Slideshow

நூல் விமர்சனம்

மூன்றாவது மனிதன்
மூன்றாவது மனிதன் 14வது இதழ் வெளிவந்திருக்கிறது. இலங்கையிலிருந்து இப்போதைக்கு நம்பிக்கை தரக்கூடிய சஞ்சிகையாக இருப்பது இது. சரிநிகர் போன்ற பத்திரிகைகளும் நின்று போன நிலையில் தீவிர எழுத்தாளர்கள், இலக்கியத் தரப்பினருக்கு கைகொடுத்திருப்பதும், ஆறுதல் தந்திருப்பதும் ”மூன்றாவது மனிதன்” என்றால் அது மிகையில்லை. மூன்றாவது மனிதன் பதிப்பகமாக பிறப்பெடுத்த நாளிலிருந்து இதுவரை நல்ல அரிய படைப்புகளை நூலாக கொண்டுவந்தபடி இருப்பது இலங்கை தமிழ்ச் சூழலில் ஒரு ஆரோக்கியமான நிலை.
Editor, 37/05, Vouxuall Lane, Colombo-02, Sri Lanka 3man@sltnet.lk
உயிர்நிழல்
"உயிர்நிழல்" ஐரோப்பாவில் பல சஞ்சிகைகளும் நின்று போன நிலையில் நம்பிக்கை தரக்கூடிய சஞ்சிகையாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையாகும். 20வது இதழ் அண்மையில் வெளிவந்தது. வழமைபோல மிகுந்த விவாதங்களை ஏற்படுத்துகின்ற கட்டுரைகளை உள்ளடக்கியிருக்கிறது. இணையத்தளத்திலும் உயிர்நிழல் கட்டுரைகள் இப்போது கிடைக்கின்றன. ஈழத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும், புகலிடத்திலிருந்தும் பல எழுத்தாளர்களின் எழுத்துக்களை இது வரை வெளிக்கொணர்ந்திருக்கிறது உயிர் நிழல். புகலிட சூழலில் இருந்து வெளிவரும் சஞ்சிகையாக பலராலும் அறியப்பட்டிருக்கும் உயிர்நிழல் அதன் தொடர்ச்சியை பேணிக்கொண்டிருப்பது ஒரு ஆறுதல்.
EXIL, 27 Rue Jean Moulin, 92400 Courbevoie, France EXILFR@aol.com பால்வினைத் தொழிலாளர்
வருடாந்தம் நடத்தப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பெண்களின் சந்திப்பு இம்முறை யேர்மன் கார்ல்ஸ்ட்ரூவாவில் நடைபெற்றிருக்கிறது. இம்முறை சந்திப்பில் 7வது பெண்கள் சந்திப்பு மலர் வெளியிடப்பட்டிருக்கிறது. வழமைக்கு மாறாக ”பால்வினைத் தொழிலாளர்கள் பற்றிய சிறப்பிதழாக வெளிக் கொணர்ந்திருப்பது சிறப்பு. மிகுந்த தரமான அட்டைப்பட வடிவமைப்பும், உள் வடிவமைப்பையும் கொண்ட இவ் இதழ் இது வரை வெளிவந்த மலர்களிலிருந்து மாறுபட்டதாகும். இம்முறை இதனை பெண்கள் சந்திப்பு மலர் குழுவில் அங்கம் வகிக்கும் பிரான்ஸிலிருந்து வெளிவரும் ”உயிர் நிழல்” ஆசிரியர் லக்ஸ்மியும், நோர்வேயிலிருந்து வெளிவரும் ”சக்தி” இதழின் ஆசிரியர் தயாநிதியும் தொகுத்திருக்கிறார்கள்.
Tamil Women's Forum C/o, SALZ, Waliblingerstr. 59, 70372 Stuttgart, Germany
அசை
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் வெளிவந்திருக்கும் ”அசை” எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அதிக காத்திரமான கட்டுரைகளை தாங்கி வெளிவந்திருக்கிறது. இலங்கையில் சிலர் ”ஒரு வருடத்துக்குப் போதும்” என்று கூறியதையும் கேட்கக்கூடியதாக இருந்தது. அசையின் வருகை வரண்டு போயுள்ள தமிழ் புலமைத்துவ உரையாடலுக்கு ஒரு நம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது. பல சிரமங்களோடு வெளிக்கொரணப்பட்டிருக்கும் அசை அதன் தொடர்ச்சியை பலரும் எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை. 150 பக்கங்களைக் கொண்ட ”அசை” வருடத்திற்கு இரு முறை வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் அது காலாண்டு இதழா மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக அறியக்கிடைகிறது.
Ashok Yogan Assaie, 45 Rue Davy, 75017 Paris, FRANCE Assaie@hotmail.com

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More