Slideshow

தலித்தின் குறிப்புகள்


அருந்ததியன்

புகலிடத்தில் சாதியத்தின் பாத்திரமானது பெருமளவில் இங்குள்ள அந்தஸ்தினை உறுதி செய்வதற்கான ஒன்றாக இருக்கின்றது.

வெளிநாடுகளில் நாம் தனித்து இருத்தப்பட்ட நிலையில் நமது பண்பாட்டு அம்சங்களை பேணுவதற்கூடாக கிடைக்கின்ற ஆறுதல், நினைவுகள், மற்றும் அடுத்த சந்ததியினருக்கு அதனை கடத்துவதில் சந்தோசம் கிடைத்தாலும். பண்பாட்டு அம்சங்கள் என்கிற பெயரால் நாம் கூடவே சேர்த்துக்கொண்டு செல்கின்ற பல அதிகாரத்துவ, அராஜக, பிற்போக்குக் கூறுகள் உள்ளன. அவற்றை ஒழுகுவதும், அதனை ஏனையோருக்கு ஊட்டுவதும், பலருக்கும் மனவிருப்பைக் கொண்டதாக இருந்தாலும் இவையே அந்தஸ்தைப் பாதுகாப்பதற்கான காவிகளாகிவிடுகின்றன. போட்டிகளின் விளைவுகளாக அந்தஸ்துக்கு துணையாக ஊர், சாதி, வர்க்கம் என்பவையும் சேர்ந்து விடுகிறது.

இன்றைய புலம் பெயர் சூழலில் சாதியத்தின் வடிவங்கள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அதன் தலைமுறை மாற்றம், காலமாற்றம். அந்தந்தநாட்டுச் சமூகத்தினருடனான ஒன்றுகலத்தல், என்பன காலப்போக்கில் இங்குள்ள சாதியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால் புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறையினர் மத்தியில் விரும்பியும் விரும்பாமலும் சாதியத்தின் கூறுகளை பாதுகாத்து வருவதை எவரும் மறத்துவிடமுடியாது.

புலம்பெயர் சூழலில் ஏனைய சாதியினரும் வர்க்க நிலையில் சமமாகவோ அல்லது உயர்ந்து நிற்கின்ற போதோ அதனை ”பொறுக்கமுடியாத” உயர் சாதியினர் ஏனையோரை ”மட்டந்தட்ட” சாதியை பாவிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

சாதிப்பிரிவினையைப் போல புலம்பெயர் சூழலில் ”இயக்கம்” ”இயக்கமல்லாதோர்” என்கிற இரு வகைச் சாதியினர் தோன்றியிருக்கிறார்கள் தெரியுமா? என்று நண்பர் ஒருவர் கேட்டபோது அதன் பின்னால் உள்ள அரசியலை விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இன்று புலிகளைச் சூழ மையப் பட்டுள்ள அணிசேர்க்கைகளை பார்க்கின்ற போது பிரதேசவா தமும், சாதியமும் அதில் எப்படி தொழிற்படுகின்றன என்பதனை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளிடம் இலங்கையில் காண்கின்ற மாற்றங்களை வெளிநாடுகளில்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More