Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label 2வது பறை. Show all posts
Showing posts with label 2வது பறை. Show all posts

மரியாதை (படு)கொலைகளும் அடிப்படை மனித உரிமைகளும்

நிலா
கடந்த 24.01.02 அன்று சுவீடன் நாட்டில் இடம்பெற்ற சம்பவம் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே பலத்த விவாத­ங்­களை உருவாக்கியுள்ளது. தங்­களது கலாசார விழுமியங்களுக்கு முரணாக ஒரு சுவீடன் நாட்டு வாலி­பரை காதலித்த 26வயது­டைய துருக்கிய குர்திஸ்தான் இன இஸ்லாமிய பெண்மனி அவரது தந்தையினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்;. இச்சம்பவம் ஸ்கன்டிநேவிய நாடுகளில் அதிலும் குறிப்பாக அயல்நாடு என்றவகையில் நோர்வே டென்மார்க் போன்ற நாடுகளில் ஒரு அசாதாரண நிலையை தோற்றுவித்துள்ளது. தனிமனித சுதந்திரம் பற்றியும் தங்களது எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமைகள் பற்றியும் இதில் பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பு சாதனங்களாலும் சமூக ஆய்வாளர்கள் அரசியல்வாதிகளாலும் விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் சிலதொடர்பு சாதனங்­கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனமுரண்பாடுகளையும் குரோத மனப்பாண்மையையும் தோற்றுவிக்கும் விதமாக செயலாற்றி வருகின்றன. இதற்கு அரசியல் வாதிகளும் துணை போயுள்ளமை வருந்தத்தக்க செயலாகும். அதே சமயம் இது தொடர்பாக தொட­ர்பு சாதனங்களில் இடம் பெற்ற விவாதங்கள் கருத்துப் பரிமாற்­றங்கள் எமது உணர்வை தட்டியெழுப்புபவையாக மட்டுமண்றி பெண்கள் மற்றும் எமது பிள்ளைகள் மீதான எமது ஆதிக்கம் பற்றி ஒரு மதிப்பீடு செய்வதற்க்கு வாய்ப்பாக அமைந்திருந்ததை மறுப்பதற்கில்லை. பதிமா ஷின்டால் (Fadime sahindal ) என்ற பெண் சுவீடன் வாலிபரை காதலித்து வந்தார் 1998ல் அவ்வாலிபர் கார் விபத்தில் இறந்து விட்டார். எனினும் பாத்திமாவின் பெற்றோரால் மகளின் காதல் விவகாரத்தை இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல தடவைகள் இவர் குடும்பத்தாரின் கொலைப் பயமுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார் இதையிட்டு இவரிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. சுவீடன் தொடர்பு சாதனங்களிலும் மக்கள் மத்தியிலும் இவர் நன்கு அறிமுகமானவராக இருந்து வந்தார். எனினும் தனது சகோதரியின் வீட்டிற்கு செனறிருந்த சமயம் அங்கு வந்திருந்த தனது தந்தையாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் காதல் தொடர்பு முடிவுபெற்று ஏறத்தாழ 3வருடங்கள் கடந்த பின்னரே இக்கொலை நடந்திருப்பதால் மனித உயிர்களை விட கலாச்சார பண்பாட்டு விடயங்கள் எமது அன்றாட வாழ்வில் செலுத்தும் ஆதிக்கம் தெளிவாகியுள்ளது. இச்சம்பவம் திட்டமிடப்பட்ட படுகொலை என்பதிலோ அல்லது மிகவும் மிலேச்சத்தன­மான செயலென்பதிலோ மாறுபட்ட கருத்திற்க்கு இடமில்லை. இவ்வாறான செயல்கள் சட்டத்தினால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மதம் மொழி கலச்சார பண்பாடுகள் என்பன ஒரு வரைய­றைக்கப்பால் தனி மனித ஆளுமையில் ஆதிக்கம் செலுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு மனிதன் ஆணோ பெண்னோ தங்களின் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கவும் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் முழுமையாக வழங்கப்படல் அவசியம். பெற்றோர் குறித்த ஒரு வரம்பிற்குள் நல்ல வழிகாட்டிகளாக செயலாற்றலே வரவேற்கத்­தக்கது. எனினும் மிகப் பெரும்பாலான புலம்பெயர் வாழ் சமூகத்தில் பெண்களும் பிள்ளைகளும் கலச்சாரம் பண்பாடு வட்டத்­திற்க்குள் உள்ளாக்கப்பட்டு மூலைச்சலவையும் செய்யப்பட்டு விடுகின்றனர். இதனால் இச்சமூகத்திற்கு கிடைக்கவேண்டிய பல சாதகமான அம்சங்கள் கிடைக்காமல் ஒரே வட்டத்திற்க்குள் சுழல வேண்டிய நிலை ஏற்பட்­டுள்ளது. இப் புலம் பெயர் சமூகத்தி­லிருந்து தோன்ற வேண்டிய பல சமூக விஞ்ஞானிகள் சிந்தனையாளர்கள் தொழில்­நுட்ப வல்லுனர்கள் தோன்றாமலே மறைந்து விடுகின்றனர். கலாச்சாரம் என்பது எவ்வாறு இனத்திற்கு இனம் மதத்திக்கு மதம் மொழிக்கு மொழி வேறுபடுகின்றதோ அதேமாதிரி கலாச்சாரமென்பது காலத்திற்க்கு காலம் மாற்றமடைய வேண்டும். என்பதை விட அது மாற்றமடைந்தே வந்துள்ளது என்பது தான் உண்மை. தவிர கலச்சாரமென்பது நிரந்தரமா­னதல்ல. அச்சூழலிற்கும் நாம் வாழும் சமுதாய ஒழுங்கு விதிகளுக்கும் எற்ப நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக அமைதல் அவசியம். இது தவறாயின் மனிதகுலம் இன்னும் வேட்­டையாடி வாழும் சமூகமாகவே காணப்படும். பத்திமா ஸின்டால் போன்று பல பெண்கள் இன்னமும் சித்திரவதைக்கும் கொலைப் பயமுறுத்தல்களிற்கும் உளளாக்கப்பட்டி­ருந்தாலும் கூட ஒரு சில சம்பவங்களைத் தவிர பெரும்பாலான சம்பவங்கள் மூடிமறைக்கப்பட்டு விடுகின்றன. தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்கவோ அல்லது குறைந்தபட்சம் எண்­ணிக்­கையை குறைக்கவோ வேண்டுமாயின் இது தொடர்பான கருத்தியல் அடிப்படை மாற்றமும் மாற்றுக் கலாச்சாரங்கள் பற்றிய சிந்தனைத் தெளிவும் அவசியம். இப்படுகொலை தொடர்பாக வெளிவந்த செய்திகள் நிச்சயமாக இங்கு வாழும் புலம் பெயர் சமூகத்தவர்கள் பலரை பாதித்திருக்கும் அந்தளவிற்க்கு பெரும்பாலான தொடர்பு சாதனங்கள் இவ்விடையத்தில் மிகக்கடு­மையான போக்கை கடைப்பிடித்திருந்தன. இக்கொலையில் சம்மந்தப்பட்ட இரு பிரி­வினரும் புலம்பெயர்ந்து வாழும் சமூகமென்­பதாலும் அவர்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் வழமைபோல சில தொடர்புச் சாதனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளாமை மட்டுமன்றி உண்மைக்கு மாறான செய்திகளை எதுவித தயக்கமுமின்றி வெளியிட்டும் வந்தன. இவ்வாறான படுகொ­லைகள் இஸ்லாம் மதத்திற்குரியது எனவும் வறுமையில் வாடும் 3ம் உலக நாடுகளிலேயே இவை இடம் பெறுவதாகவும் தொடர்பு சாதனங்கள் மட்டுமன்றி பல அரசியல்வா­திகளும் பொறுப்பற்ற விதத்தில் அறிக்கைகள் செய்திகள் வெளியிட்டிருந்தனர். ஆனால் உண்மையில் இவை உலகிலுள்ள பல சமூகங்­களிலும் காணப்படுகிறது என்பதே உண்மை. கிறிஸ்துவ மதப்பிரிவுகள் இந்து, யூத மதங்களிலெல்லாம் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் காலத்திற்கு காலம் இடம்பெற்று வருகின்றன அவை சமூகப் பின்னணியிலும் எண்ணிக்கையிலும் மாறுபட்டிருக்கலாம் ஆனால் அடிப்படையில் அப்பட்டமான ஆதிக்க வெறியில் மேற்கொள்ளப்படும் கொலைகளே. இவை தனித்து ஒரே ஒரு மதத்திற்கோ உரியசெயல்களல்ல. (மதம் அபினனென்ற போதைவஸ்துக்கு சமமானது என்பது உலகிலுள்ள ஒவ்வொரு மதங்களின் வரலாற்றையும் புரட்டிப்பார்த்தால் நன்கு புலப்படும் மதங்களின் தோற்றம் சமூக நலன்களை மையப்படுத்தி தோற்றுவிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் அவை நிறுவனம­யப்­படுத்­தப்பட்ட ஒரு சமூக அமைப்பாக தோற்­றம் பெற்று வளர்ச்சியடையத் தொடங்கியதும் தனிமனிதநலன்களும் அதனை மையப்படுத்திய ஒடுக்குமுறைக­ளும் சமூகநலன் சமூக ஒழுக்கம் என்ற குறுகிய வட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் இந்த மதங்களின் ஆளுமை கலாச்சாரப் பண்பாட்டு விடயங்க­ளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அதே சமூக ஒழுங்கு(?) விதிகளை கலாச்­சார பண்பாட்டு விடயங்களிலும் செலுத்தி அவற்றை தமது முளுமையான கட்டுப்பாட்­டின் கீழ் கொண்டு வந்துள்ளன இதனை மேலும் ஊக்கப்படுத்தி நிலை நிறுத்துவது போல் கடந்த கால உலக வரலாறும் (மன்­ன­ராட்சி காலனித்துவ ஆதிக்கம்) அமைந்­துள்ளது. மேலும் ஆணாதிக்க மனப்பான்­மையை மையப்படுத்­திய பொருளாதார கட்ட­மைப்­பும் இக் கலாச்சார பாரம்பரியங்களை கட்டிக்காக்கும் வகையில் திட்டமிடப்பட்டு நடைமுறைப்­படுத்தப்பட்டு வந்துள்ளது.) இச்சம்பவத்தில் அதிதுயரமான விடயம் யாதெனில் இவ்விடயம் பற்றிய விவாதங்கள் தொடர்பு சாதனங்களில் இடம்பெற்ற போது சிலர் இதனை நியாயப்படுத்தியும் கொலை­யாளியின் செயலை நியாயப்படுத்தியும் கூறப்பட்ட கருத்துக்களாகும். இவை இந்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியிருந்தமையை பத்திரிகைகளில் வெளிவந்த வாசகர் கடிதங்கள் மூலமாக உணரக்கூடியதாக இருந்தது. பல இஸ்லாமிய சமூக அமைப்புக்கள் இதற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் எதுவித தொடர்புமில்லை என அறிக்கைகள் வெளியிட்டிருந்த போதும் தொலைக்காட்சியில் இடம் பெற்ற விவாதங்­களில் இவ்வமைப்புக்கள் பலவும் கேள்விக்கு சரியான பதில் கூறமுடியாது திண்டாடி­யதையும் பூசிமொழுகி பிரச்சனைக்குரிய விடயங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முயன்றமையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளும் கொள்கைகளும் ஐரோப்பிய மக்களிடையே பரவலாக அதிருப்தியை தோற்றுவித்துள்ள போதும் பல சமூக ஆய்வாளர்களால் சாதகமான கணணோட்டத்திலேயே இஸ்லாம் அணுகப்படுகின்றது. உண்மையில் இஸ்லாம் இன்று தன்னை மீள்ஒழுங்கமைப்பில் ஈடுபடுத்தவேன்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்­டுள்ளது. இஸ்லாம் மதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்டுவரும் பிரச்சனைக­ளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் பல இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களிற்கு கலாச்சார முரன்பாடுக­ளால் தமது அடையாளம் பற்றிய தேவை எழுந்துள்ளது. இங்குள்ள மக்களிடையே இணைந்துவாழும் சூழ்நிலையில் ஏற்படக் கூடிய நடைமுறை சார்ந்த பிரச்சனைகளிற்கு முகம்கொடுப்பதும் தமது புதிய சந்ததியினரின் தேவைகளிற்கும் சிந்தனைகளுக்கும் வழிகாட்டிகளாக செயலாற்ற வேண்டிய சிக்கலான பிரச்சனையை இவர்கள் எதிர் கொள்கின்றனர். பல ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலான ஐரோப்பியர்கள்; இங்கு குடிபுகும் வெளிநாட்டவர்களை விட இஸ்லாமிய மதம் தொடர்பாகவே கூடிய அச்சமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 11 செப்ரம்பரில் நடந்த சம்பவம் இதனை மேலும் வலுவாக்கியுள்ளது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த யூதர்கள் தொடர்பாக ஐரோப்பாவில் நிலவிய குரோத உணர்வு போன்றவொரு சூழ்நிலை தற்போது இஸ்லாம் தொடர்பாகவும் படிப்படியாக ஏற்பட்டு வருகின்றதை அண்மைக்காலச் சம்பவங்கள் பல தெளிவாக்கியுள்ளன. இதனை உடைத்தெறிய வேண்டிய கடமை இஸ்லாமிய நாடுகளையும் அமைப்புக்களையுமே சாரும். பதிமா ஷின்டாலின் மரணம் ஒரு வேதனையான சம்பவமாயிருந்தாலும் இங்குள்ள புலம்பெயர் மக்கள் மத்தியில் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் தமது உரிமைகளுக்காக போராடும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நோர்வேயில் பல ஊர்வலங்கள் இங்குள்ள பெண்நிலைவாதிகளாலும் சில இஸ்லாமிய அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. சுவீடனில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் சென்று தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். பதிமாவின் இறுதிச்சடங்கில் சுவீடன் நாட்டு இளவரசியும் கலந்து கொண்டமை வரவேற்கத்தக்கது. இவரின் உடல் அவரின் காதலரின் கல்லறைக்கு அருகேயே அடக்கம் செய்யப்பட்டது. பத்திமா ஷின்டாலின் உயிர் இவ்வுலகை விட்டுப்பிரிந்து விட்டாலும் அவரின் நினைவுகளும் கருத்துக்களும் இலகுவில் அழியாது. புலம்பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினர் பலர் அவர் எதிர்நோக்கிய அதே பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளனர். தங்களது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு வளங்கப்படாமலிருப்பது எதுவிதத்திலும் நியாயமானதல்ல. இவ்விடையத்தில் சமூக அறிஞர்களும் ஊடகங்களும் அரசியல் வாதிகளும் புலம்பெயர் மக்களின் அமைப்புக்களும் ஒரு திட்டமிட்ட வேலைத் திட்டத்தை ஆரம்பித்தல் வேண்டும். புலம் பெயர் மக்களின் பிரச்சனைகள் வெறும் சட்டத்தாலோ அல்லது அரசியல் வாதிகளின் சந்தர்ப்பவாத வாய்பேச்சுகளாலோ தீர்க்கமுடியாது. நியாயமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட புரிந்துணர்வுடன் கூடிய கருத்துப் பரிமாற்றமே சரியான திசையில் இவ்விளம் சந்ததியை இட்டுச் செல்லும் இது சார்ந்த கல்வியும் புலம்பெயர்ந்த சமூகத்தில் இவர்களின் சமூக அங்கீகாரமும் அவசியம். இவற்றை சீராக நடைமுறைப்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் பதிமா ஷிலின்டாலிற்க்கு ஏற்பட்ட முடிவிலிருந்து எமது சந்ததியிரை நாம் காப்பாற்றலாம். புலம் பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினர் ஐரோப்பிய இளம் சந்ததியினருடன் ஒப்பிடுகையில் இரண்டுவகையான கலச்சார முரண்பாடுகளை எதிர்நோக்குவதுடன் பெரும்பாலானோர் இவ்கலாச்சார முரண்பாட்டால் சமூக உளவியல் தாக்கங்களிற்கு உள்ளாகியுள்ளனர். அண்மையில் நோர்வேயில் புலம்பெயர் சமூகத்தில் இளைய சந்ததியினர் பற்றி மேற்கொண்ட ஆய்வில் புலம் பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினர் நோர்வேஜிய சந்ததியினருடன் சுமூகமான உறவுகளைப் பேணிவந்தாலும் அவர்களுடன் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடிவதில்லை. இதற்கான காரணம் பெற்றோர்கள் மத்தியில் இருந்துவரும் நெருக்குதல்களே காரணம் எனத் தெரியவந்துள்ளது. மிகப் பல வெளி நாட்டுப் பெற்றேர்கள் தங்களது பிள்ளைகள் நோர்வேஜிய கலாச்சாரத்தை உள்வாங்கி விடுவார்கள் என்ற அச்சமே இவ்வாறான நெருக்குதலுக்கு என அறிய வருகிறது. இக் கலாச்சார முரன்பாடுகள் இளம் சந்ததியினரின் இயல்பான வாழ்கையை பாதிப்பதுமட்டுமன்றி அச்சமூகத்தின் முனனேற்றத்திற்கு அவசியமான அறிவியலாளர்களின் பங்களிப்பும் கிட்டாமல் செய்துவிடுகின்றது. நன்கு படிக்கும் இளம்பெண்கள் பலர் மதம் கலாச்சாரம் என்ற குறுகிய வட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு படிப்பை இடையில் நிறுத்திவிட்டு குடும்பவாழ்வில் ஒன்றித்து விடுகின்றனர். இது இன்று வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப சமூகத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பை காலப்போக்கில் மழுங்கடித்துவிடும்

கீழிறங்கும் கழுகுகள்

சேரன்

வட அமெரிக்கா ஐரோப்பா மற்றும் மேலைநாடுகள் எங்கும் அண்மையில் திரையிடப்பட்டு மில்லியன் கணக்காக வருமானம் பெற்றுவரும் Black hawk Down என்ற மாபெரும் திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்கத் தேசியவாதத்தையும் அமெரிக்க விசுவாசத்தையும் மூலகளமாகவும், மூலவளமாகவும் (கூடவே ஏராளமான பணத்தையும்) இட்டுப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு உலகெங்கும் வினியோகம் செய்யப்பட்ட இந்தப்படம் ஒக்டோபர் 3ம் திகதி 1993இல் சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் அமெரிக்க சிறப்புப் படையினர் நிகழ்த்திய தாக்குதல் ஒன்றைப் பற்றியது.

வளமையாகவே holywood பெருந்தயாரிப்புக்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இணக்கமாகவும் அமெரிக்க விசுவாசத்தை ஊறவைப்பதாகவும் அமெரிக்காவின் McDonald... Nike கலாசாரத்தை உலகெங்கும் பரப்புவதாகவுமே அமைந்து வருகின்றன. பெருநிதி நிறுவனங்களின் துணையும் அரசியல் பலமும் வல்லாட்சியும் இந்த கலாசார பண்பாட்டு மேலாதிக்கப் பரவலுக்கு ஒரு பிரதான காரணம். எனினும் செப்டெம்பர் 11 நியுயோர்க் வாசிங்டன் தாக்குதல்களுக்குப் பிற்பாடு அமெரிக்க அரசுக்கும் holywood பெரு முதலாளிமாருக்கும் இன்னும் அழமான கலாசார உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன. தாக்குதல்கள் இடம்பெற்றுச் சில வாரங்களின் பிற்பாடு holywood இன் எல்லா முக்கியமான தயாரிப்பாளர்கள்; நெறியாளர்கள் கதாசிரியர்களை புஸ் வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

அமெரிக்க தேசப்பற்றையும் வீரத்தையும் சித்தாpக்கும் உன்னதமான திரைப்படங்களைத் தயாரிக்கும்படியும் அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சனம் செய்யாத முறையிலும் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளைப் புண்படுத்தாத முறையிலும் இந்தப்படங்கள் அமைய வேண்டும் என்றும் புஸ் கோரியிருந்தார். இந்தக்கோரிக்கையின் விளைவாக அமெரிக்காவின் கனவு காசு) தொளிற்சாலை வரிசையாகப் படங்களைத் தருகிறது. Black hawk Downkk தொடர்ந்து Collakral Damage . ஏனையவை தொடரும். இதுவரை Military- Industrial-entertaiment Complex என்று வழங்கப்பட்டு வந்த அமெரிக்க விரிவாதிக்கத்துக்கு இப்போது நாம் வழங்கக்கூடிய பொருத்தமான பெயர் Military Industril -Entertaiment Complex என்பதாகும்.

ஓக்டோபர் 3 1993 சோமாலியாவில் என்ன நடந்தது என்பதையும் அச்சம்பவங்களின் பகைப்புலத்தையும் தெரிந்து கொள்வது Black hawk Down திரைப்படத்தின் அரசியலைப் புரிந்துகொள்ள மேலும் வழிசெய்யும். ஒக்டோபர் 3, 1993 அன்று சோமாலியாவின் தலைநகரில் தமக்குள் மோதிக் கொண்டிருந்த ஆயுதக்குழுக்களுள் ஒன்றின் தலைவர் முகமது ஹபரா அய்டீட் என்பவரை அல்லது அக்குழுவின் வேறு தலைவர்களைப் பிடிப்பதற்கென 160 அமெரிக்க சிறப்புப் படையினர் மொகடிசுவில் தரையிறங்க முற்பட்டனர். அவர்களுடைய முயற்சி முழுத் தோல்வியில் முடிந்தது. பதினெட்டு அமெரிக்கப் படையினர் கொல்லப் பட்டனர். எழுபத்தைந்து பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். அமெரிக்க ராணுவத்தின் புகழ்பெற்ற Black hawk ஹெலிகொப்ரர்கள் நொருங்கி வீழ்ந்தன. 500-1000 வரையான சோமாலியப் பொதுமக்கள் அன்றிரவு தாக்குதலின் போது உயிரிழந்தனர்.

அமெரிக்கப் படையினரின் உடல்களை சோமாலிய மக்கள் தெருவில் இழுத்துச் சென்றதை கனடாவின் Toronto Star நாளேட்டின் நிருபர் போல் வற்ஸன் எடுத்த படத்துக்கு புளட்வர் விருது வழங்கப்பட்டது. சோமாலிய மக்களின் கோபததுக்கு என்ன காரணம்? பொதுவாகவே எந்த மக்களுக்கும் வெளிநாட்டுச் சக்திகளால் ஆளப்படுவது ஒவ்வாதது ஆகும். சோமாலியா மக்கள் மட்டும் இது விதி விலக்காக முடியுமா? எனினும் ஒக்டோபர் 3 அன்று நடந்தேறிய சம்பவங்களுக்கு குறிப்பான காரனங்களும் உள்ளன.

அதேவருடம் யூலை மாதம் 12ம் தேதி அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் பரா அய்டீட்டின் மீது தாக்குதல் தொடுத்திருந்தனர். அய்டீடின் குலக் குழுமமான ”Trib habr Gidr ” மக்களின் ஒன்று கூடல் ஒன்றின் போது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தன. இக்குலக் குழுவின் முதியோர் எழுத்தாளர்கள் கவிஞர்கள் புத்திசீவிகள் எனப் பலவகையானோர் ஒன்று திரண்டிருந்த கூட்டத்தின்மீது அமெரிக்கப் படையினரின் Cobra ரக ஹெலிகொப்ரர்கள் பதினாறு வுழற ஏவுகணைகளையும் 2000 சிறு பீரங்கிக் குண்டுகளையும் ஏவின என்று Washington post நாளேடு தெரிவித்திருந்தது. ஏவுகணைத் தாக்குதலுக்கு முன்பாக கூட்டம் நடைபெற்ற மாடியின் படிக்கட்டுகளை ஹெலிகொப்ரர்கள் தாக்கி அழித்திருந்தமையால் எவருமே தப்ப முடியவில்லை. நூற்றுக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட இக்கூட்டம் அமெரிக்கா முன்மொழிந்திருந்த சமாதானத் திட்டத்தை பரிசீலனை செய்வதற்கெனவே கூடியது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

சோமாலியாவின் பிரச்சினைகளுக்கும் அனர்த்தங்களுக்கும் மூலகாரணங்களில் ஒருவரான சர்வாதிகாரி Siad Barre யின் கொடுங்கோலாட்சியைத் தொடர்ந்து ஆதரித்து வந்தது அமெரிக்கா. ஆண்டுக்கு 50மில்லியன் டொலர்கள் வரை Siad BarrefF ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கி வந்தது. இதற்கு ஐக்கிய நாடுகள் அவையின் அப்போதைய செயலாளர் நாயகம் புட்ரஸ் புட்ரஸ் காலியும் ஆதரவாக இருந்தார்.






சோமாலியாவின் பொருளாதாரச் சிக்கல்களுக்கு வேறு காரணமும் இருந்தது. 80களில் சர்வதேச நாணய நிதியம் (IMF) சோமாலியாவில் அமுல்படுத்த நிர்ப்பந்தித்த கொள்கைகள் நாட்டின் வறிய மக்களையே பெரிதும் பாதித்தது. போதாதற்கு வரட்சியும் சேர்ந்துகொ



ண்டது. கிராமப் புறங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் படித்தோர் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர். ஏராளமான குழந்தைகள் பட்டினியால் இறந்தன. ஒரு காலைச் சாப்பாட்டை விட ஒரு மெஷின் துப்பாக்கியை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. பத்து வயது குழந்தைகள் எ.கே.-47 துப்பாக்கிகளுடன் தெருவில் நடை பயில்வது சாதாரணமான விடயமாகி போய்விட்டது.

ஓக்டோபர் 3, 1993 அன்று பிடிபட்ட அமெரிக்க படையினருக்கு நடந்த அவலத்தை மட்டுமே சித்தரிக்கிற Black hawk Down திரைப்படம் அதன் நெறியாளர் சொல்வது போல அரசியல் அற்ற படம் அல்ல. அந்தப் படத்தில் வரும் ஒரு அமெரிக்கப் படையாள் சொல்வதை இங்கு குறிப்பிடலாம்:

முதலாவது குண்டு உன்னுடைய தலைப்பக்கமாக ஊடுருவிக்கொண்டு போன அந்தக் கணமே அரசியல் அதுமாதிரியான எல்லா...... வரும் வெளியே பறந்துவிடும்.இந்தப் படத்தின் அரசியலும் இதுதான் குறுகிய காலக் கண்ணேட்டத்தில் கொடுங்­ கோ­லரையும் கொலையாளிகளையும் நண்பர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் ஏற்று ஆதரித்து வருகிற அமெரிக்கக் கொள்கை ஜனநாயகத்திற்கும் மனித விழுமியங்களுக்கும் உதவாது. சிறு ஆயுதங்கள் கண்ணிவெடிகள் துப்பாக்கிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது என்பவற்றைத் தடைசெய்வதையும் கட்டுப்படுத்துவதையும் அமெரிக்காவின் துப்பாக்கி விற்பனையாளர்கள் சங்கம் அவர்க­ளுடைய பலமான பெருநிதி நிறுவ­னங்­களும் அனுமதிக்கப் போவதில்லை.

இவர்கள்தான் ஜோர்ஜ் புஸ்சுக்கும் அவரு­டைய குடியரசுக் கட்சிக்கும் மிக அதிக அள­வில் பணம் வழங்குபவர்கள். இவர்களுடைய பலம் நீடிக்கும் வரை உலகளாவிய எந்த சமாதான உடன்படிக்கைக்கும் அமெரிக்க அரசு ஒத்து வராது. மாறாக எங்களுக்குக் கிடைப்­பது என்னவென்றால் அமெரிக்க தேசியத்தையும் அமெரிக்க விசுவாசத்தையும் கொண்டாடுகிற holywood திரைப்படங்கள். அவற்றைப் பார்த்து அப்படியே பிரதிபண்­னுகிற Bolywood மற்றும் தமிழ் திரைப்படங்கள்.

''ஏக பிரதிநிதித்துவ'' கொள்கையும் அரசியல் ஜனநாயகமும்

துஸ்யந்தி
தமிழீழ விடுதலை போராட்டத்தின் மிகவும் அரசியல் திருப்பகரமான கட்டத்திலேயே ஏக பிரதிநிதித்துவம் எனும் முழக்கம் அரங்கிற்கு வந்தது. ”தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு ஈழத்தமிழரின் ஏக பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்பது விடுதலை புலிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மாத்திரமல்ல, அதுவே ஈழத்தமிழர் அனைவரதும் பொது நிலைப்பாடாயுமுள்ளது. தமது இந்நிலைப்பாட்டை 2001 டிசம்பர் பொதுத் தேர்தலில் ஈழத்தமிழ் மக்கள் உலகுக்கு பகிரங்கமாக அறிவித்து விட்டனர். இவ்வாறானதொரு நிலைப்பாடு தமிழீழ விடுதலை போராட்டத்தில் உருவானது வெறுமனே விடுதலை புலிகளை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக அல்ல. அதற்கு பின்னால் ஆழமான அரசியல், இராஜதந்திர காரணிகள் வேரோடியுள்ளன. விடுதலை புலிகள் அமைப்பை தவிர ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகள் சந்­தர்ப்­பவாத சமரச அரசியல் நிலைப்பாட்­டினை இன்றுவரை கொண்டிருப்பது யாரும் அறிந்த உண்மையாகும். 1994 சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது (அதற்கு முன்னரான யு.என்.பி. ஆட்சியிலும்) இந்த அரசியல் அமைப்புகள் தாமும் தமிழரின் பிரதிநிதிகள், தம்மையும் பேச்சுவார்த்தைகளில் இணைக்க வேண்டும் என கூறி வந்தனர். 2000 ஏப்ரல் ஆனையிறவு படைத் தளத்தை விடுதலை புலிகள் கைப்பற்றி­யதுடன் அரசியல் சமநிலை விடுதலை புலிகளுக்கு சாதகமாக மாற்றமடைய இவர்களும் தமது நிலைப்பாடுகளை அவசர அவசரமாக மாற்றிக் கொண்டு தம்மை விடுதலை புலிகளினதும் ஈழத் தமிழர்களினதும் ஈழத்தமிழரினதும் நலன் காப்பவர்களாக காட்டத் தொடங்கினார்கள். இந்த அனைத்து தமிழ் அமைப்புக­ளுக்கும் தனித்தனியே சர்வதேச அரசியல் தொடர்புகள் உண்டு. இவர்கள் தமது நலன் சார்ந்து எந்த அந்நிய சக்திகளின் நலன்களுக்கும் ஏற்ப செயற்படக் கூடியவர்கள்.( கடந்த காலம் இதை நிரூபித்து வந்துள்ளது). மக்கள் வாக்குகளால் பாராளுமன்றத்தில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் எதிர்காலத்தில் ஈழப்போராட்டத்திற்கு விசுவாசமாக செயற்படுவார்கள் என்பது நிச்சயமில்லை. இவர்களை பயன்படுத்தி தமது நலன்களை முன்னெடுக்கவென்றே அந்நிய சக்திகள் முயற்சித்து வருகின்றன. ”விடுதலை புலிகளை மாத்திரம் நாம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கொள்ள முடியாது” என அமெரிக்க உதவி அரசு செயலர் கிறிஸ்டினா ரொக்கா கூறியதன் பின்புலத்தை இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம். அதேபோல் தமிழர் விடுதலை கூட்டணி முதல் வரதராஜ பெருமாளை ஒரிஸாவில் சிறப்பு விருந்­தினராக ஊட்டி வளா;த்து வந்தது வரையி­லான இந்திய அரசின் நோக்கங்களும் புரிந்துகொள்ளக் கூடியதே. இந்நிலையில், இத்தகைய சந்தாப்பவாத அரசியல் சக்திகளை ஈழத்தமிழரின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பானதாகும். இவர்களைக் கொண்டு அந்நிய சக்திகள் தமது சொந்தத் திட்டங்களை முன்னெடுக்க விடாது விடுதலையை பாதுகாக்க வேண்டுமானால் விடுதலை புலிகள் ஈழத்தமிழரின் ஏக பிரதிநிதிகளாக அடையாளம் பெறுவது இன்றைய நிலையில் அவசியமானதாகும். இந்த பின்புலத்திலேயே இன்று ஈழத்தமிழர் அரசியல் அரங்கில் ஒலிக்கும் ஏக பிரதிநிதித்துவம் எனும் கொள்கையை பார்க்க வேண்டும். ஒரு விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள ஏகபிரதிநிதித்துவம் எனும் கொள்கையை சிலர் துஷ்பிரயோகம் செய்ய விளைந்துள்ளனர். கடந்த மேதின செய்தியில் இ.தொ.க. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ”பிரபாகரனால் அங்கீகரிக்கப்பட்ட மலையக தமிழரின் ஏக பிரதிநிதி நானே” என குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம் என்ன? சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் மலையக தமிழர்கள், அந்த இனவெறியை எதிர்த்து முன்னெடுக்கப்படும் தமிழீழ விடுதலை போராட்டத்தை உணர்வு பூர்வமாக ஆதரிக்கின்றனர். அப்போராட்டத்தை முன்­னின்று நடாத்தும் விடுதலை புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் நேசிக்கின்றனர். அவர் மீது மிக்க மதிப்பு வைத்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கும் மலையக தமிழர்ளுக்கும் இடையிலான உறவு, பிரபாகரனுக்கும் மலையக தமிழர்களுக்குமிடையிலான உறவு முற்றிலும் அரசியல் தார்ப்பரிமிக்க உறவாகும். ஆனால் ஆறுமுகம் தொண்டமானோ சோவினிசத்தினால் அடக்குமுறைக்­குள்ளாகும் இரு தேசங்களுக்கிடையிலான உறவிற்கு பின்புலமாயிருக்கும் அரசியல் காரணிகளின் அரிவரிகளையே புரிந்துகொள்ளாது அதே கங்காணி கலாச்சாரத்துடன் அரசியல் நடாத்திடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். விடுதலை புலிகளுக்கும் மலையக தமிழர்களுக்குமிடையிலுள்ள அரசியல் பிணைப்பை இ.தொ.க.வும் ஆறுமுகம் தொண்டமானும் தமது குறுகிய அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். பெரியதுரை அப்படிச் சொன்னார்... சின்னதுரை இப்படிச் சொன்னார் என துரைமாரைக்காட்டி தொழிலாளரை இயக்குவிக்கும் கங்காணியின் அடிமைத்தன சிந்தனை முறையைத்தான் ஆறுமுகம் அரசியலிலும் கடைபிடிக்கிறார். மலையக தமிழரின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தொடர்ந்தும் ஏக குத்தகை முதலாளியாக இருந்து இம்மக்களை தொடர்ந்தும் தமக்கான வாக்களிக்கும் அடிமைகளாக வைத்திருப்பதற்காக, மலையக தமிழரின் அன்புக்குரிய பிரபாகரனின் பெயரை ஆறுமுகம் தேவையற்று உபயோகித்திருப்­பது கண்டிக்கத் தக்கதாகும. அடிப்படையில் இரு தேசங்களுக்கிடையிலான அரசியல் உறவை அசிங்கப்படுத்திய குற்றத்தை ஆறுமுகம் செய்திருக்கிறார். மலையக தமிழர் என்போர் தனியான தேசம். தாம் எத்தகைய அரசியலை முன்னெடுப்பது, தமக்கான அரசியல் தலைமை யார் என்பதை தீர்மானிப்பது அனைத்தும் மலையக தமிழர் சார்ந்த விடயமாகும். இது சமூகத்தின் ஒவ்வொரு சாதாரண பிரஜையும் நன்கறிந்த அரசியல் அரிவரியாகும். மலையக தமிழரின் தலைவர் என கூறிக்கொள்ளும் ஆறுமுகம் தொண்டமானுக்கு இந்த உண்மை தெரியாது போனதெப்படி? இதிலிருந்து ஒரு தலைமையாக செயற்படும் தலைமையை ஆறுமுகம் இழந்துவிட்டிருப்பது தானனே தெரிகிறது. ஆறுமுகம் போன்றே முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும் தன்னை வடக்கு கிழக்கு முஸ்லீம்களின் ஏக பிரதிநிதியாக சித்தரித்து வருகிறார். மலையக மற்றும் முஸ்லிம் அரசியல்வா­திகள் சிறுபான்மை தேசங்களின் கூட்டுக்குள் இருப்பதால் மிக இலகுவாக ஏகபிரதிநிதித்துவ கொள்கையை தாமும் கடைபிடித்திடலாம் என நினைக்கிறார்கள். ஏகபிரதிநிதித்துவ கொள்கையை சிறு­பான்மை தேசங்களின் அரசியலின் வகைமாதிரியாக்க முனைகிறார்கள். இது எத்தனை அபத்தமானது? தமிழீழ விடுதலை போராட்டத்தில் இன்று கடைபிடிக்கப்படும் ஏகபிரதிநிதித்துவம் எனும் கொள்கையானது தற்காலிக­மானதுதான். அதுவே ஈழத்தமிழர் அரசி­யலில் நிரந்தரமானதல்ல. எதிர்காலத்தில் பல்வேறு தேசபக்த சக்திகளும் சுதந்திரமாக தேச அரசியலில் பங்குபற்றும் ஜனநாயக தன்மை நோக்கி அது நகர்வதுதான் இன்று மேற்கொண்டிருக்கும் சரியான நிலைப்­பாட்டின் மிகச்சரியான தொடர்ச்சியாக இருக்கமுடியும். தெற்காசிய சமூக வாழ்வில் ஜனநாயகம் என்பது சமூகத்தின் எந்த கூறிலும் கடைபிடிக்கப்படாத, இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. இச்சமூகங்களில் ஜனநாயகம் என்பது அரசியல் அரங்கிற்கூடாகத்தான் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. அதிலும் விடுதலை போராட்ட அரசியலுக்கூடாக மேலும் உயர்ந்த பண்பில் ஜனநாயகம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட முடியும். அரசியல் தளத்தில் ஜனநாயகத்திற்கான கதவுகள் அடைக்கப்­படுமாயின் சமூக வாழ்வு மேலும் இறுக்­கமானதாக, வன்முறையும் அதிகாரத்துவ அடக்குமுறைகளும் மிக்கதாக மாறும். எனவே ஏகபிரதிநிதித்துவ அரசியல் கொள்கையானது ஜனநாயக அரசியல் கொள்கைக்கு என்றும் எதிரானதாகவே இருக்கிறது.
விடுதலை புலிகளால் குறிப்பிட்ட அரசியல், இராஜதந்திர தேவை சார்ந்து இன்று முன்னெடுக்கப்படும் ஏகபிரதிநிதித்­துவ கொள்கையை, ஏனைய மலையக, முஸ்லிம் தேசங்களது அரசியலுக்கு தலைமையேற்றிருப்பவா;கள் தமது சுய நலன்க­ளுக்காக பிரயோகப்படுத்த முயல்வது சிந்தனையிலேயே கெல்லியெறியப்பட வேண்டியதாகும். விடுதலை புலிகளால் குறிப்பிட்ட அரசியல், இராஜதந்திர தேவை சார்ந்து இன்று முன்னெடுக்கப்படும் ஏகபிரதிநிதித்துவ கொள்கையை, ஏனைய மலையக, முஸ்லிம் தேசங்களது அரசியலுக்கு தலைமையேற்றிருப்பவா;கள் தமது சுய நலன்க­ளுக்காக பிரயோகப்படுத்த முயல்வது சிந்தனையிலேயே கெல்லியெறியப்பட வேண்டியதாகும்.

சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப் பரிசோதனை

சரா
கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island ) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது.
அவர் குறிப்பிட்டது இது தான், தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோதிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும் போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவு புரியும் போது இரத்தம் வெறளியேறுவதில்லை என்பது வஞ்ஞான ரிதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.
டொக்டர் சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
சமீபத்தில் தாய்யொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித் தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வத ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித் தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.
சிறியானி பஸ்நாயக்க இலங்கையில் பெண்ணிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குனரும், பெண்களின் மருத்துவ சுகாதார விடயங்கள் குறித்து நிறைய எழுதி, பேசி வந்திருப்பவரும் கூட. 10 வருடங்களுக்கு முன் சிங்களச் சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை பற்றிய ஒரு விரிவான கட்டுரையொன்றையும் எழுதியிருந்தார். இக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ”பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே” எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.
சிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் கன்னித்தன்மை பாpசோதனை முறை பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர். யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம் காட்டி சேர்ந்து வாழ்தல் (Iving together) இரு கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, நாங்கள் எப்போதோ முன்னோடிகளாக இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் காட்டத் தவறவில்லை.
சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.
இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை என்பது பற்றியும், இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக் கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமாக உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.
சொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவமும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக ஆக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொறுத்தவரை பெண்ணை உடமையாக வைத்திருப்பதற்கும் குடும்ப அலகை கவனமாகப் பேணவுமாக இந்த கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைகொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தேற்றங்கள் மேற்தோற்றத்தில் தொpயாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, தூய்மை, புனிதம், கௌரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகக் காண்போம்.
இந்த வகையில் தான் கற்பொழுக்கம் பற்றிய மதவழி புனைவுகள், இலக்கியங்கள், அரச யந்திரம் கொண்டிருக்கிற சட்டங்கள், பிரச்சார சாதனங்கள், கல்வி வாயிலாக மிகக் கவனமாக நம்பச்செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை நாம் அறிவோம்.
கற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது.
அந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல நாடுகளில் பண்பாட்டு அம்சங்களோடு இணைக்கப்பட்டும், பல நாடுகளில் வெளித்தெரியாத மரபுகளாகவும் வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திhpகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி செய்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)
சிங்கள சமூக அமைப்பில் நிலவிவரும் கன்னித்தன்மை பரிசோதனை முறையை இந்த பின்புலம்கொண்டே ஆராய வேண்டியுள்ளது.சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பார்க்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில்; வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்றசாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதரவர்க்கத்தினாpடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாய பூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்தியதர வர்க்த்தினாpடமே திருமணச் சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது. இந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான N‘ன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச்சமூகத்தில் வண்ணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர்; எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே துணி துவைப்பது சாதித்தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் துணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். ”பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார். உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை இந்த துணி துவைப்பதை விடவும் வேறு வழிகளிலும் தேவைகள் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.
திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் இந்த வெள்ளை விரிப்பில்படுவது அவள் கன்னி என நிரூபிக்கும் மிகச் சரியான சான்றென கருதப்படும்.
எனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.
சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத் துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். இறுதியும்; உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் ”றெதி நெந்தா” அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் ”தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத் துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) இது மேற்கொள்ளப்படும். இதற்குரிய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.
மணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்­படுவாள். மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.
மணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்களை அனுப்பி வைப்பார்.
மணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும். மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப் பெண்ணை வரவேற்பாள். வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரிட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அப்பாவிப் பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தும் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது ”பரிட்சையில் தேறாத” மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில. 1. இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வௌ;ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.
2. மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள்.
3. மணமகனின் தாய் வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.
4. சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறுபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.
5. மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது. 6. உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.
7. அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங்சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள். 8. வாழைப்பழத்தை அடியிலிருந்து தோலுரித்தல். 9. விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தொpவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அhpதாகவே நடக்கும்.) ”தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் ”கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இடங்களில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது விரக்திகொள்ளும் நிலைமையும் தொடர்கிறது.
சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூ}ய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும். அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
”கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் ”முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது. எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக ஒரு உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழ நே­ரிட்­டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சம், இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலை­க­ளின் போது, அல்லது ஏதாவது ஒரு முறையில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பங்களால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்­றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகி­றார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னிததன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பாhக்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயல­றையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்­கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான்நம்பமுடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.
இலங்கையில் நிலவும் கொடிய பிரச்சினைகளுக்கு முன்னால் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடை­முறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்­களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது. இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். ”ஆய்வுகளின்படி 76 வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்? 1. the island 2000 மே,யூன் பத்திரிகைகள். 2. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்
3. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு 4.உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை 5. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம். க்ரியா தற்கால தமிழ் அகராதி.

தேசிய வாதம்: '' நவீன காவல் தெய்வம்

ஜானெஸ் மார்க்ஸியத்தின் மகத்தான வரலாற்றுத் தோல்வியை தேசியவாதம் தொடர்பான அதன் கோட்பாடு பிரதித்துவப்படுத்துகின்றது. இந்த தோல்வியில் இன்னும் பல அம்சங்களும் இருக்ககூடும் இவற்றில் சில அதிகமாக விவாதிக்கப்பட்டும் இருக்கின்றன. ஏகாதிபத்தியம், அரசு, குறைந்துவரும் இலாப வீதமும் மக்கள் வறுமையில் முழ்குவதும் என்பன தொடர்பாக மார்க்ஸியத்தின் பற்றாக்குறைகள் பழைய போர்க்களங்கள் தான். இருப்பினும் இவற்றில் எதுவுமே கோட்பாட்டுளவிலும் சரி, அல்லது அரசியல் நடைமுறையிலும் சரி தேசிய வாதப் பிரச்சனையைப் போல் முக்கியமானதாகவோ, அடிப்படையானதாகவோ இருக்கவில்லை. மேலைய சிந்தனையில் ஏனைய மரபுகள்கூட தேசியவாத தொடர்பாக அதிகம் சிறப்பாக எதையும் செய்து விடவில்லையென்பதும் உண்மைதான். இங்கு மார்க்ஸியத்ப் போலவே கருத்துமுதல்வாதமும் ஜெர்மன் வரலாற்று முதல்­வாதமும், தாராண்மைவாதமும், சமூக - டார்வின்வாதமும், நவீன சமூகவியலும் கூட இவற்றையே செய்கின்றன. இது மார்க்ஸிவாதிகளுக்குச் சிறு ஆறுதளலிக்கலாம். ஆனால், மார்க்ஸியவாதிகள் தமது கருத்துக்களுக்கு விஞ்ஞான பூர்வமாக உரிமை பாராட்டுவதனாலும், அவற்றின் அரசியலன் முக்கியத்துவம் அவர்களின் போட்டியா­ளர்களது கருத்துகளைவிட மிகவும் அதிகம் என்றவகையில் நவீன வரலாற்றில் மையமானதும், தப்பக்க முடியாததுமாக ஒரு சமூக நிகழ்வுப் போக்கு தொடர்பாக அவர்கள் ஏனையோரைவிட அதிகம் செய்திருக்க வேண்டும் என ஒருவர் எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததாகிறது. இந்த தோல்வி தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதே எனது ஆய்வாகும். அது தவிர்க்க முடியாததுதான் என்பததை இப்போது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. சாராம்சத்தில் பொருள்முதல்வாத அர்த்தத்தில் இதனை இன்னும்சிறப்பாக புரிந்து கொள்ளமுடியும். ஒரு சிந்தனை குறை என்ற வகையில் வரலாற்றுப் பொருள்முதல்வாதமானது, இந்தப் பிரச்சினையில் தான் சிக்கல் கொண்டிருந்த நீடித்ததும், அழிவுகரமானதுமான முட்டுக் கட்டையிருந்து மிக சிறப்பான முறையில் தப்பித்தும் கொள்ள அதனால் முடியும். ஆயினும், இவ்வாறு செய்வதற்கு அது அநேகமாக ”மார்க்ஸியத்தை விலையாகப் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த கடுஞ் சோதனையிலிருந்து பொருள்முதல்வாதமானது வடுக்களோ, மாற்றங்களோ அன்றி தப்பித்து செல்லமுடியாது என்பதே ஒரு வெளிப்­படையான காரணங்களாகும். வரலாற்றில் மார்க்ஸிசத்தில் யதார்த்த பூர்வமான இடம், அதன் சில பற்றாக்குறைகள் (Limitations) மற்றும் நவீன வரலாற்று வளர்ச்சியுடன் அதனை கண்மூடித்தனமாக பிணைந்து விட்ட சில பிரக்ஞை பூர்வமாக வேர்கள் போன்றவற்றினூடாகவே இந்த தவறுக்கு இட்டு சென்ற காரணத்தை நாம் கண்டு கொள்ளமுடியும் என்பதே அந்த காரணமாகும். மார்க்ஸியத்தை வெறுமனே பாராட்டி கொண்டிராமல், இதனை வரலாற்றின் ஒரு பகுதியாக என்பது அர்த்தமாகும். இந்த அர்த்தத்தில் கோட்பாட்டினதும், நடைமுறை­யினதும் புனிதபந்தம் என்பதற்கு எந்த தொடர்பு கிடையாது. விஞ்ஞானத்தின் போர்வையில் கருத்துமுதல்வாத தத்துவத்தில் இருந்து (இறுதியாக மதத்தில் இருந்து) மார்க்ஸியம் எடுத்து கொண்ட தெய்வம் போன்ற தோற்றப்பாட்டை என்றென்றைக்குமாக இழப்பதே இதன் பொருளாகும். தேசியவாதத்தின் மீததான மார்க்ஸியத் ”தோல்விகள்” எமக்கு தத்துவ ரிதியிலான, கருத்தாக்கம் சார்ந்தவைகளாகவே முதலில் தோன்றுகின்றன. மார்க்ஸ் முதல் கிரெம்சி வரையிலான மகாத்தான நாமங்கள் இவ்விஷியத்திற்கு போதியளவு கவனம் செலுத்தவில்லை. அவ்விஷயத்தைக் கையாளும்போது அதனை நேரடியாக முகம்கொடுப்பதற்குப் பதிலாக, இதனைத் அவ்வப்போது அல்லது பட்டும்படாமலும் கையாண்டனர். இந்த பிரச்சனையை மிகவும் நேரடியாகவே கையாள வேண்டியிருந்தது. ஜார் பேரசினதும், ஒஸ்டிரியா - ஹங்கேரிய பேரசினதும் சமூக ஜனநாயகவாதிகள் கூட தமக்குள் விரிவான இணக்கத்தை எட்ட முடியவில்லை. 1914ம் ஆண்டு; அதிர்ச்சிமிக்க சம்பவத்திற்கு பின்னர் மார்க்ஸியவாதிகள் இந்த விவாதத்துக்கு இதே அளவு தீவிரத்துடன் திரும்பவும் விருப்பார்வத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. 1925 ஆண்டுக்கு பின்னர் அவர்கள் அதை விரும்பிய போதிலும் கூட இப்பிரச்சனை தொடர்பான லெனினது நிலைப்பாடுகள் எனக்கருதப்பட்டவை மிதான ”வழிபாடு” உருவாகிவிட்ட நிலையில் அதைச் செய்வது அரசியல் ரிதியாகவும், உளவியல் ரிதியாகவும் மிகவும் சிக்கலானதாக ஆகிவிட்டிருக்கிருதது.
இவர்களது தயக்கங்களுக்கு ”தேசியப் பிரச்சனை” தொடர்பாக ஸ்டாலின் கட்டுரையே (1912) முடிவுகட்டப்பட்டது. இத்தோடு இணைந்த பிறகு விரிவாக உடன் நிகழ்வாக மாபெரும் சர்வாதிகாரி ஸ்டாலினால் எழுதப்பட்ட இதே நுhல் புதிய மகத்தான புனித கோட்பாட்டாக மாற்றப்பட்டது. 1914 இற்கு முந்திய முடிவு­றாத மாபெரும் விவாதத்தின் மிகவும் மிதமான மிச்ச சொச்சங்களுடன் ஒன்றாக அமைந்த இந்த கட்டுரையானது எந்த விதமான முக்கியத்துவமும் அற்றதாகும். புதிய நிலைமைகளில் இது, லெனின் புகழுடன் ஸ்டாலினின் பெயரையும் சேர்த்து கொள்ள வழிவகுத்து. இதனால்தான் இன்றுவரையில் இது எல்லாவிதமான கட்சி மா;க்ஸி­வாதிகளினாலும் எங்கும் கிளிப்பிள்ளைபோல ஒப்பிக்கப்படுகிறது. ஒழுங்கு மையப்பெற்ற மார்க்ஸிமானது அரை நுhற்றாண்டுக்கு மேலாக இந்த மிகவும் அச்சுறுத்தலைத் தரும் அபாயகரமான வரலாற்று விரோதியைக் கையாள்வதில் இந்த அரைகுறையான கருவி மீது நம்பிக்கை வைத்திருந்தது. இந்த வரலாற்று வரோதியின் பலமானது ஸ்டாலின் கிராடின் திருப்புமுனை வரையில் மார்க்ஸியத்தை அறவே ஒழித்து கட்டும் நியாத்துக்குத் தன்னை வரித்துக் கொண்டது.
கருத்துக்களின் வரலாற்றில் இதுவோர் துயரம்தந்த அத்தியாமாகும் ஆனால், இது தன்னளவில் எதையும் விளக்கவில்லை. அவ்வாறு அது விளக்கிக் கூறுவதாக ஒருவர் நினைத்தால், மார்க்ஸியம் ஒன்று திரட்டியுள்ள பெருமளவிலான புரட்சிகர அறிவாற்றல் வகையினங்களில் எங்கோவோர் இடத்தில் தேசியவாதம் தொடர்பான கோட்பாடும் நிச்சியமாக இருக்க வேண்டும் என்று கூறுவதான ஒரு மருட்சி தொடர்ந்து இருந்து வரும். நாம் ரோசா லுக்சம்பர்க், ஒட்டோ பாவர் ஆகியோரைவிட அறிவாற்றலில் விஞ்சிய­வர்கள் அல்ல. சோசலிசத்திற்கு தேசியவாதம் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடியானது, பாய்ச்சல் கூடியதுமான பண்புகள் குறித்து நாம் இவர்களைவிட மிகவும் கடுமையான பிரக்ஞை உடையவர்களுமல்ல. ஆகவே நாம் விடா முயற்சியுடன் தேடலில் ஈடுபட்டால், இக்­கோட்பாடு மார்க்ஸின் எழுத்துக்கள் இடையே ஆழ்கடலில் அகழ்ந்தெடுத்த முத்தாய் நிச்சயம் தோன்றும், மார்க்சும், எங்கெல்சும் தமக்கிடையே எழுதிக் கொண்ட கடிதங்களிலும், குறிப்புக்­களிலும் கூட அவை ஆங்காங்கே சிதறிக் கிடைக்ககூடும். வேறு வார்த்தையில் சொன்னால், ”இத்தோல்வி” அடிப்படையிலேயே கருத்தாக்­கம் சார்ந்தது, அகநிலையானதொன்று என்று ஒருவர் நம்பினால் இந்த மருட்சியானது பழைய நிகழ்வுகளை திருப்பிபார்த்தால், அது கைகொ­டுத்­துதவும் என்பதாக அமைந்து விடுகிறது. இந்த செயற்பாடானது மார்க்சியவாதிகளின் வழிபடும் பிரிவினருக்கு அதிக கவர்ச்சி திரட்­டுவதாக அமைந்து விடுகிறது. (பொதுவாகவே மேலெழுந்தவாரியாக பார்க்கப்பட்ட) பின்வரும் நூலின் பகுதிகளை மனதிற்கொண்டால் ”அவர்”... . ”இதனைத்தான்” மனதிற் கொண்­டுள்­ளார். லெனின் - ஸ்டாலின் அல்லது மார்க்ஸ் - ஏங்கல்ஸ் இந்த ஆழமான பார்வை­யானது ரோசா லக்சம்பேர்க்கின் அவதானிப்­புகளால் நிறைவுசெய்யபட வேண்டியவை. இவ்வாறு இவற்றை உணரத்தலைப்படுவர். எமது முன்னோடிகளை நாம் உண்­மையிலேயே போற்றுவதானால், அது எம்மிடம் இந்த சடங்குகளின் பயனற்ற தன்மையை இனங்கண்டு கொள்ளுமாறு கோருகிறது. அவர்களது ”தோல்வி” யானது வெறுமனே கருத்­தாக்கம் சார்ந்தாகவே அல்லது அக நிலையானதாகவோ இருக்கவில்லை. எந்த விதமான ஆழமான கோசங்களினாலும் இதை ஈடுசெய்ய முடியாது. தேசியவாதம் தொடர்பான ஒரு நீடித்திருக்கக் கூடிய கோட்பாட்டை அவர்களால் ஒன்றாக வகுக்க முடியாவிட்டால் வேறு யாராலும் அதை வகுக்க முடியாது, வகுக்கவும் இல்லை என்பதுதான் உண்மை­யாகும். அத்தகைய ஒரு கோட்பாட்டிற்கு அவசியமான சில விஷயங்களை வரலாற்று ரிதியான வளர்ச்சி அவ்வேளையில் தோற்றுவித்திருக்கவில்லை. இதுபோன்ற 1914ம் ஆண்டுக்குப் பிந்திய மேலும் இரண்டு தலைமுறைகளில் துயரமிகு காலவரையை அது கனிந்திருக்காது. ஒரு மிகவும் விரிவான அர்த்தத்தில் இந்த உண்மையானது மார்க்சியத்திற்கு இயல்பாகவே ஆபத்தானதாக இருந்த போதிலும், இது வரலாற்றுப் பொருள்முதல்வாததிற்கு அற்ப அளவில் கூட அவமதிப்பாக அமையாது. தத்துவார்த்த தவறுகள் தன்பங்கிற்கு எம்மை உண்மையான வரலாற்றை நோக்கி திருப்பவும் செல்லுமாறு செய்கின்றன. இந்த கடந்தகால தலைமுறைனருக்கு நவீன தேசியவாதத்தின் புதிரானது தன்னை அறிமுகம் செய்து கொண்ட பொருள்வகை நிலைமை­களுக்கு இந்த தலைமையானது எம்மை திருப்புகின்றது. ”ஞானக்கண்ணைக்” கொண்டிராத நிலையை அவர்களது மிகவும் கடுமையான குறைபாடுகளுடனேயே (under very Limitations ) அதனை முகம் கொடுக்க வேண்டியிருந்தது. உலக வரலாற்றின் நவீன முதலாளித்துவ வளர்ச்சியின் விரிச்சமான, மிகவும் மையமான அம்சமாக தேசியவாதம் விளங்குகின்றது. ஏனைய சிந்தனை முறைமைகளைப் போலவே (Specialize system) காலத்துக்குக்காலம் வரம்பிடபட்ட நிலையில் மார்க்சியமானது இந்த வளர்ச்சியோ அல்லது அதைத் தொடர்ந்து முதலாளித்துவ வரலாறு எடுக்கப் போகும் ஒட்டுமொத்தமான வடிவத்தையோ முன்னரே அறிந்து கொள்ளும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. தேசியவாதத்தைப் பொறுத்தளவில் உள்ள சிக்கலென்னவென்றால் , இந்த பிரச்சனையை அணுகுவதற்கு இதேவிதமான முறையியலும் ஆற்றல் தேவைப்படுகிறது என்பதுதான்.
தேசியவாதம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகள் இவ்வளவு அறிமுகமாக கூறப்பட்ட­வையாகும். மேற்கொண்டு செல்வதற்கு முன்பாக, இந்த விடயம் தொடர்பாக சிந்திக்கும் மிகப்பெருபாலான மார்க்சியவாதிகளும் (பிறரும் கூட) எவ்வாறு இரண்டக நிலையில் ஊசலாடுகிறார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ய்வோம். ஒரு புறத்தில் தேசியவாதமானது ஒரு நல்ல விஷயமாக, நவீன வரலாற்றில் அரசியல் ரிதியிலும் தார்மீக ரிதியிலும் நேர்மறை சக்தியாக தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அது அந்நிய ஒடுக்குமுறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்குப் போராடுகின்ற, பலவீனமான, வளர்ச்சி குன்றிய நாடுகளின் சித்தமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த பொருளில் பார்த்தால், ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமொpக்கச் சுதந்திரப் போர்கள் நடைபெற்ற காலம் முதல் இந்தோ-சீனத்தின் சமீபகாலப் போராட்டம் வரையில் இந்த அர்த்தத்தில் ஓர் முற்போக்கான அம்சமாகவே தோன்றுகிறது. மறுபுறத்தில் இந்த பதப் பிரயோகமானது இத்தாலியப் பாஸிஸத்தின் வரலாற்றுக்கும் 1930ம் ஆண்டுகளின் போதான ஜப்பானிய இராணுவவாத அரசுக்கும் ஜெனரல் ஏ.கோல், ஜெனரல் அமீன், ஈரான் மன்னர் ஷா ஆகியோரின் பதவிகளுக்கும் ஆளுமைக­ளுக்கும் சற்றேனும் குறையாத குணாம்சத்தில் பொருந்துகிறது.
முரண்பாடுகளுக்குள் பிழைப்பு நடத்தும் ஒரு உபாயமாக அல்லாமல், உண்மையிலே பயனுள்ளதாக அமையவேண்டுமானால்-, தேசியவாதம் தொடர்பாக ஒரு கோடபாட்டின் இலக்கானது இந்த இரண்டக நிலையில் இரண்டு முறைகளை தழுவியாக அமைய வேண்டும். இந்த நிகழ்வு போக்கின் நேர்மறை (+ve) எதிர்மறை (-ve) என்ற பக்கங்கள் இரண்டுக்கும் மேலாக எழுந்து இந்த நிகழ்வுப் போக்கை முழுமையாக பார்ப்பதாக இது அமைய வேண்டும். இந்தவிதமாக மாத்திரமே, நாம் இதன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரிதும் தார்மிகமயப்பட்ட பார்வையிருந்துக் கொண்டு எழுந்த, இதில் ஒரு வித உணர்வுடன்கூடிய ஒரு வரலாற்றுப் பூர்வமான பார்வையை பெறலாம் என நாம் எதிர்பார்க்க முடியும். (கடந்த காலத்தில், விஞ்ஞானபூர்வமான என்ற பதமானது சித்தாந்த ரிதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதால், இந்த பார்வையை நான் ”விஞ்ஞானபூர்வமானது” என்று கூறமாட்டேன், ஆகக்குறைந்தது இதனை ஒரு நல்ல பார்வையெனக் கூறுவேன்.) இதனைச் செய்வதற்கு இதன் முரண்பாடுகளிலும் அர்த்தம் காணக்கூடியதாக ஒரு வகையான விளங்கப்பட்ட சட்டத்தினுள் (Explanatory Framework ) இந்த நிகழ்வுப் போக்கை வைப்பது அவசியமானதாகிறது.
இந்த சட்டகம் எது என்ற கேள்வி எழுகிறது. இங்கு மெய்யான பயணத்தை தரவல்ல ஒரேயொரு துணையாதார சட்டகம் (Framework of reference) இருக்குமாயின் அது உலக வரலாறு முழுமையுமேயாகும் என்பது எனது நம்பிக்கையாகும். அத்தகையதொரு மாபெரும் சிக்கலான பிரச்சனையை குறித்து எமக்கு தேவைப்படும் தெளிவான தோற்றத்தை கொடுப்பதற்கு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி (ஆகக் குறைந்தது) முதலான வரலாற்று வளர்ச்சிகளின் பொதுவான போக்கு மாத்திரமே உதவ முடியும். ஒவ்வொரு நாடாக எடுத்துக் கொண்டு அனுகத் தொடங்குவது என்ற விதத்தில் செயற்படும் இந்த பிரச்சனை தொடர்பான பெரும்பாலான அனுகுமுறைகள் தாக்கமுள்ளவையாக அமையவில்லை. தேசியவாதம் என்ற சொல்லின் சித்தாந்தமே, எமக்கு, மனித சமுகமானது சாராம்சத்தில் வேறுபட்ட, தனித்துவமான பலநுhறு தேசங்களைப் கொண்டது எனவும், இவை ஒவ்வொன்றும் தமக்கென சொந்தமான தபால் முத்திரைக­ளையும், தேசிய ஆன்மாவையும் கொண்டிருக்­கிறது. (அல்லது கொண்டிருக்க வேண்டும்) என்று பரிந்துரைப்புகள் மூலம், எமது அனுகு­முறையை இந்த வழியிலேயே தூண்டுகிறது, என்பது உண்மைதான். தோப்பின் இரகசியத்தை தனிமரங்களாக கோருவாதாகவும் இதனைப் கூறலாம். அதிர்ஷ்டவசமாக, பொதுப்புத்தியில் காணப்படும் வழமையாகவே சிதைந்த அரை - உண்மையே இதுவாகும்.
எமது அக்கறைக்குரிய அர்த்தத்தில் கூறினால், இல்லை தோப்புதான் தனி மரங்களை விளக்குகிறது என்பதே சரியானது ஆகும். தரையமைப்புகள், மண், காலநிலை போன்ற புவியியலில் சில பொதுவான நிலைமைகள் தான் எந்த மரங்களை, எவ்வளவு அடர்த்தியாக, எவ்வளவு தூரத்திற்கு வளர்க்க வேண்டும் என்பன நிர்ணயித்தது. வேறுவார்­த்தையில் கூறுவதானால், பிரஞ்சு புரட்சி, கைத்தொழில் புரட்சி என்பவற்றிற்கு, இன்றைக்கு இடையிருந்த உலக அரசியல் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட சில அம்சங்கள் தான் ”தேசியவாதத்தையை” அதன் மிகவும் பொதுவான அர்த்தத்தில் நிர்ணயித்திருக்கிறது. நாம் இன்னும் இச்சகாப்தத்தில் தான் வாழுகின்றோம். ஆயினும், பிரச்சினையுடன் போராடிய முன்னைய கோட்பாட்டாளர்களை விட இந்த சகாப்தத்தில் நீண்ட காலம் வாழ்ந்துள்ளோம் என்ற மிதமான அனுகூலத்தை நாம் கொண்டிருக்கின்றோம். தற்போதைய எமது அனுகூல நிலமையில், இப்போக்கினதும் அதன் துனைவிளைவுகளினதும் சில ஒட்டுமொத்­தமான குணவியல்புகளைத் தெளிவாக உணர்ந்து கொள்வதில் அவர்களைவிட ஒரளவு மேலான நிலையில் நாம் இருக்கக் கூடும். எம்மால் கூட இதனைச் செய்யமுடியவிட்டால், அது எமக்கு அதிகமாக எதையும் கூறப்போவது கிடையாது.
அடுத்தாற்போல், தேசியவாதம் பற்றி எமக்கு சில கருத்துகளைத் தருகின்ற பொதுவான வரலாற்று வளர்ச்சியின் அம்சங்கள் யாவை என்பது பற்றி நாம் ஆராய வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் இவ்விடயம் சம்பந்தமான புராணத்துள் சுருக்கமாக ஆழ்ந்து பார்ப்பது உதவியாக அமையக்கூடும். அரசியல், மற்றும் சமூக விஞ்ஞான மாணவர்கள் பயன்படுத்துவதற்காக ”குஸ்தாப் புளோபெர்டின்” பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளின் அகராதியில்... ஒரு பிரதியை ஒருவர் தயாரித்தாரானால், ”தேசியவாதம்” என்ற பதப்பிரயோகம் பின்வருமாறு விளக்கப்படும் என நினைக்கின்றோம். தேசியவாதம் : இப்பதத்தின் சமகால அர்த்தத்திற்கு பெரிதும் ஒத்திருக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டதை நாம் 1790 காலங்களிலேயே (அபே பெருவலஈ, 1798) காணக்கூடியதாக இருப்பினும்கூட, இப்பதமானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்பு மிகவும் அhpதாகவே பயன்படுத்தப்பட்டது. அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில இருந்து தேசியம் பாரம்பரியம் மரபுகள் மற்றும் பேச்சு போன்ற காரணிகளுக்கு அளிக்கப்பட்ட புதிய, உயர்நிலைப்படுட முக்கியத்தைக் குறிக்கிறது. அனைத்து சமூகங்களுக்குப் பொதுவாகத் காணப்படும் ஒரு வளர்ச்சி கட்டம் என்ற வகையில், தேசியவாதம் பற்றிய கருத்தாக்­கத்தை, பொருள்முதல்வாதம், கருத்துமுதல்­வாதம் ஆகிய இரண்டு கருத்துபரம்பலை ஏற்று கொள்கின்றன். சமுதாயம் இந்தகட்டத்தின் ஊடாக கட்டாயமாக செல்ல வேண்டும் என்பதை இந்தப் பிற்காலத் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. (உதா. எப். எங்கெல்ஸ், எல். வொன் ராங்கி, வி.இ.லெனின், எப்.மெயினிக் போன்றோரின் வாசங்களைப் பார்க்கவும்) சம்மந்தப்பட்ட சமூக ஒருவாக்­கங்களுக்குள் உள்ளார்ந்து செயற்படும் குறிப்பான சக்திகள் அல்லது உந்தல்கள் இந்தக் கட்டத்தின் காரணிகளாக கூறப்படுவதையும் இந்தக் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. எனவே, தேசியவாதமானது உள்ளார்ந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு அவசியமாக இருக்கிறது. மார்க்சியவாதிகள் இது தேசியச் சந்தைப் பொருளாதாரம் மற்றும் நிலைத்திருக்க கூடிய தேசிய முதலாளி வர்க்கம் ஆகியவற்றின் தோற்றத்துடன் இணைக்கப்­படுகின்றது. கருத்துமுதல்வாதிகள் இது, வரலாற்று வளர்ச்சியில் நிச்சயம் தன்னை வெளிப்படுத்தியாக வேண்டிய சமுதாயத்தில் உள்ளார்ந்துள்ள ஆன்மாவுடன் பொதுவான ஆளுமையுடன் இணைக்கப்படுகின்றது. இரண்டு கண்ணோட்டங்களுமே, சமூக பரிணாமத்தின் இந்தக்கட்டமானது, அடுத்துவர இருக்கும் இன்னும் திருப்திகரமான நிலைமைகளைக் கொண்ட ”சர்வதேசியம்” என்பதற்கான அவசியமான முன்நிபந்த­னையாகக் கருதுகின்றன. (பொருள்முதல்­வாதத்தைப் பொறுத்தவரையில் பாட்டாளிவர்க்க அல்லது சோசலிச சர்வதேசியம், கருத்துமுதல்­வாதத்தைப் பொறுத்தவரையில் உலக ஆன்மாவின் உயர்ந்த ஒத்திசைவு.) ஒர் ஆரோக்கியமான தேசியவாத்தை முன்னரே வளர்த்துக் கொண்டுள்ள சமூதாயங்களினாலும் மட்டுமே இந்த நிலைமை அடையமுடியும். மிதமான நியமான தேசியவாதமானது இந்த அர்த்தத்தில் போற்றப்படும் அதேவேளை இந்த வரலாற்று வரம்புகளை விஞசுகின்ற மிதமற்ற, அல்லது மிகையான தேசியவாதமானது ஆரோக்கியமற்றதாகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகின்றது. (”இனவெறி (Chauvinism) பற்றிய மேலுள்ள குறிப்பை பார்க்க) உலாகவிய ரிதியில் நிலவும் மரபார்ந்த நம்பிக்கைகள் நாட்டுப் புறவியலின் இந்த பகுதியில் சாரம்சம் யாதெனில், தேசியவாதம் என்பது உள்ளார்ந்த ரிதியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகத்தின் தேவை , ஏற்ற வளர்ச்சிக் கட்டம், மரபார்ந்த அல்லது நிலபிரபுத்துவ சமூகத்­திற்கும், தேசிய காரணிகபல் குறைந்தளவு முக்கியத்துவம் பெறும் (அல்லது மனித வரலாற்றின் சிக்கல் குறைந்த) எதிர்காலத்திற்கும் இடையில் எப்பவும் ஒரு இடத்தில் அமைந்திருக்கிறது என்பதாகும். ஒரு வளர்ச்சியிக் கட்டமாக இருக்கும் இது, சிலவேளைகளில் தவறுகப் போய்விடலாம் அல்லது வெறிபிடித்து ஒடலாம் என்பது வருத்ததக்கதே. இதுவோர் புதிராகும். ஒரு வளரும் பருவம் எவ்வாறு ஒரு கொடிய நோய்யாக மாறமுடியுமா? நிபுணர்கள் இதைப்பற்றி எதைக் கூறினாலும் தேசியவாதத்தின் குணாம்சமான இரட்டையான உள்ளார்ந்த பண்பு குறித்து அவர்கள் உடன்படுகின்றனர். சம்பந்தப்பட்ட சமுதாயத்தின் அக தேவைகள் சிலவற்றிடனும் சில தனிநவர்களுடனும் உளவியல் தேவைக­ளுடனும் கூட அது தொடர்புடையதாகின்றது. மக்களினங்களுக்கும் நபர்களுக்கும் ஒரு முக்கியமான பண்டத்தை, ”அடையாளத்தை வழங்குகின்றது. இவற்றுடன் பிணைந்தாக தனித்துவமான, இலகுவில் இனங்காணத்தக்க தன்னிலை (Subjectivity) ஒன்று இங்கு இருக்கின்றது. தேசியவாதம் பற்றிநாம் பேசும் போதெல்லாம் ”உணர்வுகள்”, ”உந்தல்கள்”, உத்தேசஅபிலாஷைகள்”, ”உரியதாக” இருக்கும் வேணாவாக்கள் போன்ற இன்னோரன்ன­வற்றால் ஈர்க்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்த உளவியலானது தேசியவாத தொடர்பான ஒரு முக்கிய உண்மையைன்பது வெளிப்படையானது. தேசியவாதம் தொடர்பான உலகலாவிய அளவிலா மரபார்ந்த நம்பிக்கையானது முற்றிலும் தவறானதல்லை. அவ்வாறு தவறானதாக இருப்பின் அது ஒர் ஐதிகமாக செயல்ப்படமுடியாது. மறுபுறத்தில் அது உண்மையாக இருக்குமானால், அதாவது இந்த இடத்தில் எமது அக்கறைக்குரியபொருளில் உண்மையாக இருக்குமானால், அப்போதுப்கூட இது செயல்பட முடியாததாகவேயிருக்கும். தேசியவாதமானது ஒரு சித்தாந்தமாக இருக்கிறது. இதன் அர்த்தம்யாதெனில், ”தேசியவாதத்தின்” பிடியில் இன்னமும் இருக்கும் ஒரு சமூக உலகின் பொதுவாக ஏற்று கொள்ளப்படத்தக்க ”தவறான பிரக்ஞையாக” இது இருக்கிறது என்பதுதான். வரலாற்று வளர்ச்சியில் அந்த வடிவங்களாககாமைந்து ஈடுசெய்யும் ஒரே பொறிமுறையையே, அந்த யாதார்த்ததுடன் வாழ ஒரு வழிமுறையையே நாம் ”தேசியவாதம்” என பெயரிடுகின்றோம். இந்த வடிவங்கள் உண்மையிலேயே எவ்வாறு அமைந்திருந்தாலும், அதை நோக்கி முக்கிய தடங்கலாக தருவதயாக இதுகருதப்படலாம்.
அத்தகைய தலையாய தடமாக இருப்பது, வளர்ச்சிபற்றிய கருத்தாக்கம் அல்லது சமூக பொருளாதார வளர்ச்சி என்பவற்றிற்கும் தேசியவாதத்திற்கும் இடையில் பொதுபுத்தி பரிந்துரைக்கும் சக்திவாய்ந்த பிணைப்பாகும். தேசியவாதத்தின் தனித்துவமான நவீனமான யதார்த்தமானது (தேசிய இனம் (Nationalism) தேசிய அரசுகள் மற்றும் இவற்றின் முன்னோருக்கும் மாறாக) இதனுடன் எப்ப­டியோ தொடர்புட்டே இருக்கிறது. ஏனெனில், சுமார் 1800ம் ஆண்டு முதல் மாற்றம் பொதுவாக துhpதமடையும் பின்புலத்துள் மாத்திரமே, இந்த புதிய அர்த்தத்தில் ”வளர்ச்சியின்” பின்புலத்துள் மாத்திரமே, தேசியத்துவமான (Nationhood) இந்த முழுமையான சூட்சுபமான அர்த்தத்தைப் பெற்றது. ஆயினும், முழுமையான அர்த்­தமானது வளர்ச்சியின் யதார்த்தத்தியிருந்து அப்படியே பெறப்படுகின்றது எனபது உண்மையல்ல. இந்த உணர்வுள்ள தருணத்தில் (Sensitive Juncture) உண்மையானது பயனுள்ள சித்தாந்தமாக மாறுகறது. புதிய வளர்ச்சி நிலமையில் இருந்து இயல்பாக எழும், குறிப்பிட்ட சமூக - அரசியல் வடிவத்திற்க்கு கட்டாயமாக அவசியபடுவதாக தேசிய - வாதம் (National - Ism) அமைகிறது என்பது சரியானதல்ல (அப்படித்தான் இருக்கவேண்டும் என மனிதகுலம் விரும்புவதற்கு எப்போது மிகப்பல காரணங்கள் இருந்தபோதிலும் கூட) இது இயற்கையல்ல. மரபார்ந்த நம்பிக்­கையானது இவ்வாறுதான் கூறுகிறது என்பது உண்மைதான். இதற்கு இயற்கையான அந்தஸ்த்தை அளித்து, ”ஆரோக்கியமானதாக” வகைப்படுத்தி, கிராமிய மடமைக்கும் நவீன தொழிமயத்திற்கும் (அல்லது வேறெதற்கும்) இடையேயுள்ள நாம் சிரமப்பட்டு நடக்க வேண்டிய பாதையாக, எல்லா சமூகங்­களுக்கும் உரிய ஒருவித இளம்பருவமாக காட்டுகிறது.
தேசியவாதமானது குறிப்பான அக இயக்கங்கள், நபர்கள் மற்றும் ஆளணிகள்(Personnael) ஆகியவற்றுடன் இணைககப்பட்டுள்ளது என்பது உண்மையே. இவர்கள்எந்தவிதத்தில்நடந்து கொஸள்கிறார்கள். மிகவும் ஒத்த உணர்வுகளை கொண்டுள்ளார்கள். எனவே இது, 1850களின் இத்தலி”ய தேசியவாதமும் 1970களில் குர்திஸ், இல்லது எரித்திரிய தேசியவாதமும் இந்தவிதமான குறிப்பான அக பொறிமுறைகளால் உருவாக்­கப்­பட்டது, ஆதாரமாக கொண்டிருந்தது என்றவிதத்தில் கூறத்தூண்டுகிறது. அவை அந்த மக்களது உள்ளுர் தனித்தன்மைகளை பொpதும் ஒத்தவகையில் வெளிப்படுத்துகிறது. அந்த மக்களது ஆன்மாவுக்கு (அல்லது குறைந்தபட்சம் அவர்களது முதலாளிகளுக்கு) தேவைப்படுகிறது என்ற உத்தேசத்தில். ஆயினும் எந்தவிதமான தேசியவாதமும் உண்மையிலேயே இவை போன்ற உள்ளக இயக்கங்களின் உற்பவிப்பு என்பது உண்­மையல்ல. உவர்ந்தும் புரிந்தும் செயல்படக்­கூடிய நாட்டுக்கு நாடு வேறுபடும் மருட்சியின் கருமையம் இதுவாகும். இதையே தேசியவாதச் சித்தாந்தம் எம்மீது திணிக்க விழைகிறது. உண்மையில் வெல்ஸ் தேசியவாதமானது, வெல்ஸ் மக்களின் தனித்துவங்கள், அவர்தம் வரலாறு, அவர்தம் குறிப்பிடத்தக்க ஒடுக்கு­முறை வடிவங்கள் போன்ற இன்னோரன்­னவற்றுடன்அதிக சம்பந்தமுள்ள. ஆனால், வெல்ஷ் தேசியவாதம் - அந்த இனப்பொதுப் பண்பு, நாம் ஆர்வம் கொண்டுள்ள பதத்தில் பதிவாக்கப்பட்டுள்ள சர்வவியாபகமானத் தேவை - அவலஷ் மக்களுடன் சம்பந்தமில்­லாதது. அது வெல்ஷின் உண்மையல்ல. குறிப்பிட்ட ஒரு காலத்தில் வெல்ஷ் தேசமும் மக்களும் இந்தபாணியில் வரலாற்றுப் போக்கிற்குள் தள்ளிவிடப்படுகின்றனர் என்ற பொதுவான வளர்ந்தோங்கும் வரலாற்றின் ஒர் உண்மையாகும். அதன் பின்னர் அவர்கள் பின்பற்றுவதற்கு நிர்பந்திக்கப்பட்ட ”வாதமானது” உண்மையில் வெளியில் இருந்து அவர்கள் மீது திணிக்கப்பட்டதாகும் என்ற போதிலும், இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழைமையான தேசிய ஆளணிகள், மரபுவழிபண்புகள் , உணர்வுகள் போன்ற இன்னோரன்னவை உள்ளிருந்தே மலர வேண்டும் என்பது இன்றியமையாது. தேசியவாங்கள் அனைத்துமே சமூக, தனிப்பட்ட பொறியமைவுகளின் வழமையாகப் பயன்படுத்தப்படும் நுடப முறைகளின் குவியல்பு மூலமாகவே செயல்படுகின்றன, அவற்றில் பல ஆகவும் அகநிலைப் பண்புடையவை. ஆனால்இந்த நிகழ்வின் ஏதுக்கள் மரபின் மலர்ச்சிக்குள் இல்லை. இந்த மார்க்கம் குருதி எழுச்சியூட்டும் மக்கள் மரபில் இருக்கின்றன. தேசியவாதத்தின் அகநிலைத் தன்மையானது அது பற்றிய ஒரு முக்கியமான ஸ்துhலவமான அம்சமாகும். ஆனால் அதுவே தோற்றங்கள் பற்றிய பிரச்சனையை முன்வைக்­கிறது என்பதும் உண்மையாகும். மெய்யான தோற்றப்பாடுகள் வெறெங்கோ உள்ளன. அவை மக்கள் மத்தியலும் அமைந்­திருக்கவில்லை. ஏதாவது ஒரு வகை முழுமைத் தன்மை அல்லது தனித்துவத்துவத்­திற்கான தனிநபரின் அடக்கப்பட்ட உணர்வி­லும் இல்லை, ஆனால், உலக அரசியல் பொருளா­தாரத்தின் இயந்திரத்தில் உள்ளது. ஆயினும், அத்தகைய பொருளாதார வளர்ச்சியின் போக்கில் அல்ல - தொழில் மயமாக்கம் மற்றும் நகரமயமாக்கத்தின் திவிர்க்க முடியாத உடன் நிகழ்வாக அல்ல. அவை அப்போக்கின் கூடுதல் திட்டவட்ட­மான அம்சங்களுடன் இணைத்திருக்கின்றன. இந்தத் தனிச்சிறப்புள்ள குணவியல்புகளை வகைப்படுத்துவதற்கு மிகச் சிறந்த மார்க்கம், பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கம் வரலாற்றின் சமதையற்ற வளர்ச்சியை அவை பிரதிபலிக்கின்றன என்று கூறுவதேயாகும். இந்த சமதையின்மை ஒரு பொருளாதய உண்மையாகும். என்ற ஒருவர் வாதிட முடியும். இந்தக் கூற்று, திருப்தி தருகின்ற, முரண் நகைக்கு அண்மித்ததான முடிவை எட்ட எம்மை அனுமதிக்கிறது. வரலாற்று இயல்பு நிகழ்வின் ஆகவும் வெளிப்படையானதான அகநிலையும் கருத்தியலும், கடந்த இரண்டு நூற்றாண்டுகளது வரலாற்றின் ஆகவும் குரூரமான மோசமான பொருளாதார பக்கத்தினுடைய ஒரு துணை காரணி என்பதுதான் உண்மையாகும். சமைதையான வளர்ச்சியினவாய் மூலமாகவே எதிரானது. கைத்தொழில் புரட்சிக் காலந்தொட்டு மனித சமுதாயம்கண்டு வரநேர்ந்த எல்லா மெய்யான ”வளர்ச்சியும்” சமதையற்றதுதான் என்பதால் இந்த எதிர்ச்சொல் வாய்மூலமமானது, உண்மையானது அல்ல. எவ்வாறாயினும் சமைதையான வளர்ச்சிபற்றிய கருத்தமைப்பும் அபியாயும், நாம் அதில் இருந்தே ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்துக்குட்படும் வகையில் வலிமையானது. அது, மேலைய அல்லது நுரோப்பாவை மையமாகக் கொண்ட உலகக் கணணோட்டத்தின் - உலகக் கருத்தமைப்பின், வாழ்க்கைத் தத்துவத்தின் - உயிர் நாடியாக நெருக்கமானதாகய் இருக்கிறது - இது நாம் வரலாறு பற்றியும், எனவே (வேறு விஷயங்­களுடன்) தேசியவாதம் பற்றியும் நாம் நினைக்கின்ற விதத்தை இன்னமும் ஆகக் கூடிய, உதாரணமாக, முன்னர் குறிப்பிடப்பட்ட இதிகாசம்மானது சமூக நிகழ்வுகளின் ஒர் சமதையான, இயல்பான பரிமாணத்தின் ஏதோவொரு வகையிலான பகுதியாக தேசியவாதம் விளங்குகிறது என்ற பாசாங்கு பண்னும் ஒரு மார்க்கமே என்பதைக்காண முடியும். பொருளாயத நாகரிகமும் சமைதையான, முற்போக்கான வளர்ச்சி, வெகுஜனப் பண்பாடு பற்றிய கருத்து ஐரோப்பிய ஞானோதயத்தின் குணாம்சமாக இருந்தது. அக்காலத்துக்கும் இடத்துக்கும் உரிய மேல் மட்டத்தினருக்கே இயல்பான ஒரு முன்போதலான கண்ணோட்­டத்தை அது பிரதிபலித்தது. உயர்ந்த பண்பாடு உள்ள சகாப்தங்களின் போது தமது மூதாதையர்கள் எவ்வாறு சிந்தித்தார்களே அது போலவே புலானகத்தக்க மூடுதிரையில் ”காட்டுமிராண்டிகளுக்கு” எதிரான நாகாகத்தின் அடிப்படையிலேயே இன்னமும் சிந்தித்­தார்கள். ஆனால் முன்னேற்றம் பற்றிய புதிய உறுதிப்பாடுகள் காட்டுமிராண்டிகளுக்­கான கண்ணோட்டத்தை மேலும் சாதமாக்கின. குறித்த காலம், உதவியுடன் அவர்கள் வென்று சமாளிப்பார்கள் என்பதே அதுவாகும். இந்த விடுவித்தலானது வெளிநோக்கியும் கீழ்நோக்கியும் துரிதமான கலாசாரத் தகவமைப்பின் (கலாசாரத்தைத் தமக்கு ஏற்புடைய விதத்தில் உருமாற்றிய அமைத்துக் கொள்வது என்று பொருள் கொள்ள வேண்டும் - மொழிபெயர்ப்பாளர்), ஒரு போக்காக உணரப்பட்டது. மத்தியல் இருந்து எதிர் நோக்கி இந்தச் சூழவுள்ள பிராந்தியங்களுக்கும், பண்பாடுற்ற வர்க்களில் இருந்து தனியாட்க­ளுக்கும் உழைப்பில் ஈடுபடும் மக்களுக்கு சமூக ரிதியில் கீழ் நோக்கியும் கலாசாரத் தகவ­மைப்பை உருவாக்கும் போக்காக உணரப்பட்டது. இக்கலாசாரத்தின் பரம்பலில் முதாலாளித்­துவம் ஒர் வலிமைமிக்க கருவியாக இருந்தது. தேசிய இனக்காராணியைப் பொறுத்தவரையில் கான்ட் அதைத் தெளிவாகக் கூறினார். மனித குலத்தின் தேசிய பிரிவுகள், அவற்றுக்­குள்ளேயே ஒரு அதி உன்னத விஷயமாக விளங்கின . உதராணமாக, கீழைத்தேசத்தில் போன்று ஒர் சாம்ராஜ்யவகையான, சர்வவி­யாபக கொடுங்கோல் ஆட்சி ஒருவாவதைத் தடுப்பதற்கு அவை உதவின. வருங்காலத்தில் அவை கைநழுவிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதாக மத்தியதரவர்க்கமே அமைந்தது. ”போருக்கு ஒத்துவர முடியாத வாணிப உணர்வு, உடனடியாகவே ஒவ்வொரு அரசியலும் முன்னங்கை எடுக்கிறது. ”பணத்தின் வலிமை” (சகல வலிமைகளிலும் ஆகவும் நம்பகமானதென” அவர் நனைத்தார்) விவேகங் காண ஆளும் வர்க்கங்களை நிர்ப்பந்திக்கும் என்று அவர் எழுதினார். அதாவது அவர்கறுடைய மூதாதையர்களது அவாக்களை விட்டொழித்து எவ்வாறாயினும் சமாதானத்தை ஏற்படுத்துவதாகும். (சாசுவதமான சமதானமும், தத்துவார்த்தக் குறிப்பும் 1795).
கான்ட் நம்பியிருந்த கருத்துகள், சக்தி­களில் அடங்கியிருக்கும் மெய்யான நிகழ்­வுகள் முற்றியும் வித்தியாசமானவையாக இருந்­தன என்பதை இப்போது நாம் அறி­வோம். அதுபோன்றே கான்ட் பிரதிநிதித்துவம் செய்த மகத்தான சர்வவியாபகமாக்கும் பாரம்பாpயத்­தாலும், அதனது புதிய மதசார்பற்ற வடிவங்களிலும் கூட இன்னமும் கிறிஸ்த­வமாகவே இருக்கும் பாரம்பரியத்தினாலும் அவை கண்டறியப் பெற்றிருக்க முடியாது. யாதார்த்தத்தில் வாணிப உணர்வும் பணத்தின் வலிமையும் உலகத்தின் அடுத்தடுத்த பகுதி­களை அவை கைப்பற்றியதால் மூதாதைய­ருக்குரிய அவாக்களை புத்தாக்கம் செய்வ­தற்கும். தடைகள் என்ற வகையில் முக்கியத்­துவம் குறைந்த வையாய் வளர்வதற்குப் பதிலாக தேசியப்பிரிவுகள் சமூக ஒழுங்க­மைப்பின் ஒரு புதிய ஆதிக்கக் கோட்பாடாக உயர்த்திப்­பிடிக்கப்படும் வரலாறு மேற்கு நாட்டு தத்துவி­யலாளர்களைத் தோல்விய­டையச் செய்யவிருந்தது.
இந்த தோல்வி நிரந்தரமானதாகவே இருந்திருக்கின்றது. தேசியப் பிரச்சனை மீது மார்க்ஸியம் அடைந்த ”தோல்வியின்” உண்மையான நீண்ட அர்த்தம் இதுவெனலாம். முன்னேற்றத்தின் மெய்யான முரண்பாடுக­ளையும் அதன் அழிவுதரக்கூடிய பக்கத்தை­யும் முன்னுணர்ந்து பார்க்க முடியாததால் இந்தச் சிந்தனை பாரம்பரியமானது. அதன் பின்னர் உண்மைச் சரியான முறையில் உணர்ந்து கொள்ளவும் உறுதியாகவே சாத்தியமில்லாமல் இருப்பதைக் கண்டது. பதிலாக இந்த கரும் புள்ளி எல்லா நவீன பகுத்தறிவு வாதமின்­மையும் செழித்துவளரும் ஊற்றுக்கண்ணாக முரணின்றி மாறியது கரமானதும் நிகராக்க முடியாததுமான இயல்நிகழ்வின் இந்த சிக்கல் தன்மைத்தான் தேசியவாதத்துடனும் அதில் இருந்து உற்பத்த பலவற்றுடனும் (இனவாதம், யூத எதிர்ப்புவா­தம் போன்றவை) இணைந்­துள்ளது. இது காலத்துக் காலம் மீண்டும் மீண்டும் தோன்றி மேலைய பகுத்தறிவு­வாதத்தைச் சீர்கலைத்து முழுமையாகவே இவமதித்தது. இது பகுத்தறிவு வரோத நம்பிக்கையற்ற பல தத்துவ ஞானங்களுக்குக் கதவைத் திறந்து வைத்தது. இந்த அம்சமே உலகத்தின் மீது மேலைய முன்னேற்றத்தின் பீடுநடையை அவ்வளவு நெருக்கமாக எதிர்நிலைப்படுத்தியிருந்து. அவ்வப்போது நன்மைகருதி தகர்த்து எறியவும் அச்சுறுத்தியது.
”சமதையற்ற வளர்ச்சி” என்ற பொதுவான தலைப்பு எதைக்குறிப்பிடுகிறதோ இதுதான் உலகத்திற்குள் முதலாளித்துவத்தினுடைய வளர்ச்சியின், முன்னுணர முடியாத பகைமை சார்ந்த வளர்ச்சியாகும். குறிக்கோளின் உயரிய முன்னேற்றம் மற்றும் ஒரு பகுதியான சீராக்கம் ஆகியவற்றில் இருந்து வேறுபட்ட விதமாக ஊசலாடுகின்றதும். போராடுகின்றதும் சமனற்­றதும் தர்க்கரிதியற்றதும் தலைகீழானதுமான உண்மையை இது சுட்டிகாட்டுகிறது. நவீன முதலாளித்துவ வளர்ச்சியானது பல மேற்கு ஐரோப்பிய நாடுகளால் ஆரம்பிக்கப்பட்டது. இவை இவ்வாறு செய்வதற்கான ஆற்றலை வரலாற்றின் நீண்டகாலக் கட்டங்களின் போது திரட்டி வைத்திருந்தன. இந்த முன்னேற்றம் நேர்மையாகவே பின்பற்றபப்பட முடியும். அதற்­குப் பொறுப்பான நிறுவன அமைப்­புகளை அச்சுப் பிரதியாகப் பின்பற்ற முடியும் - இவ்விதம் உலகின் கிராமப்புறமான சூழ­வுள்ள பகுதிகள் உரிய காலத்தில் அதன் தலைமைகளை எட்டிப் பிடித்துவிடும் என்பதே சமதையான வளர்ச்சி கருத்தமைப்பாக இருந்தது. இந்தச் சமப்படுத்தல், சூழவுள்ள பகுதிகள் முழுவதிலும் அடிப்படையிலே ஒரினத்தன்மைவாய்ந்த ஞானோதயம் பெற்ற வர்க்கத்தை உருவாக்குவதன் மூலம் முன் செல்லும், சர்வதேச அல்லது ”பெருநகர்” மேல்மட்ட வர்க்கம் இந்தப் பரவலாக்கப் போக்கிற்குப் பொறுப்பாக இருக்கும். ஆனால், அதஆதகைய துரிதமான பரவலாக்கலோ பிரதிபண்ணுதலோ உண்மையிலேயே சாத்தியமாக இருக்கவில்லை. அதுபோலவே இந்த சர்வதேச வர்க்கத்தின் உருவாக்கமும் (தமது சொந்த மக்களுடன் அணி சேருவதற்­குப் பதிலாக பெருநகர் தலைநகருடன் தாமா­கவே அணிசேர்ந்து கொண்ட வெளிநாட்டு ஆடசிக்­குக் கைக்கூலிகளாக விளங்கிய முதலாளித்­துவவாதிகளின் உருவத்தில் அதனைப் பாவனை செய்த வகையினங்கள் இருந்திருக்­கின்றன. (இருக்கின்றன என்ற போதிலும்கூட) சாத்தியமாகவில்லை.
அந்த முன்னணி நாடுகளின் தாக்கம் ஆதிக்கம் செலுத்துதல், முற்றுக்கையிடுதல் போன்றவற்றை வழமையாகவே அனுபவித்­தது. வாணிப உணர்வு, பாரம்பரியமான சுரண்டல், ஏமாற்று வடிவங்களில் இருந்து பொறுப்பேற்க வேண்டியதாக இருந்தது. ஆனால் யாதார்த்தத்தில் அதானால் அதைச் செய்ய முடியவில்லை. இந்த இடைவெளி மகத்தானதாக இருந்தது. புதிய அபிவிருத்திச் சக்திகள் மனித குலத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட தயாள குணம் படைத்த தன்னலமற்ற மேல்மட்டத்தினரின் கையில் இருக்கவில்லை. பதிலாக ஞானோதயம் மற்றும் மரபார்ந்த அரசியல் பொருளாதாரம் ஆகிய கருத்தமைப்புகளை மூடுதிரையாகப் பயன்­படுத்திய ஆங்கிலேய பிரஞசுப் பூர்ஷ்வா வர்க்களின் (மார்க்ஸ்ம் எங்கெல்ஸ்சும் விரும்பி கூறியதைப் போன்று) பொருளைப் பிடித்த சக்திகளின்” கைகளில் இருந்தன. உலகில் மிகச் சிறந்த விருப்பத்துடனும்கூட இவற்றை அவை பெற்றிருக்கவில்லை. முன்னேற்றமா­னது இந்தக் குறிப்பிட்ட இடங்கள், வர்க்கங்கள் நலன்க­ளுடன் ஒரளவுக்காவது தன்னை இனங் காட்டிக்கொள்ள முடியாது போயிற்று. இவ்வாறு ”ஏகாதிபத்தியத்தின்” ஒரு புதிய வகைக்குத் தூபம் போடாமல் இருக்க முடியவில்லை. புற எல்லைப்பகுதிகளில் புதிய தொழில் மய - முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்­தின் மையப்பகுதிகளுக்கு வெளியேறியது பற்றி மக்களை உடனடியாக ஒரளவிற்கு இணங்க செய்வது அவசியமாக இருந்தது. என்பது விதேசிய அல்லது வரோதமானது என்று தம்மால் எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடிய வல்லரசுகளால் ஸ்தூலமாகவே ஆதிக்கம் செலுத்தப்படுவதை அதன் சாராம்சத்தில் பொருள்படுத்தியது என்பதை உடனடியாகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள். த்துவத்தில் இருந்து வேறுபட்ட விதமாக நடைமுறையில் கலாசாரத் தகவமைப்புப் போக்கு வெளித் தலையீடு மற்றும் கட்டுபாட்டின் ”ஒர் கொந்தளிப்பான அலையைப்” (ஏனெட்ஸ்ட் அகல்நகரின் பதப்பிரோயகம் இது) போல் மாறியது. மனித குலத்தின் முன்னோக்கிய பீடு நடையானது மாற்றத்தில் ஆகவும் பிரக்ஞை­யுள்ள மக்கள் எவ்வளவு தூரம்முன்னோக்கப் பார்க்க முடிந்ததோ, அந்த அளவிற்கு முதலாவது ஆங்கில மயமாக்கம் அல்லது பிரஞ்சு மயமாக்கத்தை குறித்து. உலகம் தழுவிய அளவில் பிற்காலத்தில் மேற்கு மயமாக்ககம் அலலது அமெரிக்கமயமாக்கம் என்று கூறப்பட்டதை போன்றதே இதுவாகும்.

யுத்தமா? சமாதானமா?

எனது பார்வையில்
சமுத்திரன்
இலங்கையில் யுத்த நிறுத்தம் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்கள் மீது பல்லாண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த மனிதாபிமானமற்ற தடைகள் நீக்கம். கொழும்பு நகரின் பெருவீதிகளிலும் மூலை முடுக்குகளிலும் இருந்த ராணுவ சோதனை நிலையங்களின் மூடல். கொழும்பு - யாழ்பாணம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளின் நீக்கம்.இவைமட்டுமல்ல-நிரந்தரதீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சூழலை ஏற்படுத்த நோர்வையின் இராஜதந்திர செயற்பாடுகளின் தீவிரம் நம்புவதற்குக் கடினமாயிருக்கலாம். ஆனால் வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். தமிழ் மக்களின் அபிலாசைகளை மதிக்கும் அரசியல் தீர்வின் அடிப்படையில் அமைந்த ஒரு சமாதானத்தை அடைய முயற்சிக்ககூடிய சூழ்நிலை உருவாகியிருப்பது போலவேபடுகிறது. அதேவேளை அத்தகைய ஒரு அரசியல் தீர்வினை அடைய முடியுமா இல்லையா என்பது இப்போ உருவாகியிருக்கும் சாதகமான சூழ்நிலை நிரந்தரமாகத் தொடருமா இல்லையா என்பதில் தங்கியுள்ளது. பேச்சுவார்த்தைகளுக்குச் சாதகமான சூழ்நிலை தோன்றியது இதுதான் முதல் தடவை அல்ல. முக்கியமான கேள்வி என்னவெனில் இன்று தோன்றியுள்ள சூழ்நிலை முன்னையவை போல் குறுகிய காலத்தில் மறைந்து விடாது. நிலந்தரமாகத் தொடர்வதை எப்படி உத்தரவாதப்படுத்த முடியும் என்பதாகும். தென்னிலங்கையிற் பேரினவாத சக்திகள் தங்கள் பிரச்சார யந்திரங்களை முடுக்கிவிட்டுள்ளன. ஆயினும் இன்று நிலவும் சூழ்நிலையின் சில விசேடத் தன்மைகள் அரசியல் தீர்வை நோக்கிநகர உதவக்கூடியன என்பதை மறக்கமுடியாது. இலங்கையின் தேசிய இனப் பிரச்ச­னை­­யையும் போரினையும் மையப்படுத்தி எழுந்துள்ள புதிய சூழ்நிலைக்குப் பலர் சர்வதேச நிலைமைகளை வைத்தே விளக்கம் கொடுக்கின்றனர். அதாவது 2001ம் ஆண்டு புரட்டாதி 11ம் திகதி இடம்பெற்ற நிகழ்­வுக்குப் பின்னர; சர;வதேச ரிதியில் பயங்­கரவாதத்திற்கு எதிர;ப்பு பலவாகி விட்டது குறிப்பாக மாவல்லரசான USA பயங்கர­வாதத்தை அழிக்க ”கங்கணம்” கட்டிவிட்டது. இதுவே இலங்கையில் விடுதலைப் புலிகளை சமாதானப் பாதைக்கு தள்ளியுள்­ளது எனும் கருத்தினை கேட்கிறோம். இந்தக் கருத்தினை முற்றாக நிராகரிக்க முடியாவிடினும் அது இலங்கையின் உள்நாட்டு அரசியல் சூழல் மாற்றங்களுக்­கான ஒரு விளக்கமாக இருக்க முடியாது. இத்தகைய விளக்கத்தை நம்புவோர் இலங்கையின் உள்ளார்ந்த நிலைமைகளின் நீண்டகால மாற்றங்களையோ அவை ஏற்படுத்தியுள்ள அழுத்தங்ளையோ அறியாதோராகவே இருப்பர். இப்படிச் சொல்வது சர்வதேசப் போக்குகளைக் குறைத்து மதிப்பிடுவாகாது. அதற்குமாறாக சர்வதேச நிலைமைகளைக் கொச்சைப்­படுத்தி உள்நாட்டு அரசியல் இயக்கப்­பாடுகளை அசட்டை செய்யும் மேலெழுந்­த­­வாரியான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்பதாகும். இலங்கையில் இன்று நாம் காணும் புதிய சூழ்நிலை உள்ளார்ந்த நீண்டகாலப் போக்­குகளின் விளைவாகும். இதற்குச் சர்வதேச நீதியான தொடர்புகளும் பின்னணியும் உண்டு. இது பற்றிப் பார்ப்போம்; முதலில் அரசின் பக்கத்து நிலைமைகள்.
இராணுவ நீதியான தீர்வு சாத்தியமில்லை பல காலமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் வடகிழக்கிலிருந்து எழுந்துவந்த ஆயுதப் போராட்டத்தை இராணுவ ரிதியில் தோற்கடித்துத் தமக்கு வசதியான ஒரு தீர்வினை அமுலாக்க முடியுமென நம்பியிருந்தனர். ஆயினும் விடுதலைப் புலிகளின் இராணுவ ரிதியான வளர்ச்சியும் போராட்டத் திறனும் இந்தப் பாதையின் அசாத்தியத்தினைத் தோடர்ச்­சியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் கூட்டுக்களுக்குள் பலர் இந்த யதார்த்தத்தை நன்கு கிரகித்துள்ளனர். புலிகளை பலவீனமாக்குவது சாத்திய­மெனினும் அவர்களை ஒரு இராணுவ சக்தியாக முற்றாக அழிப்பது சாத்திய­மில்லை என்பதையும் அவர்கள் அறிந்துள்­ளனர். 1996க்குப் பின் அரசபடையினர் சந்தித்த பல தோல்விகளும் இழப்புக்களும் இந்தக் கருத்துப் போக்கினை மேலும் பலப்படுத்தியது. இப்போது முன்னர் போல் சிங்கள இளைஞர்கள் இரா­ணுவத்தில் சேர முன்வரு­வதாகத் தெரியவில்லை. இராணு­வத்­தின் ஆட்சேர்ப்பு முயற்சிகள் எதிர்பார்­த்த வெற்றியைத் தரவில்லை. இதுவும் பொருளாதாரக் காரணிகளும் இராணு­வத்தை மேலும் பலப்படுத்­துவதற்குத் தடையாக உள்ளன. ஆளும் கூட்டுக்க­ளுக்குள் இராணுவ ரீதியான தீர்வில் நம்பிக்கை கொண்­டோhpன் செல்வாக்குப் படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. இதற்குப் பொருளாதார காரணங்களும் சமூகக் காரணங்களும் உண்டு.
இலங்கைப் பொருளாதாரத்தின் பலவீனமாக்கல்
யுத்தத்தின் நேரடியான மறைமுகமான தாக்கங்க­ளால் இலங்கையின் பொரு­ளாதாரம் தொடர்ச்சி­யாகப் பல பின்னடைவு­களுக்­குள்ளாகியுள்ளது. 1977லி­ருந்து இலங்கை அரசாங்­கங்கள் கடைப்பிடித்து வரும் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் அமுலாக்­களுக்கு மிகவும் பாதகமான நிலைமை­களையே தொடர்ந்துவரும் உள்நாட்டுப் போர்; ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் போருக்கென ஒதுக்கப்படும் செலவு பயங்கரமாக ஏறிக்கொண்டு போகிறது மறுபுறம் போரினால் ஏற்படுத்தப்படும் பொருளாதார ரிதியான அழிவுகளும் உற்பத்தி இழப்புக்களும் மோசமடைந்த வண்ணமிருக்கின்றன. இன்னொருபுறம் பொருளாதார முதலீட்டாளர்கள் இலங்­கையை தவிர்த்துக் கொள்ளவே செய்கி­றார்கள். மூலதனம் வேறுநாடுகளை நோக்கி நகர்கிறது. உள்நாட்டு மூலதனம் பல துறைகளைத் தவிர்த்துக் கொள்கின்றது. இலங்கை ஆரசானது உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் கடன் உதவியில் பெருமளவு தங்கியுள்ளது. இந்நிறுவனங்கள் இலங்கையின் உள்நாட்டு நிலமைகளை விரும்பவில்லை இதனால் கடன் உதவிகள் எதிர்பார்த்தது போல் கிடைக்கவில்லை. உள்நாட்டுப் பொருளாதா­ரத்தின் பின்னடைவும் சர்வதேச பொருளா­தார கடன் உதவியின் போதாமையும் இலங்கை அரசிற்கு பலவருடங்களாகத் தலையிடியைக் கொடுத்து வருகிறது. யுத்தப் பொருளாதாரத்தால் நன்மை பெறுவோர் யுத்தம் தொடர்வதை விரும்புகிறார்கள் ஆனால் இந்த யுத்தப் பொருளாதாரம் தேசிய பொருளாதாரத்தை உறிஞ்சியே வளர்கிறது. அதை தொடர்ந்தும் தாங்கக்­கூடிய சக்தியை தேசிய பொருளாதாரம் இழந்துவிட்டது. பொதுமக்கள் மீது பலவிதமான வரிகளைப் போட்டும் அபிவி­ருத்திக்குச் செல்ல வேண்டிய பணத்தை யுத்தச் செலவிற்குப் பயன்படுத்தியும்தான் அரசு யுத்தத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதை மேலும் தொடர்வது மிகவும் கடினமாகியுள்ளது. இந்த நிலை­யானது யுத்தத்தை எப்படியாயினும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனும் கருத்துப் போக்கினைப் பலப்படுத்தியுள்ளது.

சுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்!

ஜயந்தி மாலா
சுவிற்சர்லாந்தின் சமஷ்டி அரசானது பெண்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ,அங்கீகரிக்காததனாலும், தீர்மானங்களை எடுப்பதில் ஆண் ஆதிக்க மரபுவழிச்; சமூகமும், கிறிஸ்தவமதவாதமும் பெண்களைத் தவிர்த்து வந்ததனாலும் 1887 முதல் சுவிஸ்பெண்கள் தமது ,உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். மத்திய ஐரோப்பிய, வடஐரோப்பிய நாடுகளுடன் ,ஒப்பிடும்போது மிகப்பிந்திய காலங்களில்கூட அவர்கள் கடுமையான போராட்டங்களை நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். 1848ம் ஆண்டு சமஷ்டி அரசின் நவீன அரசியல் அமைப்பு வாக்குரிமைக்கான உத்தரவாதத்தினைக் கொண்டிருந்தபோதும் அந்த உரிமையானது ஆண்களுக்கு மட்டுமே உரித்தாக்கப் பட்டது. பெண்கள் வாக்களிக்கின்ற உரிமையற்றவர்களாக அதாவது அடிப்படை ஜனநாயக உரிமைகளுள் ஒன்றான அரசியல் உரிமை அற்றவர்களாக அரசியல் அமைப்பின் மூலம் புறக்கணிக்கப்பட்டனர். தொழில் அடிப்படையில்கூடப் போதுமான கல்வித் தகைமைகளைப் பெண்கள் கொண்டிருந்த போதும், அதற்கான தொழில்சார் பதவிகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சுவிஸில் சட்டத்துறைப் பட்டத்தினைப் பெற்ற முதலாவது பெண்ணான Emile Kempin -Spiry சட்டத்தரணியாகத் தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதனை ஆட்சேபித்து சூரிச் உயர்நீதி­மன்றத்திற்கு முன்னால் அவர் ஜனநாயகப் போராட்டம் நடாத்தியபோதும், அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1887ல் நடாத்தப்பட்ட இந்தப்போராட்டமே சுவிற்சர்லாந்தின் வரலாற்றில் பெண்களின் சமஉரிமையை வலியுறுத்தி இடம்பெற்ற முதலாவது போராட்டமாகும். தமது அடிப்படை, ஜனநாயக, மனித உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமாயின் தமது வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டுத் தாம் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பதை உணர்ந்த பெண்கள் தொடர்ந்தும் வாக்குரிமைக்கான போராட்டங்களை நடாத்தினர். இதன் அடிப்படையில் 1909ம் ஆண்டு பெண்களின் வாக்குரிமைக்கான அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் பெண்கள் அரசியல் ரீதியான போராட்டத்திலும் காலடிஎடுத்து வைத்தனர்.1929ல் பெண்களின் வாக்குரிமைக்கான மனு முன்வைக்கப்பட்ட போதும் அது ஒரு பிரச்சார நடவடிக்கை­யாக மட்டுமே வெற்றியளித்தது. அரசியல் ரீதியில் அது ஏற்படுத்திய தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. 1945ல் சமஷ்டி அரசியல் அமைப்பில் குடும்பப் பாதுகாப்­புப்பிரிவு இணைக்கப்பட்டதுடன் இது பெண்களுக்கான பிரசவக்காப்புறுதி ஒன்றையும் வலியுறுத்தியது. இன்று 60 ஆண்டுகளை எட்ட இருக்கின்ற நிலை­யிலும் இந்தப்பிரசவக்காப்புறுதி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்காகத் தொடர்ச்சியான போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. சுவிஸ் சமஷ்டி அரசியல் அமைப்பா­னது எந்தவொரு சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைக்கும், தேசிய, மாநில, பிரதேச மட்டத்தில் சர்வஜன வாக்கெ­டுப்பை வலியுறுத்துகின்றது. மேலெழுந்த­வாரியாக ஜனநாயகச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய அம்சமாக இது தெரிகின்றபோதும் உண்மையில் அதற்கு மாறாக, நியாயமான உரி­மைகளை மறுப்பதற்கு சர்வஜனவாக்­கெ­­டுப்பு பலதடவைகளில் பயன்படுத்­தப்பட்டு வந்துள்ளது. ஆண்களின் கரங்களில் வாக்குரிமை இருந்தகாலங்களில் மட்டுமன்றி இந்தப்போக்கு இன்றுவரைத் தொடர்கின்றது.1959ல் பெண்களின் வாக்குரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வஜனவாக்கெடுப்பு முதன்முதலாக நடாத்தப்பட்டது. கிறிஸ்த­வமத மரபுவாத ஆண் ஆதிக்கச்சக்திகள் தங்களிடம் மட்டுமே இருந்த வாக்குரி­மையைப் பயன்படுத்திப் பெண்களுக்கான வாக்குரிமையை மறுத்தனர். 20ம் நூற்­றாண்டில் சர்வதேசத்தினை உலுப்பிய கடைந்தெடுத்த ஆண்ஆதிக்கச் செயற்பா­டாக இது பதிவாகியது. பெண்களுக்கான உரிமைகளைத் தீர்மானிப்பதில் எந்த உரிமையும் ஆண்களுக்கு இல்லாதபோதும், தம்மால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் ஊடான சர்வஜனவாக்கெ­டுப்பைப் பயன்படுத்தி இந்த ஜனநாயக மறுப்பை மேற்கொண்டனர்.புதிய பெண்கள் இயக்கம் என்ற அமைப்பு 1968ல் உருவாக்கப்பட்டது. முன்னைய பெண்கள் அமைப்பிலிருந்து வேறுபட்ட ஒன்றாக தன்னை அறிவித்த இந்தஅமைப்பு பெண்களின் சமஉரிமைப் போராட்டத்தினை மற்றைய பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெ­டுத்­தது. இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக 1971ல் சமஷ்டி அரசில் தமது வாக்குரிமையைப் பெண்கள் வென்றெடுத்தனர். இந்த ஆண்டு இடம் பெற்ற சுவிஸ் பாராளுமன்றத்தின் தேசியசபைக்கான தேர்தலில் பத்துப்பெண் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். 200 பிரதிநிதிகளைக்கொண்ட தேசிய சபையில் இதன்மூலம் 5வீதமான பிரதிநி­தித்துவம் பெண்களுக்குக் கிடைத்தது. இந்தநிலையானது 1976ல் பெண்களின் சமஉரிமைகளுக்கான சமஷ்டி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படு­வதற்கு வழிவகுத்தது. இதுவே பெண்களின் சம உரிமைகளைப்பேணும் வகையில் சுவிஸில் அமைக்கப்பட்ட முதலாவது அரச அமைப்பாகும். இதேஆண்டில் பெண்கள் கருவுற்று 12வாரங்களுக்குள் கருக்கலைப்புச் செய்வதைச் சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்­பட்டது. அப்போது கருக்கலைப்புச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. கருக்கலைப்பைச் சட்டரீதியாக்கு­வதற்கு 1977ல் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இதனை எதிர்த்து வாக்களித்ததே இதற்குக் காரணம். 1971ல் சமஷ்டி அரசினால் பெண்களுக்கான வாக்குரிமை அங்கீகரிக்­கப்­பட்டிருந்தபோதும் மாநில அரசுகளால் இது அங்கீகரிக்கப்படவில்லை. 1978ல் சுவிற்சர்லாந்தின் 26வது மாநிலமாக உரு­வாக்­கப்பட்ட துரசய மாநிலமே முதன்முதலில் பெண்களுக்கான வாக்குரிமையை அங்கீகரித்தது. இதற்குப்பின்னரும் முழுமாநிலங்களும் இதனை அங்கீகரிக்க மேலும் 12ஆண்டுகள் பெண்கள் போராட வேண்டியிருந்தது. 1990ல் கடைசிமாநிலமாக Appenzell- Innerhoden மாநிலம் பெண்­களின் வாக்குரிமையை அங்கீகரித்தது. ஆண்-பெண் சமஉரிமையை அங்கீக­ரிக்கும் அரசியல்அமைப்பத் திருத்தம் 1981ம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பின்மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதனைஅடுத்து சமஷ்டிப் பேரவை எனப்படும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட சுவிஸ் அமைச்சரவைக்கு முதன்முதலாக ஒருபெண் வேட்பாளர் போட்டியிட்டார். எனினும் Lilian Uchten hagen என்ற அந்தப்பெண் வெற்றிபெறவில்லை. பாராளுமன்றத்தின் 200 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபையிலும், 46 உறுப்பி­னர்­களைக் கொண்ட மாநிலங்கள் சபை­யிலும் ஆண்கள் அறுதிப்பெரும்பான்மை யினைக் கொண்டிருந்தமையினால் இவரைத் தோல்வியுறச் செய்தனர். 1983ல் இடம் பெற்ற இச்சம்பவத்திற்காகப் பாராளுமன்றம் பெண்களின் கடுமையான விமர்சனங்­களையும் கண்டனங்களையும் எதிர்நோக்­கியது. இந்தநிலையில் 1984ல் சுவிஸ் அமைச்சரவையின் முதல் பெண் அமைச்ச­ராக Elisabeth Kopp பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். சமஷ்டி அரசியல் அமைப்பில் பெண்க­ளுக்கான பிரசவக்காப்புறுதி பற்றி 1945ல் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அந்த இலக்கு அடையப்படவில்லை. 1984ல் கொண்டுவரப்பட்ட தாய்மார் பாதுகாப்பு முன்மொழிவும், 1987ல் கொண்டுவரப்பட்ட பிரசவக்காப்புறுதி முன்மொழிவும் சர்வ­ஜனவாக்கெடுப்பில் தோல்வியடைந்தன. 1998ல் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்­கப்பட்ட இந்த முன்மொழிவு மக்கள்முன் சர்வஜனவாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது நிராகரிக்கப்பட்டது. சுவிற்சர்லாந்தின் பெண்கள் உரிமைகளுக்கான போராட்ட வரலாற்றில் 1991ம்ஆண்டு ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகின்றது. யூன் மாதம் 14ம்திகதி அணிதிரண்ட இலட்சக் கணக்­கான பெண்கள் மாபெரும் வேலை நிறுத்­தத்­தையும், ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடாத்தினர். பெண்களுக்குச் சமஉரிமை வழங்குவதற்கான சகல நடவடிக்கைக­ளையும் துரிதப்படுத்த வேண்டிய கட்டா­யத்திற்குள் ஆணாதிக்க சுவிஸ்அரசியலைத் தள்ளிவிடுவதாக இப்போராட்டம் அமைந்தது. இத்தனைக்கும் மத்தியிலும் 1993ல் இடம்பெற்ற நிகழ்வொன்று அரசியல் அநாகரிகமாக அமைந்தது. அமைச்சர­வைக்­கான பெண் வேட்பாளராகப் போட்டியிட்ட Christiane Brunner அரசியலுக்கு அப்பால் விமர்சிக்கப்பட்டார். அவர் அமைச்சராவதைத் தடுப்பதற்கு வலது சாரிகளும், மரபுவாதிகளும் அநாகரிகப்பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அவர் விவாகரத்துப் பெற்றவர் என்றும், அழகற்ற பற்களைக்கொண்டவர் என்றும் கூட மிகவும் அரசியல் வங்குரோத்துத்­தனமான பிரச்சாரங்கள் இடம்பெற்றன. இந்தநிலையில் அமைச்சரவையில் ஒருபெண் இடம்பெறவேண்டும் என்பதில் பெண்கள் அமைப்புக்கள் உறுதியாகப் போராடியதனால் அவருக்குப்பதிலாக மற்றொரு பெண்ணான Ruth Dreifussஐத் தெரிவுசெய்வதில் பெண்கள் வெற்றிய­டைந்தனர். சுவிஸ் அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டாவது பெண்ணான இவர் பிரசவக் காப்புறுதிக்காகக் கடந்த 20வருடங்களாகப் போராடி வருகின்ற போதும் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஆயுதத்தினால் அந்த இலக்கு ஆண்களால் தடுக்கப்பட்டே வருகின்றது. இன்று சுவிஸ் அமைச்சரவையில் இரு பெண்களும்( 7:2 ) பாராளுமன்றத்தில் 34 பெண்களும் ( 246:34) இடம்பெறுகின்றனர். 1996ல் ஆண்-பெண் சமஉரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டிச் சட்டம் நடை­முறைக்கு வந்தது. இது பெண்களுக்கு எதிரான புறக்கணிப்பைத் தடைசெய்ததுடன் சமமான தொழிலைச்செய்யும் ,இருபாலா­ருக்கும் சம சம்பளத்தையும் வலியுறுத்தியது. அண்மையில் வெளியான ஆய்வொன்று சுவிஸில் பல சட்டஏற்பாடுகளுக்கு மத்தி­யிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சம்பள வேறுபாடு அதிகமானது எனத் தெரிவித்துள்ளது. 2000மாம் ஆண்டில் ஆண் ஒருவரை விடவும், பெண் ஒருவர் சராசரியாக 21.3 வீதமான சம்பளத்தைக் குறைவாகப் பெற்றிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்­கின்றது. ஓரு சுவிஸ் ஆண் 5600 சுவிஸ் பிராங்குகளை மாதச்சராசரிச் சம்பளமாகக் கொண்டிருந்தபோது, ஒரு சுவிஸ்ப்பெண் 4406 சுவிஸ் பிராங்குகளையே பெற்றுள்ளனர். உயர்தொழில் முதல் சாதாரண தொழில் வரை வேறுபட்ட அளவில் இந்தப் புறக்கணிப்பும், சமத்துவமின்மையும் காணப்படுகின்றது. ஆண்டில் 42.8 வீதமான பெண்கள் 3000 சுவிஸ்பிராங்குகளுக்குக் குறைவானதும் 68.1 வீதமானபெண்கள் 4000 சுவிஸ்பிராங்குகளுக்கும் குறைவானதுமான சம்பளத்தைப் பெற்றிருப்பதாக அவ்வாய்­வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எம்மைப் பாதிக்கும் இன்னொரு விடயம் சுவிஸ்பெண் ஒருவருக்கும், வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கும் இடையிலான சம்பள வேறுபாடாகும். வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்களை விடவும் 15வீதம் குறைவான சம்பளத்தை அதே வேலைக்காகப் பெறுகின்றனர். இதன்படி பெண்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்களுக்குக் குறைவாகவும், மற்றொரு சந்தர்ப்பத்தில் உள்நாட்டவர்களைவிடக் குறைவாகவும் சம்பளம் பெறுகின்றநிலை காணப்படுகின்றது. அதாவது வெளிநாட்டுப் பெண்கள் சம்பளவிடயத்தில் இரு தடவைகள் புறக்கணிக்கப்பட்டு, இரு தடவைகள் சமசம்பள உரிமை மறுப்புக்கு உள்ளாகின்றனர். சுவிஸில் இடம்பெறும் 60வீதமான சம்பள வேறுபாட்டிற்கு அப்பட்டமான புறக்கணிப்பே காரணம் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கைப் பெண்கள் சுவிற்சர்லாந்தைப் பொறுத்தமட்டில் இலங்கைப் பெண்களின் நலன்களைச் சிறப்பாகப் பேணக்கூடிய வகையில் இலங்கைப்பெண்கள் அமைப்பு எதுவும் இதுவரை இல்லை. தனிப்பட்ட வகையில் மிகக்கணிசமான அளவு இலங்கைப் பெண்கள் பொதுவான அமைப்புக்களில் செயற்படுகின்றனர். இதுகூட சுவிஸில் வாழும் மற்றையநாடுகளின் பெண்களின் பங்களிப்புடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும். ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பெண்கள் அமைப்பொன்று சுவிஸில் செயற்பட்டு வருகின்றது. மூன்றாம்மண்டல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இங்குஎதிர் நோக்கும் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க இந்த அமைப்பு மேலும் பலப்படுத்தப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. எனினும் இலங்கைப் பெண்கள் தமது தனித்துவமான பிரச்சனைகள் சார்ந்து தனியான அமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. இந்த அமைப்பு மற்றைய, பிராந்திய, தேசிய, சர்வதேசியப் பெண்கள் அமைப்புக்களுடனும் தொடர்புகளைப் பேணக்கூடியதாகக் கட்டி எழுப்பப்பட வேண்டும். இலங்கைப் பெண்களின் கடந்த 20 ஆண்டுகால சுவிஸ் புலம்பெயர் வாழ்வில் பெண்கள் உரிமைக்கான போராட்டங்கள் எதிலும் எமது பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதனையும் வழங்கவில்லை. மாறாக மற்றைய பெண்களின் போராட்டங்களினால் கிடைத்த ,உரிமைகளை அனுபவிப்பவர்களாக உள்ளோம். இந்தநிலை மாற்றப்பட்டுப் பெண்ணுரிமைப் போராட்டத்தின் பங்கா­ளிகளாகவும் இலங்கைப்பெண்கள் மாறவேண்டும். இலங்கைப்பெண்கள் பொதுவாகப் பெண்கள் என்ற அடிப்படை­யில் எதிர்நோக்கும் உரிமை மறுப்புக்­களுக்கு எதிராகவும் அதேவேளை வெளி­நாட்­டுப்­பெண்கள் என்ற விஷேட உரிமைமறுப்பிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. நண்பர்களே! புலம்பெயர் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற சமகால எதிர்கால சிக்கல்கள் குறித்து அவ்வவ் நாட்டு அனுபவங்களிலிருந்து எழுதப்படும் கட்டுரைகளை ”பறை” வரவேற்கிறது.படைப்புக்கள் படைப்பாளிகளின் கருத்துக்களையே முன்வைக்கின்றன. A & B ஒன்றியத்தினுடையது அல்ல.ஆ.

கருப்பன்


நீண்ட
நெடுந்தூரப் பயணம்
களைத்த மனிதர்கள்
இவர்களுடன் எல்லாம்
நானும் ஒருவனாய்
பயணம்
செய்திருக்கின்றேன் - இந்த
அந்நிய மண்ணில்
இருக்கைகள் யாவும்
நிரப்பப்பட்டு
துவண்ட நிலையில்
சிலர்
நின்று வந்தாலும் கூட

என்னருகில்
இருக்கும்
இருக்கைமட்டும்
தனித்து வெறித்து
காத்திருக்கும்-என்
நிறத்தின் பெருமை
பேசியவண்ணம்...
ஏனெனில்
இவர்களின்
அகராதியில்
எந்தன்
நிறத்திற்கு-நரகம்
என்று பொருளாம்.

இரா.சுதாசீலன்-நோர்வே

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More