Slideshow

சிந்தனைக்கு ஒரு புகைப்படம்

Julia Margaret Cameron -( June 11, 1815 - January 26, 1879) ஜூலியா மார்கரட் கெமரூன். கிழக்கிந்திய கம்பனி உத்தியோகத்தராக அவரது தந்தை மார்கரட் பெட்டல் பணியாற்றியபோது கல்கத்தாவில் பிறந்தவர். பிரான்சில் கல்வி. மீண்டும் கல்கத்தா திரும்பி 1838 இல் திருமணம். 1848இல் லண்டன் திரும்புகிறார். அவரது குடும்பத்தினர் இலங்கையில் எஸ்டேட் வாங்குகின்றனர். தனது 48வத வயதில் அவரது மகள் பரிசளித்த புகைப்படக்கருவியைக் கொண்டு படமெடுக்கத்தொடங்கியவர் ஒரே வரடத்தில் தெர்ந்த பகைப்படக்கலைஞராக ஆகிறார். லண்டன், ஸ்கொட்லாந்து புகைப்பட சங்கத்தில் அங்கம் வகிக்கிறார். பெரும்பாலான அவரது புகைப்படங்கள் எண்ணெய் ஓவியங்களின் சாயலைக்கொண்டது என பிந்திய விமர்சகர்கள் அவரைக் கூறுவர். 1875 இல் இலங்கைக்கு இடம்பெயர்கிறார். இலங்கையில் புகைப்படக் கலையைத் தொடர்கிறார். 1879 ஜனவரி 26 அன்று அவரது விரைத்து உறைந்து போன உடல் களுத்துறையில் கண்டெடுக்கப்பட்டது. பழங்குடியினர்களை புகைப்படமெடுப்பதில் அதிக ஆர்வமுள்ள அவர் இலங்கையில் எடுத்த புகைப்படமொன்றே இது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More