Slideshow

தமிழ் முஸ்லிம் உறவுகள் (வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்களின் அகப்பாடு)

(வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் இனக்கலவரங்களின் அகப்பாடு)
ஜனாப் எம்.ஐ.எம்.மொஹிதீன்
கொழும்பு சட்டக்கல்லூரி மாணவர் கல்லூரி மாணவர்களால் வருடாந்தம் நடாத்தப்படும் சட்ட மாணவர் தமிழ் மன்ற விழாவில் இம்முறையும் நீதிமுரசு மலர் வெளியிடப்பட்டது. இம்முறை அதனை தொகுத்தவர்கள் இலங்கையின் தமிழ்த் தேசப்பிரச்சினை குறித்த ஆய்வுக்கட்டு­ரைகளை தொகுத்திருந்தமை அதன் சிறப்பாகும். இதன் காரணமாக இதனை ஒழுங்கு செய்தவர்கள் இலங்கை அரசின் அதிகாரத்தரப்பினால் நெருக்கடிக்கும் உள்ளானார்கள். மிகவும் அருமையாக தொகுக்கப்பட்டிருந்த இந்த மலர், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நிலைக­ளையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. அதில் வெளியான முஸ்லிம்கள் குறித்த கட்டுரை நன்றியுடன் பிரசுரிக்கிறோம். தற்போதைய பேச்சுவார்த்தை முயற்சிகளின் போது முஸ்லிகளுக்கு தமிழ்த் தேச போராட்டத்தின் தரப்பில் இருந்து வழங்கப்படவேண்டிய உத்தரவாதங்கள் நிறையவே இருக்கின்றன. தமிழ் தேசத்தரப்பில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து ஒரு மீள்பார்வையை இந்த நேரத்தில் செய்வதானது அந்த உத்தவாதங்களின் தேவைகளை உறுதிப்படுத்துவனவாக அமையும் என்று நம்புகிறோம்.
வடக்கு கிழக்கு மாகாகணங்களில் காணப்படும்; ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படுவதாகும். முஸ்லீம்கள் உரிமை கொண்டுள்ள விவசாய நிலங்களில் பெரும்பாலானவை தமிழர்களின் கிராமங்களை அடுத்தே காணப்படுகின்றன. குடிசனப்பெருக்கம் காரணமாக குடியிருப்புக்காணி நிலம் போதாதிருப்பதும்; விஸ்தரிப்புக்கான இடம் இல்லாதிருப்பதும், கிழக்கு மாகாண முஸ்லீம்கள் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சனையாகும். நிலப்பற்றாக்குறைப் பிரச்சனை தீவிரமடைந்தமையால் தங்களது பகுதிகளும் வியாபிப்புக்கு உட்படுத்தப்படலாம் அல்லது ஆக்கரமிக்கப்படலாம் என்ற அச்சம் இரு சமூகங்களுக்கிடையேயும் சந்தேகத்தையும் நெருக்கடியையும் அதிகரிக்கச் செய்திருந்தது. இது குறித்த சமூகப், பொருளாதார நிலைமை காரணமாக இரு சமூகங்களுக்குமிடையே புதிய விதிமுறைகள் தோன்றலாயின. இவ்விதிகளும்,; கட்டுப்பாடுகளும் பல நூற்றாண்டுகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இரு சமூகங்களும் தற்போது தமது தனித்துவத்தையும் இனத்துவ உரிமைகளையும் பிரத்தியேகமாகப் பேணி பாதுகாக்க முனைந்து நிற்பதைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. வடக்கு கிழக்கு மாகாண முஸ்லீம்களது முந்திய தலைமுறைகளின் தொழில் பெரும்பாலும் விவசாயமாக இருந்ததுடன் சிறிதளவு மீன்பிடியுடனும் வியாபாரத்துடனும் தொடர்புடையதாகவே இருந்தது. இலவச கல்விமுறையினதும் நெல்லுக்கான உத்தரவாத விலைத்திட்டதினதும் அறிமுகங்களின் பின்னர் கிழக்கு மாகாண முஸ்லிம்களது கல்வி நிலைமையும் பொருளாதார நிலையும் கணிசமான அளவு முன்னேற்றம்; கண்டன. முஸ்லீம்களுக்களிடையே பல்கலைக்கழகப் பட்டதாரிகள், நடுத்தர அரச உத்தியோகத்தர்கள்; டாக்டர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டவல்லுனர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் என்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக ஆசிரியர்கள் தொகை இலங்கையின் ஏனைய முஸ்லீம் பகுதிகளை விட வெகுவாக அதிகரித்த விகிதத்தில் கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களிடையே காணப்படுவதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் தற்போது முஸ்லீம்களுக்கான புத்திஜீவித்துவம் கிழக்கு மாகாணத்திற்கு இடம் பெயர்ந்து மாற்றம் பெற்றுள்ளதாகக் கூறலாம்.
வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களும் முஸ்லீம்களும் அமைதியுடனும்; சமாதானத்துடனும் ஒத்திணங்கி வாழ்கின்றனர் என்று பரவலாகக் கூறப்படும் கருத்துக்கு முரணான வகையில்; கடந்த அரை நூற்றாண்டுகாலமாக குறிப்பாக 1948 இல் இல்ங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்களிடையே முஸ்லீம்கள் பற்றிய எதிர்ப்புணர்வும் பகைமையும் கூடுதலாக வளர்ந்து வந்துள்ளது. முஸ்லீம் இளைஞர்கள் ;கல்வியில் முன்னேறியதுடன் பல்கலைக்கழகங்களிலும், தொழிநுட்பகல்லூரிகளிலும், உயர்கல்வி பயிலிதலிலும் தமிழ் இளைஞர்களுடன் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ் இளைஞர்கள் வேலையற்றிருந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் அரசதுறையிலும் தனியார் துறையிலும் கூடுதலாக வேலைவாய்ப்புக்களைக் பெற்று முன்னேறுகின்றனர். முஸ்லீம் தலைவர்கள் நாட்டுப்பிரிவினைக் கோரிக்கைகள் எவற்றிற்கும் அனுசரணையாக இல்லாதிருந்த காரணத்தின் பலனாக முஸ்லீம்கள் ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களின் நல்லெண்ணத்தைப் பெற்றிருந்த வேளையில் தமக்கென தனியான தமிழ் ஈழம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலான போராட்ட நடவடிக்கைளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தமையால் தமிழர்கள் அண்மைக் காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொண்டனர். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் புவியியல் ரீதியாக அருகருகே வாழ்வதாலும், பொருளாதார அடிப்படையில் ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பதாலும் பல சந்தர்ப்பங்களில் மிகவும் அற்பமான விடயங்களில் கூட பிணக்குகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக தமிழ் பகுதிகளை கடந்து தங்கள் வயல்களுக்கு செல்லும் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படுதல், வாகனங்கள் கடத்தப்படுதல், முஸ்லீம்களுக்குரிய நெல், கால்நடைகளைக் கொள்ளையிடுதல் போன்ற சம்பவங்களே காலப்போக்கில் தமிழ், முஸ்லீம் இனப்; பிரச்சனையை மேலும் மோசமடையச் செய்தன. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் முஸ்லீம்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்புணர்வுகளையும் வெறுப்பையும் வெளிப்படையாக காட்ட முற்பட்டதையும் காணக் கூடியதாய் இருக்கிறது. முஸ்லீம்கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரிப்பவர்கள், தமிழ் தொழிலாளர்களைச் சுரண்டுபவர்கள், பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பகல்லூரிகளில் தங்கள் வாய்ப்புக்களை இல்லாமலாக்குபவர்கள் எனப் பகிரங்கமாகத் தூசிக்கப்படுகின்றனர். நிர்வாக ரீதியில் தமிழர்களது உள்ளுராட்சி எல்லைக்குள் அமைந்த முஸ்லீம் கிராமங்களுக்குப் பொது வசதிகள் மறுக்கப்பட்டன. முஸ்லீம் பகுதிகளிலிருந்து தமிழ்போராளிகளால் துப்பாக்கி முனையில் கப்பம் அறவிடப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வாகனங்கள், விவசாய உபகரணங்கள் என்பன அபகரிக்கப்பட்டன. இத்தகைய சம்பவங்கள் நிம்மதியற்ற நிலைமையை முஸ்லீம்களிடையே தோற்றுவித்ததுடன் தமிழர்களது தனிநாட்டுக் கோரிக்கையை சாத்தியமாக்கும் பட்சத்தில் அவர்களுடன் அரசியல் பொருளாதார அதிகாரங்களில்; நீதி நியாயப்படி பகிர்ந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்படப் போவதில்லை என்ற உணர்வும் முஸ்லீம்களிடையே வலுப் பெறத் தொடங்கின. 1985 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் போராளிகளின் அதிகரித்த நடவடிக்கைகளுடன் தமிழர்கள் முஸ்லீம்கள் மீது கொண்டிருந்த எதிர்ப்புணர்வும் மேலும் உக்கிரமான மாற்றங்களைப் பெற்றது. இதன் விளைவாக தமிழ் இயக்கத்தவர்கள் அச்சுறுத்திப் பணம் பறித்தல், துப்பாக்கி முனையிலான ஆட்கடத்தல், பலாத்காரம் போன்ற செயல்கள் ஆங்காங்கே பரவாலாக இடம் பெற்றலாயின. இவ்வாறான நிலைமைகளை தணிப்பதற்கும் ஆயுதம் ஏந்தி முஸ்லீகள்; தமிழர்களுக்கு எதிராக போராட முற்படாத சாத்வீக வழிகளில் பலதரப்பட்ட தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். முஸ்லீம்களை முற்றாக நிலை தளரச் செய்யும் சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மை முஸ்லீம் நகரமான அக்கரைப்பற்றில் தான் முதன் முதலில் இடம் பெற்றது. இதில் தமிழ் ஆயுதவாதிகள் ஒரு முஸ்லீம் வியாபாரியிடம் கொள்ளையடிக்கும் வேளையில் அவரது குடும்பத்தினரை பணயக்கைதியாக எடுத்துச் செல்ல முற்பட்டனர். இந்த அடாவடித்தனத்தால் ஆத்திரமடைந்த முஸ்லீம்கள் தமது எதிர்ப்பினை ஒரு அமைதியான ஹர்த்தால் மூலம் எடுத்துக் காட்டினார்கள். 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரை இந்த ஹர்த்தால் மூலம் எடுத்துக் காட்டினார்கள். 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரை இந்த ஹர்த்தால் இடம் பெற்றது. அதன் பின் மீண்டும் எல்லா வியாபார நிலையங்களும் 13 ஆம் திகதி திறக்கப்பட்டது. 1985 இல் ஏப்ரல் மாதம் 14 ஆம்திகதி மாலை 9 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து 10 மைல் தொலையிலுள்ள காரைதீவு என்னும் தமிழ் கிராமத்திலிருந்து 13 தமிழ் ஆயுதவாதிகளைக் கொண்ட ஒரு கோஷ்டி ஜீப் வண்டி ஒன்றில் அக்கரைப்பற்றுக்குள் வேகமாக நுழைந்தது. ஆயுதபாணிகளாக வந்த இவர்கள் சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். அக்கரைப்பற்று நகர பள்ளிவாசலுக்குள் முதல் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பிரதான சந்தை சந்தியை நோக்கி வரைந்த ஜீப் வண்டி வெகு வேகமாக ஓட்டப்பட்டதன் காரணமாக சந்தி வளைவில் தடம் புரண்டது. பிரயாணம் செய்த பலர் விபத்தில் மரணமடைய எஞ்சியோர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திலிருந்து ஆரம்பித்த தமிழ் முஸ்லீம் இனக்கலவரம் , கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மூதூர், கிண்ணியா ஆகிய இடங்களுக்கும் வேகமாகப் பரவியது. ஆயுதம் தாங்கியவர்களால் பல நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொலை செய்ய்ப்பட்டனர். முஸ்லீம்களினதும் தமிழர்களினதும் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த 1985 ஏப்ரல் கலவரங்களின்; போதுதான் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக தமிழர்களும் முஸ்லீம் களும் இன ரீதியாக ஒருவரோடு ஒருவர் மிக மோசமாக மோதிக் கொண்டனர். 1985 ஆம் ஆண்டு அக்ரோபர் 28 ஆம் திகதி மூதூரில் கலீபா கலீல் என்னும் முஸ்லீம் இளைஞர் தனது வீட்டிலிருந்து தமிழ் ஆயுதவாதிகளினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டார். இதன் காரணமாக 34 தமிழ் வீடுகள் உடைக்கப்பட்டன. தமிழ்தரப்பு ஆத்திரம் கொண்டு மூன்று முஸ்லீம்களையும் கொன்று 324 வீடுகளையும் உடைத்தனர் 25 கடைகளும் எரிக்கப்பட்டன. 1988 மார்ச் 6 ஆம் திகதி காத்தான்குடி நகரசபை முன்னாள் தலைவர் அல்ஹாஜ் அஹமட்லெப்பே கொல்லப்பட்டார். 1990 ஆம் ஆண்டு பள்ளியில் தொழுது கொண்டிருக்கையில் 106 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டனர். அதே வாரத்தில் மக்கா ஹஜ் யாத்திரை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹாஜிகள் உட்பட 86 முஸ்லீம்களும் களுவாஞ்சிகுடியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஏறாவூரில் சத்தாம் ஹூசைன் கிராமம் தமிழ் ஆயுதவாதிகளினால் தாக்கப்படடு 1000க்கு கூடுதலான முஸ்லீம் ஆண், பெண், குழந்தைகள் கொடூரமாக் கொல்லப்பட்டனர். 1989 நவம்பர் தேசிய இராணுவத்தினரால் காரைதீவில் 24 முஸ்லீம் பொலிஸ் ரிசேவ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1985 ஆண்டு மேமாதம் தமிழ் முஸ்லீம் கலவரம் ஏற்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்தின் பின் மூதூரில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலின் விளைவாக தமிழர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இந்த சிக்கலான காலகட்டத்தல் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் முஸ்லீம்களே. ஆயினும் முஸ்லீம்களினால் காட்டப்பட்ட இந்த பரிவு தமிழர் ஆயுத அமைப்புக்களின் போக்கில் முஸலீம்களைப் பொறுத்தமட்டில் எந்தவித மாற்றத்தமையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் ஆயுதவாதிகள் மூதூர் முஸ்லீம் உதவி அரசாங்க அதிபர்ஜனாப் ஹபீப் முஹம்மதை 1997 செப்ரெம்பர் 3ஆம் திகதி படுகொலை செய்தனர். இச் சம்பவத்திற்கான எதிர்ப்பை தமது எதிர்ப்பை கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர். இந்த அநுதாப வெளிப்படுத்தலினால் ஆத்திரமுற்ற தமிழ் ஆயுதவாதிகள் 1987 செப்ரெம்பர் 10 ஆம் திகதி கல்முனையில் முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் என்பவற்றைக் கொள்ளையடித்து எரித்தனர். இந்த தாக்குதல்கள் நடைபெறும் போது இந்திய அமைதிகாக்கும் படையும் அங்கிருந்தது. தமிழ் ஆயுதவாதிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்கள் சுமார் 6 கோடியே 70 இலட்சம். 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி மூதூரில் ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளினால் முஸ்லீம்கள் மீது பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதலின் போது இந்திய அமைதி காக்கும் படையினரும் அங்கிருந்தனர். இத்தாக்கு­தலினால் பாதிக்கப்பட்ட மூதூரிலிருந்து வெளியே ஆயிரக்கணக்கான முஸ்லீம் அகதிகளின் பராமரிப்பு வேலைகளில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே முன்னாள் மூதூர் பாரளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்­சருமான ஜனாப் அப்துல் மஜீத் 1987 நவம்பரம் 13 ஆம் திகதி கொலை செய்ய்ப்பட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதான முஸ்லீம் பட்டனமாகிய ஓட்டமாவடியில் 1987 டிசம்பரில் இரண்டாம் திதகி இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் தமிழ் ஆயுததாரிக­ளுக்கும் இடையில் ஏற்பட்ட இடையில் ஏற்பட்ட மோதலின் போது 26 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதுடன் 200 முஸ்லீம்கள் காயப்படுத்தப்பட்டனர். முஸ்லீம்களுக்கு சொந்தமான ஏராளமான வீடுகளும் கடைகளும் எரிக்கப்பட்டன. அழிக்கப்பட்­டன. முஸ்லீம் பெண்கள் பலர் இந்திய அமைதிப்படை வீரர்களால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. 14,000 முஸ்லீம்கள் அகதிகளாக கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பி ஓடி ஓட்டமா வட மத்திய நகரமான பொலன்னறுவையில் தஞ்சம் புகுந்தனர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி 30, 000 முஸ்லீம்களைக் கொண்ட மட்டக்களப்பில் மிகப் பிரதான முஸ்லீம் நகரமான காத்தான்குடி ஆயுதமேந்தியவர்களினால் தாக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலின் போது 60 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். 200க்கு மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்குள்ளாகினர். 20 கோடி பெறுமதிக்கும் ;கூடுதலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும் எரிக்கப்படும் நாசம் செய்யப்பட்டன. இவ்வனர்த்தங்கள் யாவும் இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு நிலை கொண்டிருந்த போதே நடைபெற்றன. இரண்டே இரண்டு நாட்கள் தாக்குதல் நடைபெற்ற போதிலும் காத்தான்குடி மீதான முற்றுகை 1988 ஜனவரியிலிருந்து சகல போக்குவரத்துக்­களும் தமிழ் ஆயுதவாதிகளினால் தடைசெய்யப்பட்டன. 1992 ஒக்ரோபர் மாதம் தமிழ்புலிகள் பொலன்நறுவை மாவட்டத்தில் அக்பர்புரம், அஹமட்புரம், பள்ளியகொடல்ல ஆகிய கிராமங்களைத் தாக்கி 200 க்கும் கூடுதலான முஸ்லீம்களை படுகொலை செய்தனர். 1990 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாருமே எதிர்பாராத வகையில் சடுதியாக வடமாகாணம முஸ்லீம் கிராமங்களில் தமிழ் புலிகள் ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்கள் தமது வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேற வேண்டும் அப்படி வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்தனர். இவ்வறிவித்தல் எருக்கலம்பிட்டியில் ஒக்ரோபர் 24 ஆம் திகதியும் விடத்தல் தீவு முசலிப் பகுதிகளில் ஒக்ரோபர் 25 ஆம் திகதியும் யாழ்ப்பாண நகரில் 29ஆம் திகதியும் அறிவிக்கப்படடது. இதனைத் தொடர்நது முஸ்லீம்களின் நகைகளையும் பெறுமதியான பொருட்களையும் தமிழ் புலிகள் அபகரித்தனர். எதிர்த்த முஸலீம்களை தமிழ் ஆயுதவாதிகள் மிக மோசமாகத் தாக்கி தண்டித்தனர். வடமாகாண முஸ்லீம்கள் நிர்க்கதியான நிலையில் குடும்பம் குடும்பமாக சொல்லொணாத் துயராத்தோடு 100க்கு மேற்பட்ட முஸ்லீம் கிராமங்களில­pருந்து தமிழர்களால் விரட்டியடிக்கப்­பட்டனர். 1990ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து வெளியேறி 31 ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாண எல்லையைக் கடந்தனர். மன்னார் மாவட்டத்சை; சேர்ந்த எருக்கலம்பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, மன்னார் சோனகத்தெரு, கரிசல் ஆகிய கிராமங்களை விட்டு ஒக்ரோபர் 28, 31 ஆம் திகதிகளுக்கிடையில் வெளியேறி கடல் மார்க்கமாக கற்பிட்டியை அடைந்தார்கள். மன்னார் விடத்தல் தீவு மக்கள் ஒக்ரோபர் 27, 31 ஆம் திகதிகளில் வெளியேறி ஒக்ரோபர் 30 ஆம் திகதி தமிழ் ஆயதவாதிகளினால் வாகனங்களில் ஏற்றி வந்து விடப்பட்டனர். இவர்களும் வவுனியா, முல்லைத்தீவு முஸலீம்களும் இதே காலத்தில் மதவாச்சியை அடைந்தனர். 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணமானது முற்றும் முஸ்லீம்களற்ற பிரதேசமாக்கப்­பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் முஸ்லீம்கள் மீது சுமத்தியுள்ளது. இவற்றில் இருந்து வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டிய அரசியல் தேவையையும் உணர்ந்து விட்டார்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More