Slideshow

யாழ் நூலக எரிப்பு

நினைவுகள் அழிவதில்லை.
”ஒரு இனச் சுத்திகரிப்பை செய்ய முன் அதன் பண்பாட்டுத் தளத்தை முதலில் அழி” என்பது மிகப் பிரபலமான கூற்று. உலகில் அனைத்து அடக்கு முறையாளர்களும் இதனை திறம்படச் செய்ய முனைந்த வரலாறு நமக்கு புதிதில்லை. 1981 யூன் முதலாம் திகதியன்று அது வரை தமிழ்த் தேசத்தை கட்டியெழுப்ப மாபெரும் பங்களிப்பை வழங்கிய யாழ் நூலகம் சிறிலங்காவின் அன்றைய ஜே.ஆர் ஆட்சியதிகாரத்தினரால் எரித்து சின்னாபின்ன மாக்கப்பட்டது. அதிலிருந்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் கருகிச் சாம்பலாயின. இந்நூலகத்தை அமைக்கப்பட்டதற்கு பின்னால் இருந்த வரலாறு சர்வசதாரமானதல்ல.இலங்கையின் தமிழர்களின் சுவடிகளை அழிப்பதில் அன்று தொடக்கம் இன்று வரை அனைத்து அரசாங்கங்களும் போட்டியிட்டு அழித்து வந்துள்ளமையை காணலாம். இன்று கொழும்பு நூதனசாலை நூலகம், இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை, தேசிய சுவடிகள் கூட திணைக்கள நூலகம். என்கிற மிகவும் முக்கியமான ஆவணக்காப்பகங்களில் பல வருடங்கள் பழமையான பல தமிழ் ஆவணங்கள், சுவடிகள், கல்வெட்டுக்கள், நூல்கள் பல குறைந்துகொண்டே போனைமைக்கு பின்னால் இருக்கும் திட்டமிட்ட அரச நடவடிக்கையை எவ்வளவு தூரம் தமிழ் அரசியல் சக்திகள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழ்த் தேசம் தனக்கான ஒரு தேசத்தை கொண்டிருந்தால் சொந்த தேசத்துக்கான ஒரு ஆவணக்காப்பகம், நூலகம் என தோற்றுவித்திருக்க முடியும். அந்த 1981 மே 31 அன்று, அன்றைய அமைச்சர்களான காமினி திசாநாயக்க, சிறில் மெத்திவ் உள்ளிட்ட பல பாதகர்கள் ரவுடிகள் பலருடன் வந்து யாழ் நூலகத்தை எரித்தனர். ஒரு அழகிய மாடிக்கட்டடத்தில் ஒளிவீசி, வளர்ந்து உலகப் புகழ்பெற்ற, கலங்கரை விளக்கம் போன்று இருந்து, யாழ்ப்பாண மக்களுக்கு அறிவொளியூட்டி வந்த யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டதானது தமிழர்களின் மீதான அட்டுழியங்களுள் பிரதானமானவற்றில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்போது யாழ் நூலகத்தை புனரமைத்து தமது இரத்தம் தோய்ந்த கைகளை கழுவ முயற்சி செய்யும் சிறி லங்கா ஆட்சியாளர்களுக்கு இது ஒரு கரைபோக்கும் முயற்சியாக இருக்கலாம். ஆனால் நமக்கு அது நமது இனச்சுத்திகரிப்பின் குறியீடாகவும், இனஅழிப்பின் குறியீடாகவுமே என்றென்றும் நிலைத்திருக்கும்.இந்தத் தகனக் கிhpயை இன்னுமொருநாள் வராதிருப்பதாக.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More