Slideshow

யுத்தமா? சமாதானமா?

எனது பார்வையில்
சமுத்திரன்
இலங்கையில் யுத்த நிறுத்தம் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்கள் மீது பல்லாண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த மனிதாபிமானமற்ற தடைகள் நீக்கம். கொழும்பு நகரின் பெருவீதிகளிலும் மூலை முடுக்குகளிலும் இருந்த ராணுவ சோதனை நிலையங்களின் மூடல். கொழும்பு - யாழ்பாணம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளின் நீக்கம்.இவைமட்டுமல்ல-நிரந்தரதீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சூழலை ஏற்படுத்த நோர்வையின் இராஜதந்திர செயற்பாடுகளின் தீவிரம் நம்புவதற்குக் கடினமாயிருக்கலாம். ஆனால் வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். தமிழ் மக்களின் அபிலாசைகளை மதிக்கும் அரசியல் தீர்வின் அடிப்படையில் அமைந்த ஒரு சமாதானத்தை அடைய முயற்சிக்ககூடிய சூழ்நிலை உருவாகியிருப்பது போலவேபடுகிறது. அதேவேளை அத்தகைய ஒரு அரசியல் தீர்வினை அடைய முடியுமா இல்லையா என்பது இப்போ உருவாகியிருக்கும் சாதகமான சூழ்நிலை நிரந்தரமாகத் தொடருமா இல்லையா என்பதில் தங்கியுள்ளது. பேச்சுவார்த்தைகளுக்குச் சாதகமான சூழ்நிலை தோன்றியது இதுதான் முதல் தடவை அல்ல. முக்கியமான கேள்வி என்னவெனில் இன்று தோன்றியுள்ள சூழ்நிலை முன்னையவை போல் குறுகிய காலத்தில் மறைந்து விடாது. நிலந்தரமாகத் தொடர்வதை எப்படி உத்தரவாதப்படுத்த முடியும் என்பதாகும். தென்னிலங்கையிற் பேரினவாத சக்திகள் தங்கள் பிரச்சார யந்திரங்களை முடுக்கிவிட்டுள்ளன. ஆயினும் இன்று நிலவும் சூழ்நிலையின் சில விசேடத் தன்மைகள் அரசியல் தீர்வை நோக்கிநகர உதவக்கூடியன என்பதை மறக்கமுடியாது. இலங்கையின் தேசிய இனப் பிரச்ச­னை­­யையும் போரினையும் மையப்படுத்தி எழுந்துள்ள புதிய சூழ்நிலைக்குப் பலர் சர்வதேச நிலைமைகளை வைத்தே விளக்கம் கொடுக்கின்றனர். அதாவது 2001ம் ஆண்டு புரட்டாதி 11ம் திகதி இடம்பெற்ற நிகழ்­வுக்குப் பின்னர; சர;வதேச ரிதியில் பயங்­கரவாதத்திற்கு எதிர;ப்பு பலவாகி விட்டது குறிப்பாக மாவல்லரசான USA பயங்கர­வாதத்தை அழிக்க ”கங்கணம்” கட்டிவிட்டது. இதுவே இலங்கையில் விடுதலைப் புலிகளை சமாதானப் பாதைக்கு தள்ளியுள்­ளது எனும் கருத்தினை கேட்கிறோம். இந்தக் கருத்தினை முற்றாக நிராகரிக்க முடியாவிடினும் அது இலங்கையின் உள்நாட்டு அரசியல் சூழல் மாற்றங்களுக்­கான ஒரு விளக்கமாக இருக்க முடியாது. இத்தகைய விளக்கத்தை நம்புவோர் இலங்கையின் உள்ளார்ந்த நிலைமைகளின் நீண்டகால மாற்றங்களையோ அவை ஏற்படுத்தியுள்ள அழுத்தங்ளையோ அறியாதோராகவே இருப்பர். இப்படிச் சொல்வது சர்வதேசப் போக்குகளைக் குறைத்து மதிப்பிடுவாகாது. அதற்குமாறாக சர்வதேச நிலைமைகளைக் கொச்சைப்­படுத்தி உள்நாட்டு அரசியல் இயக்கப்­பாடுகளை அசட்டை செய்யும் மேலெழுந்­த­­வாரியான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்பதாகும். இலங்கையில் இன்று நாம் காணும் புதிய சூழ்நிலை உள்ளார்ந்த நீண்டகாலப் போக்­குகளின் விளைவாகும். இதற்குச் சர்வதேச நீதியான தொடர்புகளும் பின்னணியும் உண்டு. இது பற்றிப் பார்ப்போம்; முதலில் அரசின் பக்கத்து நிலைமைகள்.
இராணுவ நீதியான தீர்வு சாத்தியமில்லை பல காலமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் வடகிழக்கிலிருந்து எழுந்துவந்த ஆயுதப் போராட்டத்தை இராணுவ ரிதியில் தோற்கடித்துத் தமக்கு வசதியான ஒரு தீர்வினை அமுலாக்க முடியுமென நம்பியிருந்தனர். ஆயினும் விடுதலைப் புலிகளின் இராணுவ ரிதியான வளர்ச்சியும் போராட்டத் திறனும் இந்தப் பாதையின் அசாத்தியத்தினைத் தோடர்ச்­சியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் கூட்டுக்களுக்குள் பலர் இந்த யதார்த்தத்தை நன்கு கிரகித்துள்ளனர். புலிகளை பலவீனமாக்குவது சாத்திய­மெனினும் அவர்களை ஒரு இராணுவ சக்தியாக முற்றாக அழிப்பது சாத்திய­மில்லை என்பதையும் அவர்கள் அறிந்துள்­ளனர். 1996க்குப் பின் அரசபடையினர் சந்தித்த பல தோல்விகளும் இழப்புக்களும் இந்தக் கருத்துப் போக்கினை மேலும் பலப்படுத்தியது. இப்போது முன்னர் போல் சிங்கள இளைஞர்கள் இரா­ணுவத்தில் சேர முன்வரு­வதாகத் தெரியவில்லை. இராணு­வத்­தின் ஆட்சேர்ப்பு முயற்சிகள் எதிர்பார்­த்த வெற்றியைத் தரவில்லை. இதுவும் பொருளாதாரக் காரணிகளும் இராணு­வத்தை மேலும் பலப்படுத்­துவதற்குத் தடையாக உள்ளன. ஆளும் கூட்டுக்க­ளுக்குள் இராணுவ ரீதியான தீர்வில் நம்பிக்கை கொண்­டோhpன் செல்வாக்குப் படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. இதற்குப் பொருளாதார காரணங்களும் சமூகக் காரணங்களும் உண்டு.
இலங்கைப் பொருளாதாரத்தின் பலவீனமாக்கல்
யுத்தத்தின் நேரடியான மறைமுகமான தாக்கங்க­ளால் இலங்கையின் பொரு­ளாதாரம் தொடர்ச்சி­யாகப் பல பின்னடைவு­களுக்­குள்ளாகியுள்ளது. 1977லி­ருந்து இலங்கை அரசாங்­கங்கள் கடைப்பிடித்து வரும் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின் அமுலாக்­களுக்கு மிகவும் பாதகமான நிலைமை­களையே தொடர்ந்துவரும் உள்நாட்டுப் போர்; ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் போருக்கென ஒதுக்கப்படும் செலவு பயங்கரமாக ஏறிக்கொண்டு போகிறது மறுபுறம் போரினால் ஏற்படுத்தப்படும் பொருளாதார ரிதியான அழிவுகளும் உற்பத்தி இழப்புக்களும் மோசமடைந்த வண்ணமிருக்கின்றன. இன்னொருபுறம் பொருளாதார முதலீட்டாளர்கள் இலங்­கையை தவிர்த்துக் கொள்ளவே செய்கி­றார்கள். மூலதனம் வேறுநாடுகளை நோக்கி நகர்கிறது. உள்நாட்டு மூலதனம் பல துறைகளைத் தவிர்த்துக் கொள்கின்றது. இலங்கை ஆரசானது உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் கடன் உதவியில் பெருமளவு தங்கியுள்ளது. இந்நிறுவனங்கள் இலங்கையின் உள்நாட்டு நிலமைகளை விரும்பவில்லை இதனால் கடன் உதவிகள் எதிர்பார்த்தது போல் கிடைக்கவில்லை. உள்நாட்டுப் பொருளாதா­ரத்தின் பின்னடைவும் சர்வதேச பொருளா­தார கடன் உதவியின் போதாமையும் இலங்கை அரசிற்கு பலவருடங்களாகத் தலையிடியைக் கொடுத்து வருகிறது. யுத்தப் பொருளாதாரத்தால் நன்மை பெறுவோர் யுத்தம் தொடர்வதை விரும்புகிறார்கள் ஆனால் இந்த யுத்தப் பொருளாதாரம் தேசிய பொருளாதாரத்தை உறிஞ்சியே வளர்கிறது. அதை தொடர்ந்தும் தாங்கக்­கூடிய சக்தியை தேசிய பொருளாதாரம் இழந்துவிட்டது. பொதுமக்கள் மீது பலவிதமான வரிகளைப் போட்டும் அபிவி­ருத்திக்குச் செல்ல வேண்டிய பணத்தை யுத்தச் செலவிற்குப் பயன்படுத்தியும்தான் அரசு யுத்தத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதை மேலும் தொடர்வது மிகவும் கடினமாகியுள்ளது. இந்த நிலை­யானது யுத்தத்தை எப்படியாயினும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனும் கருத்துப் போக்கினைப் பலப்படுத்தியுள்ளது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More