Slideshow

செல்வி: 10 ஆண்டுகள்- வீழ்வோமாயினும் வாழ்வோம்......

சக்கு கவிஞரும் பெண்ணிலை வாதியுமான, எழுத்தாளருமான செல்வி (செல்வநிதி தியாகராசா) விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு இந்த வருடத்துடன் 10 ஆண்டுகள் பபூர்த்தியாகின்றன. 1991ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30ஆம் திகதி செல்வி கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார். கருத்துச் சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கின்ற எதிரியீகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்த அம்சங்களில் செல்வி கடத்தப்பட்டதும் ஒன்று. செல்வி உயிருடன் இருப்பதாக நம்பி வந்த அவருடன் நெருங்கிய அனைவருமே மனந் தளர்ந்து போய்விட்டனர். அவரது தாயார் உட்பட எந்த உறவினரும் அவரை சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் தேகாரோக்கியம் குன்றிய நிலையில் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று றொட்டர்டாம் போயற்றி இன்டர்நெஷனல் அறிக்கை 1994இல் அறிக்கை வெளியிட்டது. 1992இல் ""எழுதுவதற்கான சுதந்திரம்"" எனும் விருது ஞநுசூ எனும் சர்வதேச அமைப்பின் விருது செல்விக்கு கிடைத்தது. இவ்விருதினை அதற்கு முன்னரே வழங்கத் தீர்மானித்திருந்தபோதும் இவ்விருதின் மூலம் சிறைவைக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஏதும் ஊறு நேரக்கூடும் என்றும் விருதினை அறிவிக்க வேணடாம் என்று செல்வியின் நண்பர்கள் பலர் அறிவித்திருந்ததாக 'பெண்' அமைப்பின் தலைவர் எட்மண்ட் கீலி அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரது நிலை அல்லது அவரது இருப்பிடம் பற்றிய எதுவித தகவலையும் காணவில்லையென்பதால் விருதினை பகிரங்கப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக 1992இல் ""பெண்"" அமைப்பின் தலைவர் அறிவித்திருந்தார். சர்வதேச கவிதை அமைப்பு 1994க்கான International betry Sbciety award எனும் விருது வழங்கப்பட்டது. இது மானுட சுதந்திரத்திற்காகவும், அடிப்படை உரியீமைக­ளுக்காகவும் குரல் கொடுத்த ""சுதந்திரம் மறுக்கப்பட்ட"" கவிஞர்களுக்காக வழங்கப்படுகின்ற விருதாகும். இவ்விருது வழங்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட சர்வதேச கவிஞர்களைப் போலவே செல்­வியும் விடுதலை செய்யப்படவேண்டுமென இவ்வமைப்பு கேட்டுக்கொண்டது. இவ்விருது பற்றிய அறிவித்தலில் ""அடையாளமற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் கவிகளின் சோகமயமான நிலையை ஞாபகம் கொண்டு மனித வாழ்வுக்கும் மானிடத்துவ இருத்தலுக்கும் மாயீயாதை மறைந்த இழிந்த சூழலை ஞாபகம் கொண்டு இந்த ஆண்டின் தேர்வுக் குழு இலங்கை பெண் கவி செல்வியை கௌரவிப்பது என்று முடிவெடுத்து உள்ளது..."" என குறிப்பிட்டிருந்தது. இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட விருதான இதனை பெற்றுக் கொள்ள செல்வி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் விடுதலைப் புலிகளினால் சிறைவைக்கப்­பட்­ட­படியே அப்போதும் இருந்தார். 1993 டிசம்பாயீல் வெளியான சாயீநிகாயீல் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் (இப்பேட்டியில் மூலமானது Counterpoint எனும் ஆங்கில சஞ்சி­கையாகும்) செல்வி தமது தடுப்புக் கைதியாகவே இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். செல்வியின் விடுதலைக்­காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன. மேலும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரியீமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியீயிருந்தன. செல்வி இலங்கையில் சேமமடு என்ற கிராமத்தில் பிறந்தவர். கடத்தப்பட்டபோது யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் இறுதியாண்டு அண்டு மாணவியாக இருந்தார். அவர் பிரபல கவிஞராகவும், நாடகாசிரியராகவும் பணியாற்றியவர். பாலஸ்தீன கைதிகள் பற்றிய நாடகமொன்றையும் அவர் இக்காலத்தில் செய்திருந்தார். விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில இயக்கங்களின் மனித உரிமை மீறலை விமர்சிக்கின்ற நாட­க­மொன்றை அரங்கேற்றத் தயராகிக்­கொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்­பட்டதாக நம்பப்படுகிறது. தமது படைப்புகளுக்கூடாக பெண் விடுதலை கருத்துக்களை பரப்பியவர். பல்கலைக்­கழத்தில் பெண்கள் இயக்கத்தில் தீவரமாக செயற்பட்டிருந்தார். வடக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவராண உதவிகளை செய்வதில் ஈடுபட்டிருந்தார். தேசத்தை நேசித்தது தான் செல்வி செய்த குற்றம். மனிதத்தைக் கோரிய அவரது அர்ப்பணிப்பு தான் அவர் செய்த குற்றம். அவரது கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியதுமான சித்திரங்களையே வெளிப்படுத்தியது. இன்று அவர் எம்முடன் இல்லை. விடுதலையின் பேரால் கருத்துச் சுதந்திரத்தின் குரல் நசுக்கப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்க­ளிலும் நாங்கள் மீள எழுவோம். நாங்கள் மீளவும் உயிர்ப்போம். மானுட விடுதலைக்காக

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More