Slideshow

கீழிறங்கும் கழுகுகள்

சேரன்

வட அமெரிக்கா ஐரோப்பா மற்றும் மேலைநாடுகள் எங்கும் அண்மையில் திரையிடப்பட்டு மில்லியன் கணக்காக வருமானம் பெற்றுவரும் Black hawk Down என்ற மாபெரும் திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்கத் தேசியவாதத்தையும் அமெரிக்க விசுவாசத்தையும் மூலகளமாகவும், மூலவளமாகவும் (கூடவே ஏராளமான பணத்தையும்) இட்டுப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு உலகெங்கும் வினியோகம் செய்யப்பட்ட இந்தப்படம் ஒக்டோபர் 3ம் திகதி 1993இல் சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் அமெரிக்க சிறப்புப் படையினர் நிகழ்த்திய தாக்குதல் ஒன்றைப் பற்றியது.

வளமையாகவே holywood பெருந்தயாரிப்புக்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இணக்கமாகவும் அமெரிக்க விசுவாசத்தை ஊறவைப்பதாகவும் அமெரிக்காவின் McDonald... Nike கலாசாரத்தை உலகெங்கும் பரப்புவதாகவுமே அமைந்து வருகின்றன. பெருநிதி நிறுவனங்களின் துணையும் அரசியல் பலமும் வல்லாட்சியும் இந்த கலாசார பண்பாட்டு மேலாதிக்கப் பரவலுக்கு ஒரு பிரதான காரணம். எனினும் செப்டெம்பர் 11 நியுயோர்க் வாசிங்டன் தாக்குதல்களுக்குப் பிற்பாடு அமெரிக்க அரசுக்கும் holywood பெரு முதலாளிமாருக்கும் இன்னும் அழமான கலாசார உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன. தாக்குதல்கள் இடம்பெற்றுச் சில வாரங்களின் பிற்பாடு holywood இன் எல்லா முக்கியமான தயாரிப்பாளர்கள்; நெறியாளர்கள் கதாசிரியர்களை புஸ் வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

அமெரிக்க தேசப்பற்றையும் வீரத்தையும் சித்தாpக்கும் உன்னதமான திரைப்படங்களைத் தயாரிக்கும்படியும் அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சனம் செய்யாத முறையிலும் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளைப் புண்படுத்தாத முறையிலும் இந்தப்படங்கள் அமைய வேண்டும் என்றும் புஸ் கோரியிருந்தார். இந்தக்கோரிக்கையின் விளைவாக அமெரிக்காவின் கனவு காசு) தொளிற்சாலை வரிசையாகப் படங்களைத் தருகிறது. Black hawk Downkk தொடர்ந்து Collakral Damage . ஏனையவை தொடரும். இதுவரை Military- Industrial-entertaiment Complex என்று வழங்கப்பட்டு வந்த அமெரிக்க விரிவாதிக்கத்துக்கு இப்போது நாம் வழங்கக்கூடிய பொருத்தமான பெயர் Military Industril -Entertaiment Complex என்பதாகும்.

ஓக்டோபர் 3 1993 சோமாலியாவில் என்ன நடந்தது என்பதையும் அச்சம்பவங்களின் பகைப்புலத்தையும் தெரிந்து கொள்வது Black hawk Down திரைப்படத்தின் அரசியலைப் புரிந்துகொள்ள மேலும் வழிசெய்யும். ஒக்டோபர் 3, 1993 அன்று சோமாலியாவின் தலைநகரில் தமக்குள் மோதிக் கொண்டிருந்த ஆயுதக்குழுக்களுள் ஒன்றின் தலைவர் முகமது ஹபரா அய்டீட் என்பவரை அல்லது அக்குழுவின் வேறு தலைவர்களைப் பிடிப்பதற்கென 160 அமெரிக்க சிறப்புப் படையினர் மொகடிசுவில் தரையிறங்க முற்பட்டனர். அவர்களுடைய முயற்சி முழுத் தோல்வியில் முடிந்தது. பதினெட்டு அமெரிக்கப் படையினர் கொல்லப் பட்டனர். எழுபத்தைந்து பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். அமெரிக்க ராணுவத்தின் புகழ்பெற்ற Black hawk ஹெலிகொப்ரர்கள் நொருங்கி வீழ்ந்தன. 500-1000 வரையான சோமாலியப் பொதுமக்கள் அன்றிரவு தாக்குதலின் போது உயிரிழந்தனர்.

அமெரிக்கப் படையினரின் உடல்களை சோமாலிய மக்கள் தெருவில் இழுத்துச் சென்றதை கனடாவின் Toronto Star நாளேட்டின் நிருபர் போல் வற்ஸன் எடுத்த படத்துக்கு புளட்வர் விருது வழங்கப்பட்டது. சோமாலிய மக்களின் கோபததுக்கு என்ன காரணம்? பொதுவாகவே எந்த மக்களுக்கும் வெளிநாட்டுச் சக்திகளால் ஆளப்படுவது ஒவ்வாதது ஆகும். சோமாலியா மக்கள் மட்டும் இது விதி விலக்காக முடியுமா? எனினும் ஒக்டோபர் 3 அன்று நடந்தேறிய சம்பவங்களுக்கு குறிப்பான காரனங்களும் உள்ளன.

அதேவருடம் யூலை மாதம் 12ம் தேதி அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் பரா அய்டீட்டின் மீது தாக்குதல் தொடுத்திருந்தனர். அய்டீடின் குலக் குழுமமான ”Trib habr Gidr ” மக்களின் ஒன்று கூடல் ஒன்றின் போது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தன. இக்குலக் குழுவின் முதியோர் எழுத்தாளர்கள் கவிஞர்கள் புத்திசீவிகள் எனப் பலவகையானோர் ஒன்று திரண்டிருந்த கூட்டத்தின்மீது அமெரிக்கப் படையினரின் Cobra ரக ஹெலிகொப்ரர்கள் பதினாறு வுழற ஏவுகணைகளையும் 2000 சிறு பீரங்கிக் குண்டுகளையும் ஏவின என்று Washington post நாளேடு தெரிவித்திருந்தது. ஏவுகணைத் தாக்குதலுக்கு முன்பாக கூட்டம் நடைபெற்ற மாடியின் படிக்கட்டுகளை ஹெலிகொப்ரர்கள் தாக்கி அழித்திருந்தமையால் எவருமே தப்ப முடியவில்லை. நூற்றுக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட இக்கூட்டம் அமெரிக்கா முன்மொழிந்திருந்த சமாதானத் திட்டத்தை பரிசீலனை செய்வதற்கெனவே கூடியது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

சோமாலியாவின் பிரச்சினைகளுக்கும் அனர்த்தங்களுக்கும் மூலகாரணங்களில் ஒருவரான சர்வாதிகாரி Siad Barre யின் கொடுங்கோலாட்சியைத் தொடர்ந்து ஆதரித்து வந்தது அமெரிக்கா. ஆண்டுக்கு 50மில்லியன் டொலர்கள் வரை Siad BarrefF ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கி வந்தது. இதற்கு ஐக்கிய நாடுகள் அவையின் அப்போதைய செயலாளர் நாயகம் புட்ரஸ் புட்ரஸ் காலியும் ஆதரவாக இருந்தார்.






சோமாலியாவின் பொருளாதாரச் சிக்கல்களுக்கு வேறு காரணமும் இருந்தது. 80களில் சர்வதேச நாணய நிதியம் (IMF) சோமாலியாவில் அமுல்படுத்த நிர்ப்பந்தித்த கொள்கைகள் நாட்டின் வறிய மக்களையே பெரிதும் பாதித்தது. போதாதற்கு வரட்சியும் சேர்ந்துகொ



ண்டது. கிராமப் புறங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் படித்தோர் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர். ஏராளமான குழந்தைகள் பட்டினியால் இறந்தன. ஒரு காலைச் சாப்பாட்டை விட ஒரு மெஷின் துப்பாக்கியை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. பத்து வயது குழந்தைகள் எ.கே.-47 துப்பாக்கிகளுடன் தெருவில் நடை பயில்வது சாதாரணமான விடயமாகி போய்விட்டது.

ஓக்டோபர் 3, 1993 அன்று பிடிபட்ட அமெரிக்க படையினருக்கு நடந்த அவலத்தை மட்டுமே சித்தரிக்கிற Black hawk Down திரைப்படம் அதன் நெறியாளர் சொல்வது போல அரசியல் அற்ற படம் அல்ல. அந்தப் படத்தில் வரும் ஒரு அமெரிக்கப் படையாள் சொல்வதை இங்கு குறிப்பிடலாம்:

முதலாவது குண்டு உன்னுடைய தலைப்பக்கமாக ஊடுருவிக்கொண்டு போன அந்தக் கணமே அரசியல் அதுமாதிரியான எல்லா...... வரும் வெளியே பறந்துவிடும்.இந்தப் படத்தின் அரசியலும் இதுதான் குறுகிய காலக் கண்ணேட்டத்தில் கொடுங்­ கோ­லரையும் கொலையாளிகளையும் நண்பர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் ஏற்று ஆதரித்து வருகிற அமெரிக்கக் கொள்கை ஜனநாயகத்திற்கும் மனித விழுமியங்களுக்கும் உதவாது. சிறு ஆயுதங்கள் கண்ணிவெடிகள் துப்பாக்கிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது என்பவற்றைத் தடைசெய்வதையும் கட்டுப்படுத்துவதையும் அமெரிக்காவின் துப்பாக்கி விற்பனையாளர்கள் சங்கம் அவர்க­ளுடைய பலமான பெருநிதி நிறுவ­னங்­களும் அனுமதிக்கப் போவதில்லை.

இவர்கள்தான் ஜோர்ஜ் புஸ்சுக்கும் அவரு­டைய குடியரசுக் கட்சிக்கும் மிக அதிக அள­வில் பணம் வழங்குபவர்கள். இவர்களுடைய பலம் நீடிக்கும் வரை உலகளாவிய எந்த சமாதான உடன்படிக்கைக்கும் அமெரிக்க அரசு ஒத்து வராது. மாறாக எங்களுக்குக் கிடைப்­பது என்னவென்றால் அமெரிக்க தேசியத்தையும் அமெரிக்க விசுவாசத்தையும் கொண்டாடுகிற holywood திரைப்படங்கள். அவற்றைப் பார்த்து அப்படியே பிரதிபண்­னுகிற Bolywood மற்றும் தமிழ் திரைப்படங்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More