சுந்து-1983
கைதட்டி சிரிக்க
இங்கொன்றும் இல்லை - எனினும்
கை கொடுத்துதவுங்கள்
இதுவோர் அனாதையின் கதை
இதுவோர் அனாதையின் கதை
காலங்காலமாய்...
போராடும் இனமொன்றின்
கண்ணீர் புஸ்பங்கள்
வரிவரியாய் எழுதியவோர்
சோகக்கதை!
இதுவோர் சோகக்கதை!
அம்மையார் எமையாண்டு
அனாதையாக்கி அரசியல் தஞ்சம்
புகவைத்தாள்
வெளிநாட்டில்
சொந்த நாடோ எமக்கில்லை
சொந்த மொழியோ செல்லாது
சொல்லவோ வெட்கம்!
அம்மையார் மாண்டார்
வந்தான் ஓர் அரக்கன்
எமையாட்சி செய்ய
யாருக்கையா சொல்ல
பெற்ற தாயுமில்லை
பிறந்த பொன்னாடுமில்லை
இருக்கவோ இடமுமில்லை
வந்தோம் வெளிநாடு
கலைக்கின்றனர்
கறுப்பர் என்கின்றனர்
யாருக்கு சொல்ல
யாருக்கு விளங்கும் எம்நிலை
இழப்பதற்கு எதுவுமில்லை
வெல்வதற்கு ஈழமுண்டு
என்றோ
ஒரு நாள் கிடைக்கின்றன எம் ஈழம்
எம்மையெல்லாம் காக்கும்.
அனாதைப்பிடியிலிருந்து....
அந்நாள் எந்நாளோ!
0 comments:
Post a Comment