Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

அறுபத்தைந்து கட்சிகளுக்கும் அவர்களே தலைவர்கள்


நேர்காணல்:அ.தேவதாசன்
தோழர் தேவதாசன் 1956ல் வேலணைக் கிராமத்தின் தலித் குறிச்சியொன்றில் பிறந்தவர். கிராமத்து நாடகக் கலைஞனான தேவதாசன் ஓவியம், பாடல் போன்ற துறைகளிலும் தடம் பதித்தவர். 1983ல் அய்ரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த தேவதாசன் முதலில் ‘தமிழீழ விடுதலைப் பேரவை’யிலும் பின்னர் ‘ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யிலும் இணைந்திருந்தவர். தொண்ணூறுகளின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகிக்கொண்டார். புகலிடத்தில் சினிமா, நாடகம், இலக்கியச் சந்திப்புகள் எனத் தொடர்ந்து செயற்பட்ட தேவதாசன் ‘புன்னகை’ என்றாரு சிற்றிதழையும் வெளியிட்டார். இன்று தலித் விடுதலை அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் தேவதாசன் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யின் தலைவராகவும் இலங்கையில் எழுபது வருட போராட்ட வரலாற்றைக்கொண்ட தலித் விடுதலை இயக்கமாகிய ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் வெளிநாட்டுத் தொடர்பாளராகவும் செயற்படுகிறார். எதிர்வரும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் சுயேடச்சைக் குழுவாக ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ போட்டியிடுவது குறித்தும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் இயங்குதிசை குறித்தும் தோழர் தேவதாசனிடம் உரையாடினேன். இந்த உரையாடல் 23 மார்ச் பாரிஸில் பதிவு செய்யப்பட்டது.-ஷோபாசக்தி
  • ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யின் தேர்தல் அறிக்கை மிக எளிமையாக எழுதப்பட்ட ஒரு விண்ணப்பம் போலவே இருக்கிறது. இன்றைய தலித் அரசியலின் இயங்குதிசையையும் சமூகநீதிக் கோரிக்கைகளையும் மகாசபை புரிந்து கொண்டதற்கான தடயங்கள் அறிக்கையில் இல்லையே?
‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யும் ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யும் அரசியல் வழிமுறைகளில் வேறுவேறானவை என்பதை நீங்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். சாதி ஒழிப்புத்தான் இரு அமைப்புகளின் பொது இலக்கு எனினும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் அரசியல் அம்பேத்கரியலிலும் பெரியாரியலிலும் வேர்கொண்டது. இந்துமத அழிப்பும், சமூகநீதியும், கலாசார புரட்சியும் அதன் முதன்மைப் போராட்ட இலக்குகள். ஆனால் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மரபு மார்க்ஸியத்தில் தனது வேரைக் கொண்டுள்ளது. சாதியொழிப்புக்கு மரபு மார்க்ஸியத்தால் வழங்கப்பட்ட தீர்வுகளை மகாசபை கடந்து இன்றைய தலித் அரசியலை நோக்கி வராததற்கான நிலையை இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நிகழ்ந்த யுத்தமும் யுத்தம் சார்ந்த அரசியலையும் வைத்தே நாம் புரிந்துகொள்ள முடியும்.

தலித் பெண்ணியம்: எல்லோருக்கும் "ஒன்று" என்பது சுத்த அபத்தம்! - ரூத் மனோரமா

நேர்காணல் - என்.சரவணன்

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் 50 வருடங்களாக உலக மனித உரிமைகளைப் பேணி வருகிறதாம். இந்தியா அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 50 வருடங்களையும் அடைந்து விட்டதாம். ஒவ்வொரு மணித்தியாலமும் இரண்டு தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் 3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தினந்தோறும் 2 தலித்துகள் கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் இரண்டு தலித் வீடுகள் அழிக்கப்படுகின்றன.

தலித்தியப் போராட்டமானது இன்றைய சூழலில் தவிர்க்க இயலாததும், காட்டமானதுமாக பரிணமித்துவிட்டிருக்கிற நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயற்பட்டுவரும் பல்வேறு தலித் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து 1998 10-11 ஆகிய தினங்களில் கூடி தலித் மக்களின் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டம் ஒன்றை வரைந்தன. அதனை சென்ற வருடம் (ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் 50வது வருட பூர்த்தி தினமான) டிசம்பர் 10 அன்று தொடக்கம் (அம்பேத்கார் பிறந்த தினமான) 14 ஏப்ரல் 1999 வரையான காலத்திற்குள் உலக அளவில் தலித் மக்களின் பிரச்சினைகளின் பால் கவனத்தை ஈர்ப்பதற்கும், தலித் மக்களின் அவலங்களையும் உரிமைகளையும் பற்றி பிரசாரப்படுத்தும் காலமாகப் பிரகடனப்படுத்தி செயற்பட்டனர். தலித் விஞ்ஞாபனம், தலித்களின் உரிமைகளும் மனித உரிமைகளே எனக்கூறும் தலித் மனித உரிமைகள் சாசனம், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், கையெழுத்து சேகாpப்பு, இந்திய அரச தரப்பினருக்கு விதந்துரைக்கவென கோரிக்கைகள் என பல்வேறு ஆவனங்களை உள்ளடக்கிய ஒரு கோவையையும் விநியோகித்து வருகின்றனர். ஐநாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில் ”மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதி” தலித் மக்களின் பிரச்சினைகளை ஐ.நாவில் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படியும், இப்பிரச்சினைகளுக்கென விசேட ஐ.நா அறிக்கையாளர் (Special Rapporteur ) ஒருவரை நியமிக்கும்படியும் கோரியுள்ளனர். இப்பிரச்சாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வந்து ஒரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்திருந்தனர். இலங்கையில் இனத்துவ கற்கைக்கான சர்வதேச நிலையத்தினர் இதனை ஒழுங்கு செய்திருந்த போதும் இது ஒரு சில ”புத்திசீவிகள்” மட்டுமே கலந்து கொண்ட நிகழ்ச்சியாக குறுகிப்போனது வேறுவிடயம்.

தலித் மக்களின் பிரச்சினைகளையும் அப்போராட்டங்களை ஒன்றிணைக்கும் பணியாகவும், மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சியில் சகலரையும் இணைக்கும் வகையில் வெப் தளம் ஒன்றும் இவ்வமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் தலித் மக்கள் பற்றிய பல்வேறு விபரங்கள், ஆய்வுகள், விவாதங்கள், செய்திகள், கட்டுரைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இதிலிருந்து இன்னும் பல தலித், மற்றும் மனித உரிமைகள் பற்றிய வெப் தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை வந்திருந்த இவ்வியக்கத்தின் கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் தலித் அமைப்பைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளரான திருமதி. ரூத் மனோரமாவுடனான நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது. இந்திய தேசிய அளவில் முதன் நிலை தலித் செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் இவர். வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும், மாற்று நோபல் விருது உட்பட பல விருதுகள் இவரது தலித்திய செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

தலித் பெண்ணிய செயற்பாட்டாளரான இவர் பெண்கள் மீதான அனைத்து ஓரங்கட்டல்களையும் கண்காணிப்பதற்கான இரண்டாவது தென்னாசிய பெண்கள் மாநாடு கடந்த மே மாதம் இலங்கையில் நடந்தபோது அவர் தலைமை வகிக்கும் ”பெண்களின் குரல்” (Women's veice) இயக்கத்தின் சார்பில் அதில் கலந்துகொண்டிருந்தார். அப்போது பெறப்பட்டது இந்த நேர்காணல். இது சரிநிகரில் வெளிவந்தது.



தலித் அரசியலின் சமகால வடிவத்தைப் பற்றி கூறுங்களேன்.

முன்னர் போலல்லாது இன்று பல்வேறு அரசியல் தலைமைகள் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து செயலளவில் இல்லையென்றாலும் பேசத் தள்ளப்பட் டுள்ளனர். ஏலவே இருக்கின்ற கூலி விவசாயிகளின் இயக்கங்கள், தொழிற்சங்க இயக்கங்கள் ஏன் சில இடங்களில் மாக்சிய இயக்கங்களையும் விட பலமாக வந்து கொண்டிருக்கிறது தலித் இயக்கம். இதற்கான காரணம் தலித் அரசியலானது வெறுமனே சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கமாக செயற்படவில்லை. விதிவிலக்கானவற்றைத் தவிர பெருமளவில் சகல அடக்குமுறைகளையும் எதிர்த்துத்தான் தலித் அரசியல் நிறுவப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தலித் பெண்ணியம் பற்றி பேச நிர்ப்பந்தித்த காரணிகள் என்ன?

தலித்துகளில் அலைவாசிப்பேரான பெண்களின் பிரச்சினைகள் குறித்த விசேட கவனம் கொள்ளப்பட்டு வருவது கடந்த பத்தாண்டு காலமாகத் தான். இதற்கு காரணம் சமூகத்தில் விளிம்பில் இருக்கும், இறுதியாக ஓரங்கட்டப்பட்டவர்கள் என கருதப்படும் தலித்துகளிலும் ஆண் தலித் துகளால் பெண் தலித்துகளை ஒடுக்கப் படுவதை விசேடமாக கருத்திற் கொண்டே தலித் பெண்ணியம் குறித்த கருத்தாக்கம் வளரத் தொடங்கியது. சகல அதிகாரத்துவ நிலைகளின் மீதும் போர் தொடுக்கின்ற தருணத்தில் ஆண் அதிகாரம் மட்டும் தப்பி, தமது அதிகாரத்தின் மீதான கவனத்தை திசை திருப்பி விடுகிறது என்றே சொல்வேன்.

பெண்கள் மீதான ஆணாதிக்க அதிகாரம் என்பது வர்க்க, சாதிய, இனத்துவ அரசியல்களைக் கடந்தது. ஒரு புறம் வர்க்க, சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிற ஆண்கள் சக தலித் பெண்ணின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். தலித் பெண்களைப் பொறுத்தளவில் ஆணாதிக்கம், சாதியம் பொருளாதார, கலாசாரம் என சகல வழிகளிலும் ஒடுக்கப்படுகின்றனர்.

தலித் பெண்கள், ஒரே நேரத்தில் அம்பேத்கார் பொது எதிரியாக சுட்டிக் காட்டிய பார்ப்பனியம் மற்றும் முதலாளித் துவம் என்பவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பெண்ணியப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறையை மறுதலித்து வந்திருக்கிறது என்று கருதுகிறீர்களா?

ஒரு புறம் பெண்கள் என்பதற்காகவே பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவரும் அதே நேரம் இன்னொரு புறம் தலித் பெண்ணாக இருப்பதால் விசேடமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அப்பிரச்சி னைகளை எதிர்த்துப் பேச முடிவதில்லை. மிஞ்சிப் பேசினால் என்னோடு படுத்தவள் தானே என்று பேச்சை அடக்கும் நிலை உள்ளது. இன்று படுத்தால் தான் நாளை வேலை என்கின்ற நிலை பல கிராமங்களில் இன்று நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உயிரியல் ரீதியில் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்றும் பெண்கள் எல்லோரும் பெண்கள் தான் என்றும் பேசுவதெல்லாம் சுத்த அபத்தம். பெண்கள் அமைப்புகளில் கூட நிலவுகின்ற சாதிய ஓரங்கட்டல்களை இங்கு காணலாம்.

தலித் விடுதலைக்கு தலித் பெண்ணின் விடுதலை இன்றியமையாதது என்றா கூறுகிறீர்கள்?

ஆம், எப்படி இன்று இந்திய உபகண்டத்தில் தலித் விடுதலையில்லாமல் புரட்சிகர சமூக மாற்றம் சாத்தியமில்லையோ அதுபோல பெண் விடுதலை பெறாத தலித் விடுதலையும் சாத்தியமில்லை. இந்த வகையில்தான் தலித் விடுதலைக்கு பெண்களின் விடுதலை முன்நிபந்தனை யாகின்றது. அது போல தலித் விடுதலையை உள்ளடக்காத பெண் விடுதலையும் சாத்தியமில்லை எனும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தலித் அரசியல் பற்றிப் பேசுகின்ற சில நட்பு சக்திகள் கூட தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இணைவினை முக்கி யப்படுத்தி செயற்படுகின்ற சந்தர்ப்பங்களில் பெண்களையோ, தலித் பெண்களையோ ஒரு சக்தியாக கருதி அதில் இணைக்காமல் இருப்பது துரதிருஸ்டவசமானது.

தலித் பெண்கள் தனியாக நிறுவனமயப்படுதல் அவசியம் என்கிறீர்களா?

இன்றைய நிலையில் தலித் பெண்களை தலைமையாகக் கொண்ட ஒரு அமைப்பு உருவாவது அவசியம். இன்றைய ஆதிக்க அமைப்புமுறையினால் ஓரங்கட்டப்பட் டவர்களும் இவர்கள் என்பதால் இவர்க ளால் தான் இதனை மாற்றவும் முடியும். எனவே அப்படிப்பட்ட தலைமை தாங்கு தலுக்கு தலித் பெண்களை தயார்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அது சுலபமான விடயமல்ல. அதற்கு சில விலைகளைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இதற்கு எந்த வித சமரசங்களும் செய்துகொள்ளத் தேவையில்லை.

உயர் சாதியினர், உயர் வர்க்கத்தினர் என்போர் எப்படிப்பட்ட ஆணாதிக்க அடக்குமுறையை பிரயோகித்து வருகி ன்றனரோ அதுபோலவே தலித் பெண்கள் மீது தலித் ஆண்கள் பிரயோகித்து வரும் அடக்குமுறை கிஞ்சித்தும் குறைவில்லாத வகையில் நடைமுறையிலிருந்து வருகி ன்றன. எனவே தான் தலித் பெண்கள் தனி யாக அணி திரள வேண்டிய, தனியாக தலைமை வகிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். பெண்களின் பேரம் பேசும் அற்றலைப் பலப்படுத்தவும் இது தான் வழி. அப்படி இருக்கும்பட்சத்தில் தான் பெண்களின் கோரிக்கைகளை வென்றெ டுக்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்தே நாங்கள் தலித் மக்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கத் தொடங்கினோம். அது ஏறத்தாழ 1987 ஆக இருக்கும். அதிலிருந்து 1995 ஆகும் போது நாங்கள் தலித் மக்களின் தேசிய சம்மேளனம் (National Federation of Dalits) என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் கீழ் இந்தியா தழுவிய தலித் இயக்கங்களை மையப்படுத்தி வருகிறோம்.

கடந்த ஆறு மாதங்களாக தேசிய அளவில் பல பாசறைகளை நடத்தி இருக்கிறோம். அதன் மூலம் தேசிய செயற் திட்டம் ஒன்றையும் வரைந்துள்ளோம். தலித் பெண்களின் விஞ்ஞாபனம் ஒன்றையும் வரைந்துள்ளோம். முதலில் 5 வருடத் திட்டம் ஒன்றைத் தொடக்கியுள்ளோம். இயக்கத்தில் பெண்களை தலைமைத் துவப்படுத்துவது. ஏனைய இயக்கங் களுடன் ஒன்று சேர்ந்து வேலை செய்வது எந்த அடிப்படையில் என்பன போன்ற வற்றில் அக்கறை செலுத்தி வருகிறோம்.

இன்று தலித் மக்களின் பிரச்சினைகளில் கர்நாடகம் தமிழ்நாடு போன்ற மாநிலங் களிலும் நிலப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பஞ்சமி நில மீட்பு விடயத்தை தலித் இயக் கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதில் முகம் கொடுக்கின்ற முக்கிய பிரச்சினை என்னவென்றால் பல தலித் இயக்கங்கள் சாதிவாரியாக பிரிந்து செயற்படுகின்ற போக்கும் இல்லாமல் இல்லை. பறையர், பள்ளர், சக்கிலியர் என சாதிவாரியாக பிரிந்து காணப்படுகின்றனர்.

பெண்களின் பிரச்சினைகளை தலித் பிரச்சினையோடு சேர்த்து விசேட கவனத்துக்குள்ளாக்கியது போல தலித் பிரச்சினையுடன் வர்க்கப் பிரச்சினையை எவ்வாறு ஒன்றிணைத்து செயற்பட்டுகிறீர்கள்?

இன்னமும் பல இடதுசாரி அணிகள் தொழிற்சங்கங்கள் என்பன பெண்கள் பிரச் சினையைக் கூட தனித்த ஒரு பிரச்சினையாக அடையாளம் காணாத சூழ்நிலையில் தலித் மக்களின் பிரச்சினை பற்றிய விடயத்திலும் அது போன்ற நிலை காணப்படுகிறது தான். இன்றும் வர்க்கப் பிரச்சினையின் கீழ் மாக்சீய இயக்கங்களில் அணிதிரண்டிருக்கின்ற அடிமட்ட அங்கத்தவர்களில் பெரும்பான் மையோர் தலித்துகள் தானே. தலித்துகள் அனைவரும் வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இலக்காபவர்கள் தானே. நாங்கள் கூறுவது அந்த சுரண்டலை விட விசேட மான சுரண்டல்களுக்கு தலித்துகள் பலியாக்கப்படுகிறார்கள் என்பதும், தலித்துகளிலும் தலித் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவருகிறார்கள் என்பதையும் தான். பெண்கள் பிரச்சினையையும் பொருளாதாரப் பிரச்சினையாக இனங் கண்டு வந்ததைப்போல தலித் பிரச்சினையும் வர்க்கப் பிரச்சினையோடு மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கிலிருந்து இன்னமும் பல சக்திகள் விடுபடவில்லை. தற்போது சில மாற்றங்கள் தென்பட்டு வருகின்றன. என்றாலும் தலித் பெண்கள் தங்களின் பிரச்சினையை தனித்து அடையாளம் காண்பதைப்போல தலித் ஆண்கள் தலித் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந் ததில்லை. அப்படி எதிர்பார்க்கவும் முடியா திருக்கிறது. அங்கு தான் தலித் பெண்ணி யத்தின் தனித்துவம் தங்கியிருக்கிறது.

தலித் பெண்கள் எவ்வாறு தங்களின் முன்னெடுப்புகளை விரிவுபடுத்தி வருகின்றனர்?

தலித் மக்களின் போராட்டமும் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வெறுமனே தீண்டாமைக்கு எதிராக மட்டும் நிற்கவில்லை. அது போல அம்பேத்கார் சிலையை உடைத்து விட்டார்கள் என்ப தற்காக மட்டும் போராடப் புறப்படு வதில்லை. இன்று தலித் மக்கள் தலித் அரசி யலின் கீழ் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதைத்தான் இன்றைய ஆரோக்கியமான விளைவாகக் காண வேண்டும். இனி நம்பிக்கையுடன் முன்செல்லலாம்.

தலித்துகள் அடிமட்டத்தில் உள்ள, வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இரையாகின்றவர்கள். பெருமளவான தலித்துகள் விசாயிகள். கூலி விவசாயிகள். முன்னர் நிலம் இருந்தது இப்போது நிலம் இல்லை. நிலம் இருப்பவர்களுக்கோ பயிர்ச்செய்கைக்கு மூலதனம் இல்லை. இவர்கள் வங்கிக் கடனும் பெற முடியாத நிலை. தலித்துகள் தங்களின் நிலங்களை மீளப் பெறுவதற்கான போராட்டங்கள் எழுந்து வருகின்றன. காலனித்துவ காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் - இதனை விற்பது என தீர்மானிக்கும் பட்சத்தில் அது இன்னொரு தலித்துக்கு தான் விற்கப்பட வேண்டு மென்பது சட்டம். ஆனால் நிலச்சுவாந் தர்கள் பலர் இவர்களிடமிருந்து கபடத் தனமாக அந்நிலங்களைப் பறித்து பினாமி பெயர்களில் வைத்துக் கொண்டிருக் கின்றனர். தற்போது அந்த பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.

இன்று நாடு முழுவதும் தலித் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். இன்று அவர்களின் செயலில், சிந்திப்பில் மாற்றம் காணத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் அண்மையில் மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்காரின் பெயரை வைக்குமாறு அங்குள்ள தலித்துகள் கோரினார்கள். போராடினார்கள். அதன் போது மக்களை அடித்து துன்புறுத்தி, சொத்துக்களை நாசமாக்கி, துப்பாக்கிச் சூடு பிரயோகித்து அடக்கினார்கள். ஆனால் அதற்காக அது போன்ற போராட்டங்கள் நின்று விடவில்லை. நின்றுவிடப்போவ துமில்லை. ஒரு புறம் தீணடாமைக் கொடுமை, இன்னொருபுறம் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி, சுகாதாரப் பிரச்சினைகள், அரசின் எந்தவித நிர்வாகமும் இவர்களைச் சேராத நிலை இப்படிப்பட்ட நிலையில் தலித் மக்கள் சூனியத்துக்குள் வாழ்ந்து வருகிறார்கள். பீகாரில் சமீபத்தில் 22 தலித்துகளை ஒரே ராத்திரியில் வெட்டிக்கொன்றனர். இன்று பீகாரில் தலித் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத் துள்ளது. பிகாரின் நிலைமை தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்துக்கு தலித்துக் களைத் தள்ளிவிட்டுள்ளது. தலித் பெண்கள் பலர் இரகசிய தலித் அரசியல் இயக்கங்களில் இணைந்து துப்பாக்கிகளை கையிலெடுத்துள்ளனர்.

அரசியல் சக்திகளை நிர்ப்பந்தப்படுத்துகின்ற பலத்தைக் கொண்டிருக்கிறீர்களா? பேரம் பேசும் ஆற்றலை பொருட்படுத்தும் நிலை எப்படி இருக்கிறது?

இன்றைய தலித் விஞ்ஞாபனம் இனி வரும் தேர்தல்களில் தேசிய அளவில் கட்சிகளிடம் முன்வைக்கப்படப்போகும் கோரிக்கையாக அமையப்போகிறது. தலித் மக்களை நிறுவனமயப்படுத்தி வருகின்ற இந்த நிலையில் இப்படிப்பட்ட அழுத்தங்கள் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் இவற்றின் விளைவுகளை உடனடியாக எதிர்பாhக்க முடியாது.

தலித் பெண்களின் கோரிக்கைகள் இப்படிப்பட்ட பாராளுமன்ற அரசியலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன?

முன்னர் குறிப்பிட்ட தலித் தேசிய விஞ்ஞாபனத்தில் தலித் பெண்கள் குறித்த கோரிக்கைகளும் அடங்குகின்றன. இனி பேச்சுவார்த்தைகளுக்கு களம் அமைக்க வேண்டியேற்படப் போகிறது. தேர்தல் அரசியலில் 25 கோடி தலித் மக்களின் வாக்குகளானது அவர்களின் கோரிக் கைகளை கருத்திற் கொள்ளச் செய்யப் போகிறது. ஆனால் இதனை பெரிதாக எதிர்பார்க்கத் தேவையில்லை. எமது இலக்கில் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைக்கிறோம் அவ்வளவு தான்.

இலங்கைப் பயணம்: தேவதாசன் நேர்காணல்

பிரான்சிலுள்ள இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னனியின் தலைவர் தேவதாசன் அவர்கள் அண்மையில் இலங்கை சென்று வந்தார். அச்செய்தியறிந்து ‘மற்றது’ சஞ்சிகையின் ஆசிரியர் கற்சுறா அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டவை.
கற்சுறா:- தங்களது இலங்கைப் பயணத்திற்கான அடிப்படை நோக்கம் என்னவாக இருந்தது? எவ்வளவு காலம் அங்கிருந்ததீதீர்கள்?
தேவதாசன்: மே பதினெட்டு 2009க்கு பின்பான இலங்கை அரசியல் சூழல் எவ்வாறு உள்ளது என்பதை அவதானிக்கவும். முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் முடிவிற்குப்பின்னாலான தமிழ் மக்களின் மனோ நிலையை தெரிந்து கொள்ளவும், குறிப்பாக தலித் சமூக மக்களின் வாழ்வியல் சூழல், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக அழுத்தங்களை அறிவதே எனது பிரயாணத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. ஒரு மாத கால குறுகிய அவகாசமாகவே எனது பிரயாணம் அமைந்தது. மேலும் கணிசமான பணிகளை மேற்கொள்வதற்கு குறைந்தது மூன்று மாதங்களாவது தங்கியிருக்க வேண்டும்.

கற்சுறா: வன்னி மக்களை இலங்கை அரசு அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களாலும், ஜனநாயக முற்போக்கு சக்திகள் என தங்களை அடையாளப் படுத்துபவர்களாலும் முன்வைக்கப்படும் அரச எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து என்ன கூறுகிறீர்கள்? உங்கள் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி அந்த அகதி மக்களுக்கு உதவும் திட்டம் ஏதும் கொண்டிருந்ததா?
தேவதாசன்: நீங்கள் குறிப்பிடும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் பற்றியோ, அரச எதிர்ப்பு பிரச்சார ஊடகங்கள் பற்றியோ அபிப்பிராயம் கூறுவது எனக்கு அவசியமாகப் படவில்லை. முப்பது வருட காலமாக யுத்தம், கொலை, மிரட்டல், அச்சம் போன்ற சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் என்பது இவாகளுக்கு மே 18 2009 இற்கு பிறகு மறந்துபோன நிகழ்வாகத்தான் இருக்கிறது. அந்த மக்களின் இன்றைய அவசியமான தேவைகளின் கருணையில் இருந்து பிறக்க வேண்டும் கேள்விகள் என்று நான் நினைக்கின்றேன். நான் அங்குபோன பிற்பாடும், அங்குள்ள மக்களுடன் உரையாடியதன் பிற்பாடும் தான் புரிகிறது. எம்மத்தியில் அதிகமாக நடைபெறுவது ‘திண்ணைப் பேச்சு’ என்பதாக.

அகதி முகாம்களில் உள்ளவர்கள் பற்றி கூறுவதானால் நான் இலங்கை சென்ற காலத்திலேயே இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டார்கள். யாழ்ப்பாணத்துக் குடாநாட்டை நோக்கி அனுப்பப்பட்டவர்களில் பலருக்கு யாழ்ப்பாணம் புதியதொரு பிரதேசமாகவே இருக்கிறது. தமது தலைமுறையினர் அப்பகுதியில் பிறந்தவர்கள் என்ற காரணம் அறியப்பட்டதாலேயே யாழ்ப்பாணம் நோக்கி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். மீதி இருக்கக் கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் மலையக மக்களாகும். அவர்களால் மலையகத்துக்கு திரும்பமுடியால் உள்ளது. அவர்கள் வாழ்ந்த வன்னிப்பிராந்தியத்தில் கண்ணி வெடிகள் அகற்ற தாமதிப்பதால் அம்மக்கள் முகாம்களில் முடங்கிப் போயுள்ளனர்.

வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பலரிடம் என்னால் உரையாடக்கூடியதாக இருந்தது. அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்களை விபரிப்பதானால் ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். ஆனாலும் அவர்களிடம் மறுவாழ்விற்கான அத்தியாவசியமான பணம், பொருட்கள் என்பன கணிசமாக கிடைத்து வருகின்றதையும் காணக்கூடியதாக இருந்தது. சர்வதேச நிறுவனங்களும், அரசும், மற்றும் சமூக அக்கறையாளர்களாலும் மேற்படி உதவிகள் கிடைத்து வருகிறது. வன்னி தவிர வடபகுதியில் சொந்தமான வாழ்விடங்கள் இல்லாததன் காரணத்தால் பலர் தமது உறவனர்களுடனும். அரசினால் உருவாக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களிலும் வாழ்கின்றனர். அரச நிறுவனங்களின் பணியாளர்கள் வன்னிக்கு விரைவாக சென்று தமது பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொளள்ப்பட்டுள்ளனர். ஆனால் சாதாரண மக்களோ மீண்டும் வன்னியில் யுத்தம் ஏற்பட்டுவிடுமோ என்னும் அச்சம் காரணமாக அங்கு செல்வதற்கு அவர்கள் தயங்குவதையும் என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

வன்னி அகதி மக்களுக்காக எமது தலித் சமூக மேம்பாட்டு முண்ணனியின் ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட சிறதொகையை நான் கொண்டு சென்றேன். அவ்வுதவியை வன்னி அகதி மக்களுக்கு என்னால் பயன்படுத்த முடியவில்லை. யாழ்நகரிலுள்ள ‘திருநகர்’ எனும் ஊரிலுள்ள சென் சாள்ஸ் எனும் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கான சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக அத்தொகையை நான் பயன் படுத்தவேண்டி ஏற்பட்டது. காரணம் அப்பாடசாலையில் மிக வறுமைப்பட்ட தலித் மாணவர்கள் கல்வி கற்பதோடு, அக்கல்லூரியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதையும் என்னால் நேரில் காணக்கூடியதாகவும் இருந்தது. அங்கு மதிய உணவு வழங்கப்படும்போது ஒரு சிறுமி தனக்கு கிடைத்த இரண்டு கவள உணவையும் தான் சாப்பிடாது பத்திரப்படுத்தி தனது பையுக்குள் வைப்பதைப்பார்த்து நான் கேட்டேன் ஏன் நீங்கள் சாப்பிடவில்லையா என்று. அதற்கு அந்தச் சிறுமி அம்மா வேலையால் வந்து சமைக்க நேரம் செல்லும் அது தான் நான் தங்கச்சிக்கு கொஞ்சம் கொண்டு போறேன் எனக் கூறியது. அப்படி மிக வறுமையிலுள்ளவர்களே அப்பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள்.

கற்சுறா: நீங்கள் முன்நாள் தலித்போராளிகள் யாரையாவது சந்தித்தீர்களா? அவர்கள் யார்? இருப்பின் அவர்களது யுத்தகால அனுபவங்களும், சமூகம் சார்ந்த மனநிலையும் எவ்வாறுள்ளது?

தேவதாசன்: ஆம் தலித் போராளிகள் பலரை சந்தித்தேன். அவர்களில் படைப்பாளி தெணியான், மற்றும் இராஜேந்திரன், அன்ரனி மாஸ்டர் போன்ற முன்னோடிகளையும் சந்தித்தேன். அவர்களை சந்திப்பதும், அவர்களுடன் உரையாடுவதும் எனது பயணத்தின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது. சாதிய விடுதலைப் போராட்டத்தில் எதிர்கொண்ட பல அனுபவங்களை அவர்களுடனான உரையாடல் மூலமாக அறிந்துகொண்டேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஆயுதப்போராட்டமாக மாறிய பின் போராளிக்குழுக்களின், குறிப்பாக விடுதலைப் புலிகள் சாதிய விடுதலை இயக்கங்களை தடை செய்த பின்னர் பல சாதிய விடுதலைப் போராளிகள் வாய் மூடி மௌனமாக்கப்பட்டதாகவும், அவர்களில் பலர் கிழக்கு மாகாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் மறைந்திருந்ததாகவும் தெரிவித்தனர். தமக்கான தலைமை ஒன்று இல்லையே என்பதும், தாம் தொடர்ந்தும் அனாதைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றோம் என்ற ஆதங்கமும் அவர்களிடத்தில் மேலோங்கியிருப்பதை காணக்கூடியதாக இருந்தது. மேலும் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை வெகுஜன இயக்கம் போன்ற அமைப்புகளின் அவசியம் இன்றும் உணரப்படுகின்றது.

கற்சுறா: யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் ஊடகங்களை நீங்கள் அணுகும் வாய்ப்பிருந்ததா? யுத்தத்திற்கும் புலிகள் அழிவிற்கும் பிற்பாடு அங்குள்ள பத்திரிகைகளின் அடிப்படை சார்பு நிலை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

தேவதாசன்: யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் என்பது உயர் சாதியினரின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் நிறுவனமாகவே இயங்கி வருகிறது. அதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். கடந்த 13-12-2009 இல் இருந்து சிறுபான்மைத் தமிழர் மகாசபை தனது சமூகப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது என்பதான அறிக்கை ஒன்றை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சகல பத்திரிகைகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தும் அது பற்றிய செய்தியை அவர்கள் இதுவரை வெளியிடவில்லை. தெங்குப் பனம்பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கம் கடந்த 12-12-2009 இல் மாபெரும் எழுச்சி மாநாடொன்றை நடாத்தியது. அம்மாநாட்டில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தமது தேவைகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தினர். இம்மாநாட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர் என பல ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விடயத்திற்கு எந்தப்பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அன்று புலிகளின் தேசியத்திற்கு புகழ் பாடியவர்கள் இன்று சேர்.பொன். இராமநாதனதும், ஆறுமுநாவலரதும் சைவத்தையும், தமிழையும் போற்றிப் புகழ்பாடி தமது பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பி வருகின்றார்கள். சார்பு நிலை என்பது பற்றி கேட்டீர்கள் நான் முன்னர் குறிப்பிட்டது போல் யாழ் மேலாதிக்கத்தின் மன நிலையிலிருந்துதான் பத்திரிகைகள் செயல்படுகின்றது. வெளிப்படையாகவே சொல்வதென்றால் அனைத்துப் பத்திரிகைகளும் சாதி காப்பாற்றும் பத்திரிகைகளாகவே உள்ளது.

கற்சுறா: « இத்தனை ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக தமிழர்களை அவர்களுடைய எதிரிகளிடம் கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. கோட்டையிலும், பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற இராணுவத்தை எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்…கடிநாயாக இருந்தாலும் அவர்கள் (புலிகள்) காவல் நாயாக இருந்தவர்கள் » என்பதாக தொடர்ச்சியான தமிழ்-சிங்கள இனவாதத்தை வலுப்படுத்திப் பேணும் வகையிலும், தமிழ்த் தேசிய மனநிலை கொண்டதுமான கட்டுரை ஒன்றை (நிலாந்தன் என்பவர் எழுதியது) பல புகலிடப் புலி எதிர்ப்பாளர்கள் தமது தோள்களில் காவித்திரிகின்றனர் (இணையங்களில் மீழ் பிரசுரிப்பு) உங்கள் யாழ் பயண அனுபவத்தில் அங்குள்ள மக்கள் தாங்கள் தோற்று விட்டதாகவும். தமிழ்த் தேசிய விடுதலையின் அவசியம் கருதுபவர்களாகவும்; இருக்கிறார்களா?

தேவதாசன்: சிரிக்கிறதா…அழுகிறதா…தெரியவில்லை. புலிகள் கடி நாயாகவும், காவல் நாயகவும் இருந்ததென்பதென்னவோ உண்மைதான். அது எந்தவகையிலென்றால் வடக்கு கிழக்குக்கு வெளியில் இருந்த தமிழர்களுக்குத்தான் புலிகள் கடி நாயாகவும், காவல் நாயாகவும் இருந்துள்ளார்கள். கொழும்பில் இருக்கக்கூடிய சிலர் கருதினார்கள் புலிகள் இருப்பதினால் தான் கொழும்பில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும். புலிகள் இல்லை என்றால் தாங்கள் சிங்கள அரசாலும் சிங்கள காடையர்களாலம் அழிக்கப்பட்டிருப்போம் என்றும்.
அத்தோடு புகலிடப் பெரும்பான்மை தமிழ்த் தேசிய பற்றாளர்களின் வளமான-பாதுகாப்பான இருப்புக்கும் வசதிகளுக்கும் புலிகள் கடி நாயகவும், காவல் நாயாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் வடக்குக்-கிழக்கு வாழ் மக்களைப் பொறுத்தவரை அரசபடைகளையும் , புலிகளையும் ‘கடி நாயாக’ மட்டுமே பார்த்தார்கள். அங்கு வாழ் மக்களிடம் தாம் தோற்று விட்டதாகவோ, தமிழ் தேசிய விடுதலை என்பது அவசியம் என்ற கருத்தோ நிலவுவதைக் காணமுடியாதுள்ளது. மாறாக தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற கருத்தே அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.

கற்சுறா: மகிந்த அரசு மீதான விமர்சனங்களையும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுயநிர்ணயம் என்றெல்லாம் பேசப்படுவதையும் நீங்கள் எப்படி எதிர்கொள்கின்றீர்கள்?

தேவதாசன்: முதலில் ஒருவிடயத்தில் நாம் கவனமாக செயல்படவேண்டும். அதாவது எதிர்காலத்தில் எந்தவகையிலும் இனவாத உணர்வுகள் பரவாத வகையில் எமது செயல்பாடுகள் அமையவேண்டும். எந்தத் தலைவர்களையும, எந்தக் கருத்தியலையும் நாம் தொடர்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கமுடியாது. எமது சமூகம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்ட சமூகமாக இருக்கிறது. குறிப்பாக எம்மத்தியில் நிலவும் சாதிய ஒடுக்கு முறைகளின் அடிப்படைக்காரணிகளை கண்டறிவதில் எமது கல்விமான்களில் கூட பல குறைபாடுகள் நிலவுகின்றது. அதையெல்லாம் நாம் தொடர்ச்சியாக பேசி உரையாடவேண்டியிருக்கிறது. பல வருடகாலத்தையும், பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், உடைமைகளையும் இழந்து புலிகள் எமது சமூகத்தை என்ன நிலையில் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பல்வேறு சமூக-சிந்தனை வளர்ச்சிக்கு தடையாக இருந்தது புலிகள். அந்த நிலை இன்று மாறியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் மகிந்த ராஜபக்ச என்பதுதானே உண்மை.

இலங்கையில் வாழும் மற்ற இனங்கள் சிங்கள மக்கள் உட்பட, எல்லாவித நிறைவுடனும் வாழ்கின்றார்கள் என்று கூறிவிட முடியாது. கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகளானது தமிழ் பேசும் மக்களின் அனைத்துப்பிரிவினரின் நலன்களின் அடிப்படையில் தமது அரசியலை முன்னெடுத்தவர்களல்ல. தமது மேட்டுக்குடி நலன்கள் சார்ந்த அரசியலையே அவர்கள் முன்னெடுத்தவர்கள். அவர்களின் அதே அரசியல் நிலைப்பாட்டில் தீவிரம் போதாது என்ற குறைபாட்டின் அடிப்படையில்தான் பிற்பாடு இளைஞர்கள் அவர்களது அரசியலை ஆயுங்களுடன் இணைத்து மேற்கொண்டார்கள். முன்னைய தலைமைகள் மேற்கொண்ட அரசியல் சிந்தனைப் போக்கை இளைஞர்கள் கண்டறிய முற்படவில்லை.

இருப்பினும் இடையில் பல்வேறு இயக்கங்கள் சர்வதேச முற்போக்கு இடதுசாரி கருத்தியலைப் பயின்று இலங்கையிலுள்ள அனைத்து ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலையைக் கருத்தில் கொண்டும் தமது செயல்பாடுகளை மேற்கொண்டார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக புலிகளின் அராஜக நடவடிக்கைகளால் அவர்கள் அப்பணிகளை தொடர்ந்து பேணமுடியாத சூழல் நிலவியது.
இறுதியில் புலிகள் அழியும் வரை குறந்தபட்சம் பல்வேறு கருத்துக்களையும் பேசுவதற்கான ஒரு ஜனநாயகச் சூழல் எமது பிரதேசங்களில் ஏற்படவேண்டும் என்பதே அடிப்படைத் தேவையாக இருந்தது. இந்த இடைப்பட்ட காலங்களில்தான் நாம் எமது அரசியல் சமூக வராலுறுகளை சீர்தூக்கிப் பார்க்க முற்பட்டோம். எமது இதுவரை கால அரசில் வரலாற்றுச்சாதனை என்ன என்பதை நாம் நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எமது இதுவரை கால அரசியல் சாதனை என்பது தமிழ் மக்களை இனவாதக் கருத்தியலுக்குள் பேணிப் பாதுகாத்துக் கொண்டதேயாகும்.

இவ்வாறான போக்கு வருங்காலங்களில் தவிர்க்கப்படவேண்டும். எனவே மகிந்த அரசு, தமிழ் மக்கள் பிரச்சனை என்கின்றபோது தமிழ் என்கின்ற அடையாளத்தை நாம் முற்றாக தவிர்க்க எண்ணுகின்றோம். கிழக்கைப்போல் வடக்கிலும் மாகாண அதிகாரங்கள் பெறப்படவேண்டும். கிழக்கில் மாகாண அரசு நிறுவப்பட்டபோதும் அதிகாரங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் மகிந்த அரசு தட்டிக்கழித்து வருவதையும் நாம் காண்கின்றோம். எனவே மாகாணங்களுக்கான நிறைவான அதிகாரங்களை நாம் பெற்றுக்கொள்ள போராடுவதும். அதேபோல் இலங்கையில் வாழும் அனைத்துச் சிறுபான்மை இனங்களும் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். குறிப்பாக மலையக மக்களுக்கு நாம் இளைத்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தம் தேடியாகவேண்டும். இவ்வாறாகத்தான் எமது அரசிற்கு எதிரான போராட்டங்கள் அமையும். இதனூடாக தழ்பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டடையமுடியும் என நம்புகின்றோம்.

கற்சுறா: இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்ட பிற்பாடு பல்வேறு புலி எதிர்ப்பாளர்கள் இலங்கை சென்று வரும் வாய்ப்புகள் நிலவுகிறது. அந்த வகையில் இந்தியாவிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் பல புலி எதிர்ப்பாளர்கள், ஜனநாயகத்தை வலியுறுத்திப் பேசி வருபவர்கள் இலங்கை சென்று வந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் மிகவும் ஆவேசம் கொள்கின்றனர். புலிகள் எவ்வாறான ஜனநாயக மறுப்பைக் கடைப்பிடித்து வந்தார்களோ அதற்கு நிகரான ஒடுக்குமுறைகளை இலங்கை அரசு தனது இராணுவத்தின் மூலமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ஒரு புகலிட ஜனநாயகப் பற்றாளர் பி.பி.சி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார் இவ்வாறு. « .”You need to wait at least three hours to board the plane. And all the buses only leave once a day, so that security officials could check the buses at once and relax for the rest of the day,” Mr Kumar says.”The biggest mistake of the Tamil Tigers was not to allow any other Tamil voice to operate in their territory.”But the irony is that the government is now behaving in the same way as the Tamil Tigers, and I could not see any attempt at reconciliation or to create a vibrant democratic society in Jaffna,” he said ».‘’தம்மை இரணுவம் விமானம் ஏற மூன்று மணிநேரம் காக்கவைத்துவிட்டது. புலிகளின் மிகப்பெரிய தவறு மாற்றுக்குரல்களுக்கு அவர்கள் விதித்த தடை உத்தரவாகும். ராஜபக்ச அரசாங்கமும் அதே பாணியில் தான் நடந்து கொள்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு ஜனநாயக சமூகம் தோன்ற முடியாதவாறு அரசாங்கம் நடந்து கொள்கின்றது.’’ இவ்வாறு மேற்படி பேட்டிகளும் கொடுத்துவருகிறார்கள். அதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

தேவதாசன்: இலங்கையில் என்ன உலகத்தில் எங்கையுமே நாம் எதிர் பார்க்கும், உண்மை சொல்லப் போனால் நாம் கனவு காணும் நிறைவான, திருப்திகரமான ‘ஜனநாயகம்’ ஒன்று கிடைக்கப் போறதில்லை. ஆனால் இலங்கையில் இன்று பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயம் இன்றி நடமாடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த சூழலை நாம் பயன்படுத்தி வளர்த்தெடுக்கவேண்டும்.

விமான நிலையத்தில் மூன்று மணித்தியாலம் தாமதிப்பதென்பது ஜனநாயக மறுப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது இன்று ஒரு நிர்வாகப் பிரச்சனையாக உள்ளது. அது இலங்கைக்கானது மட்டுமல்ல. விமான நிலையத்தில் தாமதிப்பதென்பது இன்று உலகப் பிரச்சனையாக உள்ளது. அதற்கு நான் பெரிதாக விளக்கம் தரத்தேவையில்லை. ஐரோப்பாவில் உள்ள ஜனநாயகத்தையும், முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த இலங்கையில் இருக்கும் ஜனநாயகத்தையும் பிரித்தறிதலில் தான் சிக்கல் வருகிறது. ஆனாலும் சகலரும் தாம் தாம் விரும்பிய அரசியலை மேற்கொள்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. புலிகளின் யுத்தத்தையும், கொலைகளையும் அரசியலையம் நியாயப்படுத்தி வாக்காளத்து வாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று யாழ்ப்பாணத்தில் கூட்டங்கள் நடத்துகின்றது. தமது வழமையான அரசியலைச் செய்கின்றது. இது வந்து ஒரு ஆரோக்கியமான சூழலாகத்தான் நான் பார்க்கின்றேன். எமக்கு தமிழ்த் தேசிக் கூட்டணியோடு கோபமும், வெறுப்பும், அவர்களது அரசியலோட உடன்பாடும் இல்லாது போனாலும் கூட அவர்கள் இன்று சுதந்திரமாக அரசியல் செய்வதென்பது ஒரு ஜனநாயக அம்சமாகத் தான் நான் கருதுகின்றேன்.

கற்சுறா: ஈழத்துத் தமிழ் சமூகம் கடந்த 30 வருடமாக கொடிய யுத்தத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்ட்டது. 60களில் எழுந்த சமூகவிடுதலை சாதிய விடுதலை போராட்டங்களெல்லாம் 80களில் எழுந்த தேசியவிடுதலை போராட்டத்திற்குள் முடங்கியது வரலாறு. இன்று இத்தனை அழிவுகளுக்குப்பின்னால் ஈழத்தில் சாதிய சிந்தனை எப்படியிருக்கிறது. ஆரம்பகாலங்களில் இருந்ததுபோல் இருக்கிறதா? அல்லது வீரியம் குன்றியிருக்கிறதா?

தேவதாசன்: முதலில் நாம் எமது சமூக விடுதலை குறித்துப் பேசுவதானால் அது அரசியல் பொருளாதார அடிப்படையில் இருந்து நோக்குவதற்கு முன்பாக எமது சமூகம் ஒரு சாதிய சமூகம் எனும் புரிதலில் இருந்து நோக்கவேண்டும். எமக்கிடையிலான பிளவுகளும், உறவுகளும் சாதிய உணர்வுகளால் பேணப்பட்டு வருகிறது. நாம் சிங்கள அரசுடன் போராடி எமக்கு அரசியல் விடுதலையையோ, பொருளாதார விடுதலையையோ நாம் பெற்றுவிடுது இலகுவாக இருக்கும். ஆனால் நாம் மேற்கொண்ட சமூக விடுதலைக்கான முயற்சிகள் 70 பிற்பகுதியுடன் தடுக்கப்பட்டுள்ளது. எமது சமூகமே சாதிய சமூகமாக இயங்கும் நிலையில் சாதிய சிந்தனையில் வீரியம் குன்றியிருக்கின்றதா? கூடியிருக்கின்றதா எனும் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்.

கற்சுறா: ஈழத்தில் வடக்குக் கிழக்கு பிரிந்தபின் கிழக்கு மாகாணம் தனித்த நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டுவருகிறது. வடக்கிலும் புதிய நிர்வாகம் செயற்படத்தொடங்கி அபிவிருத்திகள் பலதரப்பாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கிளிநொச்சி முல்லை போன்ற வன்னி மாவட்டங்களது எதிர்காலம் யார் கையில்? கொடியயுத்தம் அழித்த தடையத்திலிருந்து அந்த மக்களை மீட்க யார் கைகொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அந்த மக்களை இன்னுமொருதரம் தமது அரசியலுக்காக யாரும் பயன்படுத்த முனைவார்களா? ஈழத்து தள நிலவரம் நீங்கள் பார்த்தளவில் எப்படியிருக்கிறது?

தேவதாசன்: யாழ் மேலாதிக்கத்தின் விளைவாகவும், புறக்கணிப்புகளாலுமே கிழக்கு மக்கள் தமக்கான அரசியலை தாமே நிர்வகிப்பதற்கு முன்வந்தார்கள். கிழக்கு நிர்வாகம் அவர்கள் கைக்கு போய்விட்டது. அதேபோல் வன்னி மாவட்டமும் பின்தள்ளப்பட்டு புறக்கணிக்கப்படுமானால் வன்னி மக்கள் எதிர்காலம் அவர்கள் கைக்குத் தான் போக வேண்டும்.அதற்கு பிரிந்து போவதென்பது அர்த்தமல்ல. அங்குள்ள மக்கள் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். வன்னி மக்கள் நந்திக் கடல் ஏரியில் தத்தளித்தபோது கைகொடுத்து மீட்டதும் அரசுதான். இன்றும் அவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்து கைகொடுப்பதும் அரசுதான். யாருடைய அரசியலுக்கும் பயன்படாது இருக்க வன்னி மக்கள் தான் எதிர்காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஈழத்து தள நிலவரம் என்பது தற்போது பல்வேறு தளங்களிலும் ஜனநாயகப் பணிகள் புரிவதற்கு சாதகமாகவே உள்ளது.

என்.சரவணனின் தீபம் பேட்டி

தீபம் தொலைக்காட்சிக்கு என்.சரவணன் வழங்கிய செவ்வி.

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



பகுதி 4



பகுதி 5

சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல் மற்றும் சுகனின் விமர்சனம்.


சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் தேசம்நெட் கண்ட நேர்காணல் கைநூலாக தேசம் நெட் வெளியிட்டிருக்கிறது. அந்த நேர்காணல் நன்றியுடன் இங்கு வெளியிடுவதுடன், சுகன் அனுப்பி வைத்த விமர்சனமும் கீழே இடம்பெறுகின்றது.


இக்கைநூலின் மின்நூலினை நூலகத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.




நூல் விமர்சனம்: சுகன்

“சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்”.


-த.ஜெயபாலன்
‘தேசம்’ வெளியீடு, பக்கங்கள்: 40

நான் பிறந்தது வண்ணார் சமூகத்தில்” என்று அய்ம்பது ஆண்டுகளைக் கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் தலைவர் கூறுவதிலிருந்து தொடங்குகிறது இச் சிறு கைநூல்.


சிங்கள பவுத்த சமூகத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆர். பிரேமதாஸ நாட்டின் அதிபராய் வரமுடியும். தமிழ் இந்து சமூகத்தில் ‘ஒரு வண்ணான்’ தமிழ் அரசியற் கட்சியினது தலைவராக வர முடியுமா? ஒரு பள்ளிக் கூடத்தின் அதிபராகக் கூட வரமுடியாது என்று கூறுகிறார் தோழர் செந்தில்வேல்: “இன்றுவரை சிறீ சோமஸ்கந்த கல்லூரியில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்தான் கற்பிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நாசூக்காகச் சமாதான காலத்திலை சென்று மேல் மட்டங்களிலை அலுவல் பார்த்து இருக்கிறார்கள். 75 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிற ஒரு பாடசாலையில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட ஆசிரியர், அவரும் தன்னை மறைச்சு அப்படி இப்படி என்று இருக்கிறார். இப்படிக் கன பாடசாலைகளில் அதிபராக வர முடியாது.”


இலங்கை அரசியல் நெருக்கடிக்கான தீர்வுகளையும், வழிமுறைகளையும், தேடல்களையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிற அய்ரோப்பிய புகலிட சூழலில் தலித்துகள் ஆட்சி செய்யும் இனமாக மாறுதல், வெள்ளாளர்களை அதிகாரத்திலிருந்து அகற்றுதல் போன்ற செயற்திட்டங்களை விவாதப் பொருளாக்கி வருவதும் தலித் மாநாடுகளின் பின்னணியுமான பகைப்புலத்தில் இச் சிறு கைநூல் வெளிவந்துள்ளது.
தலித்துகள் அரசியல் அதிகாரங்களை எப்படிக் கைப்பற்ற முடியும்? ஆட்சி செய்யும் இனமாக எப்படி மாற முடியும்? வெள்ளாளர்களை அதிகாரத்திலிருந்து எப்படி அகற்றவது? போன்ற மிக அடிப்படையான கேள்விகளைத் தவிர்த்து ஏதோ ஒரு இடத்தில் ஏற்பட்ட ‘சாதிக் கலவரத்தை’ எப்படிச் சமாதானப்படுத்தலாம் என்ற மனோபாவமே கேட்கப்பட்ட 50ற்குட்பட்ட கேள்விகளிலும் தொக்கி நிற்கிறது.
உதாரணத்திற்கு பக்கம்: 36ல் “இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தலித்தியம் என்ற கோசம் அதே கருத்தாக்கத்துடன் இலங்கையிலும் பயன்படுத்தப்படுகிறதே?” என்ற உள்குத்துக் கேள்வி. ‘கோபுரம் அக்மார்க் மஞ்சள் தூள்’, ‘கோபால் பற்பொடி’ மாதிரி தலித்தியம் என்ற கோசம் வட்டுக்கோட்டைச் சந்தியிலுள்ள பெட்டிக்கடையில் விற்கப்படுவதாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கேட்பவரும் பதில் சொல்பவரும் விவாதிக்கின்றனர்.
தலித்தியம் என்ற தனித்துவத்திற்கு நிறையவே விளக்கமளித்தாயிற்று. ‘தலித்தியக் குறிப்புகள்’ என்று தோழர் சரவணன் சரிநிகரில் காத்திரமான தொடர் எழுதி வந்துள்ளார். தோழர் டொமினிக் ஜீவா ‘தலித்’ இதழுக்கு அளித்த நேர்காணலில் தலித்தியம் குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார். லண்டன் தலித் மாநாட்டில் வாசிக்கப்ட்ட தோழர் ந. இரவீந்திரனின் கட்டுரை தெளிவாகவே இலங்கையில் தலித் அரசியலின் தேவையை முன்னிறுத்துகிறது. கடைசி முட்டாளுக்கும் தலித்தியம் என்பது ‘சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிறவர்களின்’ கூட்டு விழிப்புணர்வு என்று புரிகிறது. சாதித் திமிரில் இப்படியான கேள்விகளைக் கட்டமைத்து உலாவ விட்டவர்களிடம் கைமாற்றாக வாங்கிப் போகுமிடமெல்லாம் இத்துப்போன கேள்விகளை காவிக்கொண்டு திரிவதை நிறுத்துவது தமது மேற்சாதிய உணர்வுகளை மறைப்பதற்கான புத்திசாலித்தனமான வழிகளில் ஒன்று என நாம் தொகுப்பாளருக்குப் பரிந்துரைக்கிறோம்.


பதிலாளர் சொல்கிறார்: “நாங்கள் எங்களுடைய வெளியீடுகளில அந்தச் சொல்லைப் பயன்படுத்துறதில்லை. (பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ?) வேறுசிலர் பயன்படுத்துகிறார்களோ தெரியாது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் இருக்கு. ஆனால் இவை சொல்லிற அர்த்தத்தில தலித் என்று வியாக்கயானம் கொடுத்து அதுக்கு ஒரு கொள்கை கோட்பாடு வரையறை கொடுப்பது எதுவுமே அங்கு இல்லை”. ( அங்கு என்னதான் இருக்கு தோழர் இயனக் கூட்டையும், ஏறுபட்டி தளநாரையும், பறையையும் தவிர.) ஒரே ஒரு விதிவிலக்கு நடந்திருக்கிறது. ஒரு இழவு வீட்டிற்கு ‘பறைமேளம்’ பிடிக்கப்போய் கேட்டிருக்கிறார்கள். “இந்தா கிடக்கு மேளம் எடுத்துக்கொண்டு போய் அடியுங்கோ” என்று சொல்லியிருக்கிறார் நமது பெரியவர்.


“தாழ்த்தப்பட்டவர்கள் மாத்திரம் என்பார்கள் பிறகு முஸ்லீம்களும் அடங்கும் என்பார்கள்.இப்படிச் சொல்லாடல்கள் இருந்துகொண்டு வருகிறது. இவை சொல்லிற அர்தத்தில யாழ்ப்பாணத்துக்கோ வடக்குக் கிழக்கிற்கோ அது பொருந்தக் கூடியதாய் அந்தச் சமூக நிலைமை இல்லை. தாழ்த்ப்பட்ட மக்களுடைய பிரச்சினை இருக்கு. அதற்குத் தனித்தட்டு வியாக்கியானம் கொடுத்து வேற வேற அர்த்ங்கள் கொடுத்து –அதுவொரு பிழைப்புவாதம், வியாபாரம் என்றுதான் நான் சொல்லுவன்” என்கிறார் செந்தில்வேல்.


தலித் அரசியலை எதிர்க்கும் ‘நபர்’கள் சிரித்துச் சிரித்து பிரான்ஸில் அவ்வளவு உற்சாகமாக இவ்வெளியீட்டைக் கொண்டு திரிவதன் நோக்கம் இந்தக் கேள்வியிலும் பதிலிலும் உள்ளோடியிருக்கிறது. இப்படியான ‘இன்விசிபிள் தியேட்டர்’ (Invivible theatre)களின் பின்னாலிருந்து கள்ளக் குரலில் பேசாமல் நேரடியாகவே அரங்கிற்கு வருமாறு அவர்களை நாங்கள் அழைக்கிறோம்.


‘மார்க்ஸியத்தின் பேரால் முட்டாள்தனமாக மட்டுமே பேசுவோம்’ என்று லெனினில் அடித்துச் சத்தியம் பண்ணியிருப்பார் போலிருக்கிறது. அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களை ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்று அணுகாது சாதிரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவர் என்ற உணர்வோடு அணுகியிருந்தால் இப்படியான பதில்கள் கூறவேண்டிய தேவையிருந்திருக்காது.


கடந்த அய்ந்து வருடங்களிற்கு மேலாக 2002ற்கு மேல் வடபகுதியில் தென்மராட்சி, வட்டுக்கோட்டை ( வட்டுக்கோட்ட சாதி மோதல்களுக்கு உடனடித் தீர்வு தேவை என்று தினக்குரலில் ‘கொட்டை எழுத்தில்’ செய்தி வந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.) அராலி, வேலணை என்று நிகழ்ந்துவரும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களும் மட்டக்களப்பில் சிகை அலங்கரிப்பாளர்களுடைய சலூன் கொழுத்தப்படுவதும், சாவீட்டு மேளம் அடிக்க தலித்துகள் வற்புறுத்தப்படுவதும் மறுப்பதும் தலித் அரசியலின் தேவையை வலியுறுத்துகிறதா? தமிழ்த் தேசியத்தின் தேவையை வலியுறுத்துகிறதா? ‘தலித்’ என்பது தமிழ்ச் சொல்லல்ல என்று சொல்பவர்கள் அங்கேயே நின்று கொட்டைவடி குழப்பியைக் குடிக்க வேண்டியதுதான். போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் தைரியமூட்டியும் முன்னின்று செயற்படுவதுதான் ஜனநாயகமும் மார்க்ஸியமும்.


மற்றொரு சுவாரசியமான கேள்விக்கு வருவோம்.


தேசம்: “தேசிய ஒடுக்குமறை நிகழ்கின்ற காலகட்டத்தில் சாதிய ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படியானால் அந்த சாதிய ஒடுக்குமுறைக்கான போராட்டத்தை எந்த அடிப்படையில் கொண்டு செல்வது?”


தோழர் செந்தில்வேல்: “ஒரு எல்லைக்குட்பட்ட அளவில்தான் கொண்டுசெல்ல வேண்டும். போராட்டம் என்ற நிலையைவிட அதனை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரரீதியாகத்தான் கொண்டுசெல்ல வேண்டும். இது தமிழ்த் தேசிய இனத்துடைய ஐக்கியத்திற்கும் நிலைப்பிற்கும் கருத்தியல்ரீதியில் அதை (சாதியத்தை) உடைப்பதற்கான வேலைகளைச் செய்யும்.அதற்கு அப்பால் போராட்டமாக எடுப்பமாக இருந்தால் ஒட்டுமொத்தமாகவே தமிழ்த் தேசிய இனத்திற்கு பாதகமான விடயங்களைத் தோற்றுவிப்பதாகத்தான் முடியும்.”


நமது தோழர் சங்கானை சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் அ.அமிர்தலிங்கம் எடுத்த நிலைப்பாட்டை 40 வருடங்கள் கழித்து எடுத்திருக்கிறார். குறைந்தபட்சம் இவற்றை ஒரு போராட்டமாகக் கூட தோழர் சி.கா. செந்தில்வேல் அவர்கள் இப்போதும் இனியும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஒரு மேற்சாதிக்காரத் தமிழ் அரசியல்வாதியினதும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களினதும் முடிவிற்கு மார்க்ஸயத்தின் பேரால் செந்தில்வேல் வருவதை நமது விதி என்று நொந்துகொள்வதா? சதி என்று நொந்துகொள்வதா? ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ போன்ற தலித் அரசியற் கட்சியினது தேவை இப்படியான சொதப்பல்களிலிருந்தே எழுகிறது.


“கொம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதால் சாதி எதிர்ப்புப் போராட்டம் உத்வேகம் அடைந்தது. நாங்கள் பாராளுமன்றப் பாதையைக் கைவிட்டு புரட்சிகரப் பாதையைத் தெரிவு செய்தவர்கள். அது போராட்டத்திற்கு உந்துதலை அளித்தது” என்ற தோழரின் கூற்று மிகவும் அபத்தமானது (பக்: 4) .


சாதி எதிர்ப்புப் போராட்டம் உத்வேகத்துடன் நடைபெறுவதற்கு கொம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டிருக்க வேண்டுமா என்பது முதலாவது கேள்வி.


தேர்தல்பாதை திருடர்பாதை
புரட்சிப்பாதை மக்கள்பாதை


என்று தலித்துகளிற்குக் கோசத்தைக் கொடுத்துவிட்டு பாராளுமன்றத்திற்கு வெள்ளாளர்கள் போகக் கட்சி உடைந்து போனது கடந்த காலம். கொம்யூனிஸ்ட் கட்சியின் பிளவால் வலதுசாரிகள் அரங்கிற்கு வந்ததும் தலித் மக்கள் உரும்பிராய் போன்ற இடங்களில் கட்சியின் பேரால் மோதிக்கொண்டதும்; சொற்பமாயினும் சிறந்ததாக இருந்த ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ செயலிழந்து போனதும் (கொம்யூனிஸ்ட் கட்சியின் பிளவோடு அது செயலிழந்து போனதாகத் தோழர் கூறுகிறார் பக்:6) பல்வேறு தலித் அமைப்புகள் இயங்க முடியாமற் போனதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிப் பிளவும் ஒரு காரணமாகயிருந்தது என்பதே கடந்த காலம். கட்சியிலிருந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பவுத்ததிற்கு மாறியதைக் குறித்துக் கட்சி எடுத்த நடவடிக்கைகள் (பக்கம்: 15) இன்னும் மிகப்பெரிய அபத்தம்.


நூலின் தலைப்பு “சாதியப் போராட்டம்: சில குறிப்புகள்” உண்மையில் தலைப்பு “சாதி எதிர்ப்புப் போராட்டம்: சில குறிப்புகள்” என்று இருந்திருக்க வேண்டும். இது கவனக்குறைவால் விடப்பட்ட தவறாகத் தெரியவில்லை. பல்லாயிரம் முறை சாதி எதிர்ப்பு என்றும் தீண்டாமை ஒழிப்பு என்றும் பேசியும் எழுதியும் வந்தாயிற்று. சாதி எதிர்ப்பிலுள்ள எதிர்ப்பைத் தவிர்ப்பது திட்டமிட்டு கவனமாகத் தவிர்க்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.


பக்: 39ல் ‘சமூக நீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்று இருக்கிறது. அது ‘சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்’ என்று இருந்திருக்க வேண்டும். ‘எதிர்ப்பு’ வரவேண்டிய இடத்தில் வராமலும் வரக்கூடாத இடத்தில் வந்தும் இருக்கிறது. ‘சமூக அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்றும் வந்திருக்கலாம். திருத்தப்பட்டிருக்க வேண்டிய சொற்பிழையும் பொருட்பிழையும்.


பக்: 5ல் “வெள்ளாளரைப் போல் கரையார சமூகத்தை ஆதிக்க சமூகமாகப் பார்க்க முடியுமா?” என்று கேள்வியாளர் கேட்கிறார். அது ‘கரையார் சமூகம்’ என்றிருந்திருக்க வேண்டும். ‘தமிழர் சமூகம்’ என்பதைப் போல. ‘கரையாரச் சமூகம்’ என்பது ‘கரையாரப் பயல்’, ‘வண்ணாரப் பயல்’ என்ற இழித்துரைப்புடன் தொடர்புபட்டது. தோழர். செந்தில்வேலும் ‘கரையாரச் சமூகத்தை’ என்றே பாவிக்கிறார். தனது சாதியைக் குறிப்பிடும்போது ‘வண்ணார் சமூகத்தில்’ என்று விழிப்புணர்வுடன் கவனமாகவே குறிப்பிடுகிறார். பக்கம் 24ல் ‘தமிழர் சமூகம்’ என்பதை வெள்ளாளர் சமூகமாகவே குறித்துக்காட்டுகிறார்.


மேலும் ‘சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்’ என்று நூலின் தலைப்பிருக்கிறது. 50 வருடங்களாக இடதுசாரி இயக்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலும் இருக்கும் சமூகத்தின் முதற் பிரதிநிதி என்ற வகையில் ஒரு மரியாதையுடன் அவர் பெயரைக் குறித்திருக்கலாம். ‘தோழர். சி.கா. செந்தில்வேல் அவர்களுடன்’ என்றோ வேறுவிதமாகவோ.


தலைவர். அ.அமிர்தலிங்கம் அவர்கள், தந்தை செல்வநாயகம் அவர்கள் என்பதைப்போல முன்னட்டையில் கனம் பண்ணியிருக்கலாம். மேலைத்தேய மரபில் இதற்கு முக்கியத்துவம் குறைவானாலும் நமது மரபில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. தவிர்ப்பது எங்கோ இடிக்கத்தான் செய்கிறது. யாழ் பல்கலைக்கழகத்தில் தோழர் டொமினிக் ஜீவாவிற்கு கௌரவம் மறுக்கப்பட்டதும் ஞாபத்தில் உறுத்துகிறது.


இறுதியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று சதா வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். “வருந்தி அழைத்தாலும் வாராது வாரா! பொருந்துவன போமின்றால் போகா” என்பது அவ்வையார் வாக்கு. வடக்குக் கிழக்கில் தலித்துகளிற்கு ஒரு சர்வதேச சமூகம் இருக்குமென்றால் அது இலங்கை அரசுதான். அது கடந்த காலங்களில் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. தலித் மக்களிடையே கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி பொருளாதாரரீதியில் சற்றேனும் கைதூக்கி விட்டது. தலித் மக்களின் குடியிருப்புகளில் பாடசாலைகளை உருவாக்கியது. அது சாதிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் தேசவழமைச் சட்டங்களையும் பெருமளவில் முடிவுக்குக் கொண்டுவந்தது. மேயர் செல்லன் கந்தையன் அவர்களை துணைமேயர் ரவிராஜ் சாதி சொல்லித் தாக்கியது போன்ற தருணங்களில் புதிய தேசவழமைச் சட்டங்கள் மீண்டு வரத்தான் செய்கின்றன. சர்வதேசச் சமூகத்திற்கு பிரச்சனைகள் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.


எரிக் பிறீட்டின் (1921- 1988) கவிதையுடன் இந்த நூல்விமர்சனத்தை முடிக்க விரும்புகிறேன்:
பொஸ்டனிற்கு ஒரு இறுதிக் கடிதம்
எதற்காக நான் போராடுகிறேன் என்று
எனக்குத் தெரியாதிருக்கிறது என்பதை
நான் அறிவேனாயின்
சிலவேளை
அது அர்த்தமற்றுப் போகலாம் ஆனால்
அர்த்தம் ஒன்று இருக்குமெனில்
என் தொடர்ந்த போராட்டத்தினால் மட்டுமே
அதன் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கலாமென்பது
அப்போது எனக்குத் தெரிய வரக்கூடும்.
எதற்காக நான் போராடுகிறேன் என்று
எனக்கு எதுவுமே தெரியாதிருக்கிறது என்பதை
நான் அறிய விரும்பவில்லையாயின்
என் தொடர்ந்த போராட்டம்
என் அறிய விரும்பாமைக்கு மட்டுமே
அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஆனால் அவ்வாறான போராட்டம்
அதன் அர்த்தம் பற்றிக் கேள்வி எழுப்புவதற்கெதிராகப்
போராடுகிறது.
நான் தொடர்ந்து போராட விரும்பாவிடின்
எனது தொடர்ந்த போராட்டத்தினது
அர்த்தத்தினை
நான் அறியவே முடியாது போகலாம் என்றுதான்
நான் நினைக்கிறேன் என்பதறிவேன்…



/

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்...


டென்மார்க்கிலிருந்து வெளிவரும் இனி சஞ்சிகையில் 2006இல் வெளிவந்த இதழில் வெளிவந்த செவ்வியை நன்றியுடன் மறுபிரசுரிக்கின்றோம்.
என்.சரவணன்

90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியர் குழவில் இணைந்து தனது எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் 1992 தொடக்கம் 8 வருடங்களாக சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை தமிழிலும் சிங்களத்திலும் செய்து வந்த இவர் நடைமுறைச் செயற்பாட்டாளரும் கூட. தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் இவர் நோர்வேயிலிருந்து வெளிவந்த பறை என்கின்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இவரது ஒரு சில நூல்களில், பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும் என்கிற நூல், இலங்கையின் பெண்களின் அரசியல் வரலாறு குறித்து தமிழில் பேசப்படுகின்ற ஒரே வரிவான நூலாக உள்ளது. இலங்கையில் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்தாக்கங்களில் சமீப காலமாக அதிகளவு தேடல்களை செய்துவருபவர்.
புகலிடம் பற்றிய சிந்தனைப் போக்கின் இன்றைய வடிவத்தை எவ்வாறு விளக்குவீர்கள்?

தமிழ்த் தேசப் பிரச்சினை முனைப்பு பெற்று தமிழர்கள் இங்கு உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லாமல் ஆக்கப்பட்டதன் பின்னரும், தமது அடிப்படை உரிமைகளை சொந்த நாட்டில் அனுபவிக்க முடியாமல் ஏற்பட்டதன் காரணமாகவும், 80களில் தமிழர்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அதன் இன்றைய நிலை வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்று புலம்பெயர்ந்துள்ளனர். இன்று தேசியம் பற்றிய பல்வேறு சிந்தனைகளின் போது உலகில் புகலிடம் என்பது தனித்து பார்க்கப்படவேண்டிய கருத்தாக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. உலகில் உள்நாட்டு நெருக்கடி மிகுந்த நாடுகளிலிருந்தெல்லாம் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் திரும்பி தமது தாயகங்களுக்கு திருப்பிப் போகப் போகிறார்கள் என்கிற கேள்வியும் மிகவும் அழுத்தமாக இன்று எழுப்பப்படுகின்றன. பிரச்சினை தீரும் பட்சத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களில் 5 வீதமாவது திரும்பி வருவார்களா என்கிற கேள்வி பலமாகவே இருக்கிறது. இந்த பின்னணியை வைத்துத் தான் புலம்பெயர்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் தனித்துவமான தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள், தேசத்துடனான உறவுகள் எல்லாமே பார்க்கப்பட வேண்டும். எனவே தான் புகலிட இலக்கியங்கள், புகலிட அரசியல், புகலிட சிந்தனைப் போக்குகள் என்றெல்லாம் நவவடிவம் பெறும் தமிழியப் போக்கை காண்கிறோம்.


இவற்றின் விளைவுகளை எவ்வாறு இலக்கியத்தில் காண்கிறீர்கள்?


ஏலவே இலக்கியத்துறை சார்ந்திருந்தவர்களின் படைப்புகள் போக அங்கு போனதன் பின்னர் இலக்கியப் படைப்புருவாக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் பலர். ஆரம்பத்தில் இந்த இலக்கியங்கள் அவர்களது தாயக நினைவுகளை அடியொற்றியதான படைப்புகளாக வந்துகொண்டிருந்தன. ஆனால் அதன் இன்றைய பரிமாணம் தாயக நினைவுகளுக்கு அப்பால் சென்று இன்றைய புகலிட வாழ்வு குறித்த அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்துகின்ற படைப்புகளையே அதிகளவு காணக்கூடிய¬தாக இருக்கின்றன. இன்று புகலிடத்தில் அடுத்த தலைமுறை தோன்றி விட்டது. தம்மை இலங்கையர் என்றும் கூறமுடியாத, தாம் நோர்வேயில் பிறந்திருந்தால் தம்மை நோர்வேஜியர்கள் என்றும் கூற முடியாத, Nortamils, Dantamils னுயவெயஅடைள என தம்மை அடையாளப்படுத்துகிற நிலை வளர்ந்து வருகிறது. முழுமையாக அவர்கள் நோர்வேஜியர்களாகவும், டனிஷர்களாகவும் அடையாளப்படுத்துவதற்கு இன்னும் சில சந்ததிகள் கடக்கவேண்டியிருக்கும்.

அவர்களின் பெற்றோரின் தாயகத்தை அறியாத, அது குறித்த பிரக்ஞைக்கு அப்பாற்பட்டு, புகலிடத்தையே தமது தாயகமாக்கிவிட்ட தலைமுறை அது. இவர்களிடமிருந்து தமிழில் இலக்கியங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கற்ற அந்தந்த நாட்டு மொழிகளில் இலக்கிய ஈடுபாடுகளை காட்டுகின்ற போக்கு வளரத்தொடங்கியுள்ளது. தமிழிலிருந்தும் அந்தந்த மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்கின்ற முயற்சிகளும் கூட நடப்பதை அறிகிறோம். உலக புகலிட இலக்கியம் என்பது ஒரு சர்வதேச அளவில் கருத்திற்கொள்கின்ற இலக்கியமாக ஆகிவிட்டது. ஐந்திணை பற்றிய கருத்தாக்கங்களை விரித்து ஆறாந்திணையாக தகவல் தொழில்நுட்ப வெட்டவெளி எனப்படும் சைபர் ஸ்பேசை குறிப்பிடுகிறோம். ஏழாந்திணையாக இன்று புகலிடத்தை குறிக்கின்ற கருத்தாக்கங்¬களும் முன்மொழியப்படுகின்றன என்பதை கருத்திற் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழில் புலத்து இலக்கியத்தின் ஆயுள் கேள்விக்குரியது.

புகலிடத்தில் அரசியல் செயற்பாடுகள் பற்றி..?

புகலிடத்தில் தமிழர்களின் அரசியல் செயற்பாடு இன்னமும் தமிழ்தேசிய அரசியலுக்கு அப்பால் எட்டவில்லை. விதிவிலக்காக அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்த நாட்டு அரசியலுடன் இணைத்துக் கொண்டுள்ளனர் என்பது பொய்யில்லை. ஆனால் அது மீண்டும் தமிழ்த்தேசிய அரசியலைத் தாண்டி செல்லவில்லை என்பதே யதார்த்தம். இனி இதுவே தமது நாடாக ஆகிவிட்ட நிலையில் இந்த நாட்டவர்களுடனும், நாட்டு நலன்களுடனும், அதன் அரசியலுடனும், இணைவாக்கம் செய்துகொள்வது அவசியமானது. வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக இந்த நாட்டவர்கள் கொண்டுள்ள பொதுவான குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அவர்களின் சமூக இணைவாக்க பிரக்ஞையின் போதாமை பற்றியது.

அடுத்தது மாற்று அரசியல் கருத்துடையவர்கள் திட்டமிட்ட ரீதியில் நலமடிக்கப்பட்டமை பற்றியது. இன்று மாற்று அரசியல் கருத்துடையவர்கள், அல்லது விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றாதவர்கள், அவர்களுக்கு நிதி வழங்காதவர்கள் அவர்கள் தமிழ்த்தேச ஆதரவாளர்களாக இருந்தாலும்சரி அனைவருமே எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மிக எளிமையாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இவர்கள் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டும், அந்நியப்படுத்தப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் எதிரியின் முகாமுக்கே தள்ளப்பட்டுவருவது ஆரோக்கியமான ஒன்றல்ல.

இன்று புகலிடத்தில் மாற்று அரசியல் செயற்பாடுகள் நிறுவனமயமாக இல்லை.
யுத்தநிறுத்த ஒப்பந்தம், பின் "ஏகப்பிரதிநிதித்துவ" அரசியல், அதனைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களும், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என அனைத்துமே தமிழ்த்தேசியத்தின் பெயரால் உண்மைகள் இருட்டடிப்பு செய்வது சர்வசாதாரண ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் சிறிது ஒதுங்கிநின்று கிடைத்த சந்தர்ப்பத்தில் உண்மைபேசினால் ஓரங்கட்டப்பட்டுவிடுவோமோ, தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சி அதில் சரணடைந்தோர் பலர், சமரசம் செய்து கொண்டோர் பலர். தம்மை ஊமைகளாக ஆக்கிக்கொண்டோர் பலர். பலரதும் அரசியல் முகமூடிகள் கிழிந்தன. எப்போதும் பலமானவர்கள் பக்கம் இருப்பது லாபம் என்றுணர்ந்து தமது நேர்மை அரசியலை துறந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான விடுதலையை இது பெற்றுத்தரப் போவதில்லை. பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களும், ஜனநாயக குரல்களுமே கடந்த காலங்¬களில் தேச விடுதலைப் போராட்டத்தில் பாசிசப் போக்கை கணிசமான அளவு மட்டுப்படுத்தியது. இனி வரும் அத்தனை ஜனநாயக விரோதப்போக்குகளுக்கு வழங்கும் ஆசீர்வாதமும், அங்கீகாரமுமே இந்த "ஏகபிரதிநிதி" சித்தாந்தம். ஆரம்பத்திலேயே இதனை நாங்கள் எச்சரித்திருந்தோம். அனைத்து ஜனநாயக விரோத போக்குகளும் தேசியத்தின் பேரால் விதிவிலக்கு கோரும் நிலை மாற்றப்படவேண்டும். இந்த நிலை தளத்தில் மட்டுமல்ல புலத்திலும் தான்.


பாசிசம் பற்றிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தும் பல கட்டுரைகளை எழுதிவந்திருக்கிறீர்கள், இதன் அண்மைய வடிவம் பற்றிய உங்கள் புரிதல் என்ன?

வீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை அதன் வியூகங்களும் திட்டங்களும், வேலைமுறைகளும் நிரூபித்துக்கொண்டு வந்தபோதுகூட பலரும் அதனை அசட்டைச் செய்தார்கள். ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்கிற பதப் பிரயோகத்தைப் பாவித்தோம், அதன் பின் குறுந்தேசியவாதம் என்கிற பதப்பிரயோகத்தை பாவித்தோம், அதன் பின் இனவாதம், அதன் பின் பேரினவாதம் என்றெல்லாம் பதங்களை பாவித்தோம், இந்த பதங்களுக்குப் பின்னால் அர்த்தங்களும், அந்தந்தக் கட்ட பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டங்களையும் சேர்த்தே உணர்த்தியது. ஆனால் இன்று அது முழு அளவிலான செயற்பாட்டுக்கு தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ள பாசிச இயக்கம், முழு சிங்கள மக்களையும் ஓரணிக்குள் திரட்டியுள்ள, திரட்டி வருகின்ற சிங்கள மக்களை பாசிசமயப்படுத்துவதில் மிகவும், நுணுக்கமாக செயற்பட்டு வருகின்ற இயக்கம்.

தேசியவாதத்துக்கு பல முகங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அது இனத்தேசிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பண்புகளை உருவகப்படுத்திக் கொண்டுள்ள சித்தாந்தமாக இருந்தாலும், வேறு சந்தர்ப்பங்களில் அது சோசலிச முகமூடிகளையும் கூட அணிந்து வரும். ஹிட்லரின் பாசிச சித்தாந்தம் கூட தேசிய சோசலிசம் பற்றிய கருத்தாக்கத்துடன் தான் தன்னை அடையாளப்படுத்தியதுஅதற்கூடாகவே தன்னளவில் அது வளர்த்துக்கொண்டது. இன்று சிறிலங்காவில்; சிங்கள பாசிசத்துக்கு வடிவம் கொடுக்கும் சம்பிக்க ரணவக்கவின் சித்தாந்த¬மும் கூட தேசிய சோசலிசம் தான் என்பதை கவனியுங்கள். ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றிய சம்பிக்க ரணவக்க அதிலிருந்து விலகி ஜனத்தா மித்துரோ எனும் இயக்கத்தை ஆரம்பித்து இலங்கைக்கான சோசலிச பொருளாதார கட்டமைப்பு குறித்த ஆய்வுகளையும், கருத்துருவாக்கங்களையும் செய்து இயங்கிக்கொண்டிருந்த போது அதன் ஒரு கட்டத்தில் சோசலிச கோசம் சரிவராது என்கிற கருத்தையும், சோசலிசத்தை தேசிய சித்தாந்தத்தோடு இணைத்து புதுவகை சிங்கள பௌத்த சித்தாந்த மற்றும் அமைப்புத் துறைக்கான வேலைகளை தொடங்கினார். அதன் வடிவம் தான் 1995இல் சிங்கள வீரவிதானவின் தோற்றம். மிகவும் நுணுக்கமாக இயங்கி அது வரை சிங்கள பௌத்தம் பேசிய இயக்கங்களை தம்மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாசூக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த சிங்கள பௌத்த அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பௌத்த மகா சங்கத்தினரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சமூகத்தில் கருத்துருவாக்கங்களை பலப்படுத்தும் நிறுவனங்களான தொடர்பூடகங்கள் அiனைத்திலும் ஊடுருவியது. திவய்ன போன்றவற்றை தமது கைக்குள் போட்டுக் கொண்டது லங்காதீப, சண்டே டைம்ஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வு கொண்டவர்களை அடையாளம் கண்டு தமது வலைக்குள் சிக்க வைத்தது.

அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவி அதன் அதிகார மற்றும் நிறைவேற்று அங்கங்களுக்குள் சென்று அரசியல் முடிவுகளை எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப்புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள சிறிலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத் தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்த்தகர் சங்கத்தை ஆரம்பித்து குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலை வாய்ப்பு அணி, என பல அமைப்புகளை உருவாக்கியது.

அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர் வட்டார சகாக்களை குறுகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பெரிய அதிகாரிகள் பலரையும் இணைத்துக் கொண்டது. தப்பியோடிய இராணுவத்தினரை உள்வாங்கி இரகசிய பயிற்சி முகாம்களை நடத்தி வருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள்.

ஜாதிக ஹெல உறுமய என்பது இந்த பாசிச அமைப்புகளின் ஒரு முன்னணி அமைப்பாக இயங்குகிற ஒரு கட்சி மட்டும் தான்.

ஜே.வி.பி. இன்று சிஹல உறுமயவின் நிகழ்ச்சி நிரலை கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆனாலும் ஜே.வி.பியின் மூலோபாயம் அதுவல்ல. அது அரசியல் சந்தர்ப்பவாத தந்திரோபாயம் மட்டும்தான். ஆனால் இதற்கான சித்தாந்த பலத்தை தயாரித்தளிப்பதும், அதனை விரவவிடுவதும் அதற்குப் பின்னாலுள்ள பலமான சிங்களப் பேரினவாத அணிகள் தான்.

முன்னரெல்லாம் பல பெயர்களைக் கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறையவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்கவில்லை. பொதுவான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல சிங்கள சிவில் சமூகத்தில் ஆழமாக வேர்விடுகின்ற அளவுக்கு அனைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு. உறுதியான அமைப்பு வடிவம் உருவாக்கியாகிவிட்டது. அது போல அரசியல் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியாகிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேண்டியதும், அரசை கைப்பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று கூறி வந்தோம். அதற்கு இராணுவ வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன. தென்னிலங்கையில் பிரதான அரசியல் அமுக்கக் குழுவாக இந்த சக்திகள் இன்று ஆகிவிட்டிருக்கின்றன.

இதில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு..?

வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பேரினவாத இயக்கங்கள் இருந்திருக்கின்றன அல்லவா?

இப்பின்னணியில் பாசிசத்தின் இராணுவ மயத்தன்மையை மேலும் விளக்குவீர்களா?

உங்களுக்குத் தெரியும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி, சிங்கள வீரவிதான ஹெருவன எனும் பத்திரிகையொன்றை கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுக் கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள், இதனைத் தவிர அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ்லெட்டர் ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் வெளியான வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர் கொண்ட இந்த செய்தி ஏட்டின் கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி கூறப்படுகிறது. -கொழும்பில் இருந்து கொண்டு கொஞ்சம் கூட அச்சமின்றி புலிக்கு வால்பிடித்துக் கொண்டு இருந்த புள்ளிமாடு இனந்தெரியாத நபரால் புதைகுழிக்கு அனுப்பப்பட்டதானது, நமது தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதை உணர்த்தியதானது நம்மெல்லோருக்கும் தைரியமளிக்கின்றது.- என்று இருந்தது. அந்தச் செய்தியில் இவ்வாறானவர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும், அவ்வாறான இயக்கமொன்று இருப்பதை பற்றிய சிங்கள மக்களுக்கு தைரியத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இறுதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தாயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முன்னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கோரிய இயக்கமும் இது தான். National front against tigers இதனை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.

அவர்களின் கொலைபட்டியல் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திசீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்தன. அந்த பட்டியல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் லக்பிம பத்திரிகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி. இந்த குறுகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன? அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரைகாலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ரணில் தலைமையில் மகாசங்கத்தினரை சந்தித்து பன்சில் எடுக்கிறார். இது வரைகாலம் மார்க்சியம், பேசிக்கொண்டி¬ருந்த ஜே.வி.பி. தங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து ஆசி பெற்று "அடபிரி" செய்கின்றனர். இது யார் கண்ட வெற்றி என்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க.

இந்தப் புள்ளி தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்றுவிட்டது. ஆயுதப் புரட்சி பற்றி பேசிக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பண்ணியிருக்கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போனது எவரது வெற்றி? தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப்பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் செய்தது யாரது வெற்றி. சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங்கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுக வைத்தது யாரது வெற்றி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லாக்காசாக்கியது யாரது வெற்றி, ரணிலின் ஆட்சி கவிழ்ப்பு, சந்திரிகாவுக்கு எதிரான சதி, மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியமர்த்தல், ஆட்சியை நிழலில் இருந்து வழிநடத்துதல் என சகல வெற்றிகளையும் அது தொடர்ந்துகொண்டே இருக்கி¬றது. இந்த நிலைமைகளை விளங்கிக்¬கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.

இன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இதற்குப் பின்னால் முதலாளித்¬துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக் கொள்கிறது. சிஹல உறுமய இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜே.வி.பி.யினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேலை மிச்சம். ஜே.வி.பி. மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடையை பாசிசம் தனக்குரிதாக்கி விடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். 30களில் மேற்கில் சோசலிசத்தை பாசிசம் வெற்றிகண்ட வரலாற்றனுபவத்தை இன்னமும் இலங்கை இடதுசாரிகள் உணரவில்லை, என்றே நான் கூறுவேன். இனி பாசிசத்துடனான கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்ளாமல் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இருப்பு கொள்ள முடியாது. பேரினவாதம் நிறுவனமயப்படுதல் என்பது எந்தவொரு இடைஞ்சலும் இல்லாமல் இலங்கையில் நிகழ்கிறது.

பாராளுமன்ற அரசியல் வாதத்தைப்பொருத்தவரை பேரினவாதத்தை திருப்திபடுத்துகின்ற சக்திகளே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றமுடியும், அதனை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலை இன்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டுமென்றால் ஒரு அதிசயம் தான் நிகழவேண்டும்.

பேரினவாத முலாம் பூசப்பட்ட பௌத்த மதமும், அதில் நிலையூன்றச்செயய்ப்பட்டுள்ள அரச அதிகார கட்டமைப்பு மேலும் கல்வி, மற்றும் சிவில் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் என அனைத்¬தும் பேரினவாதமயப்படுத்தப்பட்டிருக்கிறது. புறநிலையாக இவற்றுக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் சில ஜனநாயக நிறுவனங்களுமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் அது அவ்வளவு பெரிய வெற்றியை எய்த முடியவில்லை.

மேலும் முற்போக்கான புத்திஜீவித்துவ சக்திகள், புலமையாளர்கள் என்போர் பல சமயங்களில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று நம்பி பூர்ஷ்வா சக்திகளை சார்ந்தும் அச்சக்திகளை பலப்படுத்தியும் வந்துள்ளனர். இந்தத்தவறை காலப்போக்கில் சிலர் திருத்திக்கொண்ட போதும் கணிசமானோர் அதனை திருத்திக்கொள்வதை தமது மானப் பிரச்சினையாகக் கொண்டதும் உண்டு. இதன் விளைவு அவர்கள் எதிரியின் கைக் கூலிகளாகவும், பகடைக்காய்களாகவும், ஆகி ஈற்றில் அவர்களின் உரிய இடத்தை முழுவதும் இழந்ததும் நமது நாட்டில் நடந்தது. பிரான்சில் பிரெஞ்சுப் புரட்சி காலங்களில் பூர்ஷ்வா வர்க்கம் முற்போக்கனாதாக காட்டிக்கொண்டதும், அது அறிவாளிகளையும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற உபயோகித்ததையும், அது அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் தொடர்ந்தது போல இங்கும் நிகழ்ந்தது. 1956இல், 1970இல் 1994இல் இதுபோன்ற நிகழ்வுகள் இலங்கையில் நிகழ்ந்தன.

ஆனால் 2005இல் பேரினவாத சக்திகள் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற போதிய பலமுள்ளதாக இருநதது. மார்க்சிய தோல் போர்த்திய பேரினவாதிகள் இலகுவாக அதிகாரத்தை கைப்பற்றினர்.

இன்றைய யதார்த்த நிலையொன்று உள்ளது. அது தான். ஊடகச் சந்தையில், ஊடக முதலாளிகளின் மூலதனம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால், அந்த மூலதனம் லாபத்தை ஈட்டவேண்டுமென்றால் தேசியத்தை உயர்த்திப்பிடித்தல் என்பது தவிர்க்கமுடியாததாகிறது. இது ஒரு சந்தைக்கான தந்திரோபாயமாக (Marketing stretegy) ஆகிவிட்டிருக்கிறது. சிங்களத் தேசியத்தை உயர்த்திப்பிடிக்காத எந்தவொரு ஊடகமும் வர்த்தக ரீதியில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது போலவே, தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடிக்காத எந்த ஒரு ஊடகமும் வியாபார அளவில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது தான் யதார்த்தம். இந்த இடத்தில் இருந்து உங்கள் பார்வைகளை விசாலப்படுத்துங்கள் மேலும் பல உண்மை நிலைகளை அறிந்து கொள்வீர்கள்.
ஆக, முழு நாடும் பாசிசத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு செல்லப்படுவதாகக் கூறுகிறீர்கள்..?

இனிவரப்போகும் காலம் அபாயகரமானது என்றா எச்சரிக்கிறீர்கள்..?

இதில் ஊடகங்களின் பாத்திரம் பற்றி...?

தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புகள் பற்றி..?

அடிப்படையில் நோர்வே அமெரிக்காவின் பொம்மையாகவே பாலஸ்தீன தீர்வு முயற்சியிலும் தன்னை ஆக்கிக் கொண்டிருந்தது. சமீபகாலமாக உலகில் தேசியப் பிரச்சினைகளின் மீதான தீர்வுகளுக்கு அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் நோர்வே மூலம் தமது நலன்களை நிறைவேற்றி வருவதை பார்க்கலாம். அடக்கப்படும் தேசங்களுக்கு தீர்வு தருவதைப் பார்க்க அடக்கப்படும் மக்களின் போராட்டங்களை சரணடையச் செய்கின்ற முயற்சியையே நோர்வே மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மேலும் உலகின் சமாதான தேவதையாக நோர்வே நோக்கப்படும் அதே நேரம் நோர்வே தனது நாட்டுக்குள் ஏனைய தேசங்களை எப்படி அடக்கிவைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு உண்டு. அங்குள்ள சாமிர் எனும் இனத்தவர்களின் தனியான பண்பாடு, மொழி, கலாசாரம் என்பனவற்றை சிதைத்தும், அவர்களின் இன அடையாளத்தை பேணவிடாமல் நுணுக்கமாக இயங்கியும் வந்திருக்கிறது. நோர்வேயின் வடக்குப் பகுதியில் இந்த இனத்தவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை நோர்வேயின் பிரதான வருமானமான எண்ணெய் வளங்களை அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட நோர்வேயின் தலையீட்டை சந்தேகத்தோடு நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிரிகளாகிவிட்டிருக்கிற அமெரிக்கா, இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சினை தொடர்பாக யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ளுங்கள். ஒரு புறம் குர்திஸ்தான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதாக வேடம்போட்டுக் கொண்டு. மறுபுறம் குர்திஸ்தான் மக்களின் போராட்டத்தை அடக்க துருக்கி அரசாங்கத்திற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்து வருகிறது நோர்வே. நோர்வேயின் நடவடிக்கைகள் குறித்து பேரினவாதிகள் சந்தேகிப்பதற்கும் தமிழ் மக்கள் சந்தேகிப்பதற்கும் இடையில் அடிப்படை வித்தியாசம் உண்டு என்பதையும் கவனியுங்கள்.
மாற்று அரசியலின் தேவை பற்றி..

தமிழ்த்தேசிய விடுதலையுடன் நமது தேவை நின்றுவிடவில்லை. இன்றைய முதன்மைத் தேவை என்கிற பேரில் ஏனைய சமூக அடக்குமுறைகள், ஏற்றத் தாழ்வுகள் என்பவற்றுக்கெதிரான போராட்டம் மறுக்கப்பட்டு வருவதை கண்மூடித்தனமாக தமிழ்தேசம் எதிர்கொண்டபடி இருக்கிறது. வர்க்கப் பிரச்சினை, சாதியம், பிரதேசவாதம், பால்வாதம், என்கிற விடுதலையின் தேவை இல்லாமல் போய்விடவில்லை. மேற்பூச்சுக்காக இன்று இவற்றையும் உள்ளடக்கியது தான் இன்றைய தேசப்போராட்டம் என்று கூறப்பட்டாலும் கூட, ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்குரிய எந்த நம்பிக்கையையும் இன்னும் கிஞ்சித்தும் காணவில்லை.

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது. அதற்கப்பாற்பட்ட போராட்டத்தின் தேவை இன்னமும் உள்ளது.

-நேர்காணல்- தாஸ்

மார்க்சியமும் தேசியப் பிரச்சினையும்


தமிழில் -வளர்மதி


சர்வதேசியம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சாத்தியம்தானா, விரும்பத்தக்கது தானா? சோஷலிச அரசியலில் அதற்குரிய உண்மையான இடம் என்ன?



லட்ச ரூபாய் மதிப்புள்ள கேள்வியைக் கேட்டீர்கள்! இதற்கு மட்டும் ஒரு பதில் இருக்கிறதென்றால் கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதைத்தான் நாம் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் - சர்வதேசியம் இன்று எங்கே இருக்கிறது? நம்முடைய ஆசைகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைததுவிட்டு வரலாற்று உண்மைகளிலிருந்து தொடங்குவோம்.

முதலில் (நான் ஏற்கனவே சொன்னது போல) புரட்சிகர சோஷலிச வெற்றிகள் எப்போதுமே ஏதாவதொரு வகையில் தேசிய விடுதலை இயக்கங்களோடு -அவை காலனிய எதிர்ப்பாக இருந்தனவோ இல்லையோ, தொடர்புடையவையாக இருந்தன. இரண்டாவதாக, ஒரு முதலாளிய நாட்டில் ஏற்படுகிற ஒவ்வொரு நெருக்கடியின் போதும் வர்க்க அடையாளத்தைவிட- வெகுமக்களின் மிகப் பெருந்திரளினரான பாட்டாளி வர்க்கத்தின் மத்தியிலும் கூட - தேசிய அடையாளமே வலுவாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. 1914-ல் சமூக-ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி ஏதோ விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலான தலைவர்களின் துரோகத்தால் விளைந்தது அல்ல - லெனின் இந்தக் கருத்தைக் கடுமையாக எதிர்த்தால் ஏகாதிபத்திய வல்லரசுகள், அவற்றில் சலுகை பெற்ற பாட்டாளி வர்க்கம், இவற்றின் எழுச்சியான, ஒரு மொத்த சமூக வரலாற்று சகாப்தத்தின் விளைவும் அல்ல. அதைவிடவும் ஆழமான ஒரு காரணி சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். (இந்த வகையிலான மற்ற பிரச்சினைகளிலும் கூட இவற்றையொத்த மாற்றுகளில் இதே போன்ற தேர்வுகள் (Choices) முன்வைக்கப்படுகின்றன.) அதாவது, தனித்தனியான பண்பாட்டுப் பிரிவுகளான இனங்கள், தேசங்கள், மக்கட்கூட்டங்கள் போலல்லாமல், குறுக்குவெட்டு வர்க்கப் பிரிவினைகள் சமூக வரலாற்றில் மிகவும் பிற்பட்டே தோன்றின என்று சொல்கிறேன். இங்கு, ஒரு தேசிய உருவாக்கத்தின் அல்லது ஒரு தனிநபருடைய ஆளுமை உருவாக்கத்தின் ஆழமான அடுக்குகளே மற்ற எல்லாவற்றையும்விட நீண்ட காலம் நீடித்திருப்பவை என்கிற ஒரு மானுடவியல் விதி இருக்கிறது. உளவியலிலும் சரி, சமூக அமைவிலும் சரி தனி உயிரியின் தோற்ற வளர்ச்சியிலும் சரி (ontorg....) இவைவகையின் தோற்ற வளர்ச்சியிலும் எப்போதுமே தொன்மையானவையே (philogeticaly) உறுதியே இருப்பவை. மிகத் தொன்மையான அடுக்குத்தான் மிக செயலுhக்கமானது 'அடிப்படையான உளவியல், வரலாற்று ஆய்வுண்மை இது.

மன்னியுங்கள், ஒரு சிறிய கேள்வி - 1914 ம் ஆகஸ்டில் தொழிலாளர் இயக்கங்களின் தலைவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இதற்குப் பதில் சொல்வது கஸ்டம்! மிகவும் ஒருபக்கச் சார்பான கேள்வி இது. ஒரு ஸ்டாலினிஸ்டு விசாரணகை; கமிசனுக்கு முன்னால் நிறுத்தப்பட்டதைப் போல என்னை உணரச் செய்கிறது. மேலும், இந்தக் கேள்வியில் உண்மையில் ஒரு பொறி இருக்கிறது. ஏனென்றால், சரியான பதில் எதுவென்று எல்லோருக்கும் தெரியும்: 'சமூக ஜனநாயகவாதிகளின் துரோகத்திற்கு எதிராகப் போராடுங்கள், சுவிட்ஸ்லாந்துக்கு ரயிலைப் பிடியுங்கள் என்று போகும். ஆனால், நான் கேட்க விரும்புகிற கேள்வி இது அல்ல் பின்னோக்கிப் பார்த்து ஒருவருடைய நிலைப்பாடு என்னவாக இருந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு அக்கறையில்லை. அதற்குப் பதில், அந்தக் காலத்தில், அந்த இடத்தில், வெகுமக்களும் சமூக ஜனநாயகவாத முன்னணிப் படையினரும் என்ன புரிந்திருந்தார்கள், என்ன செய்தார்கள் என்பதை உள்ளது உள்ளபடியே பார்ப்பதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதுமே எனக்கு முக்கியம்.

னால், உங்களுடைய புரிதல் சரியானதாக இருக்குமானால், எல்லோருக்குமே அது சரியானதாக இருக்க வேண்டும். இது ஒன்றும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக - உதாரணத்திற்கு, ரசியாவிலோ இத்தாலியிலோ நடைபெறவில்லை இல்லையா. ஜெர்மனியில், - பிரான்சில், ப்ரிட்டனில் நிகழ்ந்த போல இன்னொரு இடத்திலும் நடக்க வேண்டும் என்று எதுவும் விதிக்கப்பட்டிருக்கவில்லையே. தொழிலாளர் இயக்கங்களின் பார்வைகளில் வெளிப்படையாகவே உணரத்தக்க வித்தியாசங்கள் இருந்தன. மேலும், ரசிய வெகுமக்கள் முதலிலேயே விழுந்துவிட்டதைப் போல இல்லாமல் மென்ஷ்விக்குகள் பெருந்தேசிய வெறிக்குள் அவ்வளவு வேகமாக எழுந்துவிடவில்லை, இல்லையா.

இதைச் சுலபமாக விளக்கிவிட முடியும். நீங்கள் எழுப்பும் கேள்விகளை எனது வரலாற்றுப் பிரச்சினைப்பாட்டுக்குள்ளேயே பொருத்திவிட முடியும். இத்தாலி அப்போதுதான் உருவான ஒரு இளம் தேசம். பலவீனமான ஒரு தேசம். ஜெர்மனியிடம் அதற்கும் பகையுணர்ச்சி எதுவும் இருக்கவில்லை. ஆனால் ரசியா, ஒரு உண்மையான அர்த்தத்தில், ஒரு தேசிய அரசாக இருக்கவில்லை. மிகவும் பலவீனமா. விரிந்த ஒரு தேசிய அடையாளத்தோடு, நிறைய கலப்புக்கு உள்ளாகியிருந்த ஒரு மக்கள் கூட்டமாகவே அது இருந்தது. அதனால், தேசிய நலன்கள் மிகவும் குறைவான செல்வாக்கே செலுத்தியிருக்க முடியும் என்பது அங்கு இயல்பான ஒரு விஷயம்.

ஒரு பொருள்முதல்வாதி என்ற முறையில் உணர்வுபூர்வமான (consious) நிலையை விட, உள்ளுணர்வே (instinct) தீர்மானகரமான ஒரு காரணியாக - ஒரு விரிந்த அர்த்தத்தில் - இருக்கிறது என்று சொல்வேன். அதாவது, என்ன சொல்ல வருகிறேன் என்றால், இங்கு, ஒரு சர்வதேச உள்ளுணர்வைவிட, ஒரு சர்வதேச உணர்­வுநிலை இருக்கிறது. இந்த உண்மையி­லிருந்து, சர்வதேச உணர்வுநிலையோடு தேசிய உள்ளுணர்வு மோத நேர்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரக்ஞையே மிகவும் வலுவானதாக வெளிப்படுகிறது என்று ஊகிக்கிறேன். இந்த விடயத்தில், யதார்த்தம் என்னோடு இருக்கிறது. அவ்வளவுதான். இந்த நிலைகளுக்காக நான் வருந்தவேயில்லையா? ஆமாம், வெறுக்கத்­தான் செய்கிறேன். என்றாவது ஒரு நான் இறக்க வேண்டும் என்ற உண்மையை எவ்வளவு வெறுக்கிறேனோ அதேயளவு இதையும் வெறுக்கிறேன். ஆனால் என்ன செய்வது, இது என் தலையில் எழுதியிருக்கிறது.

இது எல்லாம் என் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த கொடுரமான, சமகாலச் சம்பவங்களின் வரலாற்றோடு நேரடியாகவும் சம்பந்தப்பட்டிருக்கிறது. பொலிவியாவில் சே-வுக்கு நேர்ந்த கதியை எடுத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பெரிதாகக் கதையளந்து கொண்டிருக்காமல் நேரடியாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். 1971 ல் பொலிவிய அரசு எதிர்ப்பாளர்களின் குழு ஒன்று 'வானவிற்கு வந்தது. அவர்களில் ஒருவர் (பொலிவிய சுரங்கத் தொழிலாளர் சம்மேளனத்திலிருந்து வந்த ஒரு சுரங்கத் தொழிலாளி) ஜுலை 26 கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். சமீபகாலங்களில் பொலிவியாவில் நிகழ்ந்த வெகுமக்கள் கிளர்ச்சிகளைப் பற்றி ஒரு உரை ஆற்றினார். புரியாத புதிரான ஒரு மறதியில் சே- வுடைய கெரில்லாப் போரைத் தன்னுடைய பேச்சில் ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிட­வேயில்லை. 'சே” வின் கெரில்லாப் போர் நமது சமகாலத்திய நிகழ்வுகளில் மிகத் தூய சர்வதேசியப் பார்வை கொண்டிருந்த ஒரு போராட்டம். ஆனால், பொலிவிய தேசிய யதார்த்ததிற்குள்ளாக அது செரித்துக் கொள்ளப்படவே இல்லை. வெகுமக்களின் நினைவில் அது இன்னும் ஏதோ ஒரு அந்நி­யமான நிகழ்வு போலவே படிந்திருக்கிறது. இது ரொம்பவும் சோகமானது. ஆனால் நாம் இதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கத்­தான் வேண்டும். முழுக்க முழுக்க ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. ஆனால், மறுக்கமுடியாத ஒரு யதார்த்தம். ஒரு மார்க்சியவாதி என்கிற முறையில் யதார்த்தத்தின் விதிகளை மதித்துபப் புரிந்துகொள்ளவே நான் முயற்சிக்கிறேன். என்னுடைய விதிகளை அதன் மீது திணிப்பதில்லை.

காவுட்ஸ்கி தொடங்கி கய் மோஸ்- வரைக்கும் இரண்டாம் அகிலத்தின் மிக மோசமான பிழை ஏகாதிபத்தியத்தின் சேவையில் இருந்து ஐரோப்பிய-மையவாதம் தான் என்று உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். ப்ரெஞ்ச் சோஷலிஸ்டு கட்சி (PSF) இந்தத் தவறிலிருந்து விலகிவிட்டதா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். PSF இன்னும் அதிலிருந்து விலகிவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. எந்த மாற்றமோ முன்னேற்றமோ இல்லை என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால், மொத்தத்தில் அதன் பொதுப்போக்கு ஐரோப்பிய மையவாதமாகவே இன்னமும் இருக்கிறது. சோசலிச அகிலத்திற்குள் அது உறுப்­பினராக சேர்ந்திருப்பது இதற்கு அமைப்பு ரீதியான வடிவம் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். சமூக ஜனநாயகம் மூன்றாம் உலக நாடுகளில் தன்னை அறிமுகம் செய்து கொள்வதில் எப்போதுமே அக்கறையாக இருந்து வந்திருக்கிறது என்பதையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். வர்க்கப் போராட்ட நலன்கள் என்ற நோக்கில் இதைப் புரிந்துகொள்ள முடியும் இந்த நாடுகளின் எதிர்ப்புரட்சியின் ஒரே சாத்தியமான வடிவம் சீர்திருத்தம்தான். அதனால்தான் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, போர்டுகல் நாடுகளில் சோஷலிச அகிலத்தில்தான் தீவிரமான செயற்பாடுகள், அதிலும் குறிப்பாக, ருளுயு வின் ஏஜென்டாக ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.

1919-ல் பல்வேறு தேசிய அங்கங்களை உள்ளடக்கிய கட்டுப்பாடு மிகுந்த ஒரு சர்வதேசக் கட்சியாக லெனின் அமைத்த மூன்றாம் அகிலம், தேசியம் என்ற மறுக்கமுடியாத யதார்த்தத்தின் வலுவைக் குறைத்து மதிப்பிட்ட ஒரு வரலாற்றுத் தவறு என்று நினைக்கிறீர்களா?

அது ஒரு பிழை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வரலாறு தவிர்க்க முடியாதாக்கிய ஒன்று. அப்போதைய நிலைமைகளில் சரி என்று பட்டதையொட்டி அந்தப் பரிசோதனை முயற்சித்துப் பார்க்க வேண்டியதொன்றாக இருந்தது. ஏனென்றால், வரலாறு அதைத் தவறு என்று அதுவரையிலும் நிரூபித்தி­ருக்கவில்லை. ஆனால் தவறு உலகப் பாட்டாளி வர்க்கத்தை தேசிய, பண்பாட்டுத் தனித்துவங்கள், வித்தியாசங்களற்ற ஒரு ஒற்றை முழுமையாகப் பார்த்ததில்தான் இருக்கிறது. ஜினோவாவின் இராணுவ மாதிரியில், அந்தச் சகாப்பதத்தில் நிலவிய மற்ற இராணுவாத உருவகங்களின் அடி­ப்படையில் அமைந்த, ஒரு ஊழியர் அணி­யின் தலைமையில் நடைபோடக்கூடிய சர்வதேச பாட்டாளி வர்க்க இராணுவம் ஒன்று சாத்தியம் என்று அப்போது நம்பப்­பட்டது. இது முழுக்க முழுக்க ஒரு கருத்­துமுதல்வாத அடிப்படையிலமைந்த தவறு. அதனால், ஒரு வகையான தன்முனைப்­புவாத அமைப்புமுறை சார்ந்த வடிவம்.

இதை இன்னும் கொஞ்சம் பின்னுக்கு கொண்டு போக முடியும். பொதுவாகச் சொல்வதென்றால், அகிலங்கள் அவை தோன்றியதற்கு சொல்லப்பட்ட காரணங்­களை எப்போதுமே நிறைவு செய்ததில்லை. 1864-ல் தோன்றிய முதல் அகிலத்திலிருந்து (சர்வதேச உழைப்பாளர்கள் சங்கம்) நான்காம் அகிலம் (இதைப் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்) வரைக்கும் அவற்றின் இலக்கு சோசலிசப் புரட்சி. ஆனபோதிலும், இடைப்பட்ட நுhற்றாண்டின் யதார்த்தமான வரலாற்றில் நிகழ்ந்த ஒவ்வொரு சோசலிசப் புரட்சியும், சோஷலிசத்தை நோக்கிய ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு முன்னோக்கிய அடிவைப்பும் அவற்றைச் சார்ந்திராமல் சுதந்திரமான முயற்சியில் நடந்தவை பாரீஸ் கம்யூனிலிருந்து 1959-ல் நிகழ்ந்த க்யூபப் புரட்சி வரை. உங்களுக்கே தெரியும், அந்த நிகழ்வைப் பதிவு செய்து என்பதைத் தவிர முதலாம் அகிலத்திற்குக் கம்யூனோடு எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. தற்செயலாக, அந்த நிகழ்வு, அது நிகழ்ந்த பிறகு அகிலத்தை இழுத்து மூடுவதற்கு ஒரு வகையில், ஒரு காரணமாக அமைந்து விட்டது. இரண்டாவது அகிலம், தோல்விகளைத் தவிர வேறு எதையும் தரவில்லை. அந்தக் காலத்தின் ஒரே வெற்றி ரசியப் புரட்சி, அதற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. அதேபோல மூன்றாம் அகிலமும் - ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி, ஸ்பெயின் - அதனுடைய உதவியே இல்லாமல், சொல்லப் போனால் அதற்கு எதிராகவே சீனப் புரட்சி வெற்றி பெற்றது. (இரண்டு வாதங்களும் சாத்தியமே. ஒன்றை ஒன்று விலகியலை அல்ல என்றும் சொல்லலாம்) 1944-ல் கிழக்கு அய்ரோப்பாவில் தோன்றிய சோஷலிச நாடுகளைப் பொருத்த வரையில் மூன்றாம் அகிலம் கலைக்கப்பட்டதற்கு அடுத்த ஆண்டில், நீங்கள் ரசியப் பெருந்தேசிய வெறி என்று சொல்லக்கூடிய அதன் பாங்குகளுக்கு எதிராகத் தோன்றியவை.

க்யூப, வியட்நாமியப் புரட்சிகள் மற்றும் பொதுவில் காலனிய எதிர்ப்பும் புரட்சிகள் என்று சொல்லப்படுபவற்றை எடுத்துக் கொண்டால், இத்தகைய எழுச்சிகளை உருவாக்கியதற்கான சட்டகமாக சொல்லிக் கொண்ட எந்த ஒரு அமைப்போடும் இவற்­றுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எல்லா அகிலங்களுமே ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் மழலையர் பள்ளிகளாகவும் கடைசியில் அவற்றுக்கு எதிராகவே திரும்பிய தேசியக் கட்சிகளைக் கட்டுவதற்கு உதவும் பணியையுமே செய்தன. அடிநிலையில் பார்த்தால் ஒரு அகிலத்தின் வெற்றி என்பது அதன் முடிவைக் குவிப்பதாகவே இருந்தது. இதைச் சரியாகப் புரிந்திருந்தாலேயே மார்க்ஸ் மிக உவப்போடு முதல் அகிலத்தைக் கலைக்க முன்வந்தார். இயக்கம் வளர்ந்துவிட்டது என்றும் அதன் வலுவிற்கு ஆதாரம் - அதற்கு இனிமேலும் ஒரு மையப்படுத்தப்­பட்ட அமைப்பு தேவையாக இல்லை என்றும் சொன்னார். அகிலத்தின் நோக்கம் நிறைவேறுவது என்பது அகிலத்தைக் கலைப்பதாக இருந்தது. நோரெஸ், டோக்லியாட்டி, சாண்டியாகோ கரில்லோ போன்ற ஏனையவர்களைப் பயிற்றுவிக்கும் சர்வதேசியத்தையும் அகிலத்தையும் காலப்போக்கில் சவக்குழிக்கு அனுப்பிய தேசிய வெகுமக்கள் கட்சிகளைக் கட்டுவதற்கு உதவியதற்கும் மேலாக மூன்றாம் அகிலம் வேறு என்ன செய்துவிட்டது. இது ஒரு சோகமயமான இயங்கியல் உண்மை. ஆனால், சில இழப்பீடுகளையும் தரவே செய்திருக்கிறது.

இப்போதெல்லாம், நாம் மையத்திலி­ருந்து விலகிச் செல்லும் ஒரு பொதுவான போக்கையே பார்க்கிறோம். எப்படியிருந்­தாலும், வரலாற்று வளர்ச்சிப் போக்கே அப்படி இருக்கிறது. மூன்றாம் அகிலத்தை நிறுவி, சோவியத்துகளின் சர்வதேச் குடியரசை நிறுவ லெனின் அறைகூவல் விடுத்தபோது, உலகில் ஒரு சோவியத் அரசு கூட இருக்கவில்லை. இலக்கின் பிரம்மாண்டமே வழிகளின் வறட்சியைக் குறிப்பதாக இருந்தது. பிறகு, வழிகள் வளர வளர இலக்கு மெல்ல மறைந்து போனது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், சர்வதேசியவாதியாக இருப்பதற்கான ஒரே வழி சொந்த நாட்டில் புரட்சியை நடத்துவது என்பதாகிவிட்டது. இந்த அடக்கமான முடிவு ஒரு வாய்வீச்சாகக்கூடத் தோன்றலாம். ஆனால், நிகழ்வுகளைப் பார்க்கும் போது யாரும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.

உங்கள் கடைசிக் கேள்விக்கான பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மையில் வரலாற்றை நிகழ்த்துபவர்கள் வெகுமக்களே, என்கிற முரணான ஒரு கருத்தில் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை விடாமல் பின்பற்றுங்கள்; உணர்ச்சி ஊக்கம் தருகிற அல்லது சோர்வடையச் செய்கிற முடிவுகளுக்கு நீங்கள் வந்து சேர்வீர்கள் - எப்படியிருந்தாலும் நீங்கள் நம்பிக்கை வைத்துத் தொடங்கிய, வெகுமக்கள்தான் வரலாற்றை நிகழ்த்துபவர்கள் என்பது உண்மையென்றால், நிலவுகிற பண்பாடுக­ளுக்கும் மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட, அவற்றோடு தொடர்பில்­லாமல் மேலே அந்தரத்தில் சுற்றிக் கொண்டி­ருக்கிற ஒரு அருவம் அல்ல அவர்கள் என்பது உண்மையானால் - வரையறுக்­கப்பட்ட இயற்கையான பண்பாட்டுக் குழுமங்களாக மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்றால் - அப்போது அவர்கள் அவர்களாலேயே, அவர்களது நிலைமைகளிலிருந்தே, விண்ணிலிருந்து அல்ல மண்ணிலிருந்தே, உலகுதழுவி அல்ல உள்ளுர் அளவிலேயே வரலாற்றைப் படைப்பார்கள். எல்லோருக்கும் ஒன்றேயான வரலாறு என்று எதுவும் இல்லை; வரலாற்றின் காலம் டோக்கியோவிலும், பாரீசிலும், பீக்கிங்கிலும், வெனீசுவலாவிலும் ஒன்றாக இல்லை. ஒரு உலகப் புரட்சித் திட்டம் பன்முகத் தன்மைகளை எல்லாம் ஒருமுகப்படுத்தி, மொத்த இயக்கத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சிக்கும் போது அது வரலாற்று இயக்கத்திற்கு எதிராகப் போய் முடிகிறது ஏனென்றால், அந்த இயக்கம் எப்போதும் ஒருமுகத்தன்மையிலிருந்து பன்முகத் தன்மையை நோக்கி நகர்வதாகவே இருக்கிறது. நிகழ்வுகள் எப்போதும் கீழிருந்தே தொடங்குகின்றன் பன்முகத் தன்மையே எப்போதும் வெற்றி பெறுகிறது. மேலிருந்து வடிக்கப்பட்ட எந்தவொரு திட்டமும் ஒரு உள்ளார்ந்த கருத்துமுதல்­வாதக் கருவைக் கொண்டிருக்கிறது. அதன் காகித ஆரவாரத்திற்கும், வரலாற்றில் அதற்கு இடமில்லாமல் போவதற்கும் காரணம் இதுதான். புரட்சி என்பது ஆணைகள் பிறப்பிக்கும் அறைகளிலிருந்து ஒருபோதும் நிகழ்த்தப் போவதில்லை. பராகுவே-யின் எல்லைக்கு அருகில் இருக்கிற ஒரு தடம் விலகிய கிராமத்தில் இருந்து புரட்சி தொடங்குகிறது என்றால், அதற்கு ஏதோ 19, 000 கி.மீ. தொலைவில் இருக்கிற ஒரு மூளை காரணமல்ல அந்தக் கிராமத்து தெருமுனை பெட்டிக் கடைக்காரன் நிகழ்த்த வேண்டும் என்று முடிவு செய்ததாலேயே நிகழ்கிறது. அந்த மூளை செய்யக்கூடிய தெல்லாம், தெருமுனையைக் கூட தாண்டிப் போயிருக்காத, ஆனால் கிராமத்தின் போது அபிப்பிராயத்தின் மீது செல்வாக்கு செலுத்துபவனாக இருக்கிற அந்தப் பெட்டிக் கடைக்காரன் அதை நிகழ்த்துவதற்கு, அவனுக்கு துhண்டுகோலாக இருந்தது எது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது, கிராமத்து விவசாயிகளின் தேவைகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது, அவ்வளவுதான். அவர்க­ளுக்கு உலகப் புரட்சி அவசியமில்லை ஏனென்றால், அதுபற்றி அவர்களுக்குத் தெரியாது கிராமத்தையே தாண்டியிராத­வர்களுக்கு உலகம் என்பதே தெரியாது. 1967-ல் முயோபாம்பா-வின் மக்களிடம் பொலிவிய கெரில்லாக்கள் வியட்நாமை ஆதரிக்க வேண்டும் என்று விளக்கிப் பேசியபோது, அவர்கள் வியட்நாமை ஏதோ அவர்கள் கேள்விப்பட்டிராத, பக்கத்திலி­ருந்து ஒரு கிராமம் என்று நினைத்திருந்­தார்கள். வாழ்நாளில் ஒரு அமெரிக்­கனைக் கூடப் பார்த்திராத அவர்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால், அதற்கு மாறாக, அருகில் ஒடிய ஆற்றின் மீதிருந்த பாலத்தை பழுது செய்யாமல் இருந்த உள்ளுர் ஆட்சியின் மீது அவர்கள் கடும் கோபத்திலிருந்தார்கள்.

ஆகையால், அங்கு புரட்சியை ஆரம்பிப்பது என்பது அவர்களுக்கு அந்த பாலத்தில் பிரச்சினையில் உதவுவது, ஏன் அந்த அதிகாரி அந்தப் பாலத்தை சரி செய்யாமல், அக்கறையற்று இருக்கிறான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவியது. அது எப்போதுமே கீழிருந்து, தன்னடக்கமாக, பெரிய எழுத்துக்கள் இல்லாமல் தொடங்குவது. ஆனால், அகிலம் என்பது அதன் வரையறுப்பிலேயே பெரிய எழுத்துக்கள் தேவைப்படுவது - ஆனால், செயலற்ற ஒரு மேல்கட்டுமான­மாகவே இருக்கச் சபிக்கப்பட்டது. ஆனால், தேசம் ஒரு மேல்கட்டுமாணம் இல்லை; மாறாக (மொழியைப் போல, பண்பாட்டைப் போல்) ஒரு உண்மையான உள்கட்டு­மாணம் (infra – structure). அகிலங்கள் வெறுமனே மேல்கட்டுமாணங்களாகவே இருக்கின்றன் அந்தக் காரணத்தாலேயே வரலாற்று ஓட்டத்தில் அடித்துச் செல்லக்கூடியவையாக இருக்கின்றன.

வியட்நாம் போருக்கும் உள்ளுர் ஆற்றுப் பாலத்திற்கும் இடையிலான இந்த முரணைத் தாண்டிச் செல்வதுதான் இயங்கியல் முறையியலின் நோக்கம். பொலிவியாவில் ஒரு இரண்டாவது போர் முனையைத் துவக்கி, வியட்நாம் புரட்சிக்கு உதவவேண்டும் என்று நினைக்கிற ஒரு சர்வதேசப் புரட்சியாளர், தன்னுடைய இலக்கு உள்ளுர் பாலம் குறித்த விவாதத்தைத் துவக்கி வைப்பதைச் சார்ந்திருக்கிறது எனவும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வழியில், பொதுவானதற்கும் குறிப்பானதற்கும் இடையிலான முரண்பாட்டை ஒருவர் இயங்கியல் ரீதியாக கடந்து செல்ல முடியும். பொதுமைக்கும் குறிப்பானதற்கும் இடையிலான, தலைகீழ் விகிதத்திலான ஒரு இயங்கியலின் ஊடாக - நீங்கள் பிரச்சினையை வைக்கும் முறையில் சுத்தமாக மறைந்துவிடுகிற ஒரு இயங்கியல் - பருண்மையான உள்ளுர் யதார்த்தங்களிலிருந்து தொடங்கி சர்வதேச இயக்கத்திற்கு நகர்த்தல், மார்க்சிய சர்வதேசியவாதத்தின அணுகுமுறை இதுதான்.

ஒப்புக்கொள்கிறேன். எனது அணுகு­முறை விவாத நோக்கில் இருந்ததால் சற்று ஒருதலைச் சார்பானதாக இருந்தது; ஒரு மிகைப்படுத்தலுக்கு எதிராக இன்னொரு திசையிலான மிகைப்படுத்தலாக இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால், நீங்கள் சொல்வது சரிதான் நாம் ஒரு இயங்கி­யலைக் கட்டமைக்க வேண்டும். ஆனால், இதில் நாம் ஒன்றுபட்டாலும்கூட, அதன் தன்மைக்கு வரும்போது, நாம் முரண்பட்டுக் கொள்வோம். தேசியப் போராட்டங்களில் புரிந்துகொள்வதற்கான தீர்மானகரமான கோட்பாட்டுச் சட்டகம், உலக அளவில் நடைபெறும் வர்க்கப் போராட்டம் குறித்த ஒரு சர்வதேசிய கோட்பாட்டுச் சட்டகம்தான் என்று நம்புகிறேன். உலகப் போராட்டம் குறித்த கோட்பாட்டின் முக்கிய சரடுகளை முன்கூட்டியே கற்றுத் தேறாமல் பொலிவியாவில் நடைபெறும் நிகழ்வுக்களை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. என்றாலும், நடைமுறையில் துவக்கப் புள்ளியாக இருப்பது, நடைமுறை தீர்மானகர காரணியாக இருப்பது, தேசம்தான். பொலிவியாவின் தேசிய வர்க்கப் போராட்ட நிலைமைகள் குறித்த ஆய்வே துவக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், உலக நிலைமை பற்றிய விரிந்த கோட்பாட்டுக்கு ஆய்வு பயனுள்ளதாக இருக்காது; உண்மையான வரலாற்று மாற்றங்களைக் கொண்டுவர அதனால் முடியாது. இங்கு, ஒரு பரஸ்பர வினையாக்கம் இருக்கிறது. கோட்பாட்டளவில் முதன்மையாக இருப்பது எப்போதும் செயலளவில் முதன்மையா­னதாக இருக்க முடியாது. ஒருவேளை இதில் சர்வதேசியத்தை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டே தேசிய நிலை­மைகளைக் கையாள்வது, ஆனால் சர்வதேசியத்தை அங்கே வைக்காமலி­ருப்பது என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது போல. தப்பித்தவறி அதை வைத்துவிடுவது, எல்லாம் கெட்டுவிடுவதற்கான அறிகுறியா­கி­­விடக்கூடும்.

இறுதியாக, நாம் எப்போதும் சர்வதேச அளவில் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதைப் பற்றிப் பேசக்­கூடாது என்று வேண்டுமானால் சொல்ல­லாம். அதைப் பேசுவதை நிறுத்தும்போது­தானே ஒரு கட்சி வலுவானதாக அதாவது தேசியமானதாக ஆகிறது. அந்தப் புள்ளியில் தானே ஒரு குழுவாக இருப்பதி­லிருந்து மாறி, ஒரு வெகுமக்கள் கட்சியாக 'பின்னடைவுக்கு” சபிக்கப்பட்டதாக மாறுகிறது. இதுபோன்ற திருப்பங்கள் சர்வதேச பொதுவுடமை இயக்க வரலாற்றில் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. 1935-36 காலகட்டத்தில் Pடுகு ஒரே மூச்சில் உள்ளுரளவிலான ஒரு மூடிய பாட்டாளி வர்க்க முன்னணிப்படை என்ற நிலையிலி­ருந்து ஒரு வெகுமக்கள் கட்சியாக மாறிய அந்த நிகழ்;வு ப்ரெஞ்சு கம்யூனிச இயக்க வரலாற்றில் முக்கியமான ஒன்று. இது பிறகு திரும்பிப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு. 1943-ல் இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இதே நிகழ்ந்தது.

ஆக, சர்வதேசியத்திற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால், அதை வெகுமக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதால் அதைப் பற்றி ஒருவர் பேசக்கூடாது என்று சொல்ல வருகிறீர்கள். முன்னணிப் படை புரிந்து கொண்டதை உதராணத்திற்கு, சர்வதேசப் பரிமாணம், இன்ன பிற - கிரகித்துக் கொள்ளவே முடியாத, திருத்த முடியாத மந்தைக் கூட்டம் என்கிற, வெகுமக்கள் குறித்த ஒரு இயங்காவியல் கண்ணோட்டம் இல்லையா இது?

இல்லை. இது தேர்தல் பாதைக்கு மாறிவிடுவதோ வெகுமக்களின் நிலைக்குத் தாழ்ந்துவிடுகிற சந்தர்ப்பவாதமோ இல்லை. எந்த ஒரு சமூகச் சூழலிலும் செயல்படுகிற சக்திகளின் படிநிலை வரிசைகளில் உள்ளுர் காரணிகளின் அமைப்பே தீர்மானகரமா­னதாக இருக்கிறது என்பதே இங்கு முக்கி­யமான புள்ளி. இது ஒரு செயல் அளவி­லான பிரச்சினை. இப்போது, 1976-ல், ப்ரான்சில் நாம் செய்யவேண்டியது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கான பதில் ப்ரெஞ்சு சமூக அமைவிற்கு இருக்கிறதே ஒழிய அதற்கு வெளியில் எங்கும் இல்லை. சர்வதேச அல்லது ஐரோப்பிய போராட்டங்கள் பற்றிய இருப்புநிலை அறிக்கையிலேயே (Balance-sheet), ஆய்விலோ அதைத் தேட முடியாது. பகுதியே (local) எப்போதும் தீர்மானகரமான காரணியாக இருக்கிறது. நாம் ஒரு மிகச் சாதாரணமான உண்மையை சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருக்­கிறோம். 'அகக் காரணியின் ஊடாகவே புறக்காரணி செயல்பட முடியும்” என்று மாவோ இதை அழகாகச் சொல்லியிருக்­கிறார். அகக்காரணி அவசியம் உள்ளுக்­குள்தான் இருக்கும். செயலில் இருக்கும் எந்த ஒரு சக்தியிலும் அதிகபட்ச வினாவைக் குறிக்கும் புள்ளியாக இருப்பதால் இந்த அகக்காரணிக்கே எப்­போதும் அதிக அழுத்தம் தரப்பட வேண்டும். மிக எளிமையான, இயக்க நுட்பம் குறித்த கேள்வி என்று ஒருவர் இதைச் சொல்லலாம். காரணத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அதன் பிறகு, நிலைமையை மாற்றியமைக்­கும் சாத்தியங்களை உள்ளடக்கிய இந்தப் புள்ளியின் மீது முழுச் சக்தியையும் ஒருவர் பிரயோகிக்க வேண்டும். செயலுhக்கமான காரணிகள் எப்போதுமே நுண்ணிய பொருண்மையானவை; பிரம்மாண்டமான கற்பனைத் திட்டங்களோ, ஆதாரப் புள்ளிக்கு வெளியே இருக்கிற அலங்காரங்களோ அல்ல. ஆக, மிகச் சாதாரண, இயக்க நுட்பம் குறித்து கேள்வி இது. வெகுமக்க­ளுக்குப் புரியாத ஒரு மொழியில் அவர்களி­டமிருந்து விலகி நின்றுப் பேசுவதைத் தவிர்ப்பது பற்றியது அல்ல. வியட்நாமைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்றால், அந்தப் பிரச்சினை அவர்களுக்கு நேரடியாக தொடர்பில்லாத 'ஆனால் மறைமுகமாகத் தொடர்புள்ள” ஒன்று என்று யதார்த்தத்­திலிருந்து எழுகிற ஒரு உபவிளைவு என்பதுதான் விடயம். நேரடியான காரணங்கள், அக்கறைகள் மீது ஒருவர் நேரடியாகத்தான் வினையாற்ற வேண்டும்.

ஆகஸ்டு 1914 -ஜெர்மனி பற்றிய உதாரணத்திற்கு திரும்பவும் போக விரும்புகிறேன். புரட்சிகர நடவடிக்கையை விரும்பிய அன்றைய புரட்சியாளர்கள், அந்தக் காலத்திய ஜெர்மானிய சமூக அமைப்பு, சமூக வர்க்கங்கள், அரசியல் சக்திகள், வெகுமக்களின் உணர்வுநிலை, ஜெர்மன் தேசியப் பாரம்பரியம் இன்ன பிறவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லத் தேவையில்லை. ஆனால், வெகுமக்களால் சர்வதேசியத்தை என்றுமே புரிந்துகொள்ள முடியாது என்று ஒருவர் எடுத்துக் கொள்ள முடியாதவரை, இந்தப் பருண்மையான நிலைமைகள் குறித்த ஆய்வு, ஒருவரை வெகுமக்களை அப்போதைய அவர்களது உணர்வுநிலைக்கு மேலாக கொண்டுவர - அதாவது தேசிய வெறியிலிருந்து, கெய்சரை ஆதரிப்பதிலிருந்து - உதவக்கூடிய ஒரு யுத்த தந்திரத்தையும் போர்த் தந்திரத்தையும் வகுப்பதற்கு இட்டுச் செல்ல வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நிலவுகிற சமூக அமைவை பருண்மையான துவக்கப் புள்ளியாகக் கொள்வதற்கும் சர்வதேச யுத்த தந்திரம் ஒன்றை வகுத்துக் கொள்வதற்கும் இடையில் எந்த முரணும் இல்லை. ப்ரான்சில் இன்றைக்கு புரட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தற்போது அவர்கள், மூவர்ணக் கொடியையும் தேசிய கீதத்தையும் நிராகரிக்கவும், 'எல்லா எல்லைகளும் தகரட்டும்” என்று முழங்குவதையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதேநேரத்தில் இன்னொரு பக்கம் பிரிட்டானியர்கள் (Bretons) மற்றும் கார்ஸிக்கர்களுடையழூ உரிமைகளுக்காகப் போராடவும் செய்கிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தேசியச் சின்னங்கள், அடையாளங்கள், மன அமைவுகளைப் பொருத்தவரையில், புரட்சிகர மதிப்புகள் என்று சொல்லப்படுகிற­வற்­றுக்கு எனது நிலை முற்றிலும் எதிரானது. தேசிய பாரம்பரியத்தை மீட்டெடுக்காத வரைக்கும் ப்ரான்சில் புரட்சி சாத்தியமே­யில்லை என்பது என் நம்பிக்கை. தேசியப் பாராம்பரியம் என்கிற இந்தச் சரியான பாதைக்கு திரும்புவதன் வழியாகத்தான் அதிலிருந்து விடுபடுவது பற்றி நாம் யோசிக்கவே முடியும். தொடர்ச்சியும் புதுமை புனைதலும் என்கிற உயர்வான இயங்கியல் என்பதற்கு மேலாக இதில் எதுவும் இல்லை: பழையவற்றின் தொடர்ச்சியை அங்கீகரிக்­கும்போதே புதுமை புனைதல் சாத்தியம். எனக்குத் தெரிந்த புரட்சியாளர்கள் எல்லோருமே தனிப்பட்ட முறையில் மிகத் தீவிரமான தேசபக்தர்களாக இருந்தவர்கள் - ஆச்சரியம்! ஆச்சரியம்!” அவர்களுடைய 'சர்வதேசியம்” பொதுவில் ஒரு தேசிய மீட்;புவாதமாகவே (messianism) இருந்தது. மேலும், கியூபாவிலும் வியட்நாமிலும் ஒரு புரட்சியாளராக இருப்பது என்பது - இப்போது தொழிலாளர் அரசுகள் இருக்கும்போது மட்டுமல்ல, அதற்கும் முன்னும் கூட - தேசியவாதியாக இருப்பதுதான். ஒரு ஆதிக்க தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிற நாம், நம்முடைய தேசியப் பாரம்பரியம் அனைத்தையும் நிராகரித்துவிட வேண்டுமா அல்லது அந்தப் பாரம்பரியத்தில் ஆதிக்கக் கறை படிந்ததை அதன் ஏகாதிபத்திய வேர்களை மட்டும் விலக்கிவிட வேண்டுமா என்பது நம் முன் உள்ள கேள்வி. மோசமான பக்கங்களை விலத்திவிட வேண்டுமா என்பது நம் முன் உள்ள கேள்வி. மோசமான பக்கங்களை விலத்தவிட்டு, சாதகமான அம்சங்களை விதைக்க வேண்டும் என்பது என் கருத்து; அதுவும் பிந்தையவற்றுக்கு ஃப்ரான்சில் ஒரு வலிமையான வரலாறு இருக்கும் போது.

இந்த நாட்டில், இதன் வரலாற்றில் மிகச் சிறந்ததாக இருக்கிற அத்தனையையும் உருவாக்கிய உரு புரட்சி, தற்போது வெறுமனே ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சி என்று இகழ்ந்து பேசப்படுகிற - இங்கு நிகழ்ந்திருப்பது நமது அதிர்ஸ்டமே. வேல்மி, புனித ஜஸ்ட், பாரீஸ் கம்யூன், ஆக்கிரமிப்பு எதிர்ப்பு முன்னணி (resistance), என்று நமது புரட்சிகரப் பாரம்பரியம் செறிவானது. மேலும், அதன் இயற்கையிலேயே மிகப் பிற்போக்கானதாக இருக்கிற, வெகுமக்கள் முன்னணியை விட ஹிட்லரை விரும்புகிற, வெளிநாட்டுச் சக்திகளின் உதவியை நாடுகிற ஒரு ஆளும் வர்க்கம் நமக்குக் கிடைத்திருக்கிற போது இவற்றை நாம் இன்னும் முழுமையாக பயன்படு;த்திக் கொள்ள வேண்டும். புரட்சியின் நலன்க­ளோடு தேசிய நலன்களும் கலந்திருப்பதால் நாம் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையின்மையோ சந்தர்ப்பவாதமோ இங்கு உதவாது. பாருங்கள், மார்செய்ல்ஸ் (சர்வதேசிய கீதம்) 'சபியுங்கள் அதை, ஒரு புரட்சிப் பாடல் இல்லையா;” எங்கோ பொலிவியத் தொழிலாளர்கள் அதைக் பாடக் கேட்டிருக்கிறேன். ஈக்லின் போட்டியர் (Eugene Pottia) என்ற கைவினைஞன் 1871- ல் இயற்றிய இந்த ப்ரெஞ்சுப் பாடலை மாஸ்கோவின் செஞ்சதுக்கத்திலும் பீகிங்கின் டியன் -மென் சதுக்கத்திலும் கோடிக்கணக்­கானவர்கள் பாடக் கேட்கும் போது, ஒரு ப்ரெஞ்சுக்காரன் என்ற முறையில் நான் புல்ல­ரித்துப் போகிறேன். நமது சொந்த மக்களுடைய தேசிய வேர்களை அங்கீ­கரிக்க மறுத்தவிட்டு, மற்ற தேசத்து மக்களு­டைய உணர்ச்சிகளை அக்கறையோடு பார்ப்பதை, சீன தேசியத்தை ('மாவோயிசம்” என்ற போர்வையில் மறைந்து கொண்டி தேசியவாதம்), அல்ஜீரிய தேசியத்தை, கியூப, வியட்நாமிய தேசியங்களை மதிப்பதையே சர்வதேசியம் என்று நமது புரட்சிக்காரர்கள் சொல்லும்போது, எனக்கு எரிச்சலும் குழப்பமுமாகவே இருக்கிறது.

கோட்பாட்டளவிலும் சரி, நடைமுறையி­லும் சரி, செங்கொடிக்கும் மூவர்ணக் கொடிக்கும் எந்த முரண்பாடு தெரியவில்லை. தேசியப் பொதுவுடமைப் பாதையை நான் முழு மனதோடு ஏற்றுக் கொள்­கிறேன். எங்கெல்லாம் பொதுவுடமை கொஞ்­சமாவது அர்த்தமுள்ளதாக இருக்­கிறதோ அங்கெல்­லாம் அது யுகோஸ்லோ­வியாவைப் போல, சீனா, கியுபாவைப் போல, தேசியப் பொதுவுட­மையாக இருக்கிறது. தெய்பிங்குகளை முன்னோர்க­ளாக வரித்துக் கொண்ட சன்யாட்சென்-னின் வழி வந்தவராக சொல்லிக் கொண்டே மாவோ ஜப்பானியர்களை எதிர்த்து நின்றார். கியுபாவில் ஃபிடல் உருவானது ஜோஸ் மார்ட்டியின் வழித்தோன்றலாகவே. இன்றைய ஃபிரான்சில் ஒரு புரட்சியாளனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், புரட்சிகரமான ஒரு மாபெரும் தலைவன் இங்கு உருவானால் நிச்சயம் அவன் கடந்தகால ப்ரெஞ்சு தேசிய நாயகர்க­ளின் மிகச் சிறந்த பண்­புகளையும் பாரம்பரியங்­களையும் உட்கிரகித்துக் கொண்டவனாக இருப்­பான் என்று உணர்கிறேன். வெட்டவெளிச்சமான உண்மை இது. ஆனால், பிரான்சில், தேசிய உணர்வுகள் மழுங்கிக் கொண்டிருக்கிற தந்போ­தைய சூழலில் - இந்த மேலோட்­டமான தோற்றத்­தைக் கண்டு நாம் மயங்கிவிடக் கூடாது என்றாலும் கூட 'மிகவும் அழுத்தமாக சொல்லப்பட வேண்டிய ஒரு உண்மை. ஒடுக்கும் தேசத்திற்கும் ஒடுக்கப்படும் தேசத்திற்குமி­டையிலான பண்பளவிலான வித்தியாசம் மட்டுமே இங்கு நம்மை வழிநடாத்துவதாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒடுக்கும் தேசத்தின் தேசியப் பாரம்பரியத்திற்குள்ளேயே நமது கவனத்தைக் கோருகிற மறைக்கப்பட்ட கூறுகள், பழைய அடக்குமுறைகளின் நினைவுச் சின்னங்கள் நிறைய இருக்­கின்றன. பேட்சின் (Petsin) இங்கு நமக்குத் தேவையில்லை; ஆனால் ஜீன் மொலினின் - ஒரு உதாரணத்திற்கு, பாரம்பரியம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.



அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு புரட்சிகர கட்சி பாரம்பரியத்தையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போது நான் அதோடு உடன்படவே செய்கிறேன். ஆனால், எல்லாவிதமான வர்க்க சமரசங்களுக்கும் தேசப்பற்று அல்லது, தேசியக் கருத்தியலே (ideology) வசதியான ஒரு கருவியாக, எல்லா சமூக முரண்பாடுகளையும் பூசிமெழுகி விடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு புனிதக் கூட்டாக அதனால் ஆதிக்கக் கருத்தியலின் மிக இயல்பான ஒரு ஊடகமாக இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தொடர்ச்சியை சுவீகரித்துக் கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை; குறைந்தபட்சம் ஒருவர் அதை விமர்சிக்க வேண்டும்; அடித்து வளைக்க வேண்டும். சீனா, கியுபா போன்ற ஒடுக்கப்பட்ட தேசங்களில் பிரச்சினை இது போல இல்லை. ஆனால் பிரான்சில் மூவர்ணக் கொடி கம்யூனை நசுக்கிய வெர்செய்ல்சின் - முதலாளிகளின், பேரரசின் கொடியாகவும் இருந்தது. விஷயங்கள் அவ்வளவு நேராக இருப்பதில்லை. தேசப்பற்று ப்ரெஞ்சு மக்களின் அபினாகவும் இருந்திருக்கிறது; 1914-ல், 19139-ல் நிகழ்ந்தது போன்ற எல்லாவிதமான அட்டூழியங்களும் அதன் பெயராலேயே நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், ஒருவர் என்னதான் முயற்சித்தாலும் கூட முயற்சிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன் - இந்தத் தொடர்ச்சியை எந்தப் புரட்சிகர நோக்கத்திற்காகவும் சுவீகரித்துக் கொள்ளும் முயற்சி மிகவும் சிரமத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது. பிரான்சுக்கு பல பாரம்பரியங்கள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்; இதில் எதை எடுத்துக் கொள்வது, எந்தப் பருண்மையான வழியில் இதைச் செய்வது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

நீங்கள் சொல்லும் விமர்சனப்பூர்மவான தேர்வு என்பது மிகவும் அவசியமானதுதான். அதில் சந்தேகமில்லை. வரலாற்று ரீதியாக ஒரு ஒடுக்கும் தேசத்தைக் சேர்ந்தவர்கள் என்கிற நிலைமை எழுப்பும் சிக்கலோடு இது பிணைந்திருக்கிறது. என்றாலும், தேசியத்தை அதற்குள் ஒடுக்கப்பட்டு, மறைக்கப்பட்டிருக்­கிற கூறுகளோடு சேர்த்து, ஒட்டுமொத்தமா­கவே நிராகரித்துவ விடுவது என்பது மோசமான விளைவுகளை விலைகொடுத்து வாங்கிவிடுவது போலா­கிவிடும். ஜாகோபி­யன் மீட்புவாதத்தின் (Jacobian Messianism) பால் எனக்குள்ள தனிப்பட்ட விருப்பை, சாய்வை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்­படையாக அறிவித்துக் கொள்கிறேன். 1792இ 1848-களின் ஜாக்கோபியன்வாதம் எனக்குப் பிடித்தமானது மட்டுமல்ல, ஒரு அர்த்தத்தில் எனது இயல்பும் கூட. ஐரோப்பாவின் விடுதலைக்கு ப்ரான்ஸ் மறுபடியும் புரட்சிச் சுடரை ஏந்தும் என்று எப்போதுமே நான் நம்பி வந்திருக்கிறேன். விடுதலைப் பாதையை உறுதியாகப் பிடித்து புரட்சிகரமான ப்ரான்சின் மேலாண்மையில் கீழில்லாமல் ஐரோப்பாவிற்கு வேறு எந்த நம்பிக்கையும் எனக்குத் தோன்றவில்லை. 'போக்ருக்கு எதிரான” (anti-Boche) அந்த மொத்த புராணக் கற்பனையும் ஜெர்மனிக்­கெதிரான மத அடிப்படையில்லாத நமது பகையும் என்றாவது ஒருநாள் புரட்சியை ஏன் நமது தேசிய ஜனநாயகப் பாரம்பரியத்­தைக்கூட காப்பதற்கு நமக்கு உதவாமலா போய்விடும் என்று சிலநேரங்களில் நான் வியப்பதுண்டு. ஆனால், தயவுசெய்து மன்னியுங்கள். இதோடு ஒரு அரசியல், கோட்பாடு விவாதத்தைச் தூண்டச் செய்வதற்கான எனது இந்த முயற்சியை முடித்துக் கொள்ள அனுமதியுங்கள். எதிர்முனைகளில் நின்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க, பரிச்சியமானவற்றுக்கு அப்பால் போகத் துணியத் தூண்ட, செய்த முயற்சி இது. அதன் மூலம் நாம் எல்லோரும் வாழவும் சிந்திக்கவும் பழகிக் கொண்ட ஒரு அமைப்பின் உறுதியை சோதித்­துப் பார்க்க உதவுவது மார்க்சியத்தை ஒழித்துக்கட்­டுவதற்கு அல்ல, அதை உலுக்கி மீண்டு உறுதியாக்கவே இந்த முயற்சி.


New Left Review, Number : 105

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More