Slideshow

சிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல் - 2


என்.சரவணன்

இந்த கட்டுரைத் தொடர் விரைவில் வெளிவரவிருக்கும் சிங்கள சாதியமைப்பு குறித்த நூலில் உள்ளடக்கப்படுவதற்கான கட்டுரைகளாகும். ஏற்கெனவே சிங்கள சாதியமைப்பு குறித்த வெவ்வேறு தலைப்பிலான கட்டுரைகள் சரிநிகர், இனி, ஆதவன், மற்றும் 'பறை” யிலும் வெளிவந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சி இங்கு தொடர்ந்து பதிவாகிறது.


இந்திய சாதியமைப்பை மூல வடிவமாகக்கொண்ட தமிழ் சாதியமைப்பின் அடிப்படை தன்மையான சாதியப்படிநிலையானது சிங்கள சாதியமைப்பு படிநிலைக்கு ஒப்பானதல்ல.


குறிப்பாக இந்திய மூல சாதியமைப்பில் எந்தவொரு சாதிக்கும் இன்னொரு சாதி நிகரில்லை. ஆனால் சிங்கள சாதியமைப்பானது தனக்கான சாதிய படிநிலைமைப்பைக்கொண்டிருக்கிற போதும் அது தெட்டத்தெளிவான படிநிலை வரையறையைக்கொண்டதாக இல்லை என்பதை வாசகர்கள் அறிவத முக்கியம். மேலும் அது நெகிழ்வானது. எனவேதான் சென்ற இதழில் கூறியது போல முந்தி பிறந்து பிந்தியும் வாழும் தமிழ் சாதியமைப்பு என்றும் பிந்தி பிறந்து முந்தி இறக்கும் சிங்கள சாதியமைப்பு என்றும் குறிப்பிட்டிருந்தேன். இந்த நெகிழ்ச்சி அதன் படிநிலையில் மட்டுமல்ல, தீண்டாமையிலும் தான்.


மேலும் காலனித்துவம் தமிழ் சாதியமைப்பில் ஏற்படுத்திய மாற்றத்தை விட அதிகளவில் சிங்கள சாதியமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே இருந்த சில சாதித் தொழில்கள் காலனித்துவத்தோடு மாறியிருக்கின்றன. உதாரணத்திற்கு தொழில் ரிதியில் பாரம்பரிய படைவீரர்களாக துராவ சாதியினர் இருந்திருந்த போதும் அவர்கள் காலனித்துவத்திற்குப்பின் கள் இறக்குபவர்களாக கொள்ளப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் இருக்கக்கூடிய கள் இறக்கும் நளவர்களுக்கு ஒப்பாக அழைக்கப்படுகின்றபோதும், அவர்கள் -தமிழ்ச்சமூகத்தில் நளவர்களின் இடமான - பஞ்சமர்களின் ஸ்தானத்தில் அவர்கள் இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.


பின் காலனித்துவத்திற்குப் பின்னர் சாதிமைப்பு முறையிலும், அதன் செயல்வடிவத்திலும், அதன் வர்க்க கட்டமைப்பிலும், அதன் இடையீட்டு செயற்பாடுகளிலும், நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தின. பெரும்பாலான சாதிகள் வழக்கொழிந்து போயின. சில சாதிகளைத் தவிர பல பெயரிழந்து போயின. சாதித் தொழில்கள் மாற்றங்களுக்கு உள்ளாயின. சில சாதியினர் மட்டும் ஒன்றாக அணிதிரண்டன.

போர்த்துக்கேயர் 1505இல் இலங்கையை கைப்பற்றிய பின்னர் ஒல்லாந்தர் வரை இலங்கையின் கரையோரங்களை மட்டுமே கைப்பற்றி ஆண்டு வந்தனர். ஆங்கிலேயர்களே 1818இல் கண்டியைக் கைப்பற்றியதன் மூலம் முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.இலங்கையின் கரையோரப்பகுதிகளை கரையோரத்தை அண்டி வாழ்ந்த கராவ சாதியினர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோருக்கூடாக மதமாற்றத்துக்கு பலியான முதல் சமூகத்தவர்களானார்கள்.
வடக்கு-கிழக்கு மற்றும் சிங்கள கரையோரப் பகுதிகளையும் சாந்த கராவஃகரையார் சாதியனர் கிறிஸ்தவர்களாகவே இருப்பார்கள் என்கிற ஐதீகம் சாதாரணர்களிடம் இருப்பதை கண்டிருப்பீர்கள்.


இந்த மத அடையாளமே கராவ சாதியினரை சாதியப்படிநிலையில் மேலும் ஒரு நிலைக்கு கீழே தள்ளியது.

சிங்கள சாதியமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்திய மூன்று வரலாற்றுத் திருப்புமுனைகளை சாதியம் குறித்த ஆய்வாளர்கள் சுட்டுவது வழக்கம்.

1. காலனித்துவம்,

2. கண்டி ராஜ்ஜியம் 1818இல் கைப்பற்றப்படல்

3. திறந்த பொருளாதாரக்கொள்கை.

சாதிகளும் தொழில்களும்


சிங்கள சாதியமைப்பினை இரு பெரும் பிரிவினைக்குள் உள்ளடக்கி பார்ப்பது எளிமையாக இருக்கும். கண்டி சிங்களவர்கள் (மலைநாட்டுச் சிங்களவர்) மத்தியில் நிலவும் சாதியமைப்பு மற்றும் கரையோரச்சிங்களவர்கள் (தெற்குச் சிங்களவர்) மத்தியில் இருக்கின்ற சாதியினர்.

கண்டியச் சிங்கள சாதியினர்


1. அஹிங்குந்தய (நாடோடிகள்)

2. பட்டஹல (கும்பள்) - குயவர்

3. பத்கம - பாரம்பரிய விவசாயிகள் (பிரித்தானிய ஆட்சியின் போது இவர்கள் பள்ளக்குத் தூக்கிகளாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.)

4. பெராவ - பறையடிப்பவர்

5. கொவிகம - பாரம்பரிய விவசாயிகள் பண்ணையாளர்கள்.

6. ஹாலி - நெசவாளர்கள்

7. ஹன்னலி - தையற்காரர்

8. ஹூனு - சுன்னக்கல் செய்பவர்கள்.

9. கின்னரய - பாய் பின்னுபவர்கள். 'தாழ்ததப்பட்டோர்”;.

10. நவந்தன்ன - பொற்கொல்லர். - (பல கிளைச்சாதிகளைக்கொண்டது)

11. பமுனு - கூலி விவசாயிகள்

12. பன்ன - புல்வெட்டுவோர்,

13. பனிக்கி - முடி திருத்துவோர்

14. பட்டி - கால்நடைவளர்ப்போர்

15. பொரவக்கார - மரம்தரிப்போர்

16. ரதல - நிலப்பிரபுக்கள். (குறிப்பாக கண்டி ராச்சிய காலத்தில்)

17. ராஜக்க, ஹேன - சலவைத்தொழிலாளர்கள்.

18. ரோடியோ - 'தாழ்ததப்பட்டோர்”;.

19. வக்கும்புர - வெல்லம் தயாரிப்பாளர்கரையோரச் சாதியினர்


1. அஹிங்குந்தய - நாடோடிகள்

2. பட்டஹல (கும்பள்) - குயவர்

3. பெராவ - பறையடிப்பவர்

4. கட்டர - விவசாயிகள்

5. தெமல கட்டர - தமிழ் 'தாழ்த்தப்பட்டோர்”;.

6. துராவ - பாரம்பரிய படைவீரர் - காலனித்துவத்திற்குப் பின் கள் இறக்குவோர்.

7. ஹன்னலி - தையற்காரர்

8. ஹின்ன - சலாகம சாதியனருக்கான சலவைத்தொழிலாளர்

9. கராவ - பாரம்பரிய மீனவர்கள்.

10. நவந்தன்ன - பொற்கொல்லர். - (பல கிளைச்சாதிகளைக்கொண்டது)

11. பமுனு - கூலி விவசாயிகள்

12. பனிக்கி - முடி திருத்துவோர்

13. பொரவக்கார - மரம்தரிப்போர்

14. ராஜக்க, ஹேன - சலவைத்தொழிலாளர்கள்.

15. ரோடியோ - 'தாழ்ததப்பட்டோர்”;.

16. சலாகம - பாரம்பரிய படைவீரர், கருவா பட்டை உரிப்போர்.

17. வக்கும்புர - வெல்லம் தயாரிப்பாளர்வட கிழக்கு தமிழ் சாதியமைப்பில் உள்ள சாதிகளுக்கு இணையாக
கருதப்படும் சிங்கள சாதிகள்


வெள்ளாளர் - கொவிகம

கரையார் - கராவ

பறையர் - பெராவ

நளவர் - துராவ

பள்ளர் - பத்கம

சாலியர் - சலாகம

துரும்பர் - ஹீன

சிவியார் - பத்கம

அம்பட்டர் - பனிக்கி

1 comments:

கள்ளர் பறையர் கனத்த அகம்படியார் மெள்ள மெள்ள இங்கு வந்து வெள்ளாளர் ஆகினர்.

இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், மறவர், அகம்படியர், செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?

அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
Burgher ——-477
Bramman ——-1935
Chetty ——— 1807
Madappally —12995
Moors —2166
Paradesy — 1830
Mallagam — 1501

Cariar —- 7562
Brassfounder — 105
Masons —- 47
Tuners — 76
Welper —50
Cycolas — 1043
Chandar —- 2173
Dyers —902
Chevia — 1593
Pandaram—- 41
Parawa — 35
Tannecaras — 1371
Silversmith — 899
Blacksmith — 904
Carpenters — 1371
Barbers — 1024
slave of Burgher — 18
Washermen — 2152
Moquah —2532
Malayalam —210
Covias — 6401
Company Nalum — 739
Pallas —6313
Parayars — 1621
Torampas — 197
Weavers — 272
Cawere chetty —18
Tawesy — 437
Nattowen — 22
Oil monger — 4
Tunmilah — 1291
Pallevely —376
Simpadawer — 40
cadia —970
Nallua — 7559
Potters — 329
Ship carpenter — 33
Marava — 54
Choyaroot-Digger —408
Paramber — 362
-
Free slaves — 348
இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.இது மிகவும் சிரிப்புக்குரயது.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவ்௫கின்ற்னர்.ஏனென்றால் அவரகளில்பலர் வெள்ளாளர்களே அல்ல என்பதுதான்.இந்த வரலாற்றாதாரங்கள் அதனைமெய்ப்பிக்கும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More