Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

பாலியலின் அரசியல் பொருளாதாரம்

கல்பனா அறிமுகம்: நமது சமகால பெண் விடுதலை இயக்கங்களில் நிலவுகின்ற பாலியல் வகை மாதிரிப் பாத்திரங்கள் பாலியல் வன்முறை, தொல்லைகள், நிறுவனமயமாக்கப்பட்ட தாய்மை, வீட்டு வேலைமுறையிலும் உழைப்புச் சந்தையிலும் பெண்களின் நிலை இன்னும் பல விடயங்கள் குறித்தும் அக்கறையோடு அலசுகின்ற ஏராளமான எழுத்துக்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் பலவும் ஒரு வரலாற்றுக் கட்டத்திற்குள் வைத்து ஆராயப்பட்டிருக்கிறது. பெண்ணிய ஆய்வுகள் இத்தகைய பிரச்சனைகளை நோக்கும் முறையையே மாற்றியமைத்திருக்கிறது. இந்தக் கட்டுரை தற்போது நடைமுறையில் உள்ள பாலியல் வழக்கங்கள், அவற்றின் சமூகப் புலம் குறித்து அலசி ஆராய்ந்து விளக்கிறது. கார்ல்மார்க்சின் மதிப்பு விதி குறித்த கோட்பாட்டை ஒத்தமுறையில் ஓரினச் சேர்க்கை மற்றும் ஆண்-பெண் சேர்க்கை பால் உறவுகள் ஆராயப்படுகிறது. ஆண்-பெண் சேர்க்கை உறவுகள் பெண்களின் பாலியல் இன்ப நுகர்வு நிறைவெய்வதைப் பொருட்படுத்தாது, ஆண்களின் இன்ப நுகர்ச்சியை திருப்தி செய்யும் வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு கட்டுரை வருகின்றது. இதற்கு மாறாக, ஓரினச் சேர்க்கையாளரின் பாலுறவு இயக்கங்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் இருவருக்குமே நிறைவு தருவதாக இருப்பது தெரிய வருகிறது. ஆதிக்கம், அதிகாரம், ஏற்றத் தாழ்வுகள் அற்ற ஒரு பாலியல் அமைப்பைக் கட்டமைக்க வேண்டுமென்றால் நிலவுகின்ற ஆண்-பெண் சேர்க்கை உறவுகளின் கட்டமைப்புகளிலிருந்து விலகி புணர்ச்சியை பாலியல் நடவடிக்கையின் மையமாக வரையறுக்காத ஒரு பாலியல் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும், கட்டமைக்கப்பட வேண்டும். இன்னும் சொல்லப் போனால் Ann Kodrs (1971) “The myth of the viginal orgasm” மற்றும் Shese hires the hires report (1976) குறித்த தவறிய நம்பிக்கை என்ற புத்தகமும் அறிக்கையும் பெண்பாலுறவு பற்றிய முக்கிய இரண்டு ஆய்வேடுகளாய் நாம் கருத்தில் கொள்ளலாம். ஏனெனில் இவ்விரண்டுமே பெண்பாலுறவு என்ற ஒன்றை அரசியலோடு பின்னிப் பிணைத்த மனித உயிரியல் தொடர்பான ஒரு கூட்டுக் கலவையாக பாவிக்கின்றன. சொந்த ”அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்” நிலையில் இருந்து முன்னேறி ஆண்கள் எப்படி பாலுறவு என்ற அமைப்பை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். குறிப்பாக சொல்லப் போனால் ஷெய்ட் பல உதாரணங்கள் மூலம் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் பாலுறவு முறையில் ஆணுடைய திருப்தியே மேலானதாக கருதப்படுகிறது என்பதை ஹெய்ட் தன்னுடைய அறிக்கையில் விளக்குகிறார். பாலுறவு முறைகளே சமுதாயத்தில் உருவாக்கப்படும் கட்சியமைப்புகள் என்று கூறும் ஹெய்ட்டினுடைய தெளிவான பார்வையே அவருடைய ஆய்விற்கு ஒரு இன்றியமையாத சிறப்பை வழங்குகிறது. அவருடைய புத்தக தரவானது நன்முறையிலான பாலியல் செயற்பாடுகளை தெளிவாக விவாதிப்பதோடு திருமணம் ஆக்கப்படாத பாலுறவு முறையே அமைவதையே நோக்கமாக கொண்டு பிரயோகித்த போல ஆண்வழி சார்ந்த சமூகத்தின் பாதிப்போடு கூடிய நாம் பாலுறவு முறையே விரும்புவதற்கு முறையான ஒரு பாலுறவு தொடர்பான மேலும் ஒரு ஆய்வை வழங்குவதும் மறைக்கப்படும். அல்லது வெளியில் பேசப்படாத சில பாலியல் நுனுக்கங்களை வெளியே கொண்டு வருவதும் என்னுடைய நோக்கமாகும். என்னுடய இந்த முறையை இருபாலுறவின் 'சரிசம இன்பம்” என்று கருதப்படும் ஒன்றைப்பற்றி நன்றாக ஆராய்வதன் மூலம் இருபாலினரிடையே இருக்கும் சமத்துவமற்ற தன்மையை திரைவிலக்கி காட்ட விரும்புகிறேன். சல்லாபமுறை ஆண்-பெண் உறவை மட்டுமே பிரத்தியகப்படுத்தி சாட்டுப் போக்கையும் ஆண்-பெண் சேர்க்கையில் பெண் அடையும் இன்பம் இரண்டாம் தரமாக கருதப்படும் நிலையையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்ற கோட்பாடாக பரப்பி பழக்கப்படுத்தி வந்திருக்கிறது. அதாவது ஆண்-பெண் சேர்க்கைதான் பாலுறவு முறை என்பது போலவும் அதில் மிகுதியான அன்பு இன்பம் தயக்கப்­படுவதாலும் அதுவும் ஈடுபாட்டின் இருபாலருக்குமே சமபங்கு திருப்தி கிடைப்பதாகவும் சல்லாபக் கோட்பாட்டின் படி நம்பப்படுகிறது. எனினும் இப்படிப்பட்ட பிரகடனங்கள் இருந்தாலும் உண்மையில் ஆண்-பெண் உறவென்பது சமத்துவமற்ற ஆற்றலுடன் கூடிய உறவாகவும் ஆண்களுக்கு மட்டுமே பாலுறவில் பெருமளவு இன்பம் வழங்கக் கூடிய முறையாகவும் திகழ்கிற அரங்கத்தை ஒத்ததாக இருக்கிறது. உறவு பிணைப்பின் மூலம் ஆண்களுக்கு மட்டுமே பெருமளவு பாலின்ப பங்கை ஒதுக்கின்ற சூழலோடு பாலுறவில் பெண்கள் பொருளாதார ரிதியில் ஆண்களை சார்ந்த நிலையின் தாக்கம், ஆண்களின் வன்முறை, காழ்புணர்ச்சியோடு ஓரினச்சேர்க்கையா­ளரை பழிவாங்கும் சமூகப் போக்கு, இப்படிப் பழிவாங்குவதன் மூலம் சமமற்ற அண்-பெண் சேர்க்கை முறையை சமூகம் பாதுகாத்து வளர்க்கும் விதம் என்ன விற்றை எல்லாம் வியக்க இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் பின்னணியில் ஓரினச் சேர்க்கை பற்றியும் பார்க்கலாம். அவ்வுறவு முறைகளைப் பற்றி ஆராயலாம். ஓரின சேர்க்கை உறவு முறையின் படி இப்பாலுறவு முறையில் ஈடுபடும் அடுத்தவரை தங்களுடைய சக சமுதாய உறுப்பினராகவே பார்க்கும் மனோபாவத்­தோடு பாலுறவு இன்பம் சம அளவில் நுகரப்படுவதாக தெரிகிறது. இதுவே இக் கட்டுரையின் மையக் கருத்தாகும். இருப்பினும் இத்தகைய ஓரின உறவு பழக்கத்தை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்­தும் நோக்கத்தில் அப்படிப்பட்ட உறவில் ஈடுபடுவோர் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலமாக ஒடுக்கப்படுகிறார்கள். எனவே தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் சுதந்திரத்தைப் பரப்பும் இயக்கத்தின் இன்றியமையாமையையும் இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு எல்லா பெண்களுக்குமே (ஓரின அல்லது ”நேரான” உறவுப்பழக்கமுள்ள­வராக இருந்தாலும்) தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிவாக்க விரும்புகின்றேன். இறுதியாக பாலுறவு முறை சீர்திருத்தப்பட்டு ஒரு புதிய உறவு முறை மலர வழிவகுக்கும். சமூக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை முன்மொழிய இருக்கின்றேன். இந்தக் கட்டுரை எப்படி ஆண் சார்ந்த சமூக உறவுமுறையை உருவாக்கியிருக்ககூடும் என்ற கேள்வியைப் பற்றி ஆராய்ந்து எடுக்கும் நோக்கம் அல்ல. இந்த ஆண் ஆதிக்க உறவுமுறைக்கு வழிவகுத்திடும் கருத்துக்களை நம்மால் யூகிக்கத்தான் முடியும். பெண்களை ஒடுக்கும் சூழலின் போக்கை குறித்தும் சமத்துவமற்ற நிலை என்பது ஆண்களின் அதிகார மிரட்டலா அல்லது பெண்களின் பொருளாதாரப் பலவீனத்தாலா என்பவற்றைக் குறித்தெல்லாம் அடிக்கடி பெண்ணிய வாதிகளுக்கு இடையே விவாதங்கள் நடந்து வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆய்வுகள் பாலியல் இயல்பையும் பெண்ணிய வாதிகளையும் பற்றி நன்கு விளங்கிக் கொள்ள உதவுகிற அதேவேளையும் தற்கால சமூக யதார்த்த நிலையை மையமாகக் கொண்ட ஒரு அலசல் தேவைப்படுகிறது. இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமே அப்படிப்பட்ட தற்கால பாலியல் நடைமுறை மற்றும் அதனுடைய சமுதாய பின்னணி போன்றவற்றைக் குறித்து விவாதிப்பதுதான். எப்படி ஆணை மையப்படுத்துகிற ஈரினச் சேர்க்கை ஆணுக்கு எந்த முக்கியத்துவம் கொடுக்கிறது அதை சமுதாயம் எந்த அளவிற்கு பின்பற்றுகிறது என்பதை எல்லாம் வெறுப்புதன் தோன்றுகிறது. இந்நிலைமையின் அடிப்படையை அலசுவது இக்கட்டுரைக்கு அப்பாற்பட்டதாகும். ஈரின உறவு முறைகள்:- Shere hite (1976) சியர் ஹெய்ட்டின் அறிக்கையில் பெண் பாலுறவு குறித்த தேசிய அளவிலான கருத்தாய்வின்படி கணக்கில் எடுக்கப்பட்ட பெண்களில் 82 சத வீதத்தினர் தாம் சுய இன்பம் அனுபவிப்பதாகவும் அவர்களே 95 சதவீதம் பாலுறவு பரவச நிலையை சுலபமாக அடிக்கடி அனுபவிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்கள். இன்னும் சொல்லப் போனால் ஹெய்ட்டின் கண்டுபிடிப்பின்படி பாலுறவு பரவச நிலையையும் சுய இன்பத்தையும் ஒன்றாகவே பெண்கள் கருதுகிறார்கள். சுய இன்பத்தின் பொழுது பெண்கள் பரவச நிலையை அடைகிறார்கள் என்ற உண்மை பெண்கள் பாலுறவில் உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்­தாதவர்கள் என்றும் பெண்கள் பரவச நிலையை ஆற்றல் அற்றவர்கள் என்றும் நம்பப்படும் தவறான வாதத்தை இருக்கிறது. இந்த நம்பிக்கை கூற்றோடும், யூகத்தோடும் தொடங்கி மேலும் ஹெய்ட் இருபால் உறவுமுறை கூறுகளான ( Fore play Peneteration ) செயல்பாடுகள் பெண்களுக்கு எதிராகவே இருந்து வருகின்றது என்று விளக்குகிறார். ஹெய்ட்டின் அய்வின்படி 30 சாவீதப் பெண்கள் மட்டும் தான் பாலுறவு பரவச நிலையை ஆண், பெண் புணர்ச்சியின் பொழுது அடைவதாக கூறியுள்ளார்கள். அத்தோடு அப்பரவச நிலை என்பது வழக்கமாக பெரும்பாலும் பெண்ணின் கணக்கின் முயற்சிகளின் மகளிர்சத்தை தூண்ட எடுத்துக் கொள்ளப்படும் பெண்ணின் கணக்கிட்ட ஒரு துல்லியமான முயற்சியின் விளைவாகத்தான் பெண்கள் பரவச நிலை எட்ட முடிகிறது. அதிலும் குறிப்பாக இந்த தூண்டல் ஆணினுடைய பொது உறுப்பால் தூண்டப்படுவதால் மட்டுமே வழக்கமாக அடைய முடிகிறது. புணர்ச்சியின் போது ஆண் பிறப்பு உறுப்பு உள்ளே செலுத்தப்படுவதால் மட்டுமே மறைமுகமாக ஏற்படுத்தப்படும் தூண்டல் பெண்களுக்கு பரவச நிலையை உண்டாக்குவதற்கு போதுமானதாக இல்லை. (ர்வைந 1976 - 168) அதே சமயம் புணர்ச்சி ஆண்களின் பால் இன்பத்தை நல்ல முறையில் அணுகுகிறது. புணர்ச்சியின் போது ஆண் உறுப்பு பெண் மர்ம உறுப்பு சுவர்களின் உராயச் செய்வதன் மூலம் சுய இன்பத்தின் போது பெறப்படும் தூண்டல் உறுதி செய்யப்படுகிறது. எனவே வழக்கமாக ஆண்கள் புணர்ச்சியின் போது பரவச நிலையை அடைவார்கள். இது ஆண்களின் உடல் சார்ந்த உயிரியல் அமைப்பிற்கு உகந்ததாய் இருக்கிறது. இப்படி செய்வதால் எல்லா ஆண்களும் எப்பொழுதும் புணர்ச்சியின் பொழுது பரவச நிலையை அடைகிறார்கள் என்று பொருளாகாது. எடுத்துக் காட்டாக ஆண்கள் தம்முடைய விரைப்புத் தன்மையை புணர்ச்சியின் போது இழக்கலாம். இருந்தாலும் ஆண்களிடையே இந்த பாலுறவில் செயலாற்றும் திறனில் ஏற்படும் கோளாறும் சமுதாயத்தில் அதிகரிக்கப்பட்டு நிறுவனமாக்கப்பட்டுள்ள காலம் காலமாய் பின்பற்றப்பட்டு வருகின்ற பாலியல் முறையின் ஏற்றத் தாழ்வான நிலையால் ஏற்படுவதில்லை. அண்களுடைய பாலியல் பிரச்சனைகள் பேசிய (ஆண்மைத் தன்மையின் மேல் மலட்டுத் தன்மை, போதை மருந்து பழக்கம், மது அருந்தும் பழக்கம், பெருஞ்சோர்வு, தளர்வு நிலை) பூதாகமான பிரச்சனைகளின் விளைவாக தோன்றுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. (hite- 1981-402) மற்ற பல்வேறு வகையான பாலுறவு வெளிப்பாடுகளை விட ஆண், பெண் புணர்ச்சி வடிவம் செலுத்துகிற ஆதிக்க நிலையும் புணர்தல் ஒன்றுதான் பாலுறவு இன்பத்தின் அடிப்படை இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையும் பெண்களை ஒடுக்குகிற கோட்பாட்டையும் பாலியல் அல்லது சமுக உறவு முறைகளையும் தான் கொண்டு இருக்கிறது. ஈரினச் சேர்க்கை உறவு முறை வகுக்கப்பட்ட விதத்தின் படி ஆண்கள் விந்து வெளியேற்றலுக்கான வழியை வரையறையைச் செய்யப்பட்ட பாலுறவு முறைகளால் ஆண்கள் பாலுறுவு பரவச நிலையை பெருமளவு அடைகிறார்கள். ஆனால் அதே சமயம் மகளிர் கந்து தூண்டல் என்ற ஒன்று வெறும் பாலுறவு சல்லாப நிளையாட்டாகவே கருதப்படுகிறது. அதாவது வெறும் சாதாரண நேரம் கடத்தும் இன்ப விளையாட்டாகவே கருதப்படுகிறது. 'சல்லாப கோரிக்கை விளையாட்டு” என்ற இந்த வார்த்தையே (Fore play) பாலுறவில் அது அவ்வளவாக முக்கியம் இல்லை. உண்மையில் ஆணுறுப்பின் ஊடுதலை சுலபமாக்குவதற்காக நடத்தப்படும் ஒரு முன்கூட்டிய விளையாட்டு என்றுதான் குறிக்கிறது. இந்த இன்ப கேளிக்கை விளையாட்டைக் குறிக்கும் இந்த விளக்கம் மகளிர் கந்து தூண்டப்படும் விதத்தை மற்றும் அதன் முக்கியத்துவத்தையே பாதிக்கிறது. உதாரணமாக ஷெய்ட் கூறுவது போல புணருதல் ஒன்றுதான் பாலுறவில் முக்கிய செயலாக கருதப்படுவதில் ஆண்கள் பொதுவாக தங்கள் விறைப்புத் தன்மையை பாதுகாத்துக் கொள்ளவே பெரிதும் பதட்டமடைகிறார்கள். எனவே அவர்கள் புனர்வதற்கு முன்பாக நடக்க வேண்டிய மற்ற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள எத்தனிக்கிறார்கள். அச்செயல்களுக்காக சிறிதளவு கால அளவை செலவிடுகிறார்கள். ஆய்விற்காக கணக்கில் எடுக்கப்பட்­டவர்களில் 45 சத வீதத்தினர் மட்டுமே சம்பந்தப்பட்ட மற்றவாpன் செய்கையின் மூலம் காமப்பரவச நிலையை உணர்ந்திருப்பதாகவும் அனால் 95 சத வீதத்தினர் இக்காமப் பரவச நிலையை சுயஇன்பத் தூண்டல் மூலமே அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. (hite – 1972-209) மேலும் பெருமளவு எண்ணிக்கையிலான ஆண்கள் சம்பந்தப்பட்ட பெண் கூட்டாளிகளுக்கு எந்தவிதமான மகளிர் கந்து தூண்டல் 'இன்பத்தையும் (Clitorolstrimutation) வழங்கவே இல்லையாம். (1976 - 212) இப்பிரச்­சனையின் அடிப்படையே பிரத்தியேகமாக அண்,பெண் சேர்க்கை மட்டும் தான். பாலுறவு முறை என்று வரையறுக்கப்பட்ட நிலைமைதான் இந்த ஆண் சமூக மூடநம்பிக்கையின் விளைவாக ஆண் காம பரவச நிலைக்கு முழு உத்திரவாதம் கொடுக்கும் ஒரு பாலுறவு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மகளிர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் கந்து தூண்டல் ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்போதாவது நடத்தப்படுகின்ற அல்லது எப்போதுமே நடத்தப்படாத செயலாகவும் தான் கருதப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஆண், பெண் பாலுறவு முறைக்கு இருபாலருக்குமே ஒருவருக்கொருவர் 'சம அளவில் முழு இன்பம்” வழங்கக் கூடியது என்ற நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளச் செய்ய சமூக அங்கீகாரம் பெற்ற குடும்ப முறை புணர்ச்சியை உணர்த்திக காட்டுகின்ற வக்கிரமான கலாச்சார சூழலில் போன்றவற்றின் மூலம் பெரும்பாலான மககள் காலம் காலமாக பழக்கப்பட்­டிருக்கிறார்கள். ஆனால் இந்த பாலுறவு சூழ்நிலை தலைகீழாய் மாறுவதாய் கற்பனை செய்தால் அதாவது ஆண்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எப்போதாவது ஆணுறுப்புத் தூண்டப்பட்டு அதன் மூலம் பரவசநிலை அடைந்ததாகவோ அல்லது இப்பரவச நிலையை ஆண்கள் எட்டாத நிலைமை இருப்பதாகவும் அதேசமயம் பெண்கள் எப்போதுமே மகளிர் கந்து தூண்டப்பட்டு பரவசநிலையை பெரும்பாலும் அல்லது எப்போதும் அடைவதாகவும் இருந்தால், அடையும் பரவச நிலையில் இருக்கும் விகிதாசார ஏற்றத்தாழ்வு அனைவருக்கும் மிகவும் தெளிவாக புலப்படும் அல்லவா? ஆனால் பாலுறவில் அண்களை மேலானதாய் மதித்து பெண்களை இரண்டாம் தர அல்லது முக்கியத்துவமற்ற நிலைக்கு தள்ளுகின்ற போக்கு நம் சமுதாயத்தில் நிலவுவதால் மிகச் சிலர் மட்டுமே தற்போது நடமுறையில் உள்ள பாலுறவு பரவசநிலை ஏற்றத்தாழ்வு குறித்து அதிர்ந்து போகிறார்கள். துரதிஸ்டவசமாக பாலுறவு நனடைமுறையில் இருக்கும் இந்த ஏற்றத் தாழ்வான நிலைமை குறித்த பெரும்பாலான விவாதங்கள் வெறும் விவரித்தல் நிலைமையோடு நின்று விடுகின்றன. இத்தனை விவாதங்கள் பிரச்சனைகளை விபாpத்து பேசும் நிலையை கடந்து போவதில்லை. இந் நிலைமைக்கு காரணமே மாக்ஸின் மூலதன கொள்கைக்கு நிகரான ஒரு பரந்த ஆற்றல் வாய்ந்த பாலுறவு முறையில் சுரண்டல் நிலையை நன்கு விளக்கும் ஒரு கோட்பாட்டு வரையறை உருவாக்கப்படாததுதான். மதிப்பு ரிதியான மாக்ஸின் தொழில் கொள்கை பொருளாதாரச் சுரண்டலை மிகவும் தெளிவான வகையில் விவாதிக்க வழிவகை செய்திருக்கிறது. தொழில் ஆற்றல் என்பது அத்தகைய மதிப்பிற்கு ஏற்ற வாங்கவோ அல்லது விற்றகவோ படுகிறது. அதன் மதப்பு மற்ற விற்பனைப் பொருள்களைப் போலவே அதன் உற்பத்திக்குத் தேவையான வேலை நேரத்தைப் பொறுத்தே நிர்ணயம் செயயப்படுகிறது. ஒரு தொழிலாளியின் சராசரி தின வருமானம் ஈட்டப்படுவதற்கு ஆறுமணி நேரமானால் சராசாயாக அவன் ஆறு மணி நேரம் நிச்சயம் வேலை செய்து ஆகவேண்டும். அவனுடைய உழைப்பத்­திறனை வெளிப்படுத்துவதற்கு ஒரு நாளில் சராசரியாக ஆறு மணி நேரம் உழைக்க வேண்டும். அவனுடைய தொழிலாற்றல் என்ற விற்பனை விளைவாகத்தான் அடைந்து நன்மையை வேறு வகையில் ஈடு கட்டி விடுகிறான். எனவே அவனுடைய வேலை நாளுக்குத் தேவையான நேரம் அறு மணிநேரம் என்று கணக்காகிறது. எனவே வாங்கிய அளவிற்கு கொடுக்கிற சமஅளவு கொள்கையாக (Caeteris parivus) இது ஆகிறது. இந்த யுகத்தை அனுபவமாக கொண்டுதான் நாம் கிரகித்துக் கொண்டு இருந்தோம். ஆனால் ஆனால் இதில் வேலை நாளில் அளவு அல்லது எந்த அளவு வேலை நாள் நீடிக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வரையறை இல்லை. (1967 : 231) முதலாளித்து சமுகத்தில் தொழிலாளிகளின் உழைப்புத்திறனுக்கு பதிலாக இந்த வேலை நாளின் கால அளவு 'அடைந்து லாபம் அல்லது மதிப்பை ஈடுகட்ட தேவையான” நேரத்திற்கு மேலாக நீடிக்கப்படுகிறது. இதைத்தான் மிகுதியான இலாபத்தை முதலாளிகளுக்கு விளைவிக்கிற, உழைப்பை சுரண்டுகிற போக்காகும் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். மார்க்சின் இந்த மதிப்பு ரிதியான தொழில் கொள்கையைப் போன்று ஒரு கோட்பாட்டை பாலுறவு நடைமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வை அலச உதவும் வகையில் உருவாக்க முடியுமா என்று நாம் இப்போழது பார்க்கலாம். உதாரணமாக ஊதியத்திற்கு தக்க வேலை என்று ஏற்படுத்துகின்ற உறவு முறையை வாங்கி வேலைத்திறனை விற்பதால் திணிக்கப்டும் சமத்துவமற்ற சமூக உறவு முறைகள் 'சுதந்திரம் மற்றும் சமத்துவம்” போன்றவற்றில் புதைக்கப்­பட்டிருப்பதை நாம் நன்கு காண முடியும். பாலுறவு பிரச்சனைகளை இந்தக் கோணத்தில் இருந்து நாம் அனுகினால் ஆண்களும் பெண்களும் கூட சுதந்திரமான சமத்துவமான உறவில் நுழைவதாக அளிக்கும்மாயத் தோற்றத்தை நம்மால் உணர முடியும். இருப்பினும் இருபால் கூடலில் கையாளப்படும் முக்கிய முறையே பெண் காம இச்சசைக்கு எதிராக அல்லது அதைப் பொருட்படுத்தாது ஆண் இச்சையத் திருப்திப்படுத்தும் வண்ணமே அமைந்திருக்கிறது. பாலுறவு என்பதே ஆண், பெண் புணர்ச்சியின் மூலமே வெளிப்படுத்தப்பட்டு வந்திருப்பதால் பெண்களை விட ஆண்களே பெருமளவு காம இன்பத் தூண்டலை பெறுகின்றனர். உண்மையில் ஆண், பெண் பாலுறவு முறையின் படி பெரும்பாலும் அண் காமபரவச நிலையை எட்டியபின் பெண்ணின் பரவச நிலையும் முடிவுக்கு வந்தாக வேண்டும். எனவே ஆண், பெண் உறவு முறை ஒரே அளவு இன்பத்தை இருவரும் நுகரச் செய்யும் தன்மை உடையதாக தோன்றினாலும் உண்மையில இது ஒருவர் இன்பத்தின் அப்பாற்பட்டதேயாகும். ஆண், பெண்ணிடம் இருந்து பெற்ற காமத் தூண்டலை மிகச் சிறிய அளவில் தான் திரும்பத் தருகிறான். இதனால் பெண் பரவச நிலையை அடைவது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. பெண்ணின் பாலுறவுச் செயல்கள் யாவுமே ஒரு குறிப்பிட்ட சமூக உறவுமுறையின் பின்னணியில் நிர்ப்பந்திக்கப்பட்ட சில குறிப்பிட்ட சூழ்நிலைகளோடு மட்டுமே இழையோக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனித்துவத்தோடு தானாக நிகளும் வெளிப்பாடு என்ற நிலையில் இருந்து விலகி ஆண், பெண் உறவு முறையானது முன்கூட்டியே சமுதாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவும் மிகவும் வரையறுக்கப்ட்ட கட்டுமானங்களோடு கூடிய ஒரு கட்பாயமாகவும் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஈரினச்சேர்க்கையின் கூறுகளும் நிகழ்த்தப்படும் விதமும் ஆண் ஆதிக்க சமூக உறவு முறையின் பிரதிபலிப்பகளாகவே இருக்கினறன. தேனிவாகப் பார்த்தால் பாலுறவு நடைமுறையில் சமத்துவமின்மை என்பது அடிப்படையில் பெறப்படும் இன்பத்தின் சமத்துவமின்மையோடுதான் தொடர்புடைய­தாய் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக காம இன்ப அளவை தனிமனிதர்களுக்கிடையே ஒப்பிட்டு வரையறை செய்வதோ அல்லது ஒவ்வொரு தடவையும் எந்த அளவு ஆத்மதிருப்தியோடு ஒரு தனிமனிதன் காம பரவச நிலையை அடைகிறான் என்பதை அளப்பதோ மிகவும் அரிதான செயலாகும். இருப்பினும் காம பரவச நிலை (விந்து, மற்றும் மதனநீர்) ஒன்றுதான் பாலுறவில் இன்பத்தை நன்கு பார்க்க மற்றும் கணக்கிட முடியும் ஒரே வெளிப்பாடாகும். காமத்தில் இப்பரவசநிலையை இருபாலருமே எட்டமுடியும். மேலும் இப்பரவச நிலைதான் காமத்தில் அடையப்பட வேண்டிய மற்றும் விருப்ப படுகின்ற விளைவாக கருதப்படுகி­றது. இந்தப் பின்னணியில் என்னுடைய ஆதங்கம் என்னவெனில் ஆண், பெண் கூடலில் காமப்பரவசநிலையை அடையும் திறனில் ஆண்கள் மற்றும் பெண்களுக்­கிடையே இருக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு ஆற்றலில் சமத்துவமற்ற உறவு முறையைத்தான் தெளிவாக காட்டுகிறது என்பதுதான், தரம், தன்மை போன்ற அடிப்படைகளில் பெண்கள் அண்களைவிட சிறந்த உயர்ந்த நிலையில் பரவச நிலையில் பரவசநிலை அடைகிறார்கள். இது அவர்கள் அண்களைவிட காலஅளவு விகிதாசாரத்தில் குறைந்து இருப்பதை ஈடுகட்டிவிடுகிறது என்று ஒருவர் விவாதித்தால் அன்றி மற்றப்படி உறுதியாக அண், பெண் கூடல் முறையில் அண்களின் சுரண்டல் மற்றும் அண்கள் பெண்கள் இன்பத்தை புறக்கணித்து அளவில் அதிகமாக பரவச நிலையை அடையும் நிலை போன்றவற்றை குறித்து ஒரு பெரிய முறையீடு பதிவு செய்யும் அளவற்கு இப் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஈரினச் சேர்க்கை உறவு முறையில் பெண்கள் ஒட்டகப்படுகின்ற கோட்பாட்டை வேறு எந்த கோட்பாட்டை பயன்படுத்தி பெண்களை விட அண்கள் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகளவு காம இன்ப பரவசநிலையை அடைகிறார்கள் என்ற எதார்த்த நிலையை கருத்தளவில் விலகிக் காட்ட முடியும்? சூழ்நிலையை பாலுறவுச் சுரண்டல் என்று கூறுவதால் மாக்சின் மதிப்புக் கொள்கையை படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும் என்று பொருளாகாது. மதிப்பு ரிதியான மார்க்சின் தொழில் கொள்கையை வியாபாரத்தை உறவுகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் பெண் அடையும் இன்பத்தை புறக்கணித்து அதிக அளவு விகிதாசாரத்தில் அடையும் அண்பரவசநிலை என்ற ஒப்பீடு மிகவும் பயனுள்ளதாகிறது. ஏனெனில் இதன் மூலம் ஆண்களை பால் ஆதிக்க உணர்வு கொண்டவர்கள் என்று பொருட்படுத்தி காட்ட முடியும். ஈரினச் சேர்க்கையின் பெரும்பாலான அமைப்பு முறையினால் ஆண்கள் அடையும் ஆதாயத்தால்தான் இவர்களுக்கு இந்த ஆதிக்க போக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படி அவர்கள் அடயும் ஒரு முக்கியமான இலாபம் அவர்கள் பாலுறவின் போது ஈரினச் சேர்க்கையில் பெருமளவு உடல் தூண்டல் இன்பம் பெண்களை விட அதிக அளவு அடைவதுதான். அதன் விளைவாக முன்பு சொன்னது போலவே ஆண்கள் மட்டுமே பெருமளவு காம பரவச நிலையை பெண்களை விட அடைகிறார்கள். பெண் அடையும் இன்பத்தை புறகணித்து சுரண்டி ஆண் அனுபவிக்கும் இந்த பரவச நிலையை காரணமாக கொண்டு அபூர்வமாக சில பெண்கள் பாலியல் மருத்துவர்களை அணுகியும் இருக்கிறார்கள். (Ress:1978 - 2) அவ்வேளைகளில் அப்பெண்கள் மனரீதியான உளைச்சலையும், எhpச்சலையும் அதன் விளைவால் ஏற்பட்ட உடல் சார்ந்த அறிகுறிகளையும் எடுத்துக் காட்டி திருமணத்தை குறித்த தங்கள் அறிகுறியை தெரிவித்திருக்கிறார்கள். (Bornar-1971 :148 to 152) இங்கே இருண்டு முக்கிய கருத்துக்கள் கவனத்திற்குரியவை முதளில் ஈரினச்சேர்க்கை நடைமுறையில் அண் இன்று திருப்தியை அதிகப்படுத்துவதற்கான வழிவகைகள் கூட இல்லை. ஏனெனில் நடைமுறையில் சமூதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பாலியல் உறவு முறைகள் அண்களின் விருப்பத்­திற்கேற்ப பாலின்பம் அனுபவிக்கும் சுதந்திரத்தைக் கூட ஊக்குவிப்பதில்லை. ஆண்கள் ஒரு சீரான கால அளவில் அல்லது அடிக்கடி வாய் நுகர் இன்பம் (Fellotio) தாங்கள் பெறுவதில்லை. அதிலும் குறிப்பாக பரவசநிலையை அடையும் வகையில் தங்களுக்கு அந்த இன்பம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி தெரிவிப்பதாக ஹெய்ட் கண்டறிந்தார் (1981 : 538) இதிலிருந்து ஆண்கள் வேறுபட்ட பாலின்ப வழிகளின் மூலம் இன்பம் நுகர்ந்து திருப்தி அடைகிறார்கள் என்று நன்றாக புலப்படுகிறது. மேலும் பல்வேறு அல்லது வேறுபட்ட வழிகளில் காம பரவச நிலையை அடைய பாலின்ப செயலை மாற்றுவதற்கே ஆண்கள் அடிப்படையில் விரும்புகிறார்கள். ஆண்கள் மட்டும் ஆண் குறியை மையமாக வைத்து பல்வேறு வழிகளில் உடலுறவு இன்பத்தை நுகரலாம்! ஆனால் பெண் இன்ப நெகிழ்வு அல்லது தூண்டலுக்கு பாதகமான ஆண் உடலின்ப தூண்டலை முக்கியத்துவ படுத்துகிற பாலுறவு நடைமுறைகளின் வெளிப்பாடாக உடலுறவில் பெண்ணின் இன்பத்தை இரண்டாந்தரப்படுத்தலாம் அல்லது புறக்கணிக்கலாம் என்பதைத்தான் அண்களின் உடலுறவு முறையை பெண்களுக்கு இன்பமளிக்கும் வகையில் மாற்ற விரும்பாத பிடிவாதமான விருப்பமின்மை உணர்த்துகிறது. இது தான் ஆண், பெண் பாலுறவு அமைப்பிலிருந்து ஆண்கள் அடையும் இலாபமாகும். இரண்டாவதாக காமப்பரவச நிலையும், பாலுறவில் முழு திருப்தி நிலையும் ஒன்றென்று நான் கூறவரவில்லை. ஐயமின்றி முழுமையான பாலுறவு திருப்திய­டைய மற்ற பல்வேறு கூறுகளும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும் பெண்கள் மிகச்சிறிய அளவில் எப்போதாவது பாலுறவு பரவசத்தை அடைகின்ற நிலைமை அவர்களது பாலுறவு அனுபவம் போதுமான அளவு மகிழ்ச்சி தருவதாய் இல்லை என்பதையும் உணர்த்துகிறது. எனவே அதிகளவு புழக்கத்திலுள்ள ஆண், பெண் கூடலில் பெண்களுக்கும், அண்களுக்கும் அடைய வேண்டிய இலக்குகள் வெவ்வேறாய் இருக்கின்றன. இருவரும் ஒரே நேரத்தில் திருப்தியை அடைந்துவிடுவதில்லை. அண்களுக்கு தங்கள் பாலின்ப வெளிப்பாட்டை அதிகப்படுத்த வேணடுமென்ற அங்கலாய்பு இருக்கலாம்! அனால் பெண்களோடு அவர்களை ஒப்பிடுகையில் அண்கள் பெருமளவில் பாலின்ப திருப்தி அடையத்தான் செய்கிறார்கள். ஆண்கள் உயிரியல் அல்லது அண் விந்து வெளியேற்றல் தேவை என்ற யதார்த்த நிலை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப உடல் இன்ப தூண்டல் வழங்கும் விதத்தில் தான் பாலுறவு என்ற ஒன்றே வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அனால் பெண்களில் பெண்களின் பாலின்பத்தை பொறுத்தவரையில் (Female Sexuality ) அது கட்டுப்படுத்தப்படுகின்ற ஒன்றாகலாம். ஆண் பாலின்பத்திற்கு சுகம் சேர்க்கும் ஒர் இரண்டாந்தரம் போலதான் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அத்தோடு கூட அதிக அளவிலான ஆண் பரவசநிலை சமூகத்தில் பெருமளவு பரவியிருக்கும் ஆணை பிரத்தியகப்படுத்தும் போக்கின் பிரதிபலிப்பே அகும். உடலுறவு நடைமுறையில் இருக்கும் பாலின்ப செயல் பங்கீடு பெண்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்தவரையில் தொழில் நிறுவனங்களில் பால் ரிதியான வேலை பங்கீட்டு முறையோடு ஒத்ததுதான் இவ்விரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. இரண்டுமே ஆணின் பாலுறவு அல்லது பொருளாதார நிலைமையில் எவ்வளவு குறை இருந்தாலும் அல்லது அதிருப்திக­ரமான நிலையிலிருந்தாலும் பெண்களில் வாழ்நிலை அதைவிட கீழாக தாழ்ந்துதான் இருக்க வேண்டும் என்பதை உறதி செய்கின்றன. இத்தோடு கட்டுரையின் இப்பிரிவின் இறுதியான மற்றொரு முக்கிய கருத்தைக் காணலாம். ஆண்கள் பெருமளவில் காமப்பரவச நிலையை எட்டுவதற்கு காரணமே அண்கள் ஈரினச் சேர்க்கையில் ஆண்சார்ந்த பாலுறவு முறையில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படும் நிலைதான். இக்கருத்தை நிரூபிக்க ஆதாரம் இருப்து போல் தெரிகிறது. ஹய்ட்டின் ஆண் பாலுறவு ஆய்வில் ஆண்கள் தாங்கள் அடிக்கடி புணர்ச்சியில் இடுபட வேண்டும் என்ற சமூக கட்டாயத்தை உணர்ந்ததாக கூறினர். எனினும் புணர்ச்சி பாலுறவில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாலுறவில் ஆண்களின் முக்கிய செயலாக அடையாளம் காணப்படுகிறது. உடலுறவில் புணர்ச்­சியே விருப்பமாக நிகழ்த்தக்கூடியதொன்றாக வைத்துக் கொள்ளும் படி ஹய்ட் தெரிவித்த யோசனை ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்களில் பலரை திடுக்கிட வைத்ததாம். எனினும் ஆய்விற்கு எடுக்கப்பட்ட மிகப் பெரும்பான்மையானோர் ஈரினச் சேர்க்கையில் புணர்ச்சியை விலக்கி வைப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று உணர்ந்து இந்த யோசனையைப் புறக்கணித்து விட்டார். (hite– 1981 : 461 to 468). மேலும் வரையறுக்கப்பட்ட சமூக சட்டங்களால் தம்முடைய வாழ்க்கை பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பாலான ஆண்கள் பாலுறவில் ஆண், பெண் பங்கு குறித்து பேசக்கூடிய பெண்ணிய சிந்தனையாளர்களின் பெண்ணிய இணக்கத்தையும் அங்கீகரிக்க மறுத்தனர். அர்த்தமற்ற வகையில் அவர்கள் இவற்றை தங்களுக்கு பாதகமாக பாலுறவில் சமத்துவ நிலையை அடைய எத்தனிக்கும் பெண்ணின் முயற்சியை பெரிதும் வெகுண்டு கண்டித்தனர். (hite : 303 to 328). இதிலிருந்து ஈரினச்சேர்க்கையில் அண்களின் இந்தச் சார்பு நிலை புழக்கத்தில் உள்ள ஈரினச் சேர்க்கை உறவு அமைப்பு முறையை பாதுகாத்துக் கொள்வதால் அவர்கள் இலாபம் அடைகிறார்கள் என்பதால்தான் தெரிகிறது. அடுத்த இதழில் தொடரும்

வரி மங்குகிற நினைவு

தில்லை



பொட்டுப் பொட்டாகத்
தாடைவிளிம்பில் தொங்கிற்று.......
ஆற்றுக்கு அந்தப்பக்கம் நிற்கிற
வாழ்வின் புலம்பல்.


அரசல் புரசலாக
ஊர்க்காதில் விழுந்தும் விழாததுமாக
காற்றின் இறுக்கம் தளர்ந்திருந்தது.
வயல் வெளிக்கு நடுவில் போகும்
தென்னைகள் ஓரமிட்டசாலையில்
தலை கிடந்த அலங்கோலத்தில்
விரல்கள் பதிந்த கன்னநோவில்
நுரையீரல்களும்
விலா எலும்புகளும்
நொறுங்கிய மூச்சடைப்பில்
ஒரு குரல்
நடுங்கி நடுங்கி வீழ்ந்தது.


அவர்கள் உட்கார்திருந்த தரையை இழுத்து
அந்தரத்தில் தொங்கவிட்டார்கள்.
குளத்தையும் ஏரியையும் தூர்த்துக்
குப்பை கொட்டினார்கள்.
குப்பைகள் எரிந்து
கட்டைக்கரியும் புகையுமாக
நெடில் வீசிற்று.


அதனூடு அவர்கள் வாழ்க்கையின் வாடை வீசிற்று.
இன்னும் இன்னும்.........
இரத்தக்குட்டைகளில் மயிர் உறைந்து
எனக்கு நாக்குநுனியில் வந்துவிட்டது
மறுகணம் என் தாகம் அடங்கிச் சாம்பலாயிற்று.


போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!


என்.சரவணன்
போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு சமூகவியலாளர்கள் மீள, மீள சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

அந்தவகையில் பெண்கள் விளிம்புநிலை சக்தியினர் தான். போரின் போது பாதிக்கப்படுபவர்களில், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்போர் அதிக கரிசனைக்கும், கவனத்துக்கும் உள்ளாவது இந்த அடிப்படையில் தான். இதனை நிறுவுவதற்கு சுனாமி கூட நமக்கோர் நல்லதொரு உதாரணம்.

பஞ்சம், பட்டினிச்சாவு, நோய், இயற்கை அனர்த்தம், போர் என அத்தனைக்கும் இது பொருந்தும்.



போரின் போது பெண்கள் இன்னும் பிரேத்தியேகமான முறையில் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுவதும் இடம்பெற்றுத்தான் வருகின்றன. நமது சங்க இலங்கியங்கள் கூட இதனை பதிவு செய்திருக்கின்றன.

ஸ்ரீ லங்காவில்

இன்றைய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பில், தமிழ் மக்கள் குறித்தும் இலங்கை வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்­களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்­டது.

இந்தப் பேரினவாதக் கட்டமை­ப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க அரசியல் சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது, தானே, விரும்பி­னாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்­பானது அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமாதான முயற்சி..., பேச்சுவார்த்தை..., போர் நிறுத்தம்..., தீர்வு... என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராக்கப்பட்டு வருவதை தென்னிலங்­கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போர்க் கெடுபிடி நிலையை பேணி வருகிறது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு - பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்க­ளின் வேலை நிறுத்தம், பொருள் விலையு­யர்வு, தீர்வைகளின் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவ­ற்றைக் கூட போரின் பேரால் நியாயப்­படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு ”நடவடிக்கைகள்” எதுவும் இல்லை.

அரசாங்கங்களின் இருப்புக்கான அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே போர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. போரின் போது படையினரின் உளப்பலத்தை பாதுகாப்பதும், உற்சாகத்தை பேணச் செய்தலும் அரசின் கடமையாகிறது. படையினரின் உயிரிழப்புகள், இராணுவத்தினாரின் உயிரிழப்­புகள், பொருளிழப்புகள், முகாம் இழப்­புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறு­வோரின் தொகை அதிகரித்து வந்த அதே நேரம் படைக்கு புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்­கையில் சிங்கள இளைஞர்கள் பலர் தமது வீடுகளில் பெற்றோரை மிரட்டு­கின்ற வார்த்தைப் பிரயோகமாக ”படையில் போய் சேர்ந்து விடுவேன்” என்பது சர்வசாதாரணமாக ஆனது.

இந்த நிலையில் இருக்கின்ற படையி­னரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ஊக்குவிக்கவும் பல வழிமுறைகளை அரசு கையா­ள்கிறது. படையில் இணைவோ­ருக்­கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமா­னவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்­படுத்தாமை என்பது.

அந்த போர்க்கால குற்றங்களில் பாரிய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்­மைகள் உள்ளன.

இதற்கான உள்ளார்ந்த அனுமதியும், ஆசீர்வாதமும் படைத் தரப்பில் வழங்கப்பட்­டுவருவதை சம்பவங்கள் பல நிரூபித்துள்ளன. வெளியில் செய்தி கசியாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு இராணுவ வட்டாரத்தில் இருக்கிறது.

1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்­கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்ப­ற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேச­மாகவே ஆக்கி வந்தது. வெளியுல­கத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்ப­டுத்தியும் வந்தது.

போரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படை­யினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடு­ண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்­கானோர் காணாமல் போனோர்­கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. காணாமல் போவோரின் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது.

இப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்­பாட்டுப் பிரதேசங்களில் படையின­ராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வ­ளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அரச பயங்கரவாதம் சட்டபூர்வமான முறையில் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றினூ­டாகவும், ஊடகத் தணிக்கை போன்றவற்றினூ­டாகவும் மேற்கொள்ளப்பட்டது. அச்சட்டங்கள் மக்களின் மீதான இராணுவ அட்டுழியங்க­ளுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்குமான அனுமதிப்பத்திர­மாகவே அமைந்தது.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் மூலம் ஜே.வி.பி.யை அடக்குவதாக கூறிக்கொண்டு சிங்கள இராணுவம் தனது சொந்தத் தேசத்து சிங்கள யுவதிகளையே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். மனம்பேரி எனும் ஜே.வி.பி. இளம் பெண்ணின் கதை மட்டுமே மேற்பூச்சுக்­காக வழக்கு நடாத்தி சம்பந்தப்பட்ட படையின­ருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஜே.வி.பி.யை அடக்கவென சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவமும் இந்த காலத்­தில் பாலியல் வல்லுறவினை மேற்­கொண்டது தொடர்பாக பதிவுகள் பெரிதாக வரவில்லை. ஆனால் அன்றைய ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய பலர் இன்றும் அந்தக் கொடு­ர­ங்­களை நினைவு கூர்ந்த வண்ணமுள்ளனர்.

அதே இந்திய இராணுவத்தை 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பெண்கள் மாலையிட்டு, திலகமிட்டு வரவேற்றபோது நாளை இவர்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் கொன்றொழிக்கப்போகிறார்கள் என்றோ தமது பெண் பிள்ளைகளை பாலியல் வன்முறைக்­குள்­ளாக்கப் போகிறார்கள் என்பதையோ அறிந்திராதிருந்தனர்.

இந்திய இராணுவ நுழைந்ததுமே இதனை தொடங்கி விட்டனர். 1987இல் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்திலேயே அதிக­மான பாலியல் வல்லுறவுச் சம்ப­வங்கள் பதிவாகியுள்ளன. இராணுவ நடவடிக்கையின் அங்கமாகவே இது மேற்கொள்ளப்பட்டதென பல நூல்­க­ளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்திய இராணுவம் யாழ் பல்கலைக் கழகத்தினுள் புகுந்து தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவர்களின் பாலுறுப்புகளை சிதைத்து பின் கொன்று புதைத்திருந்தனர். பின் அச்சடலங்கள் அப்புதைகுழிகள் தோண்டியெடுக்கப்பட்டன.

உளவியலாளர் தயா சோமசுந்தரத்தின் Scarred Minds எனும் நூலில் இது பற்றிய பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

மூன்று இந்திய இராணுவத்திர் துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு புரிய முற்பட்டபோது அவர்களை நோக்கி -என்னை இப்படி செய்யாதீங்கோ! என்னை சுட்டுக்கொல்லுங்கோ- என கதறியழுத சம்பவமும். திருநெல்வேலியில் ஒரு பெண் ஓடிப்போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தமை போன்ற சம்பவங்க­ளையும் அந்நூலில் பதிவாக்கியிருக்கிறார்.

இது தவிர 1968இல் வியட்நாமில் அமெரிக்காவுக்கு ஒரு மை லாய் கிராமம் போல, 1989இல் இந்திய இராணுவத்துக்கு ஒரு வல்வை படுகொலையை குறிப்பிடுவது வழக்கம். 1989 ஓகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்­துறையையும், அதனை அண்டிய ஊர்களுக்கும் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்து ஆயிரக்கணக்­கான வீடுகள் கடைகளை உடைத்தும் எரித்தும்

சேதத்துக்கு உள்ளாக்கிய­துடன், பெண்கள், வயோதிபர், சிறுவர்கள் என 63 பேரை வெட்டியும், சுட்டும் தாக்கியும் படுகொலை செய்ததுடன், 15 திருமணமான பெண்களையும், 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர்.

உலகம் முழுவதும் இது தான்....

பொதுவாக போர்க்காலங்களில் பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்­ளாக்குள்ளாக்கலாம் என்று எதிhpத் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்­தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்க­ளுக்கென்று தனியான முகாம்களை அ­மைத்து (Rapd Camps) அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவு­க்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற செய்தனர். அதன்பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக இனக்கலப்பை செய்துவிட்டதாகவும், அப்பெண்களுக்கு பிறந்தவர்கள் எவரும் இனி பொஸ்னியர்களாக அறிவித்துக் கொள்ள முடியாதென்றும், தான் இனக்கலப்பை செய்துவிட்டதாகவும் அறிவித்துக்கொண்டார்கள். அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப்படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னி­யர்களுக்கு அறிவித்தார்­கள். 1992 அளவில் 20ஆயிரத்துக்­கும் மேற்பட்டபெண்களும், இளம் யுவதிகளும் இதன்போது பாலியல்வல்லுற­வுக்கு உள்ளாக்­கப்பட்டார்கள். பொஸ்னியாவில் நிகழ்ந்தது பெண்களின் மீதான வல்லுறவு அல்ல. ஒட்டுமொத்த மனித்தத்தின் மீதான களங்கம் (“The war on women in Bosnia was truly the rapd of humanity”2)

போர்க்காலங்களில் பெண்களை கைது செய்வது, சித்திரவதைக்கு உள்ளாக்குவது, குறிப்பாக பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் அன்று தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

போர் நடந்த பங்களாதேஸ், கம்போடியா, சைப்பிரஸ், ஹைட்டி, லைபீரியா, சோமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் இச்சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

1990இல் 5000க்கும் மேற்பட்ட குவைத் பெண்கள் ஈராக்கிய துருப்புக்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.


ருவாண்டாவில் 5 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளா­னார்கள். அல்ஜீரியாவில் சில கிராமங்களில் புகுந்த ஆயுததாரிகள் ஒட்டுமொத்த கிராமத்து பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்­ளாக்­கினர். சில தரவுகளின் படி அங்கு 1600 இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்திருக்­கின்றனர்.

இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது 1937இல் ஜப்பான் துருப்புக்களால் சீனாவின் நான்கின் எனும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட வேளை அங்குள்ள 20,000க்கும் மேற்பட்ட சீனப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்காக உலகப்போhpன் பின்னர் விசாரணை நடந்தது.

ருவாண்டாவில் போhpல் தப்பிய இளம் அப்பாவிப் பெண்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்த ஆயுததாரிகள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு கர்ப்பம் தாpக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் விரும்பத்தகாதவர்களாக ஆனார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவங்க­ளும் பதிவானது. இவ்வாறான செயற்பாடுக­ளின் மூலம் அப்பெண்யையும், அப்பெண் சார்ந்த குடும்பத்தையும், அவர்களின் இனக்குழுமத்தின் உளப்பலத்தை குறைப்பதும், இனத்தூய்மை மீதான மாசுபடுத்தலும், அவர்களின் அடையா­ளத்தை உருக்குலைப்­பதும், அவர்களின் கலாச்சார நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்­குவதும் நோக்கமாக இருந்திருக்கின்றன. இவை எதிரிப்படைத் தலைமைகளால் ஊக்குவிக்கப்பட்டுமிருக்­கின்றன.

இலங்கையில் அனுராதபுரத்தில் படையி­ன­­ரை நம்பியே மிகப் பாரிய அளவிலான பாலியல் தொழில் விடுதிகள் நடத்தப்படுகின்­றன. எல்லைப்புக் கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், குறிப்பாக கணவரை இழந்தவர்கள் பலர் இதில் ஈடுபடுத்­தப்­பட்டுள்ளனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதி­களாகவும் உள்ளன. பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் அறிக்கைகளில் இந்த விடுதிகள் குறித்து சுட்டிக்காட்டப்­பட்டுள்ளன.

இப்படி யுத்த காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் படை­யினருக்கு விருந்தாக ஆக்கப்படு­வதும் பலருக்­கான பாலியல் போகப்பொரு
ளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவ­தும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைக­ளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. ஜப்பான் அன்று இந்தோ­னேசிய, பிலிப்­பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலரை தடுத்து வைத்து படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கி­யது. எதிரி நாட்டுப் படையினர் மீது நடத்தப்­பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்ப­வங்­களே இலங்கையிலும் நடந்து வருகின்­றன.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கூட இந்தோ­னேசியாவில் சுகர்னோ அரசாங்கத்­துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்­ளாக்­­கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.
ஸ்ரீ லங்கா அரசின் யுத்த அணுகுமுறைகள் எதிரி நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் நமக்கெல்லாம் தெளிவு­றுத்தியதும் இதே அரச படை தான். சிங்கள இராணுவத்திற்கான சிங்கள இராணுவ ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டை­யாடப்படல், தமிழர் பகுதிகளின் மீதான குண்டுவீச்சுக்கள், அழிப்புக்கள் என்பவற்றின் வெளிப்­பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்­வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிரிப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் எப்போதோ உள்ளாக்கப்பட்டுவிட்டனர்.

ஸ்ரீ லங்கா படையை அவ்வாறு ”சிங்களப் படை”, ”எதிரிப் படை” யென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் படிப்படியாக குறுகிய காலத்தில் அடைந்தது இவ்வாறுதான்.

(சிங்களப் படையென்ற சொல் இனவா­தத்தை வெளிப்படுத்துவ­தாக விமர்சிக்கப்பட்ட காலமொன்று இருந்தது. ஆனால் சிங்களவ­ர்களை மட்டுமே கொண்ட படையாக­வும் எதிரிநாட்டின் மீது யுத்தம் செய்வது போல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவ­தாலும் இப்பதம் பொறுத்தமானதே)

எனவே இப்படிப்பட்ட சிங்க­ளப் படையினரால் மேற்கொள்ள­ப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமான­ப்படுத்த பயன்படுத்­துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.

ஆனால் தற்செயலாக கிருஷா­ந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு­ள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்­டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்ப்­பாக அமைந்­ததால்) அது உலக அள­வில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.

தவிர்க்க இயலாமல் சிங்கள அரசு, தாம் போர்க் குற்றங்க­ளுக்கு எதிராக எப்போதும் உறுதியாக இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்­காக கிருஷாந்தி வழக்குக்கு அரசினால் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்­டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை சாதகமாக்கியபடி அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது காpசனையை பிரச்சாரப்படுத்தி வருகி­றது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்­பட்டவர்­கள் சமூக அளவிலும் அந்தஸ்து­டைய­­வர்­கள் அல்லர்.

இன்று வெளிக் கொணரப்ப­டுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்­பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்கள் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து அப்போது கருத்துதெரிவிக்கையில் ”ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டு­மெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா,” என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்­பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.

இதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்­கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்­திலும் பெண்கள் அதிக சித்திரவதைக்குள்­ளாக்­கப்பட்­டுள்ளனர்.

ஈழப்போராட்ட வரலாற்றில் அதிகளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது சந்திரிகா என்கிற பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் (1994-2005) என்பது பதிவாகியிருக்கிறது. சர்வவல்லமை பொருந்திய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் சந்திரிகா தான் இருந்தார் என்பது இங்கு கவனிக்கவேண்டிய ஒனறு.

1996 இல் மாத்திரம் 150 தமிழ் பெண்கள் படையினரின் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்­பட்டதாக சீனப்பத்திரிகையொன்று அறிக்கை வெளியிட்டது. (South China morning Post, 11 January 1997)

97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையி­னரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வhp பாலியல் வல்லு­றவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வ­ரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து சிதறச்செய்தனர். பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் பின் இறுதியில் கொலை புரிந்து வந்திரு­க்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்­விடுமென்றே சிங்களப் படையினர் நம்புகின்றனர்.

இதை விட இது வரை காலம் போhpன் போது கைது செய்யப்­பட்ட பெண் புலிகள் பலரை பாலி­யல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்­டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்­பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்­படுத்தி பாலுறுப்­புகளில் போத்தல்­களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்­தியதை நிரூபிக்கின்ற புகைப்படங்­கள் எமக்கு கிடைத்த போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்­தப்பட்டதை தொலைக்காட்சி செய்திக­ளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.

இதன் மூலம் எதிர்பார்க்கப்ப­டுவது என்ன? குறிப்பிட்ட சமூக­த்தை அவமானப்படுத்தி விட்டதன் வெற்றிக் களிப்பையல்லவா? ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்­டாத இன்னொரு­வரை அவமான­ப்படுத்த வேண்டு­மென்றால் அவ­ருக்கு கிட்டிய பெண்ணை வல்லுற­வு­க்குள்ளாக்கு­வேன் என்று (வழக்கிலுள்ள துஷனம்) கூறி­னாலே மற்றவர் ஆத்திரப்­படுவார் அல்லவா? அப்படிப்பட்ட வெளிப்பாடொ­ன்றே இந்த நிர்வாணக் காட்சிப்ப­டுத்தலும்.

”தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமி­ருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்” சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்­தின் சர்வதேச பிரச்­சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமை­களின் அத்தனை விபரிதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகாரித்திருப்பதே.

அரசு இவ்வாறான இம்சை­களின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வி­னை ஏற்கச் செய்கின்ற நடவடிக்­கையாக, போரின் கருவி­யாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்­பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொட­ராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.

கற்பு -ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள்

என்.சரவணன் பாலியல் குறித்த விடயங்கள் புலமைத்துவ மட்டத்தில் பேசுபொருளாக ஆக்கப்பட்டு வருகிறது. இதே வேளை பெண்களின் மீதான பாலியல் வன்முறைக­ளின் சமீபகால அதிகரிப்பையும் அதன் கொடுரத்தையும் கூடவே அறிந்து அனுபவித்து வருகிறோம். இளையதம்பி தர்சினி (வயது 20) எனும் பெண் இரு வருடங்களுக்கு முன் டிசம்பர் 18 அன்று கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்து பின் கல்லொன்­றுடன் கட்டி கிணற்றொன்றில் போட்டிருந்த செய்தி அனைவருக்கும் தெரியும். இந்தச் செய்தி வெளியான போது கூடவே இந்தப் பெண்ணின் ஒழுக்கப்பண்புகள் குறித்த செய்தியும் சிலரால் பரப்பப்பட்டன. படையி­னரின் இந்த காடைத்தனத்தை மூடிமறைக்க அரச இயந்திரமும், போpனவாத கட்டமைப்பும் அப்பெண்ணின் ஒழுக்கப்­பண்புகள் மீது கேள்வியெழுப்பும் வண்ணம் கதைபரப்பியதை பெண்கள் அமைப்புக்கள் கண்டித்தன. இத்தனை கோரத்தனத்தின் பின்னும் கூட அதிகாரத்துவம் படைத்த ஆணாதிக்கம் தனது ”ஆண்மைத்துவ” செய்கையை மறைக்கவென, பலியாக்கப்பட்ட பெண்ணையே மீண்டும் மோசமாக சித்தரித்து அக்காடைத்தனத்தை நியாயப்படுத்தவோ அல்லது அதனை சமப்படுத்தவோ முனைவதைக் காண்கிறோம். இதுவரை காலமும் பாலியல் வல்லுறவுக்­குள்­ளான பெண்ணை ஆபாசமான உடைய­ணிந்­திருந்தாள், ஆபாசமாக காட்சி தந்தாள், மோசமான இடத்திலிருந்தாள், பிழையான பாதையில் வந்தாள், பிழையான நேரத்தில் வந்தாள் என வல்லுறவுக்கு நியாயம் சொல்லும் வழக்கம் சாதாரண சமூக பேச்சாடலில் மாத்திரமல்ல, சட்டத்தின் முன் கூட காணப்படுகிறது. இது ஒரு சட்ட வலுவாகவும் எதிரிக்கு சாதகமாக அமைந்த எத்தனையோ வழக்குகளைக் காண முடிந்திருக்கிறது. எனவே தான் இந்த கற்பொழுக்கம் குறித்தும் பாலுறவு குறித்தும் நிலவுகின்ற விடயங்களை ஆராய்வது அவசியமாகிறது. பெண்ணின் உயிhpயல் அம்சமான பாலுறுப்புகள் மீதான அதிகாரத்துவத்துக்கு ஆணாதிக்க மரபு வழிவந்த சமூக-பண்பாட்டுக் காரணிகள் முக்கியத்துவம் செலுத்துகின்றன. ஆண்மை-பெண்மை குறித்த மரபுப் புனைவுகளின் வாயிலாகவும், ஐதீகங்களின் வாயிலாகவும் இது பலமாக வேரூன்றியுள்ளன. இவற்றை எமது கல்வி, தொடர்பூடாக, மத விவகாரங்கள் பாதுகாத்து, வற்புறுத்தி வந்துள்ளன.
தனது கன்னித்தன்மையைப் பாதுகாக்க வேண்டியவளாக பெண் பழக்கப்படுத்தப்பட்­டுள்­ளாள். பாலியல் பற்றிய புரிதல் பெண்க­ளுக்கு மறுக்கப்பட்டதாகவும், வரையறுக்கப்­பட்டதாகவும் ஆக்கப்பட்டுள்ளன. பாலியலா­னது இரகசியத்துக்கும், அந்தரங்கத்­துக்கும் உரிய ஒன்றாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் குறித்த வேட்கைகள், நாட்டங்கள் செயற்கைத்தனமானதாக கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. பேசாப்பொருளாக வைத்­தி­ருக்­கப்பட்டாலும் கூட அது பெண்களுக்கு மட்டும்தான் என வரையறுக்கப்­பட்டது. பெண்கள் மத்தியில் இவை பேசாப் பொருளாக இருக்கும் வரை அவர்களின் பாலியல் வேட்கைகள் தணிக்கப்படுமென்ற நம்பிக்கை ஆணாதிக்கச் சூழலில் நிலவுகின்றது. ஒரு தாரமணம், குடும்பம், வம்சாவழி, ஒழுக்க மரபுகள் என்பன தனிச்சொத்துட­மையின் வழிமுறைகள். இதில் ஒரு தார மணமானது தந்தை வழிச்சமூகத்தின் இருப்புக்கு (அதாவது தனது விந்தின் விளைவே­யென்பதை நிறுவுவதற்கு முன்நிபந்­தனையாக திகழ்கிறது.) அவசியமாக இருக்கிறது. குறிப்பிட்ட குழந்தை தனது ஆண்மைத்துவத்தின் விளைவு-வெளிப்பாடு எனக் கருதுகிறது.
எனவே தான் ஆணாதிக்கமானது ”கற்பு” என்பதை பெண்ணின் மீதான விதியாக ஆக்கிய அதே நேரம் ஆணின் ”கற்பு மீறலை” அது தனது ஆண்மையின் வெற்றியாகவும் நிறுவி விட்டிருக்கிறது. இந்த கற்பொழுக்கமானது வரலாற்று பூர்வமாகவே பெருங்கதையாடலாக சித்திரித்து வரப்பட்டுள்ளது. அதன் விளைவாக இது இன்றும் பலமாக நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கதையாடலின் மத்தியில் விஞ்ஞானபூர்வமான உண்மைகள் வைதீக பிற்போக்கு சக்திகளால் காலாகாலமாக காயடிக்கப்பட்டு வருகின்றன. பெண்ணின் இந்த கற்பொழுக்கத்துக்கு பெண்ணின் மீதான ”யோனி மைய வாதம்” ஆற்றுகின்ற பாத்திரம் கரிசனைக்குரியது. இது தான் பெண்ணின் மீதான இயற்கையான உயிரியல் ”கொடுமை”. இனப்பெருக்க மையமாக அமைந்திருக்கிற உயிரியல் இயல்பை பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக இது ஆகியது. இந்த பயத்தின் அடிப்படையிலேயே ஆண்-பெண் உறவு கட்டமைக்கப்பட்டு குடும்ப அமைப்பு எனும் அதிகாரத்திற்கு ஒடுக்கியது. ”ஒருத்திக் கொருவன்” எனும் சித்தாந்தத்தை பெண்ணுக்கு திணித்தது. இவை கெடாம­லிருக்க ஒழுக்கநியதிகள், கண்காணிப்புகள், விட்டால் போதுமென்ற உடனடித் திருமணங்கள், ஆணுறுப்பு லிங்கமாகவும் வழிபாட்டுக்­குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. (இது எப்படி வழிபாட்டுக்கு வந்தது என்பதை பெட்டியில் உள்ள கதையைப் பார்க்க) அதற்கு கோவில் கட்டி கும்பிடுகின்ற அதே நேரம் பெண்ணின் யோனியானது தீட்டு, தூய்மை, துடக்கு, விலக்கு, அசிங்கம், அருவருப்பு, அவமானம் என்கின்ற புனைவுகளையும், அதன் மீதான வெறுப்­பையும் ஏற்படுத்தியுள்­ளது. பாலுறவு தவிர்த்தால் யோனியை ஒரு வேண்டத்தகாத ஒன்றாகவே ஆணாதிக்க சூழல் கற்பிதம் கொண்டிருக்கிறது. இன்றுள்ள தூஷண வார்த்தைகளைப் பார்த்தால் இதன் விளை­வினை விளங்கிக் கொள்ள முடியும். நிலவுகின்ற தூஷண வார்த்தைகள் அனைத்­துமே பெண்களின் பாலுறுப்புகளைக் குறித்து கேலி செய்கின்றவையாகவே உள்ளன. இதன் மூலம் வேண்டாதவரை அவமானப்படுத்த முடியும் என்கின்ற ஐதீகம் நிலவுகிறது. ஒருவரைத் துன்புறுத்த முடிவு செய்தால் எதிhpக்கு நெருக்கமான பெண்ணின் (தாய், சகோதரி, மனைவி) பாலுறுப்புகள் மீது கேலி செய்தால், அவமானப்படுத்தினால் கோபம் கொள்ளச் செய்யலாம் என்கின்ற ஐதீகமும் நிலவுகிறது. அதே வேளை இதே யோனி புனிதம் கெடா­மல் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்­புகளும், அவற்றுக்கான விதிகளும் கட்டுப்பா­டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் பாலுறவுத் தொடர்புகள், ஆண்மையின் சிறப்பாகவும் பெண் தனது கணவனைத் தவிர்ந்த எவ­ருடனும் வைத்துக் கொள்கின்ற பாலுறவுத் தொடர்புக­ளினால் அவளது ”கன்னித்தன்மை” புனிதம் கெட்டதாகவும், கற்பிழக்கப்பட்­டதாகவும், நடத்தை கெட்டதாகவும், ஒழுக்க மீறலாகவும் புனை­யுமளவுக்கு கருத்தியல்கள் கட்டமைக்கப்­பட்டுள்ளன.

இன்றும் பாலுறவானது விஞ்ஞான பூர்வமான பரஸ்பர புரிதலுடனான கூட்டுச் செயற்­பாடாக இல்லை. பாலுறவின் போது பெண்ணானவள் வெறும் போகப் பொருள் மாத்திரமே ஆண் விரும்பிய போது ”சகலவற்றையும்” சகித்துக் கொண்டு இசைந்து கொடுக்கும் இயந்திரம் மாத்திரமே. எனவே இந்த யோனி மையவாதம் தான் யோனியை மையமாகக் கொண்ட பாலுறவுக்கு அப்பால் - எல்லாமே வக்கிரம் என்ற புனைவை­யும் ஏற்படுத்தியது.

எதிர்பாலுறவுக்­கூடாகத்­தான் (retro sexual) பாலியல் இன்பம் கிட்டும் என்கின்ற புனைவுகளும் இதன் வெளிப்பாடே. எனவே தான் பின்னர் புட்ட உறவு, வாய் உறவு மற்றும் ஒரு பாலுறவு வரை எல்லாமே அபத்தமானதா­கவும், வக்கிரம் கொண்டதாகவும், இயற்கைக்கு முரணானதாக­வும், சட்டவிரோதமானதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டன. இது ஆணின் பாலாதிக்கத்­துக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் நிலவுகின்ற சமூக அமைப்பைப் பொறுத்தளவில் தனது சொந்த பாலுறுப்பு தவிh;த்து ஏனையோரின் பாலுறுப்புக்களை அருவருப்பாக பார்க்கின்ற உளவியல் ஆண்களிடம் இருப்பதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக, பெண்கள் இருக்க கற்பிக்கப்பட்டுள்ளனர். கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு குண்டி கழுவுவது முதல் கொண்டு ஏனையோரின் உள்ளாடைகளை கழுவுவது மற்றும் குழந்தைகள், பிள்ளைகளின்-ஏன் வீட்டிலுள்ள அனைவரதும் பாலுறுப்புகள் உள்ளிட்ட சுகாதார மருத்துவ விடயங்களில் அக்கறை கொள்வதும், ஏன், சொந்த பாலுறுப்பு மீதான சுகாதார மற்றும் மறு உற்பத்தி குறித்தும் சகல வழிகளிலும் பெண்ணே, பொதுவாக எந்தவித அருவருப்­புக்­குமுள்ளாகாமல் சகிப்புடன் பாலுறுப்பு நலன்களில் ஈடுபாடு கொள்ள கற்பிக்கப்பட்­டுள்ளாள். இப்படியான பொறுப்­பு­க­ளி­­லிருந்து விலகி வரும், ஆணாதிக்கத்திடம் இப்படிப்­பட்ட அருவருப்புகள், வெறுப்­புணர்வுகள் இருப்பது குறித்து பின்னென்ன ஆச்சரியப்­பட இருக்கிறது. எனவே தான் இந்த கற்பு, கன்னித் தன்மை, போன்ற மரபான ஐதீகங்கள் இன்று பாலியல் வல்லுறவை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது. சமூகத்தில் உள்ள பாலொடுக்­குமுறைகளை இனங்காணாமல் செய்து விடுகிறது. குடும்பத்தில் கணவனால் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படு­கின்ற வேளைகளில் அது அவனின் உரிமையாக கொள்ளப்படுகிறது. பெண்கள் அதனை சகிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்­படுகிறது. இருக்கின்ற ஆணாதிக்க கட்டமைப்புடன் சமரசம் செய்து கொள்ளச் செய்துள்ளது. இந்த கட்டமைப்பின் மீதான மீறல் மேற்கொள்ளப்­படுமாயிருந்தால், மீறியவளை நடத்தை கெட்டவளாக ஆக்கிவிட்டுள்ளது. பாலியல் குறித்த இந்தப் புனைவுகளைத் தகர்ப்பதே பெண் விடுதலையை சாத்தியமாக்கும். இன்றைய பெண்கள் மீதான வன்முறைக­ளில் பாலியல் வன்முறையானது அதிகரித்து வருவதானது அதிகாரமற்ற பாலாரின் மீதான ஆண்களின் கையாலாகாத்தனத்தையே குறிக்கிறது. அதிகாரத்துவத்தின் அடக்கு­முறைக்குள்ளாவதால் அதிகாரம் முதலில் அவசியம். இன்று இந்த அதிகாரத்துக்கான ஒரு பயணத்தையே மேற்கொள்ள வேண்டியிருக்­கிறது. ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான பயணத்தில் தங்களின் விடுதலைக்கான பாத்திரத்தை ஆற்றுவது, விடுதலையில் அக்கறையுள்ள அனைத்து பெண்களினதும் கடமை.

யுத்த காலங்களில் பெண்கள்

என்.சரவணன்
யுத்த காலங்களில் பெண்கள் எவ்வாறு பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு நமது இந்து மத புராணங்கள், இதிகாசங்கள் என்ன கூறுகின்றன என்பதை பின்வருமாறு பெரியார் விளக்குகிறார். பெரியார் சிந்தனை -3 இலிருந்து பெறப்பட்டவை இவை.
எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டாராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து ”ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!”148 என்று சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25) இல் கீழ் சாதி பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப்பிரிவின் பெருமையை கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளை கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரப்பில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தை பெண்கள் எப்படி போற்றமுடியும். வரலாற்றில் மதயுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை பெண்களை கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது -வைப்பாட்டியாக-வைத்திருப்பது என்ற ஆணாதிக்க கொடுரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதையை விரும்புகின்ற போது, அவளின் விருப்பமின்றி தொடுவதைக் கூட கைவிட்டவன். சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளை களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக பெண்ணை பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணை தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டி பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தை சொல்லுவதே இராமாயணம். திரௌபதி இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியைத் தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர; அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையை புர்த்தி செய்யும் பொது மகளிர் என்பதால், அவளை துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்­தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, (இப்படி கூறிய வரலாற்றை தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதாரத்தை கொண்டிருக்­கவில்லை. பாண்டவர்கள் யுத்த மற்றும் மரபை தாண்டி அநியாயமாக கிருஷ்ண சதி மூலம் நடத்திய யுத்த உபதேசம் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாக கீதையில் இணைக்கப்பட்டதே. இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் துரௌபதை உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது.) பலர் முன்னிலையில் உரிந்த போது, முன்பு பொது விபச்சாரத்தில் பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்­ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனைய­வில்லை. பெண் ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில் உரிவதை பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை. இந்த திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தை காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்த பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்­தியத்திடம் தாரைவார்க்கும் ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது. பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்­சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணா­திக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது. ”அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர”133 என்ற கூற்றின் அர்த்தம் ” கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது”133 என்று கூறும் போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான்; இதனால் அமைதியை விரும்புகின்றான். இதே போல் வர்க்கமுரண்பாடற்ற அமைதியான சுரண்­டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவை தடுக்கவும், ஆணாதிக்க சிதவை தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளை பேணமுனைகின்றனர்.
பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.
”தானஹம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன் கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ”133 இதன் அர்த்தம் ”என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்.”133 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்த திமிர்பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்க பார்ப்பனிய திமிர;கள்தான். இந்த தீமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்க பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம். ”ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி”133 இதன் அர்த்தம் ”குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்”133 என்று அருச்சுனக்கு கூறும் போதே சாதியத்தை கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாக கொள்ள ஆணாதிக்கத்தை ஆயுதமாக கையாள்வதைக் காணமுடிகின்றது.

சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப் பரிசோதனை

சரா
கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island ) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது.
அவர் குறிப்பிட்டது இது தான், தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோதிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும் போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவு புரியும் போது இரத்தம் வெறளியேறுவதில்லை என்பது வஞ்ஞான ரிதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.
டொக்டர் சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
சமீபத்தில் தாய்யொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித் தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வத ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித் தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.
சிறியானி பஸ்நாயக்க இலங்கையில் பெண்ணிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குனரும், பெண்களின் மருத்துவ சுகாதார விடயங்கள் குறித்து நிறைய எழுதி, பேசி வந்திருப்பவரும் கூட. 10 வருடங்களுக்கு முன் சிங்களச் சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை பற்றிய ஒரு விரிவான கட்டுரையொன்றையும் எழுதியிருந்தார். இக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ”பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே” எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.
சிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் கன்னித்தன்மை பாpசோதனை முறை பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர். யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம் காட்டி சேர்ந்து வாழ்தல் (Iving together) இரு கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, நாங்கள் எப்போதோ முன்னோடிகளாக இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் காட்டத் தவறவில்லை.
சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.
இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை என்பது பற்றியும், இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக் கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமாக உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.
சொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவமும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக ஆக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொறுத்தவரை பெண்ணை உடமையாக வைத்திருப்பதற்கும் குடும்ப அலகை கவனமாகப் பேணவுமாக இந்த கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைகொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தேற்றங்கள் மேற்தோற்றத்தில் தொpயாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, தூய்மை, புனிதம், கௌரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகக் காண்போம்.
இந்த வகையில் தான் கற்பொழுக்கம் பற்றிய மதவழி புனைவுகள், இலக்கியங்கள், அரச யந்திரம் கொண்டிருக்கிற சட்டங்கள், பிரச்சார சாதனங்கள், கல்வி வாயிலாக மிகக் கவனமாக நம்பச்செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை நாம் அறிவோம்.
கற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது.
அந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல நாடுகளில் பண்பாட்டு அம்சங்களோடு இணைக்கப்பட்டும், பல நாடுகளில் வெளித்தெரியாத மரபுகளாகவும் வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திhpகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி செய்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)
சிங்கள சமூக அமைப்பில் நிலவிவரும் கன்னித்தன்மை பரிசோதனை முறையை இந்த பின்புலம்கொண்டே ஆராய வேண்டியுள்ளது.சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பார்க்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில்; வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்றசாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதரவர்க்கத்தினாpடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாய பூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்தியதர வர்க்த்தினாpடமே திருமணச் சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது. இந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான N‘ன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச்சமூகத்தில் வண்ணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர்; எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே துணி துவைப்பது சாதித்தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் துணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். ”பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார். உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை இந்த துணி துவைப்பதை விடவும் வேறு வழிகளிலும் தேவைகள் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.
திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் இந்த வெள்ளை விரிப்பில்படுவது அவள் கன்னி என நிரூபிக்கும் மிகச் சரியான சான்றென கருதப்படும்.
எனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.
சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத் துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். இறுதியும்; உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் ”றெதி நெந்தா” அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் ”தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத் துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) இது மேற்கொள்ளப்படும். இதற்குரிய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.
மணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்­படுவாள். மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.
மணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்களை அனுப்பி வைப்பார்.
மணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும். மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப் பெண்ணை வரவேற்பாள். வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரிட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அப்பாவிப் பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தும் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது ”பரிட்சையில் தேறாத” மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில. 1. இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வௌ;ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.
2. மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள்.
3. மணமகனின் தாய் வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.
4. சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறுபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.
5. மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது. 6. உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.
7. அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங்சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள். 8. வாழைப்பழத்தை அடியிலிருந்து தோலுரித்தல். 9. விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தொpவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அhpதாகவே நடக்கும்.) ”தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் ”கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இடங்களில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது விரக்திகொள்ளும் நிலைமையும் தொடர்கிறது.
சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூ}ய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும். அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
”கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் ”முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது. எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக ஒரு உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழ நே­ரிட்­டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சம், இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலை­க­ளின் போது, அல்லது ஏதாவது ஒரு முறையில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பங்களால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்­றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகி­றார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னிததன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பாhக்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயல­றையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்­கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான்நம்பமுடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.
இலங்கையில் நிலவும் கொடிய பிரச்சினைகளுக்கு முன்னால் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடை­முறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்­களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது. இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். ”ஆய்வுகளின்படி 76 வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்? 1. the island 2000 மே,யூன் பத்திரிகைகள். 2. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்
3. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு 4.உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை 5. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம். க்ரியா தற்கால தமிழ் அகராதி.

சுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்!

ஜயந்தி மாலா
சுவிற்சர்லாந்தின் சமஷ்டி அரசானது பெண்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ,அங்கீகரிக்காததனாலும், தீர்மானங்களை எடுப்பதில் ஆண் ஆதிக்க மரபுவழிச்; சமூகமும், கிறிஸ்தவமதவாதமும் பெண்களைத் தவிர்த்து வந்ததனாலும் 1887 முதல் சுவிஸ்பெண்கள் தமது ,உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். மத்திய ஐரோப்பிய, வடஐரோப்பிய நாடுகளுடன் ,ஒப்பிடும்போது மிகப்பிந்திய காலங்களில்கூட அவர்கள் கடுமையான போராட்டங்களை நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். 1848ம் ஆண்டு சமஷ்டி அரசின் நவீன அரசியல் அமைப்பு வாக்குரிமைக்கான உத்தரவாதத்தினைக் கொண்டிருந்தபோதும் அந்த உரிமையானது ஆண்களுக்கு மட்டுமே உரித்தாக்கப் பட்டது. பெண்கள் வாக்களிக்கின்ற உரிமையற்றவர்களாக அதாவது அடிப்படை ஜனநாயக உரிமைகளுள் ஒன்றான அரசியல் உரிமை அற்றவர்களாக அரசியல் அமைப்பின் மூலம் புறக்கணிக்கப்பட்டனர். தொழில் அடிப்படையில்கூடப் போதுமான கல்வித் தகைமைகளைப் பெண்கள் கொண்டிருந்த போதும், அதற்கான தொழில்சார் பதவிகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சுவிஸில் சட்டத்துறைப் பட்டத்தினைப் பெற்ற முதலாவது பெண்ணான Emile Kempin -Spiry சட்டத்தரணியாகத் தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதனை ஆட்சேபித்து சூரிச் உயர்நீதி­மன்றத்திற்கு முன்னால் அவர் ஜனநாயகப் போராட்டம் நடாத்தியபோதும், அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1887ல் நடாத்தப்பட்ட இந்தப்போராட்டமே சுவிற்சர்லாந்தின் வரலாற்றில் பெண்களின் சமஉரிமையை வலியுறுத்தி இடம்பெற்ற முதலாவது போராட்டமாகும். தமது அடிப்படை, ஜனநாயக, மனித உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமாயின் தமது வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டுத் தாம் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பதை உணர்ந்த பெண்கள் தொடர்ந்தும் வாக்குரிமைக்கான போராட்டங்களை நடாத்தினர். இதன் அடிப்படையில் 1909ம் ஆண்டு பெண்களின் வாக்குரிமைக்கான அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் பெண்கள் அரசியல் ரீதியான போராட்டத்திலும் காலடிஎடுத்து வைத்தனர்.1929ல் பெண்களின் வாக்குரிமைக்கான மனு முன்வைக்கப்பட்ட போதும் அது ஒரு பிரச்சார நடவடிக்கை­யாக மட்டுமே வெற்றியளித்தது. அரசியல் ரீதியில் அது ஏற்படுத்திய தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. 1945ல் சமஷ்டி அரசியல் அமைப்பில் குடும்பப் பாதுகாப்­புப்பிரிவு இணைக்கப்பட்டதுடன் இது பெண்களுக்கான பிரசவக்காப்புறுதி ஒன்றையும் வலியுறுத்தியது. இன்று 60 ஆண்டுகளை எட்ட இருக்கின்ற நிலை­யிலும் இந்தப்பிரசவக்காப்புறுதி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்காகத் தொடர்ச்சியான போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. சுவிஸ் சமஷ்டி அரசியல் அமைப்பா­னது எந்தவொரு சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைக்கும், தேசிய, மாநில, பிரதேச மட்டத்தில் சர்வஜன வாக்கெ­டுப்பை வலியுறுத்துகின்றது. மேலெழுந்த­வாரியாக ஜனநாயகச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய அம்சமாக இது தெரிகின்றபோதும் உண்மையில் அதற்கு மாறாக, நியாயமான உரி­மைகளை மறுப்பதற்கு சர்வஜனவாக்­கெ­­டுப்பு பலதடவைகளில் பயன்படுத்­தப்பட்டு வந்துள்ளது. ஆண்களின் கரங்களில் வாக்குரிமை இருந்தகாலங்களில் மட்டுமன்றி இந்தப்போக்கு இன்றுவரைத் தொடர்கின்றது.1959ல் பெண்களின் வாக்குரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வஜனவாக்கெடுப்பு முதன்முதலாக நடாத்தப்பட்டது. கிறிஸ்த­வமத மரபுவாத ஆண் ஆதிக்கச்சக்திகள் தங்களிடம் மட்டுமே இருந்த வாக்குரி­மையைப் பயன்படுத்திப் பெண்களுக்கான வாக்குரிமையை மறுத்தனர். 20ம் நூற்­றாண்டில் சர்வதேசத்தினை உலுப்பிய கடைந்தெடுத்த ஆண்ஆதிக்கச் செயற்பா­டாக இது பதிவாகியது. பெண்களுக்கான உரிமைகளைத் தீர்மானிப்பதில் எந்த உரிமையும் ஆண்களுக்கு இல்லாதபோதும், தம்மால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் ஊடான சர்வஜனவாக்கெ­டுப்பைப் பயன்படுத்தி இந்த ஜனநாயக மறுப்பை மேற்கொண்டனர்.புதிய பெண்கள் இயக்கம் என்ற அமைப்பு 1968ல் உருவாக்கப்பட்டது. முன்னைய பெண்கள் அமைப்பிலிருந்து வேறுபட்ட ஒன்றாக தன்னை அறிவித்த இந்தஅமைப்பு பெண்களின் சமஉரிமைப் போராட்டத்தினை மற்றைய பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெ­டுத்­தது. இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக 1971ல் சமஷ்டி அரசில் தமது வாக்குரிமையைப் பெண்கள் வென்றெடுத்தனர். இந்த ஆண்டு இடம் பெற்ற சுவிஸ் பாராளுமன்றத்தின் தேசியசபைக்கான தேர்தலில் பத்துப்பெண் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். 200 பிரதிநிதிகளைக்கொண்ட தேசிய சபையில் இதன்மூலம் 5வீதமான பிரதிநி­தித்துவம் பெண்களுக்குக் கிடைத்தது. இந்தநிலையானது 1976ல் பெண்களின் சமஉரிமைகளுக்கான சமஷ்டி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படு­வதற்கு வழிவகுத்தது. இதுவே பெண்களின் சம உரிமைகளைப்பேணும் வகையில் சுவிஸில் அமைக்கப்பட்ட முதலாவது அரச அமைப்பாகும். இதேஆண்டில் பெண்கள் கருவுற்று 12வாரங்களுக்குள் கருக்கலைப்புச் செய்வதைச் சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்­பட்டது. அப்போது கருக்கலைப்புச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. கருக்கலைப்பைச் சட்டரீதியாக்கு­வதற்கு 1977ல் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இதனை எதிர்த்து வாக்களித்ததே இதற்குக் காரணம். 1971ல் சமஷ்டி அரசினால் பெண்களுக்கான வாக்குரிமை அங்கீகரிக்­கப்­பட்டிருந்தபோதும் மாநில அரசுகளால் இது அங்கீகரிக்கப்படவில்லை. 1978ல் சுவிற்சர்லாந்தின் 26வது மாநிலமாக உரு­வாக்­கப்பட்ட துரசய மாநிலமே முதன்முதலில் பெண்களுக்கான வாக்குரிமையை அங்கீகரித்தது. இதற்குப்பின்னரும் முழுமாநிலங்களும் இதனை அங்கீகரிக்க மேலும் 12ஆண்டுகள் பெண்கள் போராட வேண்டியிருந்தது. 1990ல் கடைசிமாநிலமாக Appenzell- Innerhoden மாநிலம் பெண்­களின் வாக்குரிமையை அங்கீகரித்தது. ஆண்-பெண் சமஉரிமையை அங்கீக­ரிக்கும் அரசியல்அமைப்பத் திருத்தம் 1981ம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பின்மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதனைஅடுத்து சமஷ்டிப் பேரவை எனப்படும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட சுவிஸ் அமைச்சரவைக்கு முதன்முதலாக ஒருபெண் வேட்பாளர் போட்டியிட்டார். எனினும் Lilian Uchten hagen என்ற அந்தப்பெண் வெற்றிபெறவில்லை. பாராளுமன்றத்தின் 200 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபையிலும், 46 உறுப்பி­னர்­களைக் கொண்ட மாநிலங்கள் சபை­யிலும் ஆண்கள் அறுதிப்பெரும்பான்மை யினைக் கொண்டிருந்தமையினால் இவரைத் தோல்வியுறச் செய்தனர். 1983ல் இடம் பெற்ற இச்சம்பவத்திற்காகப் பாராளுமன்றம் பெண்களின் கடுமையான விமர்சனங்­களையும் கண்டனங்களையும் எதிர்நோக்­கியது. இந்தநிலையில் 1984ல் சுவிஸ் அமைச்சரவையின் முதல் பெண் அமைச்ச­ராக Elisabeth Kopp பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். சமஷ்டி அரசியல் அமைப்பில் பெண்க­ளுக்கான பிரசவக்காப்புறுதி பற்றி 1945ல் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அந்த இலக்கு அடையப்படவில்லை. 1984ல் கொண்டுவரப்பட்ட தாய்மார் பாதுகாப்பு முன்மொழிவும், 1987ல் கொண்டுவரப்பட்ட பிரசவக்காப்புறுதி முன்மொழிவும் சர்வ­ஜனவாக்கெடுப்பில் தோல்வியடைந்தன. 1998ல் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்­கப்பட்ட இந்த முன்மொழிவு மக்கள்முன் சர்வஜனவாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது நிராகரிக்கப்பட்டது. சுவிற்சர்லாந்தின் பெண்கள் உரிமைகளுக்கான போராட்ட வரலாற்றில் 1991ம்ஆண்டு ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகின்றது. யூன் மாதம் 14ம்திகதி அணிதிரண்ட இலட்சக் கணக்­கான பெண்கள் மாபெரும் வேலை நிறுத்­தத்­தையும், ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடாத்தினர். பெண்களுக்குச் சமஉரிமை வழங்குவதற்கான சகல நடவடிக்கைக­ளையும் துரிதப்படுத்த வேண்டிய கட்டா­யத்திற்குள் ஆணாதிக்க சுவிஸ்அரசியலைத் தள்ளிவிடுவதாக இப்போராட்டம் அமைந்தது. இத்தனைக்கும் மத்தியிலும் 1993ல் இடம்பெற்ற நிகழ்வொன்று அரசியல் அநாகரிகமாக அமைந்தது. அமைச்சர­வைக்­கான பெண் வேட்பாளராகப் போட்டியிட்ட Christiane Brunner அரசியலுக்கு அப்பால் விமர்சிக்கப்பட்டார். அவர் அமைச்சராவதைத் தடுப்பதற்கு வலது சாரிகளும், மரபுவாதிகளும் அநாகரிகப்பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அவர் விவாகரத்துப் பெற்றவர் என்றும், அழகற்ற பற்களைக்கொண்டவர் என்றும் கூட மிகவும் அரசியல் வங்குரோத்துத்­தனமான பிரச்சாரங்கள் இடம்பெற்றன. இந்தநிலையில் அமைச்சரவையில் ஒருபெண் இடம்பெறவேண்டும் என்பதில் பெண்கள் அமைப்புக்கள் உறுதியாகப் போராடியதனால் அவருக்குப்பதிலாக மற்றொரு பெண்ணான Ruth Dreifussஐத் தெரிவுசெய்வதில் பெண்கள் வெற்றிய­டைந்தனர். சுவிஸ் அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டாவது பெண்ணான இவர் பிரசவக் காப்புறுதிக்காகக் கடந்த 20வருடங்களாகப் போராடி வருகின்ற போதும் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஆயுதத்தினால் அந்த இலக்கு ஆண்களால் தடுக்கப்பட்டே வருகின்றது. இன்று சுவிஸ் அமைச்சரவையில் இரு பெண்களும்( 7:2 ) பாராளுமன்றத்தில் 34 பெண்களும் ( 246:34) இடம்பெறுகின்றனர். 1996ல் ஆண்-பெண் சமஉரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டிச் சட்டம் நடை­முறைக்கு வந்தது. இது பெண்களுக்கு எதிரான புறக்கணிப்பைத் தடைசெய்ததுடன் சமமான தொழிலைச்செய்யும் ,இருபாலா­ருக்கும் சம சம்பளத்தையும் வலியுறுத்தியது. அண்மையில் வெளியான ஆய்வொன்று சுவிஸில் பல சட்டஏற்பாடுகளுக்கு மத்தி­யிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சம்பள வேறுபாடு அதிகமானது எனத் தெரிவித்துள்ளது. 2000மாம் ஆண்டில் ஆண் ஒருவரை விடவும், பெண் ஒருவர் சராசரியாக 21.3 வீதமான சம்பளத்தைக் குறைவாகப் பெற்றிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்­கின்றது. ஓரு சுவிஸ் ஆண் 5600 சுவிஸ் பிராங்குகளை மாதச்சராசரிச் சம்பளமாகக் கொண்டிருந்தபோது, ஒரு சுவிஸ்ப்பெண் 4406 சுவிஸ் பிராங்குகளையே பெற்றுள்ளனர். உயர்தொழில் முதல் சாதாரண தொழில் வரை வேறுபட்ட அளவில் இந்தப் புறக்கணிப்பும், சமத்துவமின்மையும் காணப்படுகின்றது. ஆண்டில் 42.8 வீதமான பெண்கள் 3000 சுவிஸ்பிராங்குகளுக்குக் குறைவானதும் 68.1 வீதமானபெண்கள் 4000 சுவிஸ்பிராங்குகளுக்கும் குறைவானதுமான சம்பளத்தைப் பெற்றிருப்பதாக அவ்வாய்­வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எம்மைப் பாதிக்கும் இன்னொரு விடயம் சுவிஸ்பெண் ஒருவருக்கும், வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கும் இடையிலான சம்பள வேறுபாடாகும். வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்களை விடவும் 15வீதம் குறைவான சம்பளத்தை அதே வேலைக்காகப் பெறுகின்றனர். இதன்படி பெண்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்களுக்குக் குறைவாகவும், மற்றொரு சந்தர்ப்பத்தில் உள்நாட்டவர்களைவிடக் குறைவாகவும் சம்பளம் பெறுகின்றநிலை காணப்படுகின்றது. அதாவது வெளிநாட்டுப் பெண்கள் சம்பளவிடயத்தில் இரு தடவைகள் புறக்கணிக்கப்பட்டு, இரு தடவைகள் சமசம்பள உரிமை மறுப்புக்கு உள்ளாகின்றனர். சுவிஸில் இடம்பெறும் 60வீதமான சம்பள வேறுபாட்டிற்கு அப்பட்டமான புறக்கணிப்பே காரணம் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கைப் பெண்கள் சுவிற்சர்லாந்தைப் பொறுத்தமட்டில் இலங்கைப் பெண்களின் நலன்களைச் சிறப்பாகப் பேணக்கூடிய வகையில் இலங்கைப்பெண்கள் அமைப்பு எதுவும் இதுவரை இல்லை. தனிப்பட்ட வகையில் மிகக்கணிசமான அளவு இலங்கைப் பெண்கள் பொதுவான அமைப்புக்களில் செயற்படுகின்றனர். இதுகூட சுவிஸில் வாழும் மற்றையநாடுகளின் பெண்களின் பங்களிப்புடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும். ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பெண்கள் அமைப்பொன்று சுவிஸில் செயற்பட்டு வருகின்றது. மூன்றாம்மண்டல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இங்குஎதிர் நோக்கும் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க இந்த அமைப்பு மேலும் பலப்படுத்தப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. எனினும் இலங்கைப் பெண்கள் தமது தனித்துவமான பிரச்சனைகள் சார்ந்து தனியான அமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. இந்த அமைப்பு மற்றைய, பிராந்திய, தேசிய, சர்வதேசியப் பெண்கள் அமைப்புக்களுடனும் தொடர்புகளைப் பேணக்கூடியதாகக் கட்டி எழுப்பப்பட வேண்டும். இலங்கைப் பெண்களின் கடந்த 20 ஆண்டுகால சுவிஸ் புலம்பெயர் வாழ்வில் பெண்கள் உரிமைக்கான போராட்டங்கள் எதிலும் எமது பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதனையும் வழங்கவில்லை. மாறாக மற்றைய பெண்களின் போராட்டங்களினால் கிடைத்த ,உரிமைகளை அனுபவிப்பவர்களாக உள்ளோம். இந்தநிலை மாற்றப்பட்டுப் பெண்ணுரிமைப் போராட்டத்தின் பங்கா­ளிகளாகவும் இலங்கைப்பெண்கள் மாறவேண்டும். இலங்கைப்பெண்கள் பொதுவாகப் பெண்கள் என்ற அடிப்படை­யில் எதிர்நோக்கும் உரிமை மறுப்புக்­களுக்கு எதிராகவும் அதேவேளை வெளி­நாட்­டுப்­பெண்கள் என்ற விஷேட உரிமைமறுப்பிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. நண்பர்களே! புலம்பெயர் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற சமகால எதிர்கால சிக்கல்கள் குறித்து அவ்வவ் நாட்டு அனுபவங்களிலிருந்து எழுதப்படும் கட்டுரைகளை ”பறை” வரவேற்கிறது.படைப்புக்கள் படைப்பாளிகளின் கருத்துக்களையே முன்வைக்கின்றன. A & B ஒன்றியத்தினுடையது அல்ல.ஆ.

மனம்பேரி: ஒரு போராளியின் 30 வருட நினைவுகள்

சரா
இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 கிளர்ச்சியின் 25 வருடங்கள் பற்றிய நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த வேளை அதில் கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. இக்கட்டுரை எழுதுவதற்கென்று முன்னாள் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுடன் கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டா­ருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்­பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வை­யிட்டேன். மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில கட்டுரை இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 - மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் சில நாட்கள் இருந்து திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது. இலங்கையில் முதன் முதலில் ஆயுதப் போராட்டத்தை முன்­னெ­டுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணி­யினர். 1971 ஏப்ரல் கிளர்­ச்சி என அழைக்கப்­பட்ட இது அரசாங்கத்தின் கொடுர ஒடுக்குமுறையி­னால் அடக்கப்­பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்­பேரி பற்றி இந்த இருபத்­தைந்து வருட நினை­வில் சில குறிப்புகள்.... அவள் கொல்லப்பட்டு 25 வருடங்­கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்­பட்டு 25 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்...? 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்­லப்பட்ட பெண் போரா­ளிக­ளில் அவளும் ஒருத்தி. இருபதாயிரத்துக்­கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளி­களை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்த­னைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷ்பிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்­புக்­காக விசாரணையை நடத்தியது. அவ்விசா­ரணை தான் புகழ்பெற்ற பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை. இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்ன­வெனில் படையினருக்கு எதிரான விசாரணை­யொன்றில் அவர்களு­க்கு தண்டணை வழங்கப்பட்ட விசாரணையும் இதுவொன்றே.
கதிர்காமத் தாக்குதல் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி.யினர் (மக்கள் விடுதலை முன்னணி) திட்டமிட்­டபடி நாடெங்கிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்களை நள்ளிரவில் ஒரே நேரத்தில் தாக்கினர். யாத்திரைப் புகழ் பெற்ற கதிர்காமத்தில் அமைந்­து­ள்ள பொலிஸ் நிலையமும் இதே நேரத்தில் தாக்கப்பட்டது. இதன் போது இரண்டு ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொல்லப்­பட்டனர். எனினும், தாக்குதல் மறுநாள் 6ஆம் திகதியும் இடம் பெற்றது. கதிர்காமப் பொலிஸார் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியோடினர்.இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் நாட்டின் கிளர்ச்சித் தளங்களுக்கு அனுப்பப்பட்டனர். கதிர்காமத்தில் லெப்டி­னன்ட் விஜேசூரிய தலை­மையி­லான குழுவொன்று ஏப்ரல் 15ஆம் திகதியன்று முகாம் அமைத்தது. இம்முகாம் இ.போ.ச.­வுக்கு சொந்தமான ஓய்வு நிலையத்திலேயே அன்று அமைக்கப்பட்டிருந்தது. இம்முகாம் அமைக்கப்பட்­ட­தன் பிறகு கதிர்காமப் பொலிஸ் நிலையமும் புனரமைக்கப்­பட்டது.இம்முகாமை அமைத்­த­வு­டனேயே லெப்டினன்ட் விஜேசூரிய முதல் வேலை­­யாக கிளர்ச்சி­யாளர்களை வேட்டையா­டு­தல் எனும் போர்வையில் கதிர்காமத்தில் பல பெண்­களைக் கைது செய்தும், கடத்தியும் கொண்டு வந்து முகாமில் தடுத்து வைத்த­துதான். ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மனம்பே­ரியின் வீட்டுக்குச் சென்று அவளையும் கடத்திச் சென்றனர்.
அழகு ராணி மனம்பேரி
பிரேமவதி மனம்பேரிக்கு அப்போது வயது 22. ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புக்களையும் ஆர்வமாக முடித்தவள். கிளர்ச்சியின் போது கதிர்காமத்தில் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். ஜே.வி.பி.க்கான சீருடை தைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவள். தகப்­பனார் வனப்பாதுகாப்புத் திணைக்­களத்தில் கண்காணிப்பாளர். மனம்பே­ரியுடன் கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர். குடும்பத்தில் மூத்தவள். கதிர்காம வித்தியாலயத்தில் க.பொ.த. (சா-த) வரை கற்று முடித்துவிட்டு விட்டு பௌத்த பாடசாலையில் ஆசிரி­யராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். 1969ம் புதுவருட அழகு ராணிப் போட்டியில் இரண்­டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். 1970 ஏப்ரல் 16ம் திகதி நடத்தப்பட்ட புது வருட அழகு ராணிப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டாள். அடுத்த வருடம் அதே நாள் கொலைஞர்க­ளால் கடத்தப்பட்டாள்.
கடத்தலும் வதையும்
1971 ஏப்ரல் 16ம் திகதி காலை 9 மணிய­ளவில் மனம்பேரியின் வீட்டுக்குள் புகுந்த லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழு வீட்டிலுள்ள பொருட்களைக் கிண்டிக் கிளறி தூக்கியெ­றிந்தது. மனம்பேரியை அடித்து தலை முடியுடன் இழுத்துச் சென்றனர். தாய் லீலாவதி ”பெட்டப்பிள்­ளையப்பா ஒண்டும் செஞ்சு போடாதீங்கோ ஐயா!” என கதறி அழுத வண்ணம் பின் தொடர்ந்த போது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு மனம்பேரியை தூக்கிக் கொண்டு வாகனம் பறந்தது.அன்றைய இரவு முழுவதும் மனம்பேரி சித்திரவதை செய்யப்பட்டாள். அடுத்தநாள் 17ம் திகதி மனம்பேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.”ஐந்து வகுப்புகளிலும் கலந்து கொண்டாயா?”மௌனம்”ஜே.வி.பி.யுடன் எவ்வளவு காலம் தொடர்பு வைத்திருந்தாய்?””.........””நீ என்னென்ன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாய்?”இதற்கும் மௌனம் சாதிக்கவே தங்களது வக்கிர இயல்பை வெளிக்காட்டினர். மனம்பேரி விசாரணை வழக்கின் போது வெளிவந்த தகவல்கள் இவை.”சரி... நான் சொல்வதை அவதானமாகக் கேள். சொல்வதைச் செய்யாவிட்டால் உனது உயிர் போகும்.” இது லெப்டினன்ட் விஜேசூரிய. அவர் தொடர்ந்தும் ”உனது ஆடைகளைக் ஒவ்வொன்றாகக் கழற்று...””ஐயோ.. சேர், வேண்டுமென்றால் சுட்டுப் போடுங்கள். ஆடையைக் கழற்றச் சொல்லாதீங்க...” என மனம்பேரி கண்ணீர் விட்டுக் கதறினார்.”அது எனது வேலை. நான் சொல்வதை மட்டும் நீ செய்” என துப்பாக்கியைத் தலையில் அழுத்தி மிரட்டிய போது அழுகையுடன் மேலாடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் இருந்தாள். மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கி உள்ளாடைக­ளையும் கழற்றி விட்டு நிர்வாணம் ஆக்கினர். தனது கைகளால் மனம்பேரி மறைவிடங்களை மறைத்தாள்.மனம்பேரியை லெப்டினன்ட் விஜேசூரிய முதலில் பாலியல் வல்லுறவு புரிந்தான். அதன் பின் மாறி, மாறி ஏனைய சில இராணுவத்தினரும் பாலியல் வல்லுறவு புரிந்தனர். இதே வேளை அதே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இளம் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள்.ஒரு அறையில் இந்த அட்டுழியங்கள் நிகழ்ந்து கொண்­டிருக்கும் போது பக்கத்து அறையில் ”வெடகிட்டி கந்த பாமுல விகாரை”யின் பிக்குவும் இதே முகாமில் வதைக்குள்­ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்பிக்குவை தடுப்பிலுள்ள பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிய வைத்தனர். இறுதியில் இந்த பிக்குவையும் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து சுட்டு வீழ்த்தினர். ”புனித பூமி” என சொல்லப்படுகின்ற கதிர்காமத்­தில் தான் இந்த கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன.
உயிர் பிரிந்தது.
எல்லாவற்றையும் முடித்த பிறகு மனம்பேரியை கைகளிரண்டையும் மேலே தூக்கச் சொல்லி மீண்டும் பணிக்கப்பட்டது. திரும்பியவாறு வீதியில் நடக்க கட்டளை பிறப்பித்தனர். அரை மயக்க நிலையில் தள்ளாடியபடி துப்பாக்கி முனையில் வீதியில் நடத்தப்பட்டாள் நிர்வாணமாக. சார்ஜன்ட் அமரதாச ரத்னாயக்காவின் துப்பாக்கி முனையிலேயே மனம்பேரி வீதியில் நடத்தப்பட்டாள். மனம்பேரியை முன்னே செல்ல விட்டு துப்பாக்கி தோட்டக்களால் முதுகைத் துளைத்தான் சார்ஜன்ட் அமரதாச. கீழே விழுந்த மனம்பேரியை மீண்டும் உலுக்கி நிறுத்தி நடத்தினான் மீண்டும் அவனின் துப்பாக்கிக் குண்டுகள் மனம்பேரியின் உடலைத் துளைத்தன.”தண்ணீர் தண்ணீர்...” என முனுகிய மனம்பேரிக்கு எலடின் எனப்படும் வியாபாரி ஒருவர் தண்ணீர் கொடுக்க முற்பட்டபோது ”விலகிப் போ! உதவி செய்ய முற்பட்டால் நீயும் கொல்லப்படுவாய்” என அச்சுறுத்தப்­படவே அவரும் விலகிச் சென்றார். நடுவீதியில் சூட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த மனம்பேரியை அப்படியே விட்டுவிட்டு திரும்பினர். இராணுவத்தினர். பின்னர் ஊர் வாசிகளான எலடின் (இவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார். மனம்பேரியின் வழக்கில் முக்கிய சாட்சிகளில் இவரும் ஒருவர். இவரைச் சந்திக்க ”சரிநிகர்” கதிர்காமத்துக்கு சென்ற நேரத்தில் ”மன்னியுங்கள் அந்த கொடுர சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவர விரும்பவில்லை” என அது பற்றி கருத்துரைக்க மறுத்து விட்டார்.)காதர், பெருமாள் ஆகிய ஊர் வாசி­களை அழைத்து பிணங்களைப் புதைப்ப­தற்கான குழிகளைத் தோண்டும்படி கட்டளையிட்டனர். அவர்கள் தோண்டினர். மனம்பேரியின் முனகலைக் கேட்ட எலடின் அருகில் சென்ற போது :அந்த பையனிடம் (பெருமாள்) எனது காதணிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து தங்கைக்கு அதனை கொடுக்கச் சொல்லுங்கள். நான் ஒருவருடனும் கோபமில்லை காமினி பாஸ் தான் குழுப்பிப் போட்டார்...” (கிளர்ச்சியின் போது கதிர்காமத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் தான் காமினி பாஸ்) எனக் கூறிக் கொண்டே தண்ணீர் கேட்டிருக்கிறாள். உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இராணுவ முகாமுக்குச் சென்று ”உயிர் இன்னமும் இருக்கிறது. எனவே புதைப்பதற்கு முடியாது.” என்ப­தைத் தெரிவித்தார். உடனே இருவரை அனுப்பி உயிரைப் போக்கும்படி பணித்­தான் லெப்டினன்ட் விஜேசூரிய. அவர்கள் இரு­வரும் அப்பாவச் செயலை செய்ய முடியாது என திரும்பி விடவே இன்னொ­ருவன் அனுப்பப்பட்­டான். அவன் போய் இறுதியாக மனம்பேரியின் நெற்றிப் பொட்­டில் சுட்டான். மனம்பேரி புதை குழியில் சாய்ந்தாள். (இறு­தி­யாக சுட்ட நபர் இறுதி வரை அடையாளம் காணப்படவில்லை.)முன்னைய வருடம் இதே நாள் அழகுராணியாக காட்சியளித்த அதே தபால் நிலையத்திற்கருகிலேயே மனம்பேரியின் உயிரும் பிரிந்தது. அதே இடத்தில் மனித புதைகுழிக்குள் புதைந்தது. அவளது உடல்.மனம்பேரியின் படுகொலை தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் சிலவற்றின் பின்னர் கண்துடைப்புக்காகவே அன்றைய சிறிமா அரசாங்கம் மனம்பேரியின் வழக்கை சிசாரணைக்கு எடுத்துக் கொண்டதென்றால் அது மிகையில்லை.
கொலைஞர்களின் முடிவு.
1971ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி முற்பகல் 10.30க்கு மனம்பேரியின் சடலம் புதைகுழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 1973 மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணை 11 நாட்கள் நடந்தது. வழக்கின் இறுதியில் லெப்டினன்ட் அல்பிரட் விஜேசூரிய சார்ஜான்ட் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் பதினாறு வருட கடுழிய சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 1973ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டணை வழங்கப்பட்ட இரு இராணுவத்தினரும் தங்கள் மீதான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். இம்மேன்மு­றையீட்டு வழக்கு 1973 ஒக்டோபாரில் நடத்தப்பட்டது. இவ்வழக்கிலும் சரியானதே என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.அவர்களில் லெப்டினன்னட் விஜேசூரிய சிறையில் நோயுற்று மரணமானான். சார்ஜன்ட் அமரதாச தண்டனை முடிவுற்று விடுதலையான பின் 1988இல் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டான்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More