுகளும் அதையே ஒப்புவிக்கின்றன. இந்த நோய் என் தகப்பனாருக்கு இருந்தது. எனது பாட்டனாருக்கும் இருந்தது. எனவே அதன் விளைவாக எனக்கும் ஏற்பட்டிருக்கிறது என்றே அவர்கள் முடிவு செய்கிறார்கள். சூரியாசிஸ் ஏற்பட வேறு பல காரணங்களும் இருந்தாலும் மரபியல் காரணங்களே அதிகம் செல்வாக்கு செலுத்துகிறது என்கிறார்கள்.

இணையத்தளங்கள் பலவற்றில் இது குறித்த தேடல்களின்போது இரண்டு மருத்துவ முறைகள் இதனை தீர்க்கலாம் என்று உறுதி செய்வதை அவதானித்தேன். அதன்படி அக்குபஞ்சர் மற்றும் ஆயுள்வேதம் இரண்டையும் பரீட்சித்தும் பார்த்தேன். பலஇடங்களில் உறுதிசெய்து தேடி கண்டுபிடித்தே அவற்றை மேற்கொண்டேன். எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் பாணந்துறை பகுதியில் ஒரு சூறியாசிஸ் நிபுனத்துவம்பெற்ற சித்த மருத்துவறை சந்தித்தேன். அங்கிருந்து சிகிச்சையை தொடர்வதற்காக ஒரு சூட்கேஸ் நிறைய பெரிய மருந்து பொட்டலங்கள் பலவற்றை நோர்வே கொண்டுவந்து சேர்த்து, அதனை அவித்து கசக்க கசக்க குடித்தும் உண்டும் பார்த்தாகிவிட்டது மாற்றம் இல்லை. மாறாக சமீப காலமாக அது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

எனக்கு வந்த மூட்டுவலிகளும் இதன் காரணமாக இருக்கலாம் என்று தேடினால் Psoriasis / Psoriatic Arthritis என்று இரு வகை நோய்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஆய்வுகள். Psoriatic Arthritis என்பது எலும்பு மூட்டுகளின் வீக்கம், மூட்டு வலி  என்பனவற்றோடு தொடர்புடையது. எனக்கு இப்போதைக்கு மூட்டுவலி வரை வளர்ந்துள்ளது. இனி விடயத்துக்கு வருகிறேன்.

பரம்பரையாக கடத்தப்படும் நோய்கள் இந்திய உபகண்டத்தில் அதிகமாகவே காணப்படுகிறது எனலாம். அதற்கு அடிப்படை காரணம் அகமண முறை (endogamy). இனக்குழுமங்கள் / சமூகக் குழுக்கள் தமக்குள்ளேயே திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதையே அகமண முறை என்கிறோம்.

சாதியை பேணுவதற்கு அகமணமுறை அவசியம், சாதிய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு அகமணமுறை அவசியம். சொத்தை பாதுகாப்பதற்கு அகமணமுறை அவசியம். இவை யாருக்கு ஆதிக்க சாதியினருக்கு.

ஆதிக்க சாதிகள் தமது சாதிய தூய்மைவாத பெருமிதத்திற்காக இந்த அகமணமுறையை பேணுகின்றனர். அகமண முறை மூலம் மட்டுமே தமது பரம்பரைப் பெருமையை பேணுவது சாத்தியம் என்கின்றனர். சாதியத்தின் அடிப்படை பண்பாக இந்த அகமணமுறை வலுவாக நிலைபெற்றிருக்கிறது. ஒவ்வொரு சாதியும் இந்த “சாதிய புனிதத்தை” காப்பதற்காக அகமணமுறையை பேணிக்கொள்வதாக கூறிக்கொண்டாலும் அடக்கப்படும் தலித் சமூகங்கள் அகமணமுறையை பின்பற்றுவது அதே அர்த்தத்தில் அல்ல. தலித்துகளைப் பொறுத்தவரை சாதிய அடுக்குநிலையில் இறுதி இடமாக இருப்பதால் மேலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதுபோல அவர்களுக்கு கீழென்று ஒன்றில்லை என்கிற நிலை. எனவே அகமணமுறைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கொடுமையை சுமப்பவர்கள் தலித் மக்கள்.

ஆக இந்த அகமணமுறையால் கிட்டத்தட்ட பரம்பரை நோய்களுக்கு அதிகம் உள்ளாகியிருக்கும் சமூகமாக இந்திய உபகண்ட இனக்குழுமங்களை கருத இடமுண்டு. அதேவேளை நிச்சயமாக இந்த பரம்பரை நோய்களிலிருந்து விமோசனம் பெறமுடியாத சமூகமாக இருப்பவர்கள் தலித்துகளே. அவர்கள் ஒரு சலுகை பெற்ற சமூகமும் இல்லை, சலுகைபெற்ற வர்க்கமும் இல்லை. எப்படியோ இந்த நோய்களை சுமந்தே ஆக வேண்டிய சமூகமும் கூட. அதுபோல விரும்போயோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அடுத்தடுத்த பரம்பரைகளுக்கும் அந்த நோய்கள் கடத்துகின்ற சமூகமாகவும் அவர்கள் ஆளாக்கப்படிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

சாதியமானது அதன் கட்டமைப்பிலும் , அதன் இருப்பு வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கண்டபோதும் சாதியத்தை பேணுவதில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் அகமணமுறையை விட்டுகொடுக்காத நிலை தீவிரமாக தொடர்ந்தவண்ணம் தான் இருக்கிறது. அதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராகவும் இருக்கிறது. அகமணமுறையை அனுசரித்து நடக்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது “சாம - தான – பேத - தண்டம்”. பெற்றபிள்ளைகளைக் கூட ஈவிரக்கமின்றி கௌரவக் கொலைபுரியுமளவுக்கு அது துணிச்சல் மிக்கதாக இருக்கிறது. சாதிமாறி கலக்க நினைக்கிற ஏனைய சாதியினருக்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் இவை நிகழ்த்தப்படுகின்றன.

நம்மை சுற்றியுள்ள சாதியத்தை சாடும் மனிதர்கள் பலர் திருமணம் என்கிற ஓரம்சத்தில் மாத்திரம் சாதியை கடுமையாகப் பேண விளைகிறார்கள். 

எனவே சாதிய அகமணமுறையின் நுட்பமான பாத்திரத்தை நாம் சரியாக இனங்கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.

நான் சார்ந்த இந்திய வம்சாவழி பின்னணியைக் கொண்ட இலங்கை வாழ் அருந்ததியர் சமூகத்தில் நான் பரவலாக எல்லோரிடமும் சில நோய்களையும் அறிகுறிகளையும் அவதானித்து வந்திருக்கிறேன். 2012 இல் பத்து வருடங்களுக்குப் பின்னர்  நோர்வேயிலிருந்து இலங்கை சென்று என் சொந்தங்கள் வாழும் இடங்கள் பலவற்றுக்கு போய் பார்த்த போது பலர் சூரியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதுவும் குறிப்பாக என் தலைமுறையினர் தான் அதிகம். எனக்கு முந்திய தலைமுறையினர் பலர் மூட்டுவீக்கம், மூட்டுவலி போன்றவற்றால் அல்லலுறுவதை காணக்கூடியதாக இருந்தது. வீட்டுக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதுவும் இளம்தலைமுறையினர், சிறியவர்கள் கூட பாதிக்கப்பட்டிருந்தார்கள். சிலர் கால்கள் வெட்டப்பட்டும், விரல்கள் வெட்டப்பட்டும் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார்கள். படுக்கையிலேயே மருத்துவ உதவி பெற்றுக்கொண்டிருந்தவர்கள் சாகக்கூடாத வயதில் செத்துப்போனார்கள்.

சிலருக்கு மனநோய் இருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டிருந்தது. என் தாத்தா, அவர் மகள் (என் மாமி ), அவர் மகள் (என் மச்சாள்), அவரின் மகன் (என் மகன்முறை) என நான்கு தலைமுறை உதாரணங்களை அருகிலேயே கண்டேன்.

தலையில் சூரியாசிஸ் நோய் வந்தவர்களுக்கு அதிக மருத்துவ செலவை சமாளிக்கமுடியாமல் அப்படியே விட்டுவிட்டிருந்தார்கள். அந்த மருந்துகள் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களாக இருந்தது. அவர்களுக்கு அந்த நோய் முற்றிக்கொண்டு வருவதை அவதானித்தேன். 2013 இல் இலங்கை சென்றிருந்தபோது நோர்வேயில் எனக்காக வாங்கப்பட்ட மருந்துகளை மேலதிகமாக வாங்கிகொண்டு சென்று கொடுத்ததில் கணிசமான மாற்றம் கண்டிருந்தது. (நிச்சயமாக அது பூரணமாக குணமடையாது).

இவற்றை கவனித்தபோது ஒன்றை உணர்ந்துகொண்டேன். இந்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை பற்றிய ஒரு தொழில்ரீதியிலான ஆய்வு (profesional research) ஒன்று தேவைப்படுகிறது.

சென்றவருடம் என் துணைவி கருவுற்றிருந்தபோது நோர்வேயில் சில மருத்துவர்களை பிரேத்தியேகமாக சந்தித்து எனக்கிருக்கிற சூரியாசிஸ் நோய் என் குழந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறதா அதனை கண்டுபிடித்தால் பிறக்குமுன் கருவிலேயே செய்யக்கூடிய முற்பாதுகாப்பு சிகிச்சைகள் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்று இரங்கிக் கேட்டேன். அவர்கள் என்னை வேடிக்கையாக பார்த்தார்கள். வரலாம் வராமலும் போகலாம் இப்போது கவலைப்படாதீர்கள் என்றே மருத்துவர்கள் கூறினார்கள். இலங்கை சென்றும் இரு வேறு மருத்துவமனைகளில் விசேட மருத்துவர்களிடம் கேட்டதற்கும் அதற்கு நிகரான பதில் மட்டும்தான் கிடைத்தது.

அருந்ததியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் தலித்துகளிலும் தலித்துகளாகவே எங்கெங்கிலும் உள்ளார்கள். காலவளர்ச்சியில் பல ஒடுக்கப்பட்ட சாதியினரில் ஓரளவு வளர்ச்சி மாற்றம் கண்டாலும் கூட இவர்களின் வளர்ச்சி வேகம் மிக மிக கீழ் நிலையிலேயே உள்ளது. அதற்கான காரணம் அவர்களின் பலர் இன்றும் நகரசுத்தி தொழிலை அண்டிய வாழ்க்கையும், மோசமான குடியிருப்பு வாழ்க்கையுமே. இலங்கையில் இலகுவாக ஒரு சாதி அடையாளம் காண முடியுமென்றால் அது அருந்ததியர் சமூகம் தான்.

இவர்கள் அகமண முறையை பின்பற்ற தள்ளப்பட்டவர்கள். அகமணமுறையை தவிர வேறு வழியில்லை. விதிவிலக்குகளை இங்கு கணக்கில் எடுக்கவில்லை. அப்படி விதிவிலக்காக சாதிக்கு வெளியில் திருமணமுடித்தவர்கள் தமது சொந்தங்களிடமிருந்து தள்ளியே போய்விட்டனர். அப்படி தள்ளி போகாவிட்டால் அதுவே தமது புதிய வாழ்க்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதிக்கும் என்று நம்புகிறார்கள். இவை சாதி கலப்பு திருமணமே தவிர சாதி மறுப்பு திருமணமல்ல. இதனை விளங்கி செய்துகொண்ட ஒரு காலம் இருந்தது.

இலங்கையில் திராவிட கழகம், பெரியார் இயக்கங்கள் செயற்பட்ட காலத்தில் தலித் பெயர்களை மாற்றி திராவிட பெயர்களை சூட்டுவது, கலப்பு திருமணம் நடத்தி வைப்பது போன்றவை நிகழ்த்தப்பட்டன... ஆனால் கலப்பு திருமணங்கள் தலித் சாதிகளுக்குள் மட்டுமே நடந்தன. அதற்கப்பால் விதிவிலக்காகவே நிகழ்ந்தன. ஆனால் அது சாதி மறுப்பு திருமணமாக இருந்தது. வெறுமனே சாதி கலப்பாக இருக்கவில்லை.

தனது இளம்வயதில் 30 வருடங்களுக்கு முன்னர் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணோடு மாயமான எனது பெரியப்பாவை என் அப்பா உள்ளிட்ட அவரின் சகோதரர்கள் அவரை அவர் இறந்தபோது சவப்பெட்டியில் தான் பார்த்தார்கள். அவர் மாளிகாவத்தை பகுதியில் எங்கள் குடியிருப்பில் இருந்து அருகாமையில் தான் அத்தனைகாலம் வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. யாழ்ப்பாண “இடைச்சாதி” பெண் ஒருவரைத்தான் அவர் திருமணம் முடித்திருந்தபோதும், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் அவர்; என்பது தெரிந்துவிடும் என்பதற்காக அவர் சொந்த உறவுகளுக்குத் தெரியாமல், எவர் கண்களிலும் படாமல் வாழ்ந்து மடிந்தார். அவரின் இறப்பு செய்தி கேட்டு ஒப்பாரி வைத்தபடி பதறியடித்துக்கொண்டு ஓடிப்போன என் மாமிமாரும் அப்பா சித்தப்பா அனைவரும் அழுத அழுகை  இன்னமும் என் கண்களில் தெரிந்துகொண்டே இருக்கின்றன. “இவ்வளவு நாளாத்தான் ஒன்ன பாக்க கெடக்கல இனிமேலும் ஒன்ன பாக்கமுடியாம போச்சேடா…” என்று கதறினார்கள். அவர்களின் பிள்ளைகள் அதிர்ச்சியில் இருந்தார்கள். அவரின் பிள்ளைகள், இறப்பு சோகத்தில் எம்மோடு ஒன்று கலந்து அத்தை, மாமா.. என உறவு பாராட்டினார்கள். அவரின் மரண சடங்குகளின் பின்னர் “...இனி இவர்களுக்கு நாங்கள் தொந்தரவாகி விடக்கூடாது, அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் இதுவரை வாழ்ந்ததைப்போலவே சாதி தெரியாமல் நன்றாக வாழட்டும்...” என்று எங்கள் பெரியவர்கள் மிகுந்த வேதனையுடன் முடிவெடுத்தார்கள். அதன் பின்னர் எங்கள் கூட்டுக் குடும்ப வலைப்பின்னலுக்குள் அவர்கள் இல்லை.

நான் சாதிக்கு வெளியில் திருமணமுடித்த போது என் அக்கா ஒருவர் “இனி ஒன்ன இழக்க போறமே டா” என்று கட்டிப்பிடித்து அழுததை என் வாழ் நாளில் மறக்க முடியாது. நான் அப்படி இல்லக்கா. நமக்கு நாம மட்டுந்தான் அக்கா.. நான் எங்கேயும் போயிற மாட்டேன்..” என்று பதிலுக்கு நான் ஆறுதல் கூறி விடைபெற்றேன்.

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் தலித்துகளுக்கு சாதிக்குள் திருமணம் முடிப்பது என்பது ஒரு பாதுகாப்பும் தான் என்று உணர்கிறார்கள். பரஸ்பர ஆதரவு மட்டுமே அவரவருக்கு கிடைகிறது. அது இந்த அகமணமுறைதான் பாதுகாக்கப்படுகிறது என்று நம்புகிறார்கள்.

புதிய தலைமுறை வாய்ப்புகிடைத்தால் அகமணமுறையை தகர்க்கிறார்கள். அதேவேளை உறவுகளை நிரந்தரமாகவோ, நீண்டகாலத்துக்கோ பிரிந்து செல்கிறார்கள். 

90களின் ஆரம்பத்தில் அருந்ததிதியர் மீட்பு முன்னணி என்கிற ஒரு அமைப்பை பல இளைஞர்களை ஒன்று சேர்த்து தொடங்கினேன். கூட்டங்கள் அனைத்தும் கொட்டாஞ்சேனையில் உள்ள எங்கள் வீட்டிலும், புதுக்கடையில் உள்ள அருந்ததியர் வாழும் குடியிருப்பிலும் நடத்தினோம் ஆரம்ப கூட்டங்களில் அகமணமுறையை இல்லாதொழிப்பது பற்றி அதிகம் கலந்துரையாடினோம். எங்களுக்குள் அனைவரும் ‘சொந்த சாதிக்குள் திருமணம் முடிப்பதில்லை’ என்று உறுதிமொழி எடுத்தோம். அதுவே சாதியை இல்லாதொழிப்பதற்கான பேராயுதம் என்று கூறிக்கொண்டோம். சமீபத்தில் இலங்கை சென்று அவர்களில் பலரை சந்தித்தேன் அவர்கள் அனைவரும் சாதிக்குள் தான் திருமணம் செய்திருந்தார்கள். அகமணமுறை உடைப்பு என்பது அருந்ததியர்களுக்கு அவ்வளவு இலகு இல்லை என்பதை எனக்குள் உறுதி செய்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

அரசியல் ரீதியாக மட்டும் அல்லாமல், அறிவியல் மற்றும் மருத்துவரீதியாகவும் சொந்தங்களுக்குள், சொந்த சாதிக்குள் நடைபெறும் திருமணம் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று மரபணு ஆய்வு முடிவுகள் திரும்பத் திரும்ப நினைவூட்டி வந்திருக்கின்றன. நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்யும்போது, பரம்பரை நோய்கள் மரபணுரீதியாகத் தொடர்வதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிறக்கும்போதே ஊனமுற்ற குழந்தைகளையும், வளர்ந்ததன் பின்னர் நோய் அறிகுறிகள் தெரியவந்த சம்பவங்களை பலவற்றை நாம் கண்டிருக்கிறோம். பிள்ளைகள் பிறக்குமுன்னரே வயிற்றில் இருக்கும் போதே ஸ்கேன் செய்து பாதிப்புகளை கண்டுகொண்டவுடன் கருச்சிதைவு செய்துகொள்ளும் வசதியுடையவர்கள் அல்ல இவர்கள்.

தலித்துகளை பொறுத்தவரை சொத்தையும் சாதியையும் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. இழக்க சொத்துமில்லை, சாதியைப் பாதுகாக்க அவர்கள் சலுகைபெற்ற சாதியுமில்லை.

‘அகமணமே சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்கிறார் அம்பேத்கர்.

அகமணமுறையின் பக்கவிளைவுகள் என்பது வெறும் தலித்துகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. அகமணத்தை பேணும் அனைத்து குழுமங்களின் எதிர்கால சந்ததியினருக்கும் மிகப் பெரிய அபாய அறிவித்தல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மரபணுக் கோளாறுகள், உடல்/மனம் குன்றிய குழந்தைகள் பிறப்பதை தடுத்து எதிர்காலத்தில் ஆரோக்கியமான சந்ததியை பெற்றெடுக்க வேண்டுமெனில் அகமணமுறையை தகர்த்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒரே காரணத்திற்காக கலப்பு மணத்தை ஏற்கவா போகிறார்கள். சாதிய பெருமிதம் எல்லாவற்றையும் விட வலிமையானதல்லவா நண்பர்களே.

யாழ் சாதியமைப்பு குறித்த ஆவணப்படம்

யாழ் சாதியமைப்பு குறித்து கொழும்பு பல்கலைகழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட  ஆவணப்படம் இது.

இருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் கூட்டுறவு சங்கங்களின் வெற்றிகளும் சவால்களும்


பரம்பரையாக சீவல் தொழில் செய்து வரும் ஒரு சமூகம் வரலாற்றில் சாதிரீதியான ஒடுக்கு முறைகளுக்கும் போர்காலத்தின் அழிவுகளுக்கும் முகம் கொடுத்தனர். அதற்கு கடந்த கால போராட்டங்கள் மற்றும் சமூக முயற்சிகளுடன் அமைக்கப்பட்டகூட்டுறவு சங்கங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது. ஆனால் அந்த சமூகம் இன்று சிக்கலான பொருளாதார நிலமைக்குள் தள்ளப்படுகின்றது.

1972ம் ஆண்டு தொடக்கம் 40 வருடத்திற்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த பனை தென்னை வள அபிவிருத்திகூட்டுறவு சங்கங்கள் போர் முடிந்த 4வருடத்திற்கு பின்னர் திறந்த பொருளாதாரத்தாலும் சந்தையின் தாக்கத்தாலும் உடைந்து போகுமா?, யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏ-9 பாதை திறந்ததை தொடர்ந்து தெற்கிலிருந்து வருகின்ற சாராயம் பியர் என்பவற்றின் சந்தைப்படத்தல் மற்றும், பார்களின் அதிகரிப்பு போன்றவற்றினால் கள் சாரயம் போன்ற உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியா நிலை காணப்படுகின்றது.மற்றும் அண்மைக் காலங்களில் விவசாய அழிவுகளினால் வருமானங்கள் வீழ்ச்சியடைந்திருப்பதால், கள்ளுக்கான கேள்விகள் குறைந்துள்ளது. அத்துடன்இளம் தொழிலாளர்கள் இத் தொழிலை ஒரு சிலர் செய்த போதும் அவர்களும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் கலாச்சாரம் சுய கௌரவம்சாதிரீதியிலான பார்வை போன்றவற்றினால் இன்று சீவல் தொழிலை கைவிடுகிறார்கள.

இலங்கை வரலாற்றில் கல்வி சுகாதாரம் வறுமை ஒழித்தல் போன்ற சமூக முன்னேற்றங்களுக்கு தொழிற்சங்கங்களினதும் கூட்டுறவு சங்கங்களினதும் தாக்கம் முக்கியமானது. இன்று வடமாகாண விவசாயிகள் உட்பட பொதுமக்கள் கடன்களில் மூழ்கியிருந்த போதிலும், பனை தென்னை கூட்டுறவின் செயற்பாடுகளினால் சீவல் தொழில் சமூகம் இந்த கடன் கலாச்சாரத்தில் அகப்படவில்லை. இந்த கண்னோட்டத்தில்பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் சவால்களுக்கு ஓர் தீர்வு காண்பதென்பது நெருக்கடிக்கடியின் மத்தியில் இயங்கும் தற்கால இலங்கை பொருளாதாரத்திற்கும் சில முக்கியமான கருத்துக்கல் மற்றும் தீர்வுகளாக அமையலாம்,.

ஒருசீவல்தொழிலாளியின் அனுபவங்கள்: தர்மபாலசிங்கம் 67 வயது
(நான் 18வயதில் எனது மச்சானிடமிருந்து சீவல் தொழிலை பழகினேன். 1991ம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னியில் சிராஞ்க்குளத்தில் வசித்தேன்.அங்கும் சீவல் தொழிலை செய்தேன்,. பின்னர்,2002ம் ஆண்டு அச்சுவேலிக்கு திரும்ப வந்து சீவல் தொழிலை செய்தேன் நான் 60வது வயதில் ஓய்வூதியத்தினை பெற்றேன., ஓய்வூதியம் எடுத்துக் கொண்டும் சீவுகின்றேன். தற்போது நான், பொச்சுக்கட்டி, மரம் ஏறுகிறேன். 10 தென்னை மரம் சீவுகின்றேன்.

காலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்து சீவலுக்கு சென்று 9.30க்குள் கள்ளு இறக்கிக் கொண்டந்திடுவேன.,, பாளை தட்டுற முறை என்றால் கொஞ்சம் நேரமாகும் ஒன்றவிட்ட ஒரு நாள் பாளை தட்ட வேண்டும். பின் 11.30க்கு முன்னர் தவறணைக்குள் கள்ளு கொண்டு போய் கொடுக்க வேண்டும., பின்னர் தோட்டத்தில் போய் வேலை செய்வேன்.மாடு கொண்டு போய் கட்டுவேன். பின்னர் மாலை 4.30க்கு திரும்பவும் சென்று 10 தென்னையும் ஏறி சீவி 6.30க்கு முன்னர் தவறணைக்கு கள்ளு கொண்டு செல்வேன. ஓரு நாளைக்கு 15 போத்தல் கள்ளுக்குகிட்ட கொண்டு போய் கொடுப்பேன். எனக்கு வருத்தம் வருகில் கால்களில் அதிக காயங்கள் வரும் நெஞ்சு வருத்தங்கள் வரும்.

கத்தி ஆரம்பத்தில் நல்ல கூராகவும் பெரிதாகவும் இருந்தது இப்போது எப்படி தேய்ந்து இருக்குது என்று பாருங்கோ. இதனைப் போல தான் நாங்களும் தேய்ந்து போகிறோம். மரத்தில் ஏறும் போது சீவிலிகூடு கத்தி பாளைதடடு,ம் பொல்லு கள்ளு ஊத்த போத்தல் என்பன கொண்டு செல்வேன். முந்தி நான் பொச்சு மட்டை கட்டாமல் சீவும் போது கால் சரியாக காச்சுப் போய் இருக்கும்.தற்போது பொச்சு கட்டி சீவுவதால் பறவாயில்லை. தோட்டமும் செய்வதால் ஆரம்பத்தில் வருமானம் பறவாயில்லாமலலிருந்தது. தற் போது வெங்காயம் எல்லாம் அழிவடைந்ததால் பெரிதாக வருமானம் இல்லை.

நான் 18 வயதில் கள்ளு சீவேக்க மரவரி முறை இருந்தது. நாங்கள் 5 பேர் இணைந்து மரம் சீவுவதாக அனுமதி எடுப்போம்100ரூபா கட்டி. நான் ஆரம்பத்தில 90 போத்தல் கள்ளு ஒரு நாளைக்கு சீவி கொடுப்பேன., அப்போது கள்ளு 10சதம்,. பின்னர் 1972ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது நான் 552வது உறுப்பினராக வேலை செய்தேன். 

கூட்டுறவு சங்கங்கள் வந்ததால் எங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தொழில் விடுற காலத்தில் சமாசத்திலிருந்த எங்களுக்கு ஊதியத் தொகை வழங்கப்படும., மரவரி இருந்த காலத்தில் கள்ளு எல்லாம் சீவி முதலாளிக்கே கொடுக்கனும்.ஆனால் கூட்டறவு வந்தபின் எங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.

விபத்து நதி கட்டாய சேமம் என்று சொல்லி எங்கட கள்ளிலிருந்து 1ருபா கழிப்பார்கள., சேமப் பணம் மூன்று மாதத்திற்கு ஒருக்கா தருவார்கள., தொழில் விடேக்க கட்டாய சேமப்பணம் தருவார்கள். விபத்து நிதி தந்போது ஓய்வூதியத்திட்டமாக மாற்றப்பட்டு 60 வயதிற்கு பிற்பாடு தருவார்கள., நான் ஓய்வூதிய பணமும் எடுத்துக் கொண்டு சீவி வருகின்றேன். சீவல் தொழிலை எனது அப்பு மாமா மற்றது நான் செய்கிறேன் எனி எனக்கு பிறகு ஒருவரும் செய்ய மாட்டார்கள் இளம் தலை முறையினர் படிக்கிறார்கள்.படிக்காதவர்கள் கூலி வேலைக்கு போகிறார்கள். 

1960ம் ஆண்டு இடம் பெற்ற சாதி எதிர்ப்பு போராட்டங்களுடன் நானும் இணைந்து செயற்பட்டேன., தேனீர் கடை எதிர்ப்பு போராட்டங்களுடன் எல்லாம் இணைந்து செயற்பட்டேன். எங்கட வாசகசாலையில் ரஷ்யா கொமினிஸ்ட் சீனா கொமினிஸ்ட் என்று இரண்டு கொமினிஸ்ட்கள் இருந்தன.இதில் சீனா கொமினிஸ்டுடன், நானும் ஒரு உறுப்பினராக அங்கம் வகித்தேன்.)

சீவல் தொழில்
சீவல் தொழில் என்றால் பனை தென்னை மரங்களில் ஏறி கள்ளினை இறக்கின்ற தொழிலாகும். இத் தொழில் ஆண்களினால் மட்டும் செய்யப்படுகின்றது. இவர்கள் காலை 6 மணியிலிருந்து பின்னர் 10.30க்குள் கள்ளினை தவறணைக்குள் ஒப்படைக்க வேண்டும.,இது போலவே மாலை 4 மணிக்கு மீண்டும் சீவச் சென்று 6.30க்குள் தவறணைக்கு கள்ளினை ஒப்படைக்கிறார்கள். இடைப்பட்ட நேரங்களில் சிலர் தோட்ட வேலை செய்கின்றார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு 5-15க்கிடைப்பட்ட மரங்கள் காலையும் மாலையும் சீவுகிறார்.

இவ்வாறு மரத்தில் ஏறி இறங்குவதால் தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர் கொள்கிறார்கள். மழை காலங்களில் மரங்களில் ஏறுவதென்பது இவர்களுக்கு பெரிய சவாலாகவுள்ளது. மற்றும் இத் தொழிலானது உடலை வருத்தி செய்கின்ற ஒரு கடினமான தொழிலாகவுள்ளதனால் பாரிய பல நோய்களுகுள்ளாகிறார்கள். அத்துடன் இவர்கள் மரம் ஏறும் போது விழுந்தால் உயிர்க்கும் ஆபத்துண்டு,. மேலும் இத் தொழிலானது குறிப்பிட்ட சாதி சமூகத்தினர் மட்டும் செய்யும் தொழிலாக இன்று வரையுள்ளது.

சீவல் தொழிலாளர்கள் ஆரம்ப காலங்களில் முதலாளிக்கு நன்மை பயக்கும் மரவரி முறையின் கீழ் சுரண்டப்பட்டு மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்தார்கள். 1972ம் ஆண்டு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்கங்களின் தோற்றங்களின் பின்னர் இவர்களுடைய பொருளாதார நிலை வளர்ச்சியடைநதத்து. அக் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 7230க்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருந்த கூட்டுறவு சங்கம், இன்று 3924 உறுப்பினர்களாக குறைவடைந்ததுள்ளது. இளம் தொழிலாளர்கள் மும்முரமான வேலையினூடாக அதிக மாதாந்த வருமானத்தை பெறக்கூடியதாக இருந்த போதும் சீவல் தொழிலின் கடுமையான சூழ்நிலை காரணமாக நீண்ட காலம் தொழில் செய்ய முடியாதுள்ளது. மேலும் ஒரு தனிநபர் தன் வருமானத்தை முதலீட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதனாலும் சமூகஅணிதிரட்டலுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாத காரணங்களாலும் தொடர்ந்து பொருளாதார சமூக சவால்களை எதிர் கொள்கிறார்கள்.

கூட்டுறவு சங்கங்களின் வரலாறு
யாழ்ப்பாணத்தில் சாதிக்கெதிராக 60ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் பின் ஆரம்பிக்கப்பட்ட பனைதென்னை வள அபிவருத்தி கூட்டுறவு சங்கங்களின் பங்கு பரந்து பட்டதாக விளங்குகின்றது. மூடிய பொருளாதார காலத்தில் 1972ம் ஆண்டில் நிதியமைச்சராகவிருந்த என்.எம., பெரேரா அவர்களினால் இலங்கை கூட்டுறவு சட்டத்தின்கீழ் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இவை கூட்டுறவு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு, கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளாரின், வழிகாட்டலின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையின் கீழ் இயங்குகின்றன.

இச் சங்கங்கள்கிராமப்புறமக்களின் பல அடிப்படை தேவைகளினை நிறைவு செய்கின்றன. ஒவ்வொரு தவறணையின்கிளை முகாமையாளருக்கு கீழ் காலை 11-2 மணிவரை மாலை 5-8 மணிவரை திறந்து நடாத்தப்படுகிறது. சீவல் தொழிலாளர்கள் கொண்டுவரும் கள்ளின் அளவு பெறுமதி தரம் மற்றும் கணக்குகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக இவரே இருக்கின்றார். மேலும் சீவல் தொழிலார்களினைஓர் ஒழுங்கு முறையின் கீழ், கூட்டிணைந்து செயற்படஇச் சங்கங்கள் உதவுகின்றன. யாழ் மாவட்டத்தில் 19 சங்கங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 4 சங்கங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சங்கங்களும் வவுனியாவில் 3 சங்கங்களும் மன்னாரில் 5சங்கங்களும் திருகோணமலையில் 2 சங்கங்களும் மட்டக்களப்பில் 8 சங்கங்களும் உருவாக்கப்பட்டு வடக்கு கிழக்கில் இயங்கி வருகின்றன. இவற்றில் யாழ் மாவட்டத்தில், வலிகாமம் 13 வடமராட்சி 3 தென்மராட்சி 3 ஆகும்.

கூட்டுறவு சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான தொடர்பு
ஜனநாயத்திற்கான ஓர் உதாரணமாகவிளங்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் முழு அதிகாரமும் தொழிலாளர்களால் நியமிக்கப்படும் தலைவர்களிடமே காணப்படுகின்றது. இங்கு நிர்வாகத்திலுள்ள கூட்டுறவு பணியாளர்கள் அனைவரும் இவர்களின் தீர்மானங்களின் அடிப்படையிலையே இயங்க முடிகிறது. அத்துடன் சீவல் தொழிலில் ஈடுபடுபவர் மட்டுமே இங்கு அங்கத்தவர்களாக இயங்கலாம., இவர்கள் இச் சங்கங்களின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கிளை அங்கத்தவர் கிளைக்குழு கிளைத்தலைவர் கிளைச் செயலாளர் என தெரிவு செய்யப்பட்டு பின்னர் பொதுச்சபை நெறியாளர் குழு தலைவர் உபதலைவர் செயலாளர் பொதுமுகாமையாளர் பணியாளர் குழு என்னும் கட்டமைப்பின் ஒழுங்கு முறையின் கீழ் செயற்படுகிறார்கள். 

ஆரம்ப காலங்களில் தொழிலாளர்கள் வீட்டில் வைத்து இத் தொழிலை செய்ததால், பல சமூக கலாச்சார பிரச்சனைகளினை எதிர் கொண்டார்கள்.ஆனால், கூட்டுறவு அமைப்பின் மூலம் தங்களுக்கென நிரந்தரமான பாதுகாப்பான தொழிலினை ஏற்படுத்தி கொண்டார்கள். இத் தொழிலை செய்கின்ற தொழிலாளர்கள், ஓரு மாதத்தில் 30000 – 80000 ரூபா அளவு ஊதியத்தினை பெறுகின்றனர். அதிகளவு ஊதியத்தினை பெறும் தொழிலாக காணப்பட்ட போதும் பெரும்பாலும் இளம் வயதினர் இத் தொழிலை செய்வதில்லை. 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் செய்கிறார்கள். 

தொழிலாளர்கள் தவறணையில் கள்ளினை கொடுத்த பின்னர் தவறணையில் ஒரு போத்தல் தென்னங்கள்ளு 75ரூபாவிற்கும் பனங்கள்ளு 50ரூபாவிற்கும் விற்கப்படுகின்றது. விற்பனை செய்யப்படாது மீதியுள்ள கள்ளினை வடிசாலைகளுக்கு அனுப்புகின்றார்கள். வடிசாலைகள் 10ரூபாவிற்கு கள்ளினை வாங்குகின்றது இதனால் தொழிலாளர்களுக்கும் கூட்டறவிற்கும் நஷ்டம் ஏற்படுகின்றது. ஒரு போத்தல் சாராய உற்பத்திக்கு ஏறத்தாள 10-14 போத்தல் கள்ளு தேவைப்படகின்றது. வடிசாலையிலிருந்து 660 ரூபாவுக்கு கடைகளுக்கு விற்கப்படும் ஒரு போத்தல் சாரயத்திற்கு 445ரூபா அரசாங்கத்,திற்கு வரி செலுத்துகிறார்கள். மீதி 215 ரூபாவிலும் தான் தொழிலாளர் ஊதியம் மற்றும் கள் வாங்குதல் வடிசாலைகள் இயங்கும் செலவுகள் என பயன்படுத்துவதால் இலாபம் கிடைப்பது குறைவாகவுள்ளது. மேலும் சாராயத்தின் உற்பத்தியில் வரும் இலாபங்கள் மிகவும் குறைவாக இருப்பதனால் கள்ளுக்கான கேள்வி குறைந்துள்ளது. 

யாழ்மாவட்டத்திலுள்ள வடிசாலைகள் சாரயத்தை கடைகளுக்கு விற்கும் விலை கடைகள் விற்கின்ற விலைகளினை அட்டவணை.

வடிசாலைகள் வடிசாலைள் விற்கும் விலை கடைகள் விற்கும் விலை 
வலிகாம வடிசாலை 650ரூபா 700ரூபா 
திக்கம் வடிசாலை 660ரூபா 710ரூபா
வரணிவடிசாலை 610ரூபா 670ரூபா
தற்காலத்தில் இக் கூட்டுறவு சங்கங்கள் பல நெருக்கடியின் மத்தியில் சில முயற்சிகளைமுன்னெடுக்கின்றன அவற்றுள் முக்கியமாக குடிசைகளாக இருந்த தவறணைகளை புதிய கட்டிடங்களாக மின்சார பான் வசதியுடன்,, கதிரையில் அமர்ந்து குடிக்க கூடிய வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
போர்க்கால சூழலில் பல பனைகள் அழிக்கப்பட்ட போதிலும் மீதியுள்ள பனைகளிலிருந்து விழுந்த பனம் விதைகள் மூலம் பனைமரங்கள் மீண்டும் முளைத்துள்ளன. மற்றும் 1996ம் ஆண்டு இடப் பெயர்வின் போது பண கொடுப்பனவுகளை கூட்டுறவு சங்கங்கள் தொழிலாளருக்கு வழங்கியுள்ளது. பல்வேறுபட்ட இடங்களில் தொழிலாளர்கள் வசித்த போதும் இத் தொழிலை செய்யக் கூடிய வசதிவாய்ப்புக்களை சங்கங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகள் 

  • 183 ஆசிரியர்களுடன் 120 பாலர் பாடசாலைளை நடாத்தல்
  • பாலர் பாடசாலைக்கு சீருடை சத்துணவு
  • சிறந்த அங்கத்தவர்களினை கௌரவித்தல்
  • பிள்ளைகள் புலமைபரீட்சை சித்தி எனின் 5000ரூபா
  • பல்கழைக்கலகம் சித்தி, 10000ரூபா
  • வருடாந்தம் பிள்ளைகளுக்கு கொப்பிகள் வழங்கள்,
  • வேலை வாய்ப்புக்கள்வழங்கள் 
  • இழப்பீட்டு தொகை வழங்கல்
  • சித்த மருத்துவ கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தல்
  • கிராமிய வங்கிகள் மூலம் சேமிப்பு கடன் வழங்கள்
  • ஓய்வூதியம் மகளீர் சுயதொழில் முயற்சித் திட்டங்கள் 

பெண்களின் பங்களிப்பு
சீவல் தொழலிலை பெண்கள் செய்வதில்லை. ஆனால், சங்கங்களில், பனங்கட்டி உற்பத்தி பனாட்டு உற்பத்தி மற்றும் போத்ததலில் கள் அடைத்தல்,,,, கூட்டுறவு சங்கங்களில், பணிபுரிதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இருந்தும் பெண்களின் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவம் கூட்டுறவுகளில் போதாது.

சீவல் தொழிலாளர்களின் பெண்கள், கூறுவதுஇஆரம்ப காலங்களில், அதிக வருவாயை பெற கூடியதாக இருந்த போதிலும், தற்போது ஓரளவு வருமானம் தான் பெறக்கூடியதாகவுள்ளது. மற்றும், மரத்தில் ஏறும் போது உடல் ஆபத்தக்கள் ஏற்படுவதால் தொழிலுக்கு கணவர்கள், செல்வதுபயமாகவுள்ளது. மேலும், சில காலங்களில் கள்ளு குறைவடைவதனால் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை இதனால் பெண்களும் ஆண்களும் கூலி வேலைகளுக்கும் செல்கிறார்கள்.

இத் தொழில் புரிபவர்களின், பிள்ளைகள்படித்துநல்லநிலைக்கு வந்த பின் பிள்ளைகளோ இவர்களின் மனைவிகளோ சீவல் தொழிலை கணவர்கள் மற்றும் தந்தைகள் செய்வதை விரும்பவில்லை.,மேலும், கிராமப்புற பாடசாலைகளின் சில ஆசிரியர்கள் சீவல் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி மேல் அக்கறை கொள்வதில்லை மற்றும் இவர்கள் உயர் சாதி மாணவர்களினாலும் புறந்தள்ளப்படுகிறார்கள். இத் தொழில் பற்றி மற்றும் பாடசாலைகளில் தொடரும் பாகுபாடு தமிழ் சமூகத்தை நெருக்கும் சாதியத்தின் ஒரு அம்சமாகும்.

சவால்கள்
சாதியடிப்படையில் தவறணைகளின் பதிவுகளுக்கு அயலவர்களின் எதிர்ப்புக்களும் முறைப்பாடுகளும், கூட்டுறவு சங்கங்களுக்கு சிரமத்தை கொடுக்கின்றது. கள்ளினால் உடலிற்கு ஏற்படுகின்ற பாதிப்பு குறைந்ததாக இருந்த போதிலும், கூடிய அற்ககோல் வீதத்தை கொண்ட சாராயத்தை விநியோகிக்கும் பார்களிலும் பார்க்க தவறணைகளுக்கே இவ்வாறான எதிர்ப்பு நிலவுகின்றது.

இன்று திறந்த பொருளாதார சந்தையில் போட்டி போடுவதற்கு தமது பொருட்களினை நவீனப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளனர். உதாரணமாக வெள்ளத்தின் உற்பத்தியின் பின் பொதிகளில் அடைத்து விற்ககூடிய வசதி வாய்ப்புகள் இல்லை. மற்றும் தெற்கிலிருந்து வருவம், சாரயத்துடன் போட்டி போடக் கூடிய வடிசாலைகளின் தொழில்நுட்ப முன்னேற்றம் அவசியம். அத்துடன் கள்ளை போத்தல்களில் அடைக்கும் நவீனத்துவம் தேவைப்படுகின்றது. மேலும் வெளிநாடுகளுக்கு சாராயம் மற்றும் கள்ளினை ஏற்றுமதி செய்து கூடிய வருமானத்தைபெறக்கூடிய வாய்ப்புக்கள் தேவை. இவை சீவல் தொழிலாளர்களதும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களதும் வேண்டு கோளாகவுள்ளது.

ஆரம்ப காலத்தில் உயர்சாதி, முதலாளிகளின் நிலமானிய ஆதிக்கத்தின் கீழ் சீவல் தொழிலாளிகள் சுரண்டப்பட்டார்கள். சங்கங்களின் தோற்றத்தின் பின்கூட்டுறவின் ஒழுங்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் சுயாதினமாக செயற்படார்கள். தற்கால முதலாளித்துவ பொருளாதார மாற்றங்கள் குறிப்பாக திறந்த சந்தையின் தாக்கம் மற்றும் போரின் பின் இறுக்கும் சாதியத்தினால் இவர்கள், ஒரு சமூக பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்கள்.

தொழிலாளர்களின் எதிர்காலத்தை நோக்கி
சீவல் தொழிலாளர்கள் சிலருடன் உரையாடிய போதுஇ தம்முடன் இத் தொழில் முடிவடைந்து விடும் என்றும் தம் பிள்ளைகள் இத் தொழில் செய்வதை தாம் விரும்பவில்லை எனவும் கூறினார்கள். மேலும் அவர்கள் அனைவரும் கல்வி ரீதியில் முன்னேற்றம் அடையலாம் என்று நம்புகிறார்கள். ஆனால் ஒரு சில தொழிலாளர்களின் பிள்ளைகளினை தவிர ஏனைய பிள்ளைகள் கல்வியினை இடைநிறுத்தி விட்டு கூலி வேலை செய்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இவர்களின் எதிர்காலம் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

தற்கால வடமாகாண சபை தேர்தலில் சீவல் தொழில் சமூகத்தினை சேர்ந்த ஓர் கூட்டுறவு தலைவர் வேட்பாளராக இருந்தாh., ஆனால் அவரால் கூட சீவல் தொழிலாளிகள் மற்றும கூட்டுறவு சங்கங்கள் எதிர் கொள்ளும் சவால்களை பிரசரிக்க முடியவில்லை. இது தமிழ் அரசியல் மற்றும் தமிழ் ஊடகங்கள் அத்துடன் இன்று வரையுள்ள சாதிய நிலைப்பு என்பவறற்றின் குறைபாடுகளை காட்டுகிறது.வரலாற்றை பார்க்கும் போது யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய உயர் சாதி ஆதிக்கத்துடன் வந்த அரசியல் இவ் சமூகத்தின் சுரண்டலுக்கே கை கொடுத்தன. ஆனால் பல தசாப்தங்களுக்கு முன் இச் சமூகமும் இடதுசாரிகளும் முன் கொண்ட போராட்டங்களால் பல சமூக முன்னேற்றங்கள் மற்றும், கூட்டுறவு சங்கங்கள், தோன்றின.

இந்த கண்னோட்டத்தில் தற்கால புத்திஜீவிகள் தமிழ் மக்களுடன் வெளிப்படையாக கலந்துரையாடி இச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பார்களா? மற்றும் வட மாகாணசபை இந்த சமூக முன்னேற்றத்திற்கும் அவர்கள் முகம் கொடுக்கும் சவால்களுக்கும் தீர்வினை கொண்டு வருமா?

1972ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்துடன் சீவல் தொழில் சமூகம் பல முன்னேற்றங்களை கண்டு வந்தது. ஆனால் இந்த தொழிலை தொடர முடியாமல் கூலி வேலைக்குள் தள்ளப்பட்டுமுதலாளிகளினால் மேலும் சுரண்டப்படலாம். இது உடமை இழப்பிற்கும் சாதிரீதியான சமூக புறந்தள்ளலுக்கும் வழிவகுக்கும் அபாயமுண்டு. இந்த சவால்களுக்கு சீவல் தொழிலாளர்களும் கூட்டறவு சங்கங்களும்அவர்களின் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் சமூகத்தை மாற்றும் ஒரு இயக்கத்திற்குத் தலைமை தாங்க வேண்டியுள்ளது.

இக் கட்டுரை எழுதவதற்கு தகவல்களை தந்துதவிய அச்சவேலி பிரதேசத்தை சேர்ந்தசீவல் தொழிலாளர்களுக்கும் மற்றும் அச்சுவேலி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க பணியாளருக்கும் அத்துடன், யாழ்ப்பாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கசமாச பணியாளர்களுக்கும், மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

அகல்யா பிரான்சிஸ்கிளைன் அகிலன் கதிர்காமர்

(அகல்யாவின் முகநூலிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகிறது)

குடியானவர்கள் குடிக்கும் குடத்தில் சக்கிலி பையன் தன்னீர் குடிப்பதா


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் நாஜிபாளையம் ஊராட்சி செங்கோட்டையன் நகரில் வசிப்பவர் க.ஆனந்தராஜ்; 17-05-2013 அன்று நாஜிபாளையம் துவக்கப்பள்ளி அருகே உள்ள விஜயன் டீ கடையில் கோவில் வரி சம்பந்தமாக ஊர் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. பெரியாரியல்வாதியான ஆனந்தராஜிடமும் வரி கேட்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு பெரியாரியல் வாதி எனக்கு கோவில் விழாக்களில் உடன்பாடில்லை, எனவே நான் வரி தரமாட்டேன். என் அண்ணன், தம்பியிடம் வாங்கிகொள்ளுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள மூன்று பேருமே வரி கொடுத்தாக வேண்டும் என்று பஞ்சாயத்தார் வற்புறுத்தியுள்ளனர். இதை மறுத்த ஆனந்தராஜ் அந்த டீ கடையில் இருந்த தன்னீர் குடத்தில் தன்னீர் குடிப்பதற்காக டம்ளரை எடுத்துள்ளார். குடியானவர்கள் குடிக்கும் குடத்தில் சக்கிலி பையன் தன்னீர் குடிப்பதா என்று அங்கிருந்த வீரப்பன் மற்றும் தங்கவேல் ஆகியோர் ஆனந்தராஜை கடுமையாக திட்டி, குடத்தில் இருந்த தன்னீரையும் கீழே ஊற்றியுள்ளனர். நான் எல்லோருக்கும் பொதுவான குடம் என்று நினைத்துவிட்டேன் என்று கூறிவிட்டு ஆனந்தராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். அடுத்த நாள் ஊராட்சி மன்ற தலைவர் இராஜா துரைசிங்கம், ஆனந்தராஜின் அம்மாவிடம் இதுபற்றி கடுமையான எச்சரிக்கை செய்துள்ளார். உன் பையனுக்கு இவ்வளவு தைரியமா? குடியானவர்களுக்கு சமமாயிட்டானா உன் பையன்? நான் மட்டும் அங்கிருந்திருந்தால் உன் பையனை உதைக்காமல் விட்டிருக்கமாட்டேன். மரியாதையா வரியை கட்டிவிட்டு ஒழுக்கமா இருக்க சொல்லு என்றும் எச்சரித்துள்ளார். இதை கேள்விபட்ட ஆனந்தராஜ் ஊராட்சி மன்ற தலைவரிடம் நீங்களும் இப்படி சொல்லலாமா? என்று முறையிட்டிருக்கிறார். அந்த தொலைபேசி உரையாடலை நீங்களே கேளுங்கள்..........

சுதந்திரத் திருநாடு, ஆங்கொரு சக்கிலிக் காடு!


நாமக்கல் தாலுக்காவில், ஏளூர் கிராமத்திலிருந்து நாட்டார் மங்கலம் மற்றும் சின்ன மணலி செல்லும் பாதையில் கல்லாங்குடி பிரிவு சாலையிலேயே ஒரு சிறு சாமி சிலை இருக்கிறது. அதைச் சுற்றிலும் இரும்புக் கம்பி போட்டு, அதில் ‘சக்கிலி காடு’ என எழுதப்பட்டு இருக்கிறது.

வேலகவுண்டன்பட்டியிலிருந்து வையப்பமலை வரை, புதன் சந்தை முதல் ஏளூர் பெரிய மணலி வரை அனைத்து கிராமங்களிலும் அருந்ததிய மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

சுதந்திரம் பெற்று பல வருடங்களாகியும், உயர் ஜாதியினரால இன்னும் மிக எளிதாக பறத் தெரு, சக்கிலியத் தெரு என அழைக்கப்படும் கொடுமை, இங்கு எழுத்து வடிவில் நிறுவப்பட்டு இருக்கிறது. 

மேற்கண்ட தகவலையும், இந்த புகைப்படத்தையும் நண்பர் விமலாவித்யா அவர்கள் மெயிலில் அனுப்பி, “உங்களை இது தொந்தரவு செய்கிறதா?’ என்ற கேள்வியையும் கேட்டு இருந்தார்.

சக்கிலி காடு


அவஸ்தையாகவும், அவமானமாகவும் இருந்தது. சமூகத்தின் ஆழத்தில் மனிதர்களை அழுத்தி, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர்கள் மீதே பச்சைகுத்தி வைக்கிற வன்கொடுமையாகவே தெரிகிறது.

இந்த சாதிய கட்டமைப்பில், ஆதிக்க சாதியினர், தாங்கள் இன்ன சாதி என பெருமையுடன் பீற்றிக்கொள்ள முடியும்.. காலம்காலமாய் நசுக்கப்ப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கள் இன்ன சாதியென அறியப்படுவதில் அல்லது அறிமுகப்படுத்தப்படுவதில் எத்தனை வேதனையும், வலியும் கொண்டு இருப்பர்?

‘இந்த குளம் தாங்கள் குளிப்பதற்குரியதா, இந்த பாதை தாங்கள் நடப்பதற்கு உரியதா, இந்த சுடுகாடு தாங்கள் புதைக்கப்படுவதற்கு உரியதா” என நிற்கிற, நடக்கிற, சுவாசிக்கிற வெளியெங்கும் ஜாதிய பாகுபாட்டின் எச்சரிக்கையுடனே வாழ்வது எத்தனை கொடுமையானது.?

மனிதாபிமானமும், விடுதலை குறித்த ஞானமும் உள்ள யாரையும் இந்தச் செய்தி தொந்தரவு செய்யும். சில நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்ட ஆட்சியரைப் பாராட்டி, நண்பர் ஈரோடு கதிர் எழுதிய இடுகையை வாசித்தேன். இதனை அறிய நேரும்போது, அவரும் தொந்தரவு செய்யப்படுவார் என்றே நம்புகிறேன். அதனால் சக்கிலிக்காடு என்னும் எழுத்துக்களையாவது முதலில் அழிக்க நேரிடுமா?

யாழ்ப்பாணத்துச் சாதியம்: காலனித்துவ சமரசம் - மு.நித்தியானந்தன்



„மப்பின்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாதி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது
எனினுமந்தப்
பாறைபிளந்து பயன் விளைப்பான் என்னூரான்“

என்று மகாகவி பாறை பிளந்து பயன் விளைவிக்கும் யாழ்ப்பாணத்து விவசாயியை வியந்து கவிதை வடித்தது உண்மைதான். ஆனால் கடும் பாறையை விட யாழ்மண்ணில் இறுகி வேரோடிப்போன சாதிய உணர்வினை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சி நடாத்திய ஐரோப்பிய அரசுகளாலும்கூட அசைக்கமுடியவில்லை. மாறாக யாழ்ப்பாண சமூகத்தில் மேலாண்மை செலுத்திய சாதியினர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியைப் பயன்படுத்தி மேலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை சரித்திரம் சொல்கிறது.

பிரித்தானியப் பேரரசின் இலங்கையின் முதல் ஆளுநராகப் பதவியேற்ற பிறெடறிக் நோர்த், யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பினை தங்களின் நிர்வாகத்திற்கு வசதியானதெனக் கருதி சாதியமைப்பினை அனுசரித்துச் செல்லும் போக்கினைக் காண்கிறோம்.

யாழ்ப்பாணத்தின் கிராமிய மட்ட சமூகத் தலைமைத்துவம் சாதி வெள்ளாளர்களின் கைகளிலேயே இருந்தது. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சாதியமைப்பினை ஆதாரமாகக் கொண்டுதான் இப்பிரதேசத்தின் சமூகப் பொருளாதர நடவடிக்கைகளும் சமூக உற்பத்தி உறவுகளும் அமைந்தன. சாதி, சமூகஅமைப்பின் மேற்கட்டுமானமாக அல்ல, அதுவே அடித்தளமாகவும் செயற்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரச் சமூகத்தளம் சாதியினால் வடிவமைக்கப்பட்டு, வெள்ளாள மேலாண்மையால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. உயர் குடிப்பிறப்பும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இழிவுபடுத்தப்படுதலும் யாழ்மண்ணில் தோய்ந்துபோனவை. யாழ்ப்பாணத்தின் அரும்பெரும் சுதந்திரவீரனாக போற்றப்படும் சங்கிலி தனக்கேற்பட்ட ‚வைப்பாட்டி மகன்’ என்ற இழிவினை நீக்க, தன் மூத்த சகோதரர்களை அழித்துத்தான் அரசகட்டிலேறுகிறான். இந்தச் சாதியப் பெருமைகளும் இழிவுகளும் பிரித்தானியர் ஆட்சியிலும் தொடர்ந்தன.

1806ஆம் ஆண்டு அரசு நிறைவேற்றிய 10ஆவது இலக்கக் கட்டளைச்சட்டம் உயர்சாதியினருக்கு வழங்கப்படவேண்டிய மரியாதைகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்பதைச் சட்டபூர்வமாக அறிக்கையிட்டது. பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பக்கட்டத்திலேயே சாதியமைப்புப் பாரம்பரியத்தை வலியுறுத்திப்பேண முயன்றிருப்பதை இது குறித்து நிற்கிறது.

அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடந்த நாடுகளிடையே அறிவியக்க ஒளிபாய்ச்ச வந்ததாகக்கூறும் ஆங்கிலேய அரசு வலியுறுத்திய சமூக ஒழுங்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மற்றும் நீதி போன்ற அம்சங்களும் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பு, பழமையான சமூக ஒழுங்கு முறைமை, சமூகத்தின் மீதான அதிகாரக் கட்டமைப்பு, சமூக ஸ்திரப்பாடு என்பவற்றுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தபோது இவர்களால் சமூக நீதியின் பேரில் தீர்க்கமான நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்ளமுடியவில்லை.

யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் தளத்தில் இருந்து சிக்கல்கள் தோன்றியபோதெல்லாம் சமூக நீதியின் அடிப்படையில் அல்லாமல் சமூகத்தில் நிலவும் ‚அமைதிக்கு’க் குந்தகம் ஏற்படாதவகையில் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி நின்ற பழைய அதிகாரப் படிமுறையைத் தக்க வைத்துக்கொள்ளுதலே உகந்தது என்ற ரீதியிலேயே ஆங்கிலேயரின் கொள்கை உருவாக்கம் அமைந்தது.

குடியேற்ற நாட்டுச் செயலாளரும் வரலாற்றாசிரியருமான எமர்சன் டெனண்ட்(Emerson Tennen) யாழ்ப்பாணச் சாதியமைப்பின் கொடூரத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் என்றாலும் அரசின் கடந்த கால அநுபவங்களைக் கொண்டு பார்க்கின்றபொழுது சாதியமைப்பின் மீது நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வதே உசிதமானது என்று கருதினார். ஆங்கிலேய அரசு கைக்கொண்ட தலையிடாக் கொள்கையை யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பைப்பொறுத்தும் உறுதியாகக் கடைப்பிடிப்பது அவர்களுக்கு வசதியாயிற்று. இந்தச் சாதியமைப்பின் கோரத்தாண்டவத்தைக் காலம்தான் மாற்றியமைக்கும் என்றும் பகுத்தறிவு படிப்படியாக வளரும் போது இது தணிந்து போகும் என்றும் டெனண்ட் எழுதினார்.

நிலமானிய அமைப்பில் போல அரசுக்கு நேரடியாகச் சரீர ஊழியம் போன்ற கடமைப்பாடுகள் தாழ்த்தப்பட்ட சாதியினர் செலுத்தத் தேவையில்லை என்று 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு கொணர்ந்த சட்டம் குறிப்பிடத்தக்கது. எனினும் சாதியமைப்பின் வேரோட்டத்தை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணத்தின் முதல் ஆங்கிலேயக் கலெக்டராகவும் பின் அரசாங்க அதிபராகவும் கிட்டத்தட்ட நாற்பதுஆண்டுகள் (1829-1867) வடமாகாணத்தில் பணிபுரிந்த பெர்சிவல் ஏக்லண்ட் டைக்(Percival Ackand Dyke) வகுத்ததுதான் யாழ்ப்பாணத்தில் சட்டமாய் இருந்தது.

யாழ்ப்பாணத்தின் தனிக்காட்டு ராஜாவாக (‚Raja of the North’) டைக் திகழ்ந்தார். கொழும்பில்லிருந்து பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தொலைதூர எல்லையில் தனது ராஜாங்கத்தை எந்தத் தடையுமின்றி நடத்தி வந்தார். கடுமையான கண்டிப்புமிக்க பெர்சிவல் டைக், தன் காலத்திலும் யாழ் சாதியமைப்பிலிருந்து எழுந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்ததது.

1830இல் நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் காதிலே தோடு அணிந்ததை வெள்ளாளர்கள் எதிர்த்தனர். கிராமியத் தலமைப்பீடம் வெள்ளாளர் கைகளிலே இருந்ததால் இம்மாதிரி நகை அணிகளை இனிமேல் நளவர்கள் யாரும் அணியக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டதோடு, பாரம்பரியப் பழக்கவழக்கத்தை மீறியதற்குத் தண்டமும் விதித்தார்கள். சமத்துவத்தைப் போதிக்கும் அரசு, சாதிரீதியான இந்தப் பாரபட்சத்தையும் கொடுமையையும் அனுமதிப்பது சாத்தியமாயிருந்தது. அதேசமயத்தில் இத்தகைய சாதியமைப்புச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகாணவும் முயலவில்லை. காதில் காதணிகளை அணிந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையை டைக் நீக்கினார். பாரம்பரிய மரபுகளில் தலையிடுவதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற ஆட்சிநடத்தும் ஜாக்கிரதை உணர்வில் இது போன்ற பிரச்சினைகளை இனிமேல் ஏற்படுத்தவேண்டாம் என்று தனது கீழ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கூறியதோடு நின்றுவிட்டார்.

மீண்டும் ஒரு சாதி அடிப்படையிலான பிரச்சினைய டைக் எதிர்கொள்ள நேர்ந்தது. யானை ஏற்றுமதி செய்வதற்கான துறை மேடையை அமைப்பதற்காக பனை மரத்தைக் காவிச் செல்லுமாறு திமிலர் இனத்தவர்களைக் கிராம மணியகாறர் பணித்திருக்கிறார்.
திமிலர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மணியகாறர் கட்டளைக்குப் பணிய மறுத்திருக்கிறார்கள். இத்தகைய பொதுப்பணிகளின்போது இவ்வாறு தாழ்த்தப்பட்ட சமூகத்திடமிருந்து சேவைகளைப் பெறுவது, பாரம்பரியமாக நடந்துவருவதுதானென்று மணியகாரர் தெரிவித்தார். திமிலர் இனத்தவர்களின் முறைப்பாடு தம்முன்வந்தபோது அதனைப்பரிசீலனை செய்த டைக் மணியகாரரின் நடவடிக்கை அரசாங்கத்தின் கட்டளையை மீறும் செயலே என்று கருதி பனைமரம் காவிச்சென்றதற்கான கூலியை அவர்களுக்கு மணியகாரர் தனது சொந்தப்பணத்திலிருந்தே செலுத்தவேண்டும் என்று கட்டளையிட்டார். யாழ்ப்பாணதில் கடமைக்காகத் தான் வெளியிடங்களுக்குப் போகும்போது சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களின் ஊழியத்தை இலவசமாகப் பெற்றுத் தங்குமிடங்கள் அமைத்தல் மற்றும் ஏனைய பணிகளைச் செய்யும் நடவடிக்கைகளுக்கு டைக் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் யாழ்ப்பாண சமூகத்தில் வேரோடிப்போன சாதியமைப்பின் அகங்காரம் அவ்வளவு லேசாக அடங்கிவிடுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பரம்பரைபரம்பரையாக வழங்கிவந்த மரியாதைகளையும் கௌரவங்களையும் தங்களுக்கு வழங்குகிறார்களில்லை என்று 1831இல் அப்போது கலெக்டராக இருந்த டைக்குக்கு பெட்டிசன் அனுப்பியிருந்தார்கள். சாதியடிப்படையிலான இந்தக் கோரிக்கையை பெர்சிவல் டைக் கோட்பாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அந்த நிலைப்பாட்டை அவர் பூரணமாக நிராகரித்து விடவில்லை. நிர்வாகத்தைக் கொண்டு நடத்த சாதிவெள்ளாளர்களின் மணியகாரர் தலைமைத்துவம் அரசுக்கு அவசியமாயிருந்தது. எனவே டைக் இந்த வெள்ளாளத் தலைமையினரின் முறைப்பாட்டை நேரே கவர்னருக்குத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
ஆட்சி நிர்வாகத்தில் தங்களுத் துணையாயிருக்கும் கிராமிய வெள்ளாளத் தலைமைத்துவம் உரிய மரியாதையோடும் தனித்துவத்தோடும் பேணப்படவேண்டுமென்பதில் அரசு அக்கறைகாட்டியிருக்கின்றது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் யாழ்ப்பாணத்துக் கச்சேரிகளின் வராந்தாவில் தரையில்தான் வெள்ளாள மணியகாரர்கள் உட்கார்ந்திருக்கவேண்டியதாயிற்று. இது ஏனைய தாழ்த்தப்பட்ட மக்களின்முன் தங்களுக்கு அவமரியாதையானது என்று சாதிவெள்ளாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை டைக் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு இருக்கைகள் வழங்க அனுமதித்திருக்கிறார்.
பொதுக் கிணறுகளில் எல்லா சாதியினரும் தண்ணீர் அள்ளுவதால் கிணறு ‚தீட்டுப்பட்டு’ தாங்கள் அத் தண்ணீரைக் குடிக்கமுடியாதென்று வெள்ளாளர்கள் கோரியதையேற்று அவர்களது அந்தஸ்தை நிலைநிறுத்த அவர்களுக்கென்று தனியே கிணறு வெட்டிக்கொடுக்கவும் டைக் ஏற்பாடுசெய்தார். அரசாங்க ஊழியர்களின் சுய கௌரவத்தை உயர்த்துவது அரசின் தொடர்ந்த ஆசை என்று கூறிய டைக் அவர்கள் விசேடமாகவும் தனி மரியாதையுடனும் நடத்தப்படவேண்டுமென்று கோருவது நியாயமென்று கருதினார்.
1849 மார்ச் மாதம் பருத்தித்துறை-புலோலியில் தட்டார் சமூகத்தவர்கள் சாதிவெள்ளாளர்களுக்கு எதிரான முறைப்பாட்டை அரசிடம் கையளித்தபோது கவர்னர் இப்பிரச்சினையை விசாரித்து அதனைத் தீர்த்து வைக்குமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபரான டைக்கைக் கேட்டிருந்தபோது அவர் அந்த விசாரணையைச் சாதுரியமாகத் தவிர்த்துக்கொள்ளவே விரும்பினார். சாதியைப் பகிரங்கமாக அங்கீகரிக்கும் நிலையைக் கவனமாகத் தவிர்க்குமாறு விதிக்கப்படிருக்கும் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த முறைப்பாடும் சாதியடிப்படையில் எழுந்திருந்ததால் இதனை விசாரிக்க முற்படுவது அவசியந்தானா என்ற பாணியில் டைக்கின் பதில் அமைந்தது. தட்டார் சமூகத்தவர்கள் தங்களின் மணியகாரரான வெள்ளாளர் தமக்கு அநீதியாக நடப்பதால் தமது சொந்தச்சாதியிலிருந்தே தலைமைக்காரரைத் தெரிவுசெய்யுமாறு கோரியிருந்தனர். வண்ணார் மற்றும் முடிதிருத்துவோரிடமிருந்தும் வெள்ளாளருக்கெதிரான முறைப்பாடுகள் அரசாங்க அதிபரிடம் வந்தவண்ணம் இருந்தன.
யாழ்ப்பாணத்தில் சாதிச்சண்டைகள் தொடர்ச்சியாக சகல இடங்களிலும் நடந்துகொண்டிருந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூக நீதி காக்கவேண்டிய நிர்வாகம் சாதுர்யமாக ஒதுங்கிக் கொண்டது. சாதிப்பிரச்சனைகள் வன்முறையில் முடிந்தபோது அவை குற்றவியல் பிரச்சனைகளாகி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடப்பட்டன. ஊர்காவற்துறையில் ஒரு பிணத்தைப் புதைப்பது தொடர்பாக கத்தோலிக்கர்களின் மத்தியில் சாதிசார்ந்து பிரச்சினை எழுந்தபோது உள்ளூர்வாசிகளின் சடங்காசாரங்களில் அரசு தலையிட விரும்பவில்லையென்று அரசு பிரச்சனையைக் கைகழுவி விட்டது. நீதிமன்றத்திற்தான் நியாயம் கோரவேண்டுமென்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Entrance to old Dutch Fort at Jaffna, Ceylon. Feb. 20, 1924. W.A.Sawyer in rickshaw

தச்சுத்தொழிலாளி ஒருவர் தனது மகளுடைய திருமணத்திற்குப் பந்தல் போட்டு வெள்ளைத்துணியால் அலங்காரம் செய்திருந்தார். வெள்ளாளர்கள் அதை எதிர்த்துப் பந்தலைக் கலைத்து திருமணத்தைக் குலைக்க முயன்றனர் . அரசிற்கு இது முறைப்பாடு செய்யப்பட்டபோது அரசின் உதவி அதிகாரி திருமணத்திற்கு நேரேசென்று அங்கு குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதாயிற்று.
கொள்கை ரீதியாக அரசாங்கம் சாதிப்பாகுபாடை அங்கீகரிக்கவில்லையென்றாலும் அதனை உறுதியாக நடைமுறையில் எதிர்க்கவில்லை. சாதி ஒடுக்குமுறையோடு அது சமரசம் செய்து கொண்டது. பிரஸ்தாப இந்த நிகழ்ச்சியிலும் இதற்குப் பின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பந்தல்களில் வெள்ளைத் துணியால் அலங்காரஞ் செய்ய விசேட பத்திரங்களில் வெள்ளாளத் தலைமைக்காரர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டியிருந்தது. வெள்ளார்கள் அனுமதி பெறவேண்டாத அர்களுக்கே உரித்தான விசேட உரிமையாக அது அமைந்தது.
1864 இல் நல்லூரில் நொத்தாரிஸாக தட்டார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்த போதும் வெள்ளாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு உருவானது.

அரசாங்க அதிபர் பெர்சிவல் டைக் தன் ஆட்சிக்காலத்தில் தனது அதிகாரத்திற்குச் சிறிய அச்சுறுத்தலாக எது வந்தாலும் அதனை நிர்த்தாட்சண்ணியமாக எதிர்த்து வந்திருக்கிறார். ‚பிரமச்சாரியாக’ அவர் கூறப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணுடன் அவருக்குத் ‚தொடுப்பு’ இருந்திருக்கிறது. கோப்பாயில் மரணமான டைக் யாழ்ப்பாணத்தை விரும்பி அங்கு பதவி வகித்துவந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடவே வேண்டும்.
கிறிஸ்தவ மிஷனரிகள் கல்விப் போதனைகளில் ஈடுபடுவதையும் யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்புகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் டைக் விரும்பவில்லை. இந்த மிஷனரிகளைத் தனது அதிகாரத்துக்குச் சவாலாக டைக் கருதினார். அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் அனாவசியத் தலையீடு மேற்கொள்பவர்களாக அவர்களை நினைத்தார். சென். ஜோண்ஸ் கல்லூரியினைக்கூட அவர் ஒரு இடையூறாகவே கருதினார். சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபரை அவர் பலமுறை சந்திக்க மறுத்திருக்கிறார். வேலை காலி இடங்களுக்கு தங்கள் கல்லூரி மாணவர்களை சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபர் டைக்குக்குச் சிபாரிசு செய்தபோது அவர் அதனை ஒருபோதுமே கருத்தில் கொண்டதில்லை.
19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளும் அங்கு ஆழ வேரோடியிருந்த சாதி அமைப்பினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்னையில் வெஸ்லியன் மெதடிஸ்ற் கல்லூரியில் வண்ணார் இனத்தைச் சேர்ந்த பையனை அனுமதித்ததற்காக வெள்ளாளர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அப் பையனைப் பாடசலையிலிருந்து வெளியேற்றவேண்டியதாயிற்று. மீண்டும் 1847இல் இப்பாடசாலையில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் அனுமதிக்கப்பட்டபோது வெள்ளாளர்கள் எதிர்த்தபோது பள்ளிநிர்வாகம் அதற்கு இணங்கவில்லை. இதனைச் சகிக்கமுடியாத வெள்ளாளப் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கிக்கொண்டனர்.
இந்தப் பாடசாலை அனுமதிப் பிரச்சினைகள் பற்றி ஆறுமுகநாவலர் பின்வருமாறு எழுதுகிறார்: வண்ணார்பண்ணையிலுள்ள வெஸ்லியன் மிஷன் இங்கிலீசுப்பள்ளிக்கூடத்தில் ஒரு வண்ணாரப்பையன் மூன்று நான்கு வருஷம் படித்தவன். இவ்வருஷத்திலே மற்றப் பிள்ளைகள் ‚இவ்வண்ணானை எங்களோடிருத்திப் படிப்பிக்கின் நாங்கள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுவிடுவோம்’ என்றார்கள். அதுபற்றி முதலுபாத்தியார் தாங் கிறிஸ்தவராயிருந்தும், வண்ணானைத் தள்ளிவிட்டார். வண்ணான் பறங்கித் தெருவில் இருக்கிற வெஸ்லியன் பாதிரியிடத்தே போய், தனக்கு கிறிஸ்து மதமே சம்மதமென்றும், தனக்கு ஞானஸ்நானம் செய்து தன்னை அங்குள்ள வெஸ்லியன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். பாதிரியார் தாம் அதற்கு உடன்பட்டும், அவனைச் சேர்த்துக்கொள்ளுமபடி தமக்குக் கவர்மெண்ட் ஏசண்டு எழுதிய கடிதம் பெற்றும், அப்பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் சுதேச குருமாரும் உபாத்தியாயர்களும் உடன்படாமையால், வண்ணானைச் சிலகாலம் அடிக்கடி அலைத்துப் பின் ஓட்டிவிட்டார். அவன் இப்போது நெடுந்தூரத்திலுள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறான்.
‚அப்பள்ளிக்கூடத்திற்றானே 1847ஆம் வருடம் ஒரு நளப்பையன் படித்தலைக்கண்டு ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள் ஓட்டமெடுக்கவும் அந் நளப்பையனைத் தள்ளாத பாதிரியாரைப் பித்தரென்று நினைத்தரோ! நளவனிலும் தாழ்ந்தசாதி வண்ணானென்று கொண்டாரோ! சாதி வேற்றுமை பாராட்டுதல் கிறிஸ்து நாதருக்குஞ் சம்மதமென்று விவிலிய நூலில் எங்கேயாயினும் இப்போது கண்டாரோ? வண்ணானுடைய ஆன்மா பரமண்டலத்தில் இடம்பெறாதென்று தேவதூதன் சொப்பனத்தில் வந்து சொல்லக்கேட்டாரோ! தேவவாக்கினும் பெரிது தம்மைச் சேவிக்குஞ் சுதேச குருமார், உபாத்தியாயர்கள் வாக்கென்று தெளிந்தாரோ! வண்ணானைப் பற்றி மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிவிட்டால், அவர்கள் இருக்குஞ் சம்பளத்தினாலும் அவர்கள் பொருட்டுக் கவர்மெண்டார் உதவும் பணத்தினாலும் தமது பை நிரம்பாதேயென்று பயந்து விட்டாரோ! யாழ்ப்பாணத்திலே சாதி வேற்றுமை அறுத்துக் கிறிஸ்து மதத்தை நிலைநாட்ட வல்லவர்கள் பொருள்வாஞ்சைப் பிசாசா வேசிகளாகிய இந்தப் பாதிரிமாரும் சுதேச குருமாரும் தானோ! சபாசு! சபாசு!’

ஆறுமுகநாவலரின் இந்த நீண்ட குறிப்பு யாழ்ப்பாணத்தில் அன்று ஆழ்ந்து வேரூன்றி நின்ற சாதிவெறித் தனத்திற்கு அச்சொட்டான சாட்சியாக அமைகிறது. இவ்வளவு அழுத்தந் திருத்தமான – இறுகிப்போன சாதி அமைப்பின் பின்னணியிலே கிறிஸ்தவ மிஷனரிகள் இயங்க நேர்ந்தன. இருப்பினும் மிஷனரிமாரின் கல்வித் திட்டம் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதியமைப்பின் கோட்டைகளில் பெரும் துளைகளை ஏற்படுத்தவே செய்தது. சாதியமைப்பினால் வட்டுக்கோட்டை செமினரியில் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றி டெனன்ட் தனது ‚Christinanity in Ceylon’ என்ற நூலிலே குறிப்பிடுகிறார்.

மிஷனரிமார் தமது மதப்பரம்பலுக்குத் தடையாகச் சாதியமைப்பு நிலவுவதாகவே அதனை நோக்கினர். இக்காலகட்டத்தில் இலங்கையில் பணிபுரிந்த மிஷன்ரிமாரின் கடிதங்களிலும் அவர்கள் வெளியிட்ட சஞ்சிகைகளிலும் சாதி பற்றிய குறிப்புக்கள் வரும்போதெல்லாம் அது மதமாற்றத்திற்கு எவ்வாறு தடையாக அமைகிறது என்ற நோக்கத்தில் மட்டுமே பார்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சாதியமைப்பிற்கு எதிராக சமயம்பரப்பலில் ஈடுபட்ட கிறிஸ்தவசமயமும் யாழ்ப்பாணத்தின் சாதியக்கொடூரத்தின் முன் சரணாகதியடைய நேர்ந்தமை இந்தச் சோக நாடகத்தின் மற்றுமொரு விரிவான கதை.

1871இல் மிஷனரிமாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆறுமுகநாவலர் சைவபரிபாலனசபையை நிறுவினார். அவர் நிறுவிய பாடசலையிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனுமதிக்கப்படவேயில்லை. சைவ பரிலபாலனசபை ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டில்தான் 1871இல் மாவிட்டபுரத்தில் சாதிக்கலவரங்கள் வெடித்தன. வெள்ளாளர், வண்ணார், அம்பட்டர், ஆகியோருக்கிடையில் சாதிமோதல்கள் எழுந்தன. அம்பட்டர்களின் உடுப்புக்களைத் தோய்க்கமுடியாது என்று வண்ணார்கள் மறுத்ததன் பின்னணியில் வெள்ளாளர்களே இருந்திருக்கிறர்கள்.

இந்தச் சாதிக் கிளர்ச்சிகள் டைக்கிற்குப் பின் பதவியேற்ற அரசாங்க அதிபர் டுவைநாம்(Twynam) காலத்திலும் தொடரவே செய்தன. இவர்களுக்கெல்லாம் பின்னால் ‚Village in the jungle’ என்ற அற்புதமான ஆங்கில நாவலை எழுதிய சிறந்த எழுத்தாளரான லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) யாழ்ப்பாணஹ்தில் அரசாங்க அதிபராகப் பணியாற்றினாரெனினும் அவர் யாழ்ப்பாண வெள்ளாள எதிர்ப்பின்பேரில் வெளியேறவே நேர்ந்தது. யாழ்ப்பாணக் கச்சேரியில் லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) பணியாற்றியபோது பிராமண வகுப்பைச் சேர்ந்த கிளாக்கர் தரையில் எச்சில் துப்பி அசுத்தப் படுத்திவிட்டதைப் பார்த்ததும் அவரையே தரையைச் சுத்தப்படுத்துமாறு பணித்துவிட்டார். தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அவரே தரையைச் சுத்தப்படுத்தவேண்டிய நிலை அவருக்குப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகின்றது. வூல்பின் இத்தகைய கண்டிப்பான நடவடிக்கைகளால் அவர் யாழ்ப்பாணத்தில் நிலைக்க முடியவில்லை. அவர் யாழ்ப்பாணத்தவர்களைப் பற்றி நல்லபடியாக ஒன்றும் தனது குறிப்புக்களில் எழுதவில்லை.

யாழ்குடாநாட்டில் வேரூன்றி நின்ற சாதியபிமானம் யாழ்ப்பாணத்தவர்கள் 19ஆம் நூற்றாண்டில் மலாயாவை நோக்கிக் குடிபெயர்ந்தபோது அதுவும் அவர்களோடு சேர்ந்து வெளிநாடுகளிலும் செழித்தது. 1861இல் கோலாலம்பூரில் ஸ்ரீபரஞ்சோதி விநாயகர் ஆலயத்தைக் கட்ட முன்நின்ற ஊரெழுவைச் சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் விஸ்வலிங்கம் தான் உயர் வெள்ளாளப் பழங்குடியில் வந்தவராகக் கல்வெட்டிலே பொறித்துச் சென்றிருக்கிறார்.

இந்தச் சாதிவெறி இருபதாம் நூற்றாண்டிலும் இன்னும் கோரமாகத் தலைவிரித்தாடியது. 1907இல் பொன். அருணாசலம்கூட சாதியமைப்பு அவசியமானது, நலம் பயப்பது என்று எழுதினார். 1921இல் யாழ்ப்பாணத்தில் ‚தமிழர் நாகரிகம்’ பற்றியுரையாற்றிய மறைமலை அடிகள் தமதுரையில் வெள்ளாளரின் நாகரிகம் குறித்தே பேசினார்.

1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன். இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டார்.
1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.
தம் சொந்தச் சகோதரர்களையே அடக்கியும் ஒடுக்கியும் இழிவுபடுத்திய யாழ்ப்பாணச் சமூகத்தின் கொடூரத்தின் கதை அவலம் நிறைந்த, கறை படிந்த கதையாகும்.

கட்டுரையாசிரியர் மு.நித்தியானந்தன், அறியப்பட்ட இலக்கிய விமர்சகர், லண்டனில் வசிக்கின்றார்.
நன்றி - கரம்பொன்

எங்கள் கவிச்சி சாமி, முனியாண்டி சாமி - என்.சரவணன்


என் நண்பரும் நெருங்கிய தோழருமான மல்லியப்பூ சந்தி திலகர் அப்பா பற்றி பற்றி நான் எழுதிய குறிப்பொன்றில் நான் அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்களராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அணைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்..” என அவர் தவறுதலாக வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற நான் மறுத்து எழுத வேண்டியதாயிற்று.

அதனைத்தொடர்ந்த கருத்து பரிமாறலில் சில சுவாரஸ்யமான அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

"....இலக்கிய கூட்டங்களுக்குப் போகும் போது வாசலில் கும்பம் வைத்து வரவேற்பதாக விபூதிபூசி, பொட்டு வைத்து நம்மை வரவெற்கும் வழமை உண்டு. சில நேரங்களில் இந்த முறைமை நம்மை சங்கடப்படுத்துவதாகவும் இருக்கும். ஆனாலும் எவ்வித கோட்பாட்டுச் சித்தாந்தங்களும் அறியாமல்வருவபர்களை ‘கெளரவிப்பதாக’ வரவேற்பவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது என்பதனால் அதனை ஏற்றுக்கொள்வதுண்டு. அண்மையில் ஒரு பாடசாலை அதிபரை பாராட்டும் நிகழ்வுக்கு சென்றிருந்தென். அங்கு அதிபரின் ஆசிரியர்-அதிபர் உரையாற்ற அழைக்கப்பட்டார். பெயர் ‘காதர்’. நேற்றி நிறைய விபூதியும் பொட்டுடன் சுவாரஷ்யமாக அவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். அதனை அவர் வீட்டில் இருந்து வரும்போது வந்திருக்க வாய்பபேயில்லை. நிச்சயமாக வரவேற்பில் வைக்கப்பட்ட விபூதிப் பொட்டுத்தான் அது.... (இந்த விபூதிகள் பொல்தான் உங்கள் மீது பூசப்பட்ட விபூதியையும் பார்த்தேன் தோழர். வேறு எந்த நோக்கமும் இருக்கவில்லை.)..." என்றார் திலகர்.

நீங்கள் கூறியபடி நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டபகங்களின் வாயில்களில் ஏற்படக்கூடிய தர்மசங்கடங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். விருப்பு வெருப்புகளுக்கப்பால் அதனை மறுக்க முடியாத நிலைக்கு உள்ளாகிவிடுகிறோம். சென்ற வருடம் மலையகப் பகுதிகளில் அப்படி நேர்ந்தது. அந்த தேயிலை தோட்டத்தில் அழகான ஒரு மலை உச்சியில் ஒரே ஒரு பெரிய மரத்தின் நிழலில் ஒரு முனியாண்டி சாமி ஒரு கருங்கல்லாக நிலத்தில் ஊன்றியிருந்தார். அங்கிருந்த தொழிலாளத் தாயார் இன்னும் சில பெண்களையும் அழைத்து அருகில் என்னையும் அழைத்து எனக்கு திருநீர் பூசி, சூடம் சுற்றி, மாலை அணிவித்து ஆசி செய்தார். விருப்பு வெறுப்புகளுக்கப்பால் அந்த அன்பை ஏற்றுகொள்ள வேண்டியேற்பட்டது. ஒரு சந்திப்பொன்றையும் அந்த தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களிடம் நான் கண்ணீர் மல்க உரையாற்றினேன்.

நான் ஏற்பாடு செய்யும் எவற்றிலும் இந்த மத சம்பிரதாயங்களை சேர்த்துக்கொள்வதில்லை. 

எங்கள் குடும்பங்களின் சாமியும் முடியாண்டி சாமி தான். கொழும்பில் என் வீட்டு சுவற்றோடு உள்ள கிணற்றோடு சேர்த்தாற்போல் அருகாமையிலேயே ஒரு முனியாண்டி சாமி கல்லொன்றை வைத்து அதனை சிறு கோவிலாக கட்டி என் குடுமபத்தவர்கள் இன்னமும் வழிபட்டு வருகிறார்கள். முன்னரெல்லாம் வருடாந்தம் கோழி, கடா வெட்டி திருவிழாவும் செய்து வந்தார்கள். பிரபல “கொழும்பு கணேஸ்” எனும் கரகாட்டக்காரரின் ஆடல் தவறாது இடம்பெறும். எங்கள் தலித் குடும்பங்கள் ஐந்து அப்போது அந்த தோட்டத்தில் இருந்தன. ஆனாலும் அப்போது அந்த திருவிழாவை நடத்த அங்குள்ள ஏனைய கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகத்தவரும் சேர்ந்தே ஒத்துழைப்பர்கள். இன்றும் எங்கள் முனியாண்டி சாமி கோவிலை வழிபடுவதும் அதனை பராமரிப்பதும் அங்குள்ள சிங்கள குடும்பங்களே. ஆனால் என்ன, இப்போதெல்லால் அதனருகில் ஏனைய உயர் சாதி சாமிகள் ஆக்கிரமித்து எங்கள் அசைவ சாமியை சைவ சாமியாக்கிவிட்டார்கள்.
முனியாண்டி சாமி கோவிலை
பராமரித்து வந்த ஜீவா அக்கா. 
முதலில் காளி வந்தார். பின்னர் முருகன், பிள்ளையார், சரஸ்வதி என வந்து இறுதியில் முனியாண்டி சாமி கல்லை சிவலிங்கமாக்கி விட்டார்கள். இப்போது எங்கள் கவிச்சி சாமி போய் முற்றிலும் சைவ சாமி தான் எஞ்சியிருக்கிறது. பழைய முனியாண்டி சாமியாகவே இன்னமும் நம்பி அந்த சிறு கோவிலை சுத்தம் செய்து, பராமரித்து வணங்கி வந்த எங்கள் பெரியம்மா மகள் ஜீவா அக்கா நான்கு நாட்களுக்கு முன்னர் புற்றுநோயால் இறந்து போனார் நேற்று தான் அவரது இறுதிச்சடங்கு செய்தியும் வந்து சேர்ந்தது. இறுதியில் அவரை சைவ சாமியும், எங்கள் கவிச்சி சாமியும் சேர்ந்து கைவிட்டுவிட்டார்கள்.

என் பாட்டி தலைக்கியும், என் மாமி வள்ளியும் சாமியாடி குறி சொல்வார்கள். நாங்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் குறி கேட்கவென, தேங்காய், சூடம், வெற்றிலை என எடுத்துக்கொண்டுவந்து சாமியாடவைப்பது வழக்கம். “...வெக்கமா இருக்குது, நம்மல நாமலே யாருன்னு கட்டிகொடுக்குது இனி இதெல்லாம் பண்ண வேணாம்..” என்று கூறி அவர்கள் இருவரையும் என் உறவினர்கள் தடுத்து விட்டார்கள்.

கொழும்பில் தலித்துகள் வாழும் எங்கள் பகுதிகளுக்கு உறவினர்களை பல வருடங்களுக்கு பின்னர் சென்ற ஆண்டு சந்திக்க சென்ற போது அங்கெல்லாம் முன்னர் இருந்த முனியாண்டி சாமி, மதுரைவீரன் சாமி, சுடலைமாடன் சாமி சிறு கோவில்களெல்லாம் இப்படித்தான் மாற்றம் கண்டிருந்தது. அவற்றை பற்றி பதிவு செய்ய வேண்டுமென்பதற்காக பல புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு வந்தேன். இந்த பதிவை பின்னர் ஒரு முறையான கட்டுரையாக எழுதும்போது அதனை பகிர்கிறேன்.

மாத்தளை நகரத்தில் அருந்ததியர்கள் வாழும் நகரசுத்தி தொழிலாளர்களின் பெரிய குடியிருப்பொன்று உண்டு. நகரத்தின் ஒதுக்குபுறமாக உள்ள சுடலையை அண்டியே அந்த குடியிருப்பு உள்ளது. இலங்கையில் பல நகரங்களில் வாழும் அருந்ததியர்களுக்கிடையில் உறவு வலையமைப்பு உள்ளது. அடிநிலை தலித்துகள் என்பதால் அவர்களுக்கு இடையில் மட்டும்தான் திருமணம் புரிய வாய்ப்பு அதிகமுண்டு. இந்த அகமணமுறையில் விதிவிலக்காக உள்ள மாற்றங்களை கணக்கில் எடுக்காதீர்கள். சில அருந்ததியர் குடியிருப்புகளில் இடம்பெறும் திருவிழாக்களில் ஏனைய பிரதேசங்களில் உள்ள அருந்ததியர்களும் வந்து கலந்துகொள்வார்கள். திருவிழா காலத்தில் தங்கியிருப்பவர்கள் மத்தியில் காதல் வரும், பெரியவர்களுக்கிடையில் கல்யாண பேச்சுகள் நடக்கும். மாத்தளையில் உள்ள குடியிருப்பில் சுடலைமாடன் சாமி பெரிய ஆலமரத்தினடியில் சிறிதாக இருந்தார். வருடாவருடம் கொழும்பிலிருந்தும் அந்த திருவிழாவுக்கு போவோம். திருவிழாவில் சுடலைமாடனை அந்த குடியிருப்பு எல்லையை சற்றி (சுடலையும் சேர்த்துத்தான்) கொணர்வது வழக்கம். சகல வீட்டு ஒழுங்கைகளுக்கிடையிலும் இறவிரவாக வரும் சுடலைமாடன் அனைத்து வீட்டு வாசல்களிலும் தரித்து நின்று ஆசி வழங்குவது வழக்கம். இப்போது அது அரு பெரிய கோவில். மிகச் சமீபத்தில் சுடலை மாடன் ஓரங்கட்டப்பட்டு அம்மன் கோவிலாக மாற்றப்பட்டுவிட்டது. இத்தனைக்கும் ஒரு நடை தூரத்தில் தான் பிரசித்திபெற்ற மாத்தளை முத்துமாரியம்மன்கோவில் இருக்கிறது.

இந்த நிலையை மலையகப் பகுதிகள் எங்கும் காணலாம். இது வெறுமனே சிறுதெய்வ வழிபாட்டு முறையில் ஏற்பட்டுவரும் மாற்றம் மட்டுமல்ல அவர்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்களிலும் மாறுதலைக் கொண்டுவந்துள்ளது. சமூக மேனிலையாக்கத்துக்கான நடையுடைத், உடைத்தோற்றத்தில் மாற்றம் கண்டிருக்கிறது. வழமையான பேச்சு வழக்கில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. யாழ் பேச்சு மொழி கலந்து பேசுதல் என்பது பேஷனாக ஆகியிருக்கிறது. இந்துக்கள் மத்தியில் பிரபலமான, அதேவேளை மலையகத்தில் பெரிதாக அறியப்படாத விரதங்கள், மதச் சடங்குகள் வெகுவாக உள்நுளைந்துள்ளன. இதுவரை இருந்த பாரம்பரிய முறைகளெல்லாம், அதன் தகுதியை, அந்தஸ்தை குறைநிர்ணயம் செய்யும் ஒன்றாக கருதப்படத் தொடங்கியிருக்கிறது. இதன் நீட்சியாக இதுவரை இல்லாத தீட்டு, துடக்கு உள்ளிட்ட ஐதீககங்களையும் வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிட்டிருக்கிறது. சில இடங்களில் பூசாரிகளின் இடங்களை ஐயர்கள் பிரதியீடு செய்யப்பட்டிருக்கிறார்கள். வீட்டு சடங்குகளில் ஐயர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

சிறுதெய்வ வழிபாட்டை பெருதெய்வ வழிபாட்டு நிலைக்கு மாற்றமுறும் போது தேர் கொணரப்படுகிறது, கோவிலும் வழிபாட்டு முறையும் நவீனம் பெறும்போது கோவிலுக்கென்று ஒரு கட்டமைப்பு உருவாகிவிடுகிறது. அந்த இடத்திலிருந்து வர்க்க ரீதியிலும் சாதி ரீதியிலும் பக்தர்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள். அதுவரை அவ்வளவு கவனிக்கப்படாத சாதியம்கூட வெளிப்படையாக கூர்மைபெற்றுவிடுகிறது.

10 வருடங்களுக்குப் பின் ஊர் போனால், என் வீட்டில் செவ்வாயும், வெள்ளியும் கவிச்சி இல்லையென்கிறார் அம்மா. சரி, முதல் நாளே இரண்டு கருவாட்டு துண்டை எனக்காக பொறித்து முன்னமே வைத்து விடுங்கள் செவ்வாய், வெள்ளிகளில் நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று கெஞ்சவேண்டியிருக்கிறது.

சாதிய அடையாளங்களை மறைத்து சமூக மேனிலையாக்கத்திற்கான முயற்சியில் தலித் மக்கள் தங்களை மட்டுமல்ல தங்கள் சாமிகளின் அடையாளங்களையும் மாற்ற முயன்று இறுதியில் உயர்சாதி சாமிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவிட்டு தலித் சாமிகளை அவர்களின் சொந்த கோவில்களிலிருந்தே விரட்டியும் விட்டனர்.

சாதிய தற்கொலை எனும் உப தலைப்பில் சரிநிகரில் நான் அருந்ததியன் எனும் பெயரில் எழுதி வந்த “தலித்தியகுறிப்பு” தொடரில் இது பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.

நகராக்கம், உலகமயாதலின் நீட்சியாக விளிம்புநிலையினரின் மேனிலையாக்க முனைப்பு, தவிப்பு அதன் போக்கு என்பவற்றிலுள்ள சாதக பாதக அம்சங்களை விரிவாக மதிப்பீடு செய்யும் புதிய தலைமுறை இன்று தேவைப்படுகிறது.
கொழும்பு ஊறுகொடவத்த - வடுகொடாவத்த பகுதியில் இருந்த மதுரைவீரன் சாமி கோவில் அம்மனை உள்ளே விட்டார்கள் கோவில் புனரமைக்கப்பட்டதும் மதுரைவீரனை வழமைபோல காவல்காரனாக ஆக்கி வெளியே வைத்துவிட்டு மூலஸ்தானத்தில் அம்மன் அமர்ந்துவிட்டார். இப்போது அம்மன் கோவில் அது. 90 களில் இந்த கோவில் திருவிழாவுக்கு சென்று உறவினர்களுடன் கும்மாலமடித்தபடி சடங்குகளை கேலிசெய்திருக்கிறேன். ஒரு முறை தீமிதிப்பின் அது என்னாலும் செய்ய முடியுமென்று இறங்க ஏற்பாடுகள் செய்திருக்க என் குடும்பத்தினர் வந்து குழப்பிவிட்டார்கள்...
கொழும்பு தெமட்டகொடையில் சிறிதாக கட்டப்பட்டிருந்த தலித் கோவில் இது. இன்று புனரமைக்கப்பட்ட இந்து ஆலயம்
களுத்துறை தலித் தோட்டமொன்றில் வருடாந்தம் திருவிழா நடத்தப்பட்டுவரும் ஒரு சிறு கோவில். மதுரைவீரன் சாமி
குருநாகலை - ராஜாங்கன நீர்தேக்க பாலத்தின் வாசலில் உள்ள முனியாண்டி சாமி இப்போது சிவலிங்கமாக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More