Slideshow

மரியாதை (படு)கொலைகளும் அடிப்படை மனித உரிமைகளும்

நிலா
கடந்த 24.01.02 அன்று சுவீடன் நாட்டில் இடம்பெற்ற சம்பவம் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே பலத்த விவாத­ங்­களை உருவாக்கியுள்ளது. தங்­களது கலாசார விழுமியங்களுக்கு முரணாக ஒரு சுவீடன் நாட்டு வாலி­பரை காதலித்த 26வயது­டைய துருக்கிய குர்திஸ்தான் இன இஸ்லாமிய பெண்மனி அவரது தந்தையினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்;. இச்சம்பவம் ஸ்கன்டிநேவிய நாடுகளில் அதிலும் குறிப்பாக அயல்நாடு என்றவகையில் நோர்வே டென்மார்க் போன்ற நாடுகளில் ஒரு அசாதாரண நிலையை தோற்றுவித்துள்ளது. தனிமனித சுதந்திரம் பற்றியும் தங்களது எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமைகள் பற்றியும் இதில் பெற்றோர்களின் பங்களிப்பு பற்றியும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பு சாதனங்களாலும் சமூக ஆய்வாளர்கள் அரசியல்வாதிகளாலும் விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் சிலதொடர்பு சாதனங்­கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனமுரண்பாடுகளையும் குரோத மனப்பாண்மையையும் தோற்றுவிக்கும் விதமாக செயலாற்றி வருகின்றன. இதற்கு அரசியல் வாதிகளும் துணை போயுள்ளமை வருந்தத்தக்க செயலாகும். அதே சமயம் இது தொடர்பாக தொட­ர்பு சாதனங்களில் இடம் பெற்ற விவாதங்கள் கருத்துப் பரிமாற்­றங்கள் எமது உணர்வை தட்டியெழுப்புபவையாக மட்டுமண்றி பெண்கள் மற்றும் எமது பிள்ளைகள் மீதான எமது ஆதிக்கம் பற்றி ஒரு மதிப்பீடு செய்வதற்க்கு வாய்ப்பாக அமைந்திருந்ததை மறுப்பதற்கில்லை. பதிமா ஷின்டால் (Fadime sahindal ) என்ற பெண் சுவீடன் வாலிபரை காதலித்து வந்தார் 1998ல் அவ்வாலிபர் கார் விபத்தில் இறந்து விட்டார். எனினும் பாத்திமாவின் பெற்றோரால் மகளின் காதல் விவகாரத்தை இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல தடவைகள் இவர் குடும்பத்தாரின் கொலைப் பயமுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார் இதையிட்டு இவரிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. சுவீடன் தொடர்பு சாதனங்களிலும் மக்கள் மத்தியிலும் இவர் நன்கு அறிமுகமானவராக இருந்து வந்தார். எனினும் தனது சகோதரியின் வீட்டிற்கு செனறிருந்த சமயம் அங்கு வந்திருந்த தனது தந்தையாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் காதல் தொடர்பு முடிவுபெற்று ஏறத்தாழ 3வருடங்கள் கடந்த பின்னரே இக்கொலை நடந்திருப்பதால் மனித உயிர்களை விட கலாச்சார பண்பாட்டு விடயங்கள் எமது அன்றாட வாழ்வில் செலுத்தும் ஆதிக்கம் தெளிவாகியுள்ளது. இச்சம்பவம் திட்டமிடப்பட்ட படுகொலை என்பதிலோ அல்லது மிகவும் மிலேச்சத்தன­மான செயலென்பதிலோ மாறுபட்ட கருத்திற்க்கு இடமில்லை. இவ்வாறான செயல்கள் சட்டத்தினால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மதம் மொழி கலச்சார பண்பாடுகள் என்பன ஒரு வரைய­றைக்கப்பால் தனி மனித ஆளுமையில் ஆதிக்கம் செலுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு மனிதன் ஆணோ பெண்னோ தங்களின் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கவும் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் முழுமையாக வழங்கப்படல் அவசியம். பெற்றோர் குறித்த ஒரு வரம்பிற்குள் நல்ல வழிகாட்டிகளாக செயலாற்றலே வரவேற்கத்­தக்கது. எனினும் மிகப் பெரும்பாலான புலம்பெயர் வாழ் சமூகத்தில் பெண்களும் பிள்ளைகளும் கலச்சாரம் பண்பாடு வட்டத்­திற்க்குள் உள்ளாக்கப்பட்டு மூலைச்சலவையும் செய்யப்பட்டு விடுகின்றனர். இதனால் இச்சமூகத்திற்கு கிடைக்கவேண்டிய பல சாதகமான அம்சங்கள் கிடைக்காமல் ஒரே வட்டத்திற்க்குள் சுழல வேண்டிய நிலை ஏற்பட்­டுள்ளது. இப் புலம் பெயர் சமூகத்தி­லிருந்து தோன்ற வேண்டிய பல சமூக விஞ்ஞானிகள் சிந்தனையாளர்கள் தொழில்­நுட்ப வல்லுனர்கள் தோன்றாமலே மறைந்து விடுகின்றனர். கலாச்சாரம் என்பது எவ்வாறு இனத்திற்கு இனம் மதத்திக்கு மதம் மொழிக்கு மொழி வேறுபடுகின்றதோ அதேமாதிரி கலாச்சாரமென்பது காலத்திற்க்கு காலம் மாற்றமடைய வேண்டும். என்பதை விட அது மாற்றமடைந்தே வந்துள்ளது என்பது தான் உண்மை. தவிர கலச்சாரமென்பது நிரந்தரமா­னதல்ல. அச்சூழலிற்கும் நாம் வாழும் சமுதாய ஒழுங்கு விதிகளுக்கும் எற்ப நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக அமைதல் அவசியம். இது தவறாயின் மனிதகுலம் இன்னும் வேட்­டையாடி வாழும் சமூகமாகவே காணப்படும். பத்திமா ஸின்டால் போன்று பல பெண்கள் இன்னமும் சித்திரவதைக்கும் கொலைப் பயமுறுத்தல்களிற்கும் உளளாக்கப்பட்டி­ருந்தாலும் கூட ஒரு சில சம்பவங்களைத் தவிர பெரும்பாலான சம்பவங்கள் மூடிமறைக்கப்பட்டு விடுகின்றன. தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்கவோ அல்லது குறைந்தபட்சம் எண்­ணிக்­கையை குறைக்கவோ வேண்டுமாயின் இது தொடர்பான கருத்தியல் அடிப்படை மாற்றமும் மாற்றுக் கலாச்சாரங்கள் பற்றிய சிந்தனைத் தெளிவும் அவசியம். இப்படுகொலை தொடர்பாக வெளிவந்த செய்திகள் நிச்சயமாக இங்கு வாழும் புலம் பெயர் சமூகத்தவர்கள் பலரை பாதித்திருக்கும் அந்தளவிற்க்கு பெரும்பாலான தொடர்பு சாதனங்கள் இவ்விடையத்தில் மிகக்கடு­மையான போக்கை கடைப்பிடித்திருந்தன. இக்கொலையில் சம்மந்தப்பட்ட இரு பிரி­வினரும் புலம்பெயர்ந்து வாழும் சமூகமென்­பதாலும் அவர்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் வழமைபோல சில தொடர்புச் சாதனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளாமை மட்டுமன்றி உண்மைக்கு மாறான செய்திகளை எதுவித தயக்கமுமின்றி வெளியிட்டும் வந்தன. இவ்வாறான படுகொ­லைகள் இஸ்லாம் மதத்திற்குரியது எனவும் வறுமையில் வாடும் 3ம் உலக நாடுகளிலேயே இவை இடம் பெறுவதாகவும் தொடர்பு சாதனங்கள் மட்டுமன்றி பல அரசியல்வா­திகளும் பொறுப்பற்ற விதத்தில் அறிக்கைகள் செய்திகள் வெளியிட்டிருந்தனர். ஆனால் உண்மையில் இவை உலகிலுள்ள பல சமூகங்­களிலும் காணப்படுகிறது என்பதே உண்மை. கிறிஸ்துவ மதப்பிரிவுகள் இந்து, யூத மதங்களிலெல்லாம் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் காலத்திற்கு காலம் இடம்பெற்று வருகின்றன அவை சமூகப் பின்னணியிலும் எண்ணிக்கையிலும் மாறுபட்டிருக்கலாம் ஆனால் அடிப்படையில் அப்பட்டமான ஆதிக்க வெறியில் மேற்கொள்ளப்படும் கொலைகளே. இவை தனித்து ஒரே ஒரு மதத்திற்கோ உரியசெயல்களல்ல. (மதம் அபினனென்ற போதைவஸ்துக்கு சமமானது என்பது உலகிலுள்ள ஒவ்வொரு மதங்களின் வரலாற்றையும் புரட்டிப்பார்த்தால் நன்கு புலப்படும் மதங்களின் தோற்றம் சமூக நலன்களை மையப்படுத்தி தோற்றுவிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் அவை நிறுவனம­யப்­படுத்­தப்பட்ட ஒரு சமூக அமைப்பாக தோற்­றம் பெற்று வளர்ச்சியடையத் தொடங்கியதும் தனிமனிதநலன்களும் அதனை மையப்படுத்திய ஒடுக்குமுறைக­ளும் சமூகநலன் சமூக ஒழுக்கம் என்ற குறுகிய வட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் இந்த மதங்களின் ஆளுமை கலாச்சாரப் பண்பாட்டு விடயங்க­ளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அதே சமூக ஒழுங்கு(?) விதிகளை கலாச்­சார பண்பாட்டு விடயங்களிலும் செலுத்தி அவற்றை தமது முளுமையான கட்டுப்பாட்­டின் கீழ் கொண்டு வந்துள்ளன இதனை மேலும் ஊக்கப்படுத்தி நிலை நிறுத்துவது போல் கடந்த கால உலக வரலாறும் (மன்­ன­ராட்சி காலனித்துவ ஆதிக்கம்) அமைந்­துள்ளது. மேலும் ஆணாதிக்க மனப்பான்­மையை மையப்படுத்­திய பொருளாதார கட்ட­மைப்­பும் இக் கலாச்சார பாரம்பரியங்களை கட்டிக்காக்கும் வகையில் திட்டமிடப்பட்டு நடைமுறைப்­படுத்தப்பட்டு வந்துள்ளது.) இச்சம்பவத்தில் அதிதுயரமான விடயம் யாதெனில் இவ்விடயம் பற்றிய விவாதங்கள் தொடர்பு சாதனங்களில் இடம்பெற்ற போது சிலர் இதனை நியாயப்படுத்தியும் கொலை­யாளியின் செயலை நியாயப்படுத்தியும் கூறப்பட்ட கருத்துக்களாகும். இவை இந்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியிருந்தமையை பத்திரிகைகளில் வெளிவந்த வாசகர் கடிதங்கள் மூலமாக உணரக்கூடியதாக இருந்தது. பல இஸ்லாமிய சமூக அமைப்புக்கள் இதற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் எதுவித தொடர்புமில்லை என அறிக்கைகள் வெளியிட்டிருந்த போதும் தொலைக்காட்சியில் இடம் பெற்ற விவாதங்­களில் இவ்வமைப்புக்கள் பலவும் கேள்விக்கு சரியான பதில் கூறமுடியாது திண்டாடி­யதையும் பூசிமொழுகி பிரச்சனைக்குரிய விடயங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முயன்றமையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளும் கொள்கைகளும் ஐரோப்பிய மக்களிடையே பரவலாக அதிருப்தியை தோற்றுவித்துள்ள போதும் பல சமூக ஆய்வாளர்களால் சாதகமான கணணோட்டத்திலேயே இஸ்லாம் அணுகப்படுகின்றது. உண்மையில் இஸ்லாம் இன்று தன்னை மீள்ஒழுங்கமைப்பில் ஈடுபடுத்தவேன்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்­டுள்ளது. இஸ்லாம் மதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்டுவரும் பிரச்சனைக­ளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் பல இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களிற்கு கலாச்சார முரன்பாடுக­ளால் தமது அடையாளம் பற்றிய தேவை எழுந்துள்ளது. இங்குள்ள மக்களிடையே இணைந்துவாழும் சூழ்நிலையில் ஏற்படக் கூடிய நடைமுறை சார்ந்த பிரச்சனைகளிற்கு முகம்கொடுப்பதும் தமது புதிய சந்ததியினரின் தேவைகளிற்கும் சிந்தனைகளுக்கும் வழிகாட்டிகளாக செயலாற்ற வேண்டிய சிக்கலான பிரச்சனையை இவர்கள் எதிர் கொள்கின்றனர். பல ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலான ஐரோப்பியர்கள்; இங்கு குடிபுகும் வெளிநாட்டவர்களை விட இஸ்லாமிய மதம் தொடர்பாகவே கூடிய அச்சமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 11 செப்ரம்பரில் நடந்த சம்பவம் இதனை மேலும் வலுவாக்கியுள்ளது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த யூதர்கள் தொடர்பாக ஐரோப்பாவில் நிலவிய குரோத உணர்வு போன்றவொரு சூழ்நிலை தற்போது இஸ்லாம் தொடர்பாகவும் படிப்படியாக ஏற்பட்டு வருகின்றதை அண்மைக்காலச் சம்பவங்கள் பல தெளிவாக்கியுள்ளன. இதனை உடைத்தெறிய வேண்டிய கடமை இஸ்லாமிய நாடுகளையும் அமைப்புக்களையுமே சாரும். பதிமா ஷின்டாலின் மரணம் ஒரு வேதனையான சம்பவமாயிருந்தாலும் இங்குள்ள புலம்பெயர் மக்கள் மத்தியில் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் தமது உரிமைகளுக்காக போராடும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நோர்வேயில் பல ஊர்வலங்கள் இங்குள்ள பெண்நிலைவாதிகளாலும் சில இஸ்லாமிய அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. சுவீடனில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் சென்று தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். பதிமாவின் இறுதிச்சடங்கில் சுவீடன் நாட்டு இளவரசியும் கலந்து கொண்டமை வரவேற்கத்தக்கது. இவரின் உடல் அவரின் காதலரின் கல்லறைக்கு அருகேயே அடக்கம் செய்யப்பட்டது. பத்திமா ஷின்டாலின் உயிர் இவ்வுலகை விட்டுப்பிரிந்து விட்டாலும் அவரின் நினைவுகளும் கருத்துக்களும் இலகுவில் அழியாது. புலம்பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினர் பலர் அவர் எதிர்நோக்கிய அதே பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளனர். தங்களது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு வளங்கப்படாமலிருப்பது எதுவிதத்திலும் நியாயமானதல்ல. இவ்விடையத்தில் சமூக அறிஞர்களும் ஊடகங்களும் அரசியல் வாதிகளும் புலம்பெயர் மக்களின் அமைப்புக்களும் ஒரு திட்டமிட்ட வேலைத் திட்டத்தை ஆரம்பித்தல் வேண்டும். புலம் பெயர் மக்களின் பிரச்சனைகள் வெறும் சட்டத்தாலோ அல்லது அரசியல் வாதிகளின் சந்தர்ப்பவாத வாய்பேச்சுகளாலோ தீர்க்கமுடியாது. நியாயமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட புரிந்துணர்வுடன் கூடிய கருத்துப் பரிமாற்றமே சரியான திசையில் இவ்விளம் சந்ததியை இட்டுச் செல்லும் இது சார்ந்த கல்வியும் புலம்பெயர்ந்த சமூகத்தில் இவர்களின் சமூக அங்கீகாரமும் அவசியம். இவற்றை சீராக நடைமுறைப்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் பதிமா ஷிலின்டாலிற்க்கு ஏற்பட்ட முடிவிலிருந்து எமது சந்ததியிரை நாம் காப்பாற்றலாம். புலம் பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினர் ஐரோப்பிய இளம் சந்ததியினருடன் ஒப்பிடுகையில் இரண்டுவகையான கலச்சார முரண்பாடுகளை எதிர்நோக்குவதுடன் பெரும்பாலானோர் இவ்கலாச்சார முரண்பாட்டால் சமூக உளவியல் தாக்கங்களிற்கு உள்ளாகியுள்ளனர். அண்மையில் நோர்வேயில் புலம்பெயர் சமூகத்தில் இளைய சந்ததியினர் பற்றி மேற்கொண்ட ஆய்வில் புலம் பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினர் நோர்வேஜிய சந்ததியினருடன் சுமூகமான உறவுகளைப் பேணிவந்தாலும் அவர்களுடன் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடிவதில்லை. இதற்கான காரணம் பெற்றோர்கள் மத்தியில் இருந்துவரும் நெருக்குதல்களே காரணம் எனத் தெரியவந்துள்ளது. மிகப் பல வெளி நாட்டுப் பெற்றேர்கள் தங்களது பிள்ளைகள் நோர்வேஜிய கலாச்சாரத்தை உள்வாங்கி விடுவார்கள் என்ற அச்சமே இவ்வாறான நெருக்குதலுக்கு என அறிய வருகிறது. இக் கலாச்சார முரன்பாடுகள் இளம் சந்ததியினரின் இயல்பான வாழ்கையை பாதிப்பதுமட்டுமன்றி அச்சமூகத்தின் முனனேற்றத்திற்கு அவசியமான அறிவியலாளர்களின் பங்களிப்பும் கிட்டாமல் செய்துவிடுகின்றது. நன்கு படிக்கும் இளம்பெண்கள் பலர் மதம் கலாச்சாரம் என்ற குறுகிய வட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு படிப்பை இடையில் நிறுத்திவிட்டு குடும்பவாழ்வில் ஒன்றித்து விடுகின்றனர். இது இன்று வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப சமூகத்தில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பை காலப்போக்கில் மழுங்கடித்துவிடும்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More